Tuesday, 26 April 2016

ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

ஆறு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறள்: உயர் நீதிமன்றம் புது உத்தரவு


தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும்முழுமையாக கற்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனால் மாணவர்களின் அறிவு, ஞானமும் மேம்பட்டு பயங்கரவாதம், குற்றங்கள், மதுவின் பாதிப்புகள் குறையும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எஸ்.ராஜரத்தினம் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.அவர் தனது மனுவில், ‘தற்போதைய சூழலில் சமுதாயத்தில் ஒழுக்கமும் நன்னடத்தையும் குறைந்து வருகிறது. குறிபபாக இளைய சமுதாயத்திடம் ஒழுக்கம் பற்றிய சிந்தனை நன்னடத்தை,பெரியோரை மதித்தல் பெரிதும் குறைந்துள்ளது.இதனால் இளைய சமுதாயத்துக்கு குறிப்பாக ஆறாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ளஅனைத்து குறட்பாக்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.இளம் பிராயத்தில் திருக்குறள் பயிற்றுவிக்கப்பட்டால் நேர்மையும், ஒழுக்கமும் உள்ள சமுதாயம் உருவாகும். சமீப காலத்தில் இளம் சிறார்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெருகி உள்ளது.அவர்களை சீர்த்திருத்த இளம் பருவம் தொட்டே திருக்குறளை பயிற்றுவிற்றால் நாளைய சமுதாயத்தின் சிறந்த குடிமக்களாக அவர்கள் வருவார்கள். இதனால் திருக்குறளை முழுவதுமாக பள்ளி மாணவர்களுக்கு விளக்கமாக கற்பிக்க உத்தரவிட வேண்டும் எனக் மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணகுமார் வாதிடும்போது, ‘மனித வாழ்க்கையின் அனைத்து கூறுகளை மற்ற எந்த இலக்கியங்களும் குறிப்பிடாத அளவில் திருக்குறளில்கூறப்பட்டுள்ளது.

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள்

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :


1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர்  சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும்,  மூலவரின் தரிசனம் கிட்டும்போது,  அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் ...அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் ....இறை சக்தி நம்மை காக்கட்டும் ... நன்றி ....

Sunday, 24 April 2016

dont and do in EVM machine

TNTET : ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் 27.04.2016 அன்று விசாரணைக்கு வருகிறது.

TNTET : ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் 27.04.2016 அன்று விசாரணைக்கு வருகிறது.


ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் வருகிற 27.04.2016 அன்று பதிவாளர் நீதிமன்றத்தில் கோர்ட் எண்.2யில் வரிசை எண் 90 ஆவதாக விசாரணைக்கு வருகிறது.
 

Saturday, 23 April 2016

தேர்தல் 2016 - PO, P1, P2 , P3 ஆகியோரின் கடமைகள் - தேர்தல் நாள் அன்று, மற்றும் முந்தய நாள் செய்ய வேண்டியவைகள் - EVM, MOCK POLL, SEAL பற்றிய முழுமையான தகவல்கள் - அனைத்தும் எளிய தமிழில் பட விளக்கங்களுடன்

இணையதளத்தில் இன்ஜி., கல்லூரிகளின் கட்டண விவரம்

அண்ணா பல்கலை இணையதளத்தில் இன்ஜி., கல்லூரிகளின் கட்டண விவரம்


இன்ஜி., கல்லுாரிகளின் பாடப்பிரிவு மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 570 இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால் மட்டுமே அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இந்த ஆண்டுக்கான அங்கீகார பட்டியல் வெளியிடப்படவில்லை. 
இந்நிலையில், பி.இ., - பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. நேற்று வரை, அண்ணா பல்கலையின் இணையதளத்தில், ஒரு லட்சத்து, 4,000 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 54 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, 'ஆன்லைனில்' விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், கல்லுாரிகளின் விவரங்களை மாணவர் மற்றும் பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில், அண்ணா பல்கலையின் https://www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
இதில், கல்லுாரிகள் பற்றி முழு விவரம், என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன; அவை எப்போது துவங்கப்பட்டன; விடுதி கட்டணம், உணவு கட்டணம் போன்ற பல விவரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

Thursday, 21 April 2016

தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி

தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி


தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின் போது பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ( Zonal Officer, Presiding Officer, Polling Officer I, Polling Officer II , Polling Officer III மற்றும் BLO ) அலுவலர்களுக்கு பயனளிக்கும் தகவல்கள், பயிற்சிக் கட்டகங்கள், Manuals, வீடியோ இணைப்புகள், வினாக்கள் மற்றும் பிற விரிவான தகவல்களை உள்ளடக்கிய செயலியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்ட தேர்தல் அலுவலர் (ஆட்சியர்) அவர்கள் வெளியிட்டுள்ள “Thanjavur Election" என்ற இச்செயலி தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி, அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. நீங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளீர்களா? நீங்கள் எந்த மாவட்டமாக இருந்தாலும், அவசியம் தேர்தல் நாள் வரையிலும் உங்கள் செல்பேசியில் இருக்க வேண்டிய செயலி இது. Be Informative and be Efficient.


கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய இணைப்பு - https://goo.gl/wZ4Qjc

தேர்தல் பணியாளர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்

தேர்தல் பணியாளர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் தங்களுக்கான அடையாள அட்டையை கட்டாயம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்றார் மாவட்டத் தோóதல் அலுவலர் சு. கணேஷ்.


சட்டப்பேரவைத் தோóதலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனு பெறும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது:


தோóதல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோóதலுக்கு வெள்ளிக்கிழமை முதல் (ஏப். 22) வரும் 29-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது. தோóதல் நடத்தும் அலுவலர் தலைமையில் ஒவ்வொரு நாளும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்கள் பெறப்படும். விடுமுறை நாட்களில் வேட்புமனுக்கள் பெறப்படாது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, 100 மீட்டருக்கு முன் வாகனத்தை நிறுத்திவிட வேண்டும்.


வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் நடைபெறும் வளாகத்தில் தனிநபர்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது. அலுவலர்கள், பணியாளர்கள் பணி மேற்கொள்ளும் நேரத்தில் அடையாள அட்டை அணிந்து பணியாற்ற வேண்டும். பொது தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வேட்புமனுவுடன் ரூ. 10 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். தனித்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் உரிய சாதிச்சான்றுடன் வேட்புமனு, ரூ. 5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.


வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நிறைவு நாளின் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபர்களை அனுமதித்து பதிவு செய்ய வேண்டும். 3 மணிக்கு மேல் வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்களைப் பெறக்கூடாது என்றார்.


இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சு. மாரிமுத்து, தோóதல் நடத்தும் அலுவலர்கள் எஸ்.பி. அம்ரித் (புதுக்கோட்டை), மு. வடிவேல்பிரபு (விராலிமலை), ரா. ரம்யாதேவி (அறந்தாங்கி), ஜெயபாரதி (ஆலங்குடி), செல்வராஜ் (கந்தர்வகோட்டை), சூரியகலா (திருமயம்), வட்டாட்சியர் (தோóதல்) தவச்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாக்குச்சாவடி மையஅலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் தேர்வு

வாக்குச்சாவடி மையஅலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் கணினி மூலம் தேர்வு


கணினி மூலம் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள், பணியாளர்கள் பணியிடம் தேர்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் டி.பி. ராஜேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது:


கணினி மூலம் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு தொடர்பான பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாள்வது குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது.



கரூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு கரூர் பசுபதீஸ்வரா நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும், அரவக்குறிச்சி தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு ஆறுமுகம் அகாதெமி மேல்நிலைப் பள்ளியிலும், குளித்தலை தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு புலியூர் ராணி மெய்யம்மை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் பயிற்சி நடைபெறுகிறது.


அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 4,916 வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வரும் 24-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சட்டப்பேரவைத் தொகுதி வாரியான மையங்களில் பயிற்சி நடைபெறுகிறது.


இதில், தேர்வு செய்யப்பட்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் பங்கேற்று பயிற்சி பெற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக, வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்றும் தலைமை அலுவலர், முதல் நிலை, 2-ம் நிலை, 3-ம் நிலை மற்றும் 4-ம் நிலை அலுவலர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.


இப்பயிற்சி தொடர்ந்து 3 கட்டங்களில் வழங்கப்படும். ஒவ்வொரு பயிற்சியிலும் வாக்குப்பதிவு மையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தவறாமல் பங்கேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கையாளுதல் மற்றும் வாக்குப்பதிவின்போது மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து நன்கு தெரிந்துகொண்டு வாக்குப்பதிவு நாளன்று சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.


நிகழ்ச்சியில், மாவட்ட உதவித் தேர்தல் அலுவலர் மு. அருணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

Wednesday, 20 April 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு.

தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு.


அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படியை தமிழக அரசு உயர்த்தி வழங்கியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால், ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் போது, மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவில் உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 6 சதவீதம் உயர்த்தப்பட்டது.இதனால், அகவிலைப்படியின் அளவு 119 சதவீதத்தில் இருந்து 125 சதவீதமாக அதிகரித்தது.தமிழக அரசு ஊழியர்கள்: மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவு விவரம்:தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.


எத்தனை பேருக்கு பலன்:


அகவிலைப்படி உயர்வினால் அரசு அலுவலர்களுக்கு ரூ. 4 ஆயிரத்து 620 வரையில் மாத ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.183 முதல் ரூ.2 ஆயிரத்து 310வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும்.இந்த உயர்வால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனடைவர் என்று தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதியன்று, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டது.


இதனால், அகவிலைப்படியானது 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதிகரித்தது. இந்த நிலையில், மீண்டும் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்! - ராமதாஸ்

அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்! - ராமதாஸ்

பா.ம.க. ஆட்சிக்கு வந்ததும், அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

''மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த விஷயங்களில் தமிழக அரசு கடைபிடிக்கும் அணுகுமுறையும், அலட்சியமும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை; சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.விலைவாசி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடுசெய்யும் வகையில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். பண வீக்கத்தின் அளவுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வின் அளவும் மாறுபடும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஒருமுறையும், ஜூலை மாதம் ஒருமுறையும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
கடந்த ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய 6% அகவிலைப்படி உயர்வை மத்தியஅரசு கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி அறிவித்தது. வழக்கமாக மத்திய அரசு அறிவித்த இரு வாரங்களில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்படுவது வழக்கம்.ஆனால், மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால் அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.366 முதல் ரூ.4,620 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும். ஆனால், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாததால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், இதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை.
அகவிலைப்படி உயர்வு பற்றி விளக்கம் கேட்கும் அரசுஊழியர்களிடம், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால்தான் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க முடியவில்லை என்று தமிழக அரசின் உயரதிகாரிகள் சிலர் கூறியதாக தெரிகிறது.அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்க தேர்தல் ஆணையம் தடை விதிக்காது. இது வழக்கமான நடைமுறை தான் என்பதால், தமிழக அரசுத் தரப்பில் இதற்கான அனுமதி கோரிய உடனேயே வழங்கப்பட்டுவிடும்.2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போதுகூட ஏப்ரல் 3-ம் தேதியே 10% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இவ்வளவு தாமதம் செய்யப்படுவதைப் பார்க்கும்போது ஊழியர்களுக்கு எதிரான பழிவாங்கலில் அரசு ஈடுபடுகிறதோ? என எண்ணத் தோன்றுகிறது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படாவிட்டால், அதன்பின் மே மாத இறுதியில் தான் கிடைக்கும்.
எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று 2016 ஆம் ஆண்டு ஜனவரி-ஜூன் மாதங்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வைகுறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த  வேண்டும்.அரசு ஊழியர்களின் நலன்களையும், கோரிக்கைகளையும் திராவிடக் கட்சி அரசுகள் நிராகரித்தே வருகின்றன. அகவிலைப்படியின் அளவு 100 விழுக்காட்டைத் தாண்டியவுடன், அதில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க வேண்டும் என்பது மரபு. ஆனால்,கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே அகவிலைப்படி 100 விழுக்காட்டைத் தாண்டிவிட்ட நிலையில், அப்போதே 50% அகவிலைப்படி உயர்வை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு மறுத்துவிட்டது.
ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்பதால் அவை இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை. இத்தகைய தருணங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படுவது தான் இயற்கை நீதியாக அமையும். ஆனால், அதைக்கூட அரசு ஊழியர்களுக்கு வழங்க திராவிடக் கட்சிகளின் அரசுகள் தயாரில்லை.பா.ம.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு ஊழியர்களின் அனைத்து குறைகளும் ஆய்வு செய்யப்பட்டு சாத்தியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இதற்காக அரசுத்துறை செயலாளர் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும், அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்வரை, இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும், புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை பாட்டாளி மக்கள் கட்சி நிறைவேற்றும். இதற்கெல்லாம் மேலாக அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

Tuesday, 19 April 2016

புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது; மத்திய அரசு

புதிதாக 2.2 லட்சம் பேரை வேலைக்கு சேர்க்கிறது; மத்திய அரசு


இன்னும் ஒரு ஆண்டுக்குள் 2.2 லட்சம் ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2015ம் வருடம் மார்ச் 1ம் தேதி வரையில் மத்திய அரசில் 33.05 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்தனர். இதனை இந்த ஆண்டு 34.93 லட்சமாகவும், அடுத்த ஆண்டு மார்ச்1க்குள் 35.23 லட்சம் ஊழியர்களாவும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் ரயில்வே துறையிலும் ஆட்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ரயில்வேயில் 13,26,437 பேர் பணிபுரிகின்றனர். கடந்த 3 வருடங்களாக பணி நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை. பாதுகாப்பு படையில் ஆட்கள் நியமனம் செய்யப்டுவது சந்தேகம் தான். வருமான வரி, சுங்கத்துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய துணை ராணுவப் படையினரின் எண்ணிக்கையும் 47 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது. உள்துறை அமைச்சகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சகத்தில், 301 ஊழியர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.


சென்ற ஆண்டு 900 ஊழியர்களாக இருந்த இத்துறையில், 2017 மார்ச்1ல் 1201 ஊழியர்கள் பணிபுரிவார்கள். தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் கடந்த இரண்டு வருடத்தில், 2200 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு ஊழியர்களை நிர்வகிக்கும் தனித்திறன் அமைச்சகத்தில், 1800 ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தில் 6 ஆயிரம் பேரும், நிலக்கரி அமைச்சகத்தில் 4,399 பேரும், விண்வெளி துறையில் ஆயிரம் பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.

தொடக்க /நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை /பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு நிலை படிவம் /கருத்துரு படிவம்

Monday, 18 April 2016

கை தட்டினால் இவ்ளோ பலன்களா?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!...

கை தட்டினால் இவ்ளோ பலன்களா?.. கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!...


கை தட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் அண்டாமல் நம்மை பாதுகாக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் உள்பட எல்லா நோய்களுக்கும் காரணமாக இருப்பது நம் மனம் தான். அதனால் தான் எண்ணம் போல் வாழ்வு அமையும் என்று கூறியுள்ளனர். எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கிற நிலை வந்தால் உடம்பை எந்த நோயும் நெருங்காது என்கின்றனர் மருத்துவர்கள்.

வெற்றி தான் மகிழ்ச்சியின் திறவுகோல் என்பதை விட மகிழ்ச்சியாக இருப்பது தான் வெற்றி என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனது விட்டு சிரிப்பதும், கை தட்டி ரசிப்பதும் அவசியம் என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள்.
கை தட்டுவதே ஒரு சிகிச்சை தான். கை தட்டும் போது அக்குபிரஷர் ட்ரீட்மென்ட் நடக்கிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமா இயங்குகிறது என்கிறனர் மருத்துவர்கள்.
மனிதர்களின் கைகளில் உள்ள நரம்புகள், இதயம், சிறுநீரகம், லிவர், நுரையீரல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் பல வித நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது.
நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மில்லிமீட்டர் குறுக்களவு கொண்டவை. டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமா சுரந்து அந்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்திடும். இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி இயல்பாவே நம் உடலில் இருக்கிறது.
சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, கெட்ட பழக்கங்கள் இல்லாத நல்ல வாழ்க்கை முறை தேவை. மனசு மகிழ்ச்சியா இருந்தா, என்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும், ஹெச்.டி.எல்ங்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும்.
99 சதவீதம் அடைப்பு இருந்தாக்கூட தானா கரைஞ்சிடும். இது கற்பனையில்லை. மருத்துவ உண்மை என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.
தினசரி காலையில் 20 நிமிடங்களுக்கு கை தட்டுங்கள் உங்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமாகும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் மருத்துவர்கள்.

கோடை காலத்தில் கார உணவு வேண்டாம்:குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் தேவை

கோடை காலத்தில் கார உணவு வேண்டாம்:குழந்தைகள் நலனில் கூடுதல் கவனம் தேவை


கோடை வெயில் அதிகரித்துள்ளதால், அதற்கேற்ற வகையில், பொதுமக்கள் தங்கள் உணவுப் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பெற்றோர், குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; கார உணவு வகைகள், 'பாஸ்ட் புட்' ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுகுறித்து, அரசு குழந்தைகள் சிகிச்சை நிபுணர் நீலகண்டன் கூறியதாவது:


வெயில் தாக்கத்தால், குழந்தைகளின் உடலில், நீர் சத்து குறையும்; அதிகம் தண்ணீர் தர வேண்டும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை, தினமும், 2 - 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வைப்பது அவசியம்.


பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் தர வேண்டாம். வீட்டில் தயாரிக்கும் பழச்சாறு, மோர் மற்றும் இளநீர், தர்பூசணி தரலாம்; மாம்பழ ஜூஸ் தருவதை தவிர்க்க வேண்டும். மோர், ஜூஸ் கொடுத்தால் சளி பிடிக்கும் என்பது தவறு.


குழந்தைகளுக்கு டீ, காபி கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.


பவுடர் பூச வேண்டாம்; அது, வியர்வை சுரப்பிகளை அடைத்து, வேர்க்குருவை உருவாக்கும்; அது, அக்னி கட்டியாக மாறி, தொல்லை தர வாய்ப்பு உளது. பவுடக்கு பதிலாக, கற்றாழை, 'காலமின்' என்ற மண், திரவ 'பாரபின்' கலந்த, லோஷன் தடவலாம்; இது கடைகளில் கிடைக்கிறது.


குளிக்க பயன்படுத்தும் வழக்கமான சோப்பை விட, 'அசிடிக் சோப்' போடலாம். இது, தோல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.


மசாலா உணவுகள், 'ஜங் புட், பாஸ்ட் புட்', அசைவ, கார உணவுகள் வேண்டாம்.


தினமும், இரண்டு முறை குளிக்க வைப்பது நல்லது; பருத்தி ஆடைகள் மட்டுமே அணிய வேண்டும் .


ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும்; குழந்தைகளுக்கு பால் தேவை இந்த நேரத்தில் அதிகமாகும்; தாய்ப்பால் கொடுக்காதோர், டாக்டர்கள் பரிந்துரைத்தபடி இணை உணவுகள் தரலாம்.


ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக நேரம் துாங்கும். கோடை தாக்கத்தால், துாக்கம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


குழந்தைகள் உடலில், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய் தேய்த்து சற்று நேரம் கழித்து குளிப்பதும், தோல் பிரச்னைகளை தவிர்க்க உதவும்.இவ்வாறு அவர் கூறினார்.-

Saturday, 16 April 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?

தமிழக அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு?


அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைமுறை விதிகள் அமுலில் உள்ளதால் அறிவிப்பு ஏதும் வெளியாக வாய்ப்பு இல்லையென்றும், ஆனால் கோப்புகள் தயாராக உள்ளதெனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வுக்கான ஆணை நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயர்வு 01.01.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.
தகவல் : க.சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர், தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணி.

வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த 77 % மாணவர்கள் எம்சிஐ டெஸ்டில் பெயில்!!

வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த 77 % மாணவர்கள் எம்சிஐ டெஸ்டில் பெயில்!!


வெளிநாடுகளில் மருத்துவ டாக்டர்கள் பட்டம் படித்து இந்தியா திரும்பியுள்ள மாணவர்கள் இங்கு நடந்த இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) டெஸ்டில் தோல்வியுற்றுள்ளனர்.
77 சதவீத மாணவர்கள் இந்த மருத்துவத் தேர்வில் தோல்வியுற்று இருப்பது எம்சிஐ அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


வெளிநாடுகளில் சென்று மருத்துவப் படிப்பு படித்தாலும் இந்தியாவில் டாக்டர்களாக தொழில் செய்ய வேண்டுமென்றால் எம்சிஐ நடத்தும் தேர்வில் வெற்றி பெறவேண்டும். அவ்வாறு எம்சிஐ நடத்திய தேர்வுகளில் 77 சதவீத வெளிநாட்டில் டாக்டர்கள் படித்த மாணவர்கள் பெயிலாகியுள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளில் நடந்தத் தேர்வு முடிவுகளாகும் இது.



இந்தத் தேர்வை எம்சிஐ, நேஷனல் போர்ட் ஆஃப் எக்ஸாமினேஷன்ஸ் (என்பிஇ) உதவியுடன் நடத்துகிறது.
தற்போது என்பிஇ கொடுத்த புள்ளி விவரங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு முதல் தேர்வு எழுதியவர்களில் 77 சதவீதம் பேர் தோல்வியுற்றுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டு நடக்கும் தேர்விலும் 10 முதல் 20 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.
2008-ம் ஆண்டு நடந்தத் தேர்வில் 58.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
2014-ம் ஆண்டு நடந்த 2 தேர்வுகளில் முறையே 10.4, 11.4 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி கண்டுள்ளனர்.

Friday, 15 April 2016

ஆசிரியர்களின் பதவி உயர்வு விவகாரங்களில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஆசிரியர்களின் பதவி உயர்வு விவகாரங்களில் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு.


அரசு ஊழியருக்கு பதவி உயர்வுக்கான விதிகளை உருவாக்குவது அரசின் உரிமை. அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கடந்த 2004 முதல் 2014 வரை பட்டதாரி ஆசிரியர்களாக நேரடியாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியராக இருந்து பதவி உயர்வு பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு தனியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும்.

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வில் நேரடி பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தலா 50 சதவீத இடங்கள் வழங்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி பெலின் தெய்வகுமார், செந்தில், ஜெயச்சித்ரா உட்பட 13 பேர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு மற்றும் பதவி உயர்வில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என 16.10.2015-ல் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த தனி நீதிபதி, ‘பள்ளிக்கல்வித் துறை பணி விதிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கும்போது நேரடி யாக பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் மற்றும் பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாக இருப்ப வர்களும் சமமாக கருதப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் களுக்கு அடுத்தகட்ட பதவி உயர்வு வழங் கப்படுகிறது. ஒரே பதவியில் இரு தனித்தனி பணி மூப்பு பட்டியல் இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது. எனவே பணி மூப்பு மற்றும் பதவி உயர்வில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என 29.11.2015-ல் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பெலின் தெய்வகுமார் உட்பட 13 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்து நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்கு களில் ‘பதவி உயர்வில் என்ன விதிகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதை முடிவு செய்வது அரசின் உரிமை. இதில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது’ என உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கூடாது என உத்தரவிடும்போது மாணவர்கள் பாதிக்கப்படுவர். தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தவறில்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

Thursday, 14 April 2016

சென்ற ஆண்டு மகரராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக இருந்தது.

மகரம்
சென்ற ஆண்டு மகரராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக இருந்தது. பிறந்த ஜாதகவலுவுள்ள சிலர் மட்டுமே பின்னடைவுகள் ஏதுமின்றி குறைகளை அனுபவிக்காதவர்களாக இருந்தீர்கள். பெரும்பான்மையான மகரராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன.
சென்ற சிலமாதங்களாக எட்டாமிடத்தில் இருந்த குருவாலும் அவரோடு இணைந்திருக்கும் ராகுபகவானாலும் பெரும்பாலான மகரராசிக்காரர்களுக்கு சரியான வருமானம் இன்மை, குடும்பத்தில் சண்டை, வாழ்க்கைத் துணையிடம் கருத்துவேறுபாடு, நண்பர்களுக்குள் தேவையற்ற மனஸ்தாபம், கூட்டுத்தொழிலில் சங்கடங்கள், பங்குதாரர்களிடம் குழப்பம் போன்ற பலன்கள் நடந்து வந்தன.
அந்த நிலைமை தற்போது பிறக்க இருக்கும் தமிழ்ப் புதுவருடமான துன்முகி ஆண்டில் நீங்கி இந்த வருடம் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் நடக்கும் நனமைகளைத் தரும் சுறுசுறுப்பான வருடமாக இருக்கும்.
ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பெரும்பாலான ராஜகிரகங்கள் மகரராசிக்கு நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது என்பதால் உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் பணவரவில் நல்ல மேம்பாடான நிலையைக் கண்கூடாக காண்பீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.
இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.
அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.
சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின்  எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும்.
விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம். மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
பொதுவாக மகர ராசிக்காரர்கள் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். பள்ளிப்படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு.
கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.
குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.
பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.
பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.
நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.
இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்தொல்லைகள் எல்லை மீறாது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கடன்களை அடைக்க வழி பிறக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.
உங்களைப் பிடிக்காதவர்களின் கை வலுவிழக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் உங்களை ஒன்றும் செய்யாது. எதிர்ப்புகளைக் கண்டு நீங்கள் தயங்கிக்  கொண்டிருந்த நிலை மாறி எதிரிகள் உங்களைப் பார்த்து ஒளிகின்ற நிலை ஏற்படும்.
இதுவரை தவிர்க்கவியலாமல் செய்து கொண்டிருந்த வீண் செலவுகள் நிற்கும். ஏதாவது ஒரு வகையில் சிறுதொகையாவது சேமிக்க முடியும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபடியாக கை கொடுக்கும். வெளிநாட்டு வேலைக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது விசா கிடைக்கும்.
பொதுவில் மகரராசிக்கு நன்மைகள் மட்டுமே உள்ள ஆண்டு இது.

'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'

'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'


புதுடில்லி;நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.

இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், 2013ல், பொதுநுழைவுத் தேர்வு நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி இந்திய மருத்துவக்
கவுன்சில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொதுநுழைவுத் தேர்வு நடத்துவதற்கான உத்தரவை ரத்து செய்த தீர்ப்பை, நேற்று முன்தினம் திரும்பப் பெற்றது.இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் நேற்று கூறுகையில், 'மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான, பொதுநுழைவுத் தேர்வை இந்தாண்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை' என, தெரிவித்தன.

Tuesday, 12 April 2016

சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்

சேமிப்பை அதிகரிக்கும் வழிகள்


உங்கள் வரு­மா­னத்தின் ஒரு பகுதி சேமிப்­பாக இருக்க வேண்டும். ஆனால், செல­வுகள் அதி­க­ரிக்கும் சூழலில் இது மிகவும் கடினம் என பலர் நினைக்­கலாம். இதற்­காக சேமிப்பே சாத்­தி­ய­மில்லை என நினைக்க வேண்டாம். கொஞ்சம் மாற்றி யோசித்­தாலே போது­மா­னது. அதா­வது சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­ரிக்கும் வழி­களை கண்­ட­றிய வேண்டும். அதென்ன சேமிக்க கூடிய வரு­மானம்? வரு­மா­னத்தில் மொத்த வரு­மானம்,
 கைக்கு வரும் வரு­மானம் என இருப்­பது போல, மாத செல­வுகள் போக மிஞ்சும் வரு­மானம் தான் சேமிக்க கூடிய வரு­மானம். இது தான் சேமிப்­பாக மாறு­கி­றது. ஆக அதிகம் சேமிக்க வேண்டும் என்றால் சேமிக்க கூடிய வரு­மா­னத்தை அதி­க­மாக்க வேண்டும். இதற்கு செல­வு­களை குறைக்க வேண்டும். செல­வு­களை குறைக்க வழி­களை கண்­ட­றிய முடிந்தால் இப்­போ­தைய ஊதி­யத்­தி­லேயே சேமிப்­பது சாத்­தி­ய­மாகும்.
வரிகள் பலவிதம்வரு­மான வரி, சொத்து வரி, சேவை வரி என பல­வி­த­மான வரி­களை நாம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கி­றது. இவை தவிர கலால் வரி, மூல­தன ஆதாய வரி, வாட் வரி உள்­ளிட்ட வரி விதிப்­பு­களும் இருக்­கின்­றன. இவற்றில் ஒரு சில வரிகள் பர­வ­லாக அறி­யப்­ப­டாமல் இருப்­ப­தோடு, எந்த வரி எதற்­காக வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது என்­பதும் புரி­யாமல் இருக்­கலாம். மேலும் வரி வசூ­லிக்கும் அமைப்பு தொடர்­பான குழப்­பமும் இருக்­கலாம். இந்­தி­யாவில் செலுத்­தப்­பட வேண்­டிய வரிகள் மற்றும் அவற்றின் தன்மை பற்றி ஒரு பார்வை;
இரு வகை வரிகள்பொது­வாக வரிகள் இரண்டு வகைப்­படும். நேரடி வரி மற்றும் மறை­முக வரி என இவை குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. நேர­டி­யாக அரசு அல்­லது அரசு அமைப்­புக்கு செலுத்­தப்­படும் வரி நேரடி வரி என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. வரு­மான வரி இதற்­கான உதா­ரணம். வரி செலுத்­து­ப­வரை அதிகம் பாதிப்­பதும் நேரடி வரி தான். உற்­பத்­தி­யா­ளர்கள் அல்­லது இடைப்­பட்ட அமைப்­புகள் மூலம் அரசால் வசூ­லி­கப்­படும் வரிகள் மறை­முக வரிகள் என குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன. இந்த வரிகள் நுகர்­வோ­ரிடம் இருந்து பெறப்­பட்டு அர­சுக்கு செலுத்­தப்­ப­டு­கின்றன். சேவை வரி இதற்­கான உதா­ரணம். ஏ.சி., ரெஸ்­டாரண்ட் போன்­ற­வற்றில் பெறப்­படும் சேவை வரி அர­சுக்கு செலுத்­தப்­ப­டு­கி­றது.
முக்­கிய வரிகள்வரு­மான வரி; தனி­நபர் அல்­லது வர்த்­தக நிறு­வ­னங்கள் வரு­மா­னம் மீது செலுத்தும் வரி.வரு­மான வரிக்­கான வரு­மானம் ஐந்து வகை­யான பிரிக்­கப்­ப­டு­கி­றது; ஊதியம், வீட்டு வாடகை, வர்த்­தக வரு­மானம், மூல­தன ஆதாயம் மற்றும் வைப்பு நிதி வட்டி போன்­ற இதர வரு­மானம்.வாட் வரி: மாநி­லத்தில் விற்­கப்­படும் பொருட்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி.சேவை வரி: 1994 முதல் சேவைகள் மீது விதிக்­கப்­படும் வரி. கலால் வரி: உற்­பத்தி செய்­யப்­படும் பொருட்கள் மீது விதிக்­கப்­படும் வரி.சுங்க வரி: இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீதான வரிதொழில்­முறை வரி: ஊழி­யர், ஒரு சில தொழில் வல்­லு­னர்கள் மீது மாநில அரசு விதிக்கும் வரி. மூல­தன ஆதாய வரி: சொத்து, வாகனம், நகைகள், நிலம், பத்­தி­ரங்கள் போன்­ற­வற்றை விற்­பனை செய்யும் போது அதன் ஆதாயம் மீது விதிக்­கப்­படும் வரி.பொழு­து­போக்கு வரி: சினிமா மற்றும் இதர பொழு­து­போக்கு டிக்­கெட்கள் மீது விதிக்­கப்­படும் வரி.முத்­திரை தாள் கட்­டணம்: பத்­திர பதிவு போன்­ற­வற்றின் போது செலுத்­தப்­ப­டு­வது. சொத்து வரி: உள்­ளாட்சி அமைப்பால் ஆண்­டு­தோறும் வீட்டு உரி­மை­யா­ள­ரிடம் இருந்து பெறப்­ப­டு­வது.
மத்­திய, மாநில வரிகள்இந்­தி­யாவில் விதிக்­கப்­படும் வரிகள் பொது­வாக மத்­திய அரசு, மாநில அர­சுகள் மற்றும் உள்­ளாட்சி அமைப்­பு­களால் வசூ­லிக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு சில வரிகள் நேர­டி­யாக மத்­திய அர­சுக்கு செல்­கின்­றன. சில வரிகள் மாநில அர­சுக்கு செல்­கின்­றன. மத்­திய அரசு வரிகள்: வரு­மா­ன­ வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி.மாநில அரசு வரிகள்:விற்­பனை வரி, வாட், பொழு­து­போக்கு வரி, டோல் கட்­டணம், தொழில்­முறை வரி, முத்­தி­ரைத்தாள் கட்­டணம், ஆடம்­பர வரி, ஆக்­டிராய் வரி, மூல­தன ஆதாய வரி.உள்­ளாட்சி அமைப்பு வரிகள்: சொத்து வரி.
இதர வரிகள்இவை தவிர ஈவுத்­தொகை வினியோக வரி, டோல் கட்­டணம், ஆடம்­பர வரி, ஆக்­டிராய் வரி உள்­ளிட்­ட­வையும் பொருத்­த­மான இடங்­களில் வசூ­லிக்­கப்­ப­டு­கின்­றன.

Monday, 11 April 2016

துவக்க, நடுநிலை பள்ளிகளில் 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு

துவக்க, நடுநிலை பள்ளிகளில் 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு.


துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் வரும், 22ம் தேதி முழு ஆண்டு தேர்வு துவங்குகிறது.பிளஸ்2தேர்வு முடிந்துள்ள நிலையில்,எஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு நடந்து வருகிறது. வரும், 13ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிளஸ்1தேர்வு நடந்து வருகிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 12ம் தேதி தேர்வு துவங்கி, 22ம் தேதி முடிவடைகிறது.

துவக்க,நடுநிலை பள்ளிகளுக்கு தேர்வு தேதி குறித்து கேள்வி எழுந்தது. துவக்க,நடுநிலை பள்ளிகளுக்கு, 22ம் தேதி தேர்வு துவங்குகிறது.23ம் தேதி தேர்வு இல்லை என்றாலும் பள்ளி நடைபெறும்.24ம் தேதி ஆசிரியர்களுக்குதேர்தல் பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது. இதை தொடர்ந்து, 25ம் தேதி முதல்28ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளது.29,30தேதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்.உடற்கல்வி,ஓவியம் வரைதல் உள்ளிட்டவை நடைபெறும்.220நாட்கள் பள்ளி நடைபெற வேண்டும் என்பது விதிமுறை. அதற்காக தேர்வுக்கு பின்னரும் இரு தினங்கள் பள்ளிகள் செயல்பட உள்ளதாக,கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.

திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி: உடனடியாக முழு மதுவிலக்கு

திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி: உடனடியாக முழு மதுவிலக்கு


* கல்வி, விவசாய கடன் ரத்து
* ஆவின் பால் விலை குறைப்பு
* ஒன்பது மாத பேறுகால விடுப்பு
* விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
* மாணவர்களுக்கு இலவச வைபை
* ஏழைகளுக்கு அண்ணா உணவகம்


சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உடனடியாக முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும். அதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும். விவசாயிகளுக்கு பயிர்கடன், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புக்களை திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் குறித்த அறிவிப்பால் ஒவ்வொரு வீடுகளுக்கும் மின் கட்டணம் பாதியாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டது. ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. மொத்தம் 141 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டார். பொதுச்செயலாளர் அன்பழகன் அதை பெற்றுக்கொண்டார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்று பேசினார்.


தேர்தல் அறிக்கையில், பெண்கள் உட்பட அனைவரும் எதிர்பார்த்த பூரண மதுவிலக்கு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய சட்டம் கொண்டு வரப்படும். டாஸ்மாக் கலைக்கப்பட்டு, மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்  டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும், மாநில ஒருங்கிணைந்த ஒழுங்கு முறை விற்பனை வாரியம் என்ற புதிய வாரியத்தில் பதவி மூப்பினை இழக்காமல் பணியாற்ற வழி வகை செய்யப்படும். இந்த வாரியம் மூலம் புதிய சந்தைகள் உருவாக்கப்பட்டு விவசாயம், நெசவு பொருட்களை விற்பனை செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளின் பயிர்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும். ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்படும். அரசு பெண் ஊழியர்களுக்கு 9 மாத பேறுகால விடுப்பு, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மாணவர்களுக்கு இலவச வைபை, ஏழைகளுக்கு அண்ணா உணவகம், அனைத்து ரக நெல்லுக்கும் முழு மானியம் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதோடு, மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1989ம் ஆண்டு முதல் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர்.  இந்த அறிவிப்பின் மூலம் 27 ஆண்டுகள் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும். இதன் மூலம் விவசாயம் மீண்டும் பெருகுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் 200 தடுப்பணைகள் அமைக்கப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல்; தனி ஜவுளி ஆணையம்; தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் கூடுதலாக பால் வழங்குதல்; 25 ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு தனி சிறப்பு நிதிவழங்கி, ஊக்க ஊதியம் வழங்கப்படும்.  முதியோர் உதவித் தொகை உயர்வு; கருவில் இருக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் காப்பீடு; திருச்சி, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்; கிராம கோயில் பூசாரிகளுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் ஏராளமான அறிவிப்புகள் இந்த தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


அதோடு மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையினால் ஒவ்வொரு வீட்டிலும் மின் கட்டணம் பாதியாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அறிமுகம் செய்தால், மின் கட்டணம் பாதியாக குறையும். தற்போது மின் கட்டணம் ஒரு யூனிட் முதல் 100 யூனிட் வரை வந்தால் ஒரு ரூபாய் கட்டணம். ஒரு யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 வசூலிக்கப்படும். ரூ.200 யூனிட்டுக்கு மேல் 500 யூனிட் வரை பயன்படுத்துகிறவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ.3 வசூலிக்கப்படும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் மேலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது 2 மாதத்துக்கு ஒருமுறை  மின் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பயன்படுத்தும் யூனிட்டின் அளவு அதிகரித்து, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாதம் ஒரு முறை  மின் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பயன்படுத்தும் யூனிட்கள் அளவு குறைந்துவிடும். மின் கட்டணமும் பாதியாக குறையும். இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ரூ.200 முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் குறையும் வாய்ப்பு ஏற்படும். வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இது பெரிய வரப்பிரசாதமாகும். மீட்டர்  கணக்கெடுக்கும் பணியாளரே மின்கட்டணத்தைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


இவ்வாறு விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தென்னை விவசாயிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு, அவர்களது வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கு நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விழா முடிவில் முதன்மை செயலாளர் துரைமுருகன் நன்றி கூறினார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு, உறுப்பினர்கள் கனிமொழி எம்.பி., துணைப்பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ெஜகதீசன், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பேராசிரியர் ராமசாமி, வக்கீல்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோருக்கு திமுக தலைவர் கருணாநிதி பட்டு ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

Sunday, 10 April 2016

அகவிலைப்படி ஜனவரி 1 முதல் வழங்க உத்தரவு.

அகவிலைப்படி ஜனவரி 1 முதல் வழங்க உத்தரவு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப் படை சம்பளத்தில் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1-ம் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் நேற்று அறிவித்தது.இது குறித்து மத்திய நிதியமைச் சகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ‘மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் இருந்து 119 சதவீதம் உயர்த்தப்பட்ட அக விலைப்படி வழங்கப்பட்டு வந்தது.

இதனை கூடுதலாக 6 சதவீதம் உயர்த்தி, 125 சதவீதமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி உயர்த்தப்பட்ட இந்த அகவிலைப்படி தொகை 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படும்’என குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம் மத்திய அரசில் பணிபுரியும் 50 லட்சம் ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பய னடைவர்.

Saturday, 9 April 2016

தேர்தல் அலுவலருக்கு பயிற்சி 24ல் துவங்குகிறது.

தேர்தல் அலுவலருக்கு பயிற்சி 24ல் துவங்குகிறது.


தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, 24ல் துவங்குகிறது; மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, 11 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.ஓட்டுப்பதிவு அலுவலர், உதவி பதிவு அலுவலர்கள் என, நான்கு பேர், பூத் சிலிப் வழங்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந் திரங்களை கையாள்தல், படிவம் பூர்த்தி செய்தல், ஓட்டுப்பதிவு துவங்கும் முன், முடிந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி, மூன்றுகட்டமாக அளிக்கப்படும். தேர்தல் பிரிவினர் கூறியதாவது:தேர்தல் பணியாற்றும் அலுவலர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. முதல்கட்ட பயிற்சி, 24ல் அளிக்கப்படும். படிவங்கள், ஓட்டுப்பதிவுஇயந்திரங்கள் கையாள்தல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும், வழிகாட்டி மற்றும் தேர்தல் நடைமுறை, விதிமுறை குறித்த புத்தகங்கள் வழங்கப்படும்.
மூன்றாம் கட்டமாக, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான, 15ம் தேதி காலையில், பயிற்சி அளிக்கப்படும். சம்மந்தப்பட்ட அலுவலர் எந்த தொகுதியில், எந்த ஓட்டுச்சாவடியில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்ற உத்தரவு வழங்கப்படும்; அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று உடனடியாக பணி ஏற்க வேண்டும்; தேர்தல் பொருட்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாகனங்களில் அனுப்பப்படும். இவ்வாறு, அவர்கள் தெரி வித்தனர்.

பள்ளி ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் பயிற்சி: கல்வித் தரத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி

பள்ளி ஆசிரியர்களுக்கு சிங்கப்பூரில் பயிற்சி: கல்வித் தரத்தை உயர்த்த டெல்லி அரசு அதிரடி


அரசுப் பள்ளிகளில் ஆசியர்களாக பணியாற்றுபவர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு தீர்மானித்துள்ளது.


இந்தியாவிலும் வெளிநாடுகளுக்கு நிகரான கல்வித்தரத்தை கொண்டுவர வேண்டும் என இங்குள்ள பல மாநில அரசுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஒருகட்டமாக, டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களை சிங்கப்பூருக்கு அனுப்பி அங்குள்ள பிரபல ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது.


இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெல்லி துணை முதல் மந்திரியும் கல்வித்துறை மந்திரியுமான மணிஷ் சிசோடியா ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-


பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு எப்படி கற்பிப்பது?, என்ன கற்பிப்பது? என்பது தொடர்பான இருஅம்ச செயல்திட்டத்தை டெல்லி அரசின் கல்வித்துறை உருவாக்கியுள்ளது.


இதன்படி, உலகளாவிய அளவில் உள்ள கற்பித்தல் முறையை நாமும் கடைபிடிக்க வேண்டியுள்ளது. ஆனால், அவற்றை கண்மூடித்தனமாக நாமும் அப்படியே ‘காப்பி அடித்தால்’ அனைத்துமே வீணாகிவிடும். எனவே, கற்பித்தல் கலை தொடர்பான பல்வேறு அனுபவங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும் நாம் பின்பற்ற வேண்டியுள்ளது,


இவற்றில் நமக்கு தேவையான நுணுக்கங்களை அறிந்துகொள்ளும் வகையில் சிங்கப்பூருக்குச் சென்று, அங்குள்ள தேசிய கல்வியல் பயிற்சியகத்தில் சில பயிற்சிகளை மேற்கொள்ள நீங்கள் தயாராக வேண்டும். இதேபோல், ஜெர்மனி மற்றும் பின்லாந்தில் உள்ள சில சர்வதேச பள்ளிகளுக்கும் நீங்கள் பயிற்சிக்காக செல்ல அரசு ஏற்பாடு செய்யும்.


மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.


இதேபோல், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை பயிற்சிக்காக இங்கிலாந்தில் உள்ள பிரபல கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கவும் முடிவு செய்துள்ள டெல்லி அரசு, இவ்விரு திட்டங்களுக்காகவும் நடப்பு நிதியாண்டில் 102 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது

Friday, 8 April 2016

தேர்தலுக்கு பின் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'ஆதார்' அட்டை நகல் வாங்க முடிவு

தேர்தலுக்கு பின் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'ஆதார்' அட்டை நகல் வாங்க முடிவு


சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கு வதற்காக மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவற்றில் உள்தாள் ஒட்டப்பட்டு செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல முறைகேடுகள் நடக்கின்றன. இதை தடுக்க கண், விரல் ரேகை மற்றும் புகைப்படத்துடன் கூடிய 'ஸ்மார்ட்' வடிவில் ரேஷன் கார்டு வழங்க உணவு துறை முடிவு செய்தது.


இதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கின. ஆனால் அரசியல் குறுக்கீடு காரணமாக செயல்படுத்த முடிய வில்லை. இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்குவதற்காக மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.அரியலுார், பெரம்பலுாரில் முதலில் தரப்படும்.


இதுகுறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க பொது மக்களிடம் இருந்து தனியாக விவரங்களை சேகரித்தால் தாமதம் ஏற்படும். தற்போது அதிகம் பேர் 'ஆதார்' அட்டை வாங்கி வருகின்றனர். எனவே அதன் நகலை வாங்கி, ரேஷன் கடைகளில் 'ஸ்கேன்' செய்து அந்த விவரங்கள் அடிப்
படையில் 'ஸ்மார்ட்' வடிவில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.


ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனரோ, அவர்கள் அனைவரின் ஆதார் அட்டை நகலும் வாங்கப்படும். ஆதார் அட்டையில் இல்லாத விவரம் மக்களிடம் இருந்து நேரடியாக பெறப்படும். இந்த பணி தேர்தல் முடிந்ததும் துவங்கப்படும். முதல் கட்டமாக ஜூலை மாதம் அரியலுார், பெரம்பலுாரில் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர்

Wednesday, 6 April 2016

கால்நடை பல்கலை கழகத்தில் ஜூன் முதல் வாரம் விண்ணப்பம்

கால்நடை பல்கலை கழகத்தில் ஜூன் முதல் வாரம் விண்ணப்பம்


தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் எஸ்.எஸ்.திலகர் சென்னையில், நேற்று கூறியதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், தமிழகத்தில், ஒரு தனியார் பல்கலைக் கழகம் உட்பட, 13 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அவற்றில், அரசு நிறுவனங்களில் இரண்டாவது இடத்தை, தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.


மத்திய அரசு, முதன்முறையாக வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், தேசிய அளவில், 36வது இடத்தை பிடித்திருப்பது, இப்பல்கலைக் கழகத்தின் தரத்துக்கு சான்று. இந்தாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம், ஜூன் முதல் வாரத்தில் துவங்கி, ஒரு மாத காலம் வரை, 'ஆன்லைனில்' கிடைக்கும்.


இந்தாண்டு முதல், புதுக்கோட்டை மண்டல ஆய்வு மையத்தில், பாலிடெக்னிக் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. கறவை மாடு, ஆடு, பசு, கோழி, பன்றி, வான் கோழி வளர்ப்பு முறை பற்றிய, ஓராண்டு டிப்ளமோ படிப்பு, அங்கு பயிற்றுவிக்கப்படும். அதற்கான மாணவர் சேர்க்கை, ஆகஸ்டில் துவங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பல்கலைக் கழக பதிவாளர் டி.ஜே.ஹரிகிருஷ்ணன், உடன் இருந்தார்.
ஓட்டுப்பதிவு அன்று முழு விடுமுறை


சென்னை: 'தேர்தல் நடைபெறும், மே, 16ம் தேதி, அனைத்து நிறுவனங்களும், அனைத்து பணியாளர்களுக்கும், ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்' என, தொழிலாளர் நலத்துறை கமிஷனர் அமுதா தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: மக்கள் பிரதிநிதித்துவ சட்ட அடிப்படையிலும், தேர்தல் கமிஷனின் அறிவுரைகளின்படியும்,
ஓட்டுப்பதிவு நாள் அன்று, விடுப்பு வழங்க வேண்டும்.தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் உட்பட, அனைத்து பணியாளர்களுக்கும், ஓட்டுப்போட ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tuesday, 5 April 2016

அறிவியல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் தேர்ச்சி பெறுவதும்

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் தேர்ச்சி பெறுவதும்


பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதும் தேர்ச்சி பெறுவதும் எளிதுதான். கடந்த 4 ஆண்டுகளாக அறிவியல் தேர்வில்தான் அதிகமான மாணவர்கள் 100 சதவீதம் மதிப்பெண்களையும், அதிகமானோர் தேர்ச்சியும் பெற்றுவருவதே இதற்கு சான்று.அறிவியல் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, செய்முறைத் தேர்வு (25 மதிப்பெண்கள்) கருத்தியல் தேர்வு (75 மதிப்பெண்கள்) என நடத்தப்படுகிறது.இதில் செய்முறைத் தேர்வில் குறைந்தது 15 மதிப்பெண்களும் கருத்தியல் தேர்வில் 20 மதிப்பெண்களும் மொத்தம் 35 மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி அடைந்துவிடலாம்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும், என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

மனப்பாடம் கூடாது; பகுத்தறிந்து படிக்க வேண்டும்


பிளஸ் 2 முடித்த மாணவர்கள், பொதுத் தேர்வைத் தவிர உயர்கல்விக்கான நுாற்றுக்கணக்கான நுழைவுத் தேர்வுகளை கட்டாயம் எழுத வேண்டும், என, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் தெரிவித்தார்.


சென்னையில் நடந்து வரும், தினமலர் நாளிதழின் வழிகாட்டி நிகழ்ச்சியில் நேற்று, பிரபல கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் நம்பி உள்ளனர். ஆனால், மற்ற மாநில மாணவர்கள், நுாற்றுக்கணக்கான படிப்புகளை தேர்வு செய்து, அதற்கான நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம் எளிதாக, உயர்கல்வி வாய்ப்பை பெறுகின்றனர்.

எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்ணை மட்டும் பார்க்காமல், நுழைவுத் தேர்வுகளை எழுத கற்றுக் கொள்ளுங்கள். பிளஸ் 2வில் குறைந்த மதிப்பெண் இருந்தால் கூட, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜி., உட்பட பல தொழில் படிப்புகளை படிக்கலாம்.
அதற்கு, ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இதே போல், தமிழகத்தில் நாம் படிப்பது வெறும் மனப்பாடக் கல்வி; அதைத் தாண்டி எவ்வளவோ உள்ளன. ஆராய்ச்சி, பகுத்தறிந்து படிப்பது, சிந்திக்கும் திறனை ஊக்குவித்து படிப்பது என்பது தான், உயர்கல்வியிலும், உங்கள் வாழ்விலும் கைகொடுக்கும்.
நுழைவுத் தேர்வுகளில், ஜே.இ.இ., - யு.சி.இ.இ.டி., - என்.ஏ.டி.ஏ., - ஏ.ஐ.பி.எம்.டி., என, 80க்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் பெரும்பாலான தேர்வுகளை, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் எழுத வேண்டும்.
பிளஸ் 2 படிக்க துவங்கும் போதே, இந்த நுழைவுத் தேர்வுகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவற்றுக்கு விண்ணப்பித்து, முன்கூட்டியே தயாராக வேண்டும். இன்ஜி., படிப்புகளைத் தாண்டி, வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்பு தரும் ஏராளமான படிப்புகள் உள்ளன.
தமிழகத்தில் அண்ணா பல்கலை கவுன்சிலிங்கிலும், மருத்துவக் கவுன்சிலிங்கிலும் இடம் கிடைக்காத அளவுக்கு மதிப்பெண் குறைந்தவர்கள் கூட, மற்ற நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்று பெரிய கல்வி நிறுவனங்களில் சேர்கின்றனர்
எனவே, பிளஸ் 2 படிக்கும் முன், உங்களுக்கான இலக்கு எது; என்ன படிப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், இலக்கு இல்லாத கால்பந்து விளையாட்டை, இரண்டு ஆண்டு விளையாடி விட்டு, கடைசியில், கோல் கம்பம் எங்கே என தேடும் நிலை தான் ஏற்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

7th Pay Commission Latest News – CG Employees Have to Wait a Little Longer for Implementation

7th Pay Commission Latest News – CG Employees Have to Wait a Little Longer for Implementation


7th Pay Commission Latest News – CG Employees Have to Wait a Little Longer – Cabinet Secretary assured that fair consideration will be given to all points brought out by JCM before taking a final view. 7th Pay Commission Latest News – CG employees have to wait a little longer for the 7th pay Commission bonanza announced in November last year, as the Empowered Committee of Secretaries (E-CoS) headed by Cabinet Secretary PK Sinha wants to address various concerns raised by the Joint Consultative Machinery (JCM) before taking a final call on the recommendations of the commission. The empowered committee with 12 secretaries on board was set up on January 27 to process the recommendations of the Seventh Central Pay Commission.

In a recent meeting attended by Home Secretary Rajiv Mehrishi, Defence Secretary G Mohan Kumar with Cabinet Secretary and others, JCM representatives raised the concerns over pay commission recommendations on minimum pay and allowances saying it will cause difficulty to the employees.
It is learnt that the Cabinet Secretary also asked the E-CoS members to hold interactions with their staff associations and other stakeholders to expedite the process.
“Cabinet Secretary assured that fair consideration will be given to all points brought out by JCM before taking a final view. He also said that E-CoS needs to examine the report of the commission in entirety as well as the issues raised by JCM in consultation with all other stakeholders. It may take some time to take some time to take a final call on the recommendations of the commission,” a government note said.
The empowered committee was told by staff representatives that the minimum pay of Rs.18,000 pm recommended by the pay commission was on the lower side and needed to be revised upward by taking into account inflation and appropriately considering social obligations and housing of the staff.
A major concern has been raised with Cabinet Secretary on the NPS saying that it should be done away with. The staff associations have argued that employees governed by the NPS are deprived of family pension and do not have the provision of PF.
Source: Indian Express

Sunday, 3 April 2016

VALUATION DATES FOR +2

தலைமைச்செயலகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

தலைமைச்செயலகத்தில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு


சென்னை;சென்னையில், தலைமைச் செயலகம் உள்ள, கோட்டை வளாகத்தில், நேற்று, சுரங்கப்பாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், தலைமைச் செயலகம் உள்ளது. இங்கு, அரசு அலுவலகங்கள், ராணுவ அலுவலகம், கடற்படை அலுவலகம், மத்திய தொல்பொருள் துறை அலுவலகம், கோட்டை அருங்காட்சியகம் ஆகியவை இயங்கி வருகின்றன. அகழியுடன் கூடிய கோட்டையில், ஆங்காங்கே சுரங்க பாதைகள் உள்ளன.


முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் எதிரே, கோட்டை மதில் சுவரை ஒட்டி, பூங்கா உள்ளது. அதை சுற்றி உள்ள சுவரில், ஓரிடத்தில், 'பிளைவுட்' பலகை பொருத்தப்பட்டிருந்தது.நேற்று பகல், 1:00 மணி அளவில், 'பிளைவுட்' பலகை பெயர்ந்து கீழே விழுந்தது. அந்த இடத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு, அகலமான படிக்கட்டுகளுடன் கூடிய சுரங்கப்பாதை இருந்தது. அதில், கீழே இறங்கி சென்றால் சிறிது துாரத்திற்கு பிறகு, ஒரு ஆள் மட்டும் செல்லக்கூடிய அளவிற்கு, சிறிய பாதையாக உள்ளது. அது எவ்வளவு துாரம் செல்கிறது என்பதை அறிய முடியவில்லை.


மத்திய தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் லுார்துசாமி, துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி, ஆகியோர் சுரங்கப்பாதையை ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது:
செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் பழைய வரைபடம் உள்ளது. அதில், பல மாற்றங்கள் உள்ளன. எனவே, மீண்டும் கோட்டையை முழுமையாக ஆய்வு செய்து, புதிய வரைபடம் தயார் செய்யும் பணியை துவக்கி உள்ளோம். இப்பணியின்போது, கோட்டையில் உள்ள சுரங்கப்பாதைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.


கோட்டை கொத்தளத்திற்கு கீழே, மிகப்பெரிய அறை உள்ளது. அதன் நடுவில், மிகப்பெரிய பீரங்கி உள்ளது. அதை மேலே கொண்டு வர முடியாததால், அங்கேயே வைத்துள்ளோம். இதுபோல், கோட்டையில் மறைந்துள்ள பொக்கிஷங்களை கண்டறிய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Saturday, 2 April 2016

கண்ணாடியை திண்ணும் வித்தை எப்படி ? மந்திரமா, தந்திரமா? அறிவியல் நிகழ்ச்சியில் ருசிகரம் காதில் குளிர்பானம் குடிப்பது எப்படி ? அறிவியல் உண்மை விளக்கம்


தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் அறிவோம் நிகழ்ச்சி வாயிலாக பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மேஜிக் ஷோவும், அதன் தந்திரங்களும் சொல்லப்பட்டது.  நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை உதவி தொடக்க கல்வி அலுவலர் லெட்சுமி தேவி தலைமை தாங்கினார் .ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் முனைவர் சந்திரமோகன், பட இயக்குனர் கரு.அண்ணாமலை ஆகியோர்  முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில செயலாளர் முனைவர் சேதுராமன் மாணவர்களுக்கு பந்தினை மறையவைத்து மீண்டும் வரவைத்தல்,   காதில் குளிர்பானம் குடித்தல்,  திருநீறு வருவித்துக் காட்டுதல்,உடம்பின் மீது தீயை இழுத்தல் அதனால் தீக்காயம் ஏற்படுவதில்லைவாயில் எறியும் கற்புரம் போடுதல்தண்ணிரில் விளக்கு ஏற்றுதல், கண்ணாடி துண்டுகளை தின்னுதல்,


நீரை வானத்துக்கு அனுப்புதல்,
வெற்றுப் பையில் இருந்து பொருட்களை எடுத்தல்,தேங்காயை உடைத்தால் பூக்கள் வெளிப்படுதல்,காதுகள் வழியாக கேள்விகளை அனுமானித்தல்,உடல்மேல் சாம்பல் பூசியதும் பெயர் தொன்றுதல்,மாய எழுத்துக்கள்,கைப்பாவையே கடவுள்,மூவர்ண ரிப்பன்களை இணைத்தல் மந்திரத் தீ, குறிசொல்லுதல், துண்டுகளை இணைத்தல் ( பிதாகரஸ் தத்துவம் ) , காசு உள்ள முட்டையை எடுத்தல் ,கைக்குட்டையை காண்பித்து மறைய வைத்து கூடு விட்டு கூடு மாற வைத்தல் ,பந்தை இருப்பதை போலவே காண்பித்து இல்லமால் செய்து மீண்டும் பந்தை வரவைத்தல் ,ஜாதக முறையில் பெயரில் உள்ள பிரச்சினையை தீர்மானித்தல் உட்பட பல அறிவியல் அற்புதங்களை தந்திரங்களோடு சொல்லி கொடுத்தார்.மாணவர்கள் யோகேஸ்வரன்,ரஞ்சித்,மாணவிகள் சௌமியா ,ராஜேஸ்வரி,தனலெட்சுமி ஆகியோர் கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்றனர்.பெற்றோர்கள் கற்பகம்,அய்யதேவன்,அங்காள ஈஸ்வரி உட்பட பலர் பேசினார்கள்.80க்கும் மேற்பட்ட பெற்றோர்கள்,கல்லல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை,அமராவதி புதூர் குருகுலம் மேல்நிலை பள்ளி அறிவியல் ஆசிரியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சி பற்றி பேசினார்கள்.பள்ளி ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

Friday, 1 April 2016

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கான நடத்தை விதிகளில் சில

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கான நடத்தை விதிகளில் சில

1. அரசு ஊழியர்கள் /ஆசிரியர்கள் வேறு எவ்வித தொழிலையும் முழு நேரமாகவோ பகுதி நேரமாகவோ செய்யக் கூடாது.
2. சமூக பணிகள், இலக்கியம், அற இயல்புடைய பணிகள், கலைப் பணிகள், அறிவியல் பணிகள் ஆகியவற்றில் அலுவலக/பள்ளி பணிக்கு ஊறு நேராமல் ஈடுபடலாம்.
3. மத்திய /மாநில அரசுகளின் கொள்கைகள், நடைமுறைகள், உறவுகள் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் கூடாது.
4. அரசியல் கட்சிகள் எதிலும் உறுப்பினராக சேரக் கூடாது.தேர்தல் தொடர்பான வேலைகளில் ஒரு குறிப்பிட்ட கட்சியின் சார்பாக ஈடுபடக்கூடாது.

5. ஜாதி, மத சார்பான அமைப்புகளில் சேரவோ, அதன் நடவடிக்கையில் பங்களிப்பு செய்யவோ கூடாது.
6. அரசின் நடவடிக்கை குறித்து தனிப்பட்ட முறையில் பேட்டி, கட்டுரை முதலான வடிவில் விமர்சனம் கூடாது.
7. தனது பணிகள் சார்ந்த நன்மைகளுக்கு அரசியல் தலைவர்களைப் பயன்படுத்தக்கூடாது. மேலதிகாரிகளுக்கு அவர்கள் மூலம் நிர்பந்தம்செய்யக்கூடாது.
8. உயர் அலுவலர்களின் எழுத்து வாயிலான ஆணையை மறுப்பின்றி நிறைவேற்ற வேண்டும்.
9. அசையும் /அசையா சொத்துக்களை வாங்கவும் விற்கவும் துறைத் தலைவர் அனுமதி பெற வேண்டும்.
10. கிரிமினல் குற்றங்களில் ஈடுபடக் கூடாது. துறை அனுமதி இல்லாமல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளக் கூடாது..