Wednesday, 2 November 2016

கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.


இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா நூறு ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளனர்.  தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்டத்திலேயே, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி, தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கும் வழிமுறை குறித்து மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படும்.


பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கவுன்சலிங் அளிப்பர். ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Posts Widget
 

Friday, 28 October 2016

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு.


'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது.    இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர்.
இந்த திட்டத்தால், கல்வித் தரம் குறைந்துள்ள தாக, மத்திய அரசின் ஆய்வு குழு
 தெரிவித்துள் ளது.எனவே,ஆல்பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர் பாக, பல மாநிலங்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. அவற்றில், தென் மாநிலங்கள் மட்டுமே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Thursday, 27 October 2016

EMIS பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்

EMIS பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்


பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மூலம், 'எமிஸ்' கல்வி மேலாண்மை தொழில்நுட்ப திட்டம், அமலுக்கு வந்துள்ளது.
இத்திட்டத்தில், மாணவர்களின் பெயர், படிக்கும் பள்ளி, வகுப்பு, முகவரி, பெற்றோரின் மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.    இப்பதிவில், மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு, புதிய மாணவர்களின் விபரங்களை சேர்த்தல், பள்ளிமாறிய மாணவர் விபரங்களை மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, பள்ளிகளுக்கு இம்மாத இறுதி வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த பணிகளை முடிக்கவில்லை.
ஆசிரியர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி அளிக்கும், எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், கணினியை இயக்கவும், மாணவர் விபரங்களை பதியவும் பயிற்சி அளிக்கவில்லை என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர். பயிற்சி அளிக்காமல், எமிஸ் திட்டத்தில் மாணவர் பெயர்களை பதிவு செய்ததால், பல மாவட்டங்களில், மாணவர்களின் பெயரும், அவர்கள் படிக்கும் பள்ளியும் மாறி, மாறி பதிவாகி உள்ளது. அதனால், ஆசிரியர்கள், தனியார் கணினி மையங்களை அணுகி உள்ளனர். கட்டண அடிப்படையில், அங்குள்ள ஊழியர்கள், கல்வித் துறையின் இணையதளத்தில், பெயர்களை பதிவு செய்கின்றனர். வரும் காலங்களிலாவது, இது போன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Wednesday, 19 October 2016

மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல் ...!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல் ...!


தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


பொம்மலாட்டம் முறை


தமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்து உள்ளது.


இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.


இதில் பொம்மலாட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் எஸ்.வி.மாணிக்கம், சுகந்தி டெய்சி ராணி உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.


பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட சீனியர் ஆலோசகர் ஆர்.மாலதி கூறியதாவது:-


7-ந் தேதி முதல்...


தமிழ் உள்பட அனைத்து பாடங்களையும் பொம்மலாட்டம் மூலமாக நடத்தி காண்பித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.


இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். பின்னர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வருகிற (நவம்பர்) 5-ந் தேதி முதல் நடத்தப்படும்.


பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கையேடு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி தங்கள் வகுப்பில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு பொம்மலாட்டம் மூலம் பாடங்களை கதைகளாக கூறி நடத்துவார்கள். இந்த புதிய கற்பிக்கும் முறை வருகிற 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.


இவ்வாறு மாலதி தெரிவித்தார்.

பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு

பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு


மாணவர்களின் ஆதார் எண் பதிவை, வரும், 30க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும், இலவச நலத்திட்ட உதவி வழங்குதல், உதவி தொகை வழங்குதல் போன்றவற்றை முறைப்படுத்த, மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இதில், போலிகள் இடம் பெறாமல் தடுக்க, மாணவர்களின் ஆதார் எண், பெயர் பட்டியலில் சேர்க்கப்படுகிறது.
  இதன்படி,    ஆதார் பதிவை, செப்., 30க்குள் முடிக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, சிறப்பு முகாம் நடத்தி, பெயர்களை பதிவு செய்ய வேண்டியிருந்ததால், அந்த காலக்கெடுவுக்குள், பள்ளிகளால் பதிவை முடிக்க முடியவில்லை. இந்நிலையில், வரும், 30க்குள் ஆதார் எண் பதிவை கட்டாயம் முடிக்க, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Tuesday, 18 October 2016

பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு

பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு


மாணவர்களின் ஆதார் எண் பதிவை, வரும், 30க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும், இலவச நலத்திட்ட உதவி வழங்குதல், உதவி தொகை வழங்குதல் போன்றவற்றை முறைப்படுத்த, மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இதில், போலிகள் இடம் பெறாமல் தடுக்க, மாணவர்களின் ஆதார் எண், பெயர் பட்டியலில் சேர்க்கப்படுகிறது.
  இதன்படி,    ஆதார் பதிவை, செப்., 30க்குள் முடிக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, சிறப்பு முகாம் நடத்தி, பெயர்களை பதிவு செய்ய வேண்டியிருந்ததால், அந்த காலக்கெடுவுக்குள், பள்ளிகளால் பதிவை முடிக்க முடியவில்லை. இந்நிலையில், வரும், 30க்குள் ஆதார் எண் பதிவை கட்டாயம் முடிக்க, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இலவச புத்தகம்கல்வித்துறை மறுப்பு

இலவச புத்தகம்கல்வித்துறை மறுப்பு


அரசு உதவி பெறும் சில பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச புத்தகம் மற்றும் சைக்கிள் வழங்க கல்வித்துறை மறுத்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் நடத்தப்படும் சில வகுப்புகளுக்கு, அரசின் நிதி உதவி கிடைப்பதில்லை. இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் இலவசங்கள் வழங்கப்படக் கூடாது என்பது விதி.
ஆனாலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், தொடர்ந்து இலவச உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், 'உரிய கட்டணம் செலுத்தினால் மட்டுமே, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்' என, வேலுார், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பிரச்னை எழுந்துள்ளது.அரசு நிதி உதவி இல்லாத வகுப்பு மாணவர்களிடம், புத்தகத்திற்கு கட்டணத்தை வசூலித்து தரும்படி, பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். அதனால், இந்த பிரிவு மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Thursday, 13 October 2016

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியையை கண்டித்து அரசு பள்ளிக்கு மக்கள் பூட்டு

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியையை கண்டித்து அரசு பள்ளிக்கு மக்கள் பூட்டு


மாணவ, மாணவிகளை தலைமையாசிரியை அடித்து காயப்படுத்துவதாக கூறி, அரசு பள்ளிக்கு கிராம மக்கள் பூட்டு போட்ட சம்பவம்   போடி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம், போடி அருகே கரட்டுபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமையாசிரியையாக மகாலட்சுமி மற்றும் 10 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தலைமையாசிரியை, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவ, மாணவிகளை அடித்து காயப்படுத்துவதாகவும் கரட்டுப்பட்டி மக்கள் ெதாடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.


தொடர்ந்து புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரம் அடைந்த கரட்டுப்பட்டி மக்கள் நேற்று பள்ளியின் கேட்டை பூட்டினர். பின்னர் மாணவர்களை எதிரேயுள்ள மரத்தடியில் அமர வைத்தனர். இதனால் தலைமையாசிரியை மகாலட்சுமி, ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வாசலில் நின்றிருந்தனர். தகவலறிந்த போடி புறநகர் ேபாலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘அரசு பள்ளியை பொதுமக்கள் பூட்டுவதற்கு அதிகாரம் இல்லை. கல்வித்துறை உயரதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்கள்’ என தெரிவித்தனர். இதையடுத்து காலை 11.30 மணிக்கு பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியை மகாலட்சுமி மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

வாக்காளர் அட்டை வேண்டுமா?

வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா?


🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா*
🗣 உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டதா
🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் புகைப்படம் பழையதாக உள்ளதா*


🗣பல தடவை மனு கொடுத்து அலைந்து விட்டேன் முடியலப்பா என்று சொல்லுகின்றீர்களா
✅ *கவலை வேண்டாம் அலைய வேண்டாம்*

🗣 உடனே உங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ - சேவை' மையத்திற்க்கு செல்லுங்கள்
🗣கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்;
🗣அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான புகைப்படத்தை மாற்றி புதியதாக பதிந்துபெற்றுக் கொள்ளலாம்.
🗣வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்;
🗣 25 ரூபாய் செலுத்த வேண்டும்.
🗣உடனடியாக உங்களுக்கு அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டை தந்துவிடுவார்கள்.
 *​சமூக நலனில் அக்கறையுடன்​*
🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா*
🗣 உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டதா
🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் புகைப்படம் பழையதாக உள்ளதா*
🗣பல தடவை மனு கொடுத்து அலைந்து விட்டேன் முடியலப்பா என்று சொல்லுகின்றீர்களா
✅ *கவலை வேண்டாம் அலைய வேண்டாம்*
🗣 உடனே உங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ - சேவை' மையத்திற்க்கு செல்லுங்கள்
🗣கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்;
🗣அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான புகைப்படத்தை மாற்றி புதியதாக பதிந்துபெற்றுக் கொள்ளலாம்.
🗣வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்;
🗣 25 ரூபாய் செலுத்த வேண்டும்.
🗣உடனடியாக உங்களுக்கு அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டை தந்துவிடுவார்கள்.

ஆன்லைன் ஆசிரியர் ஆகலாமே!

ஆன்லைன் ஆசிரியர் ஆகலாமே!


அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் உன்னதப் பணியை ஏற்றுக்கொள்பவர்கள் ஆசிரியர்கள். ‘வரலாற்றைப் படைப்பவர் ஆசிரியர்தான்’ என்றார் ‘அறிவியல் புனைகதைகளின் தந்தை’ என்றழைக்கப்படும் எச்.ஜி. வெல்ஸ். எப்போதுமே ஆசிரியர்களுக்கு உலக அளவில் தனி மதிப்புண்டு. இப்படியெல்லாம் ஆசிரியர் பணியை எப்போதுமே சிலாகித்தாலும் பெரும்பாலான சிறந்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஆக விரும்புவதில்லை.
பள்ளி, கல்லூரிப் படிப்பில் உச்சபட்ச மதிப்பெண்களும் தனித்திறமையும் வெளிப்படுத்தும் மாணவர்களில் எத்தனை பேர் ஆசிரியராகக் கனவு காண்கிறார்கள்? தலைசிறந்த பொறியாளர்களும் மருத்துவர்களும் வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் எப்படி அவசியமோ அதே போல திறமைவாய்ந்த ஆசிரியர்கள் இன்றைய முக்கியத் தேவைகளில் ஒன்று.உலக அளவிலேயே நல்லாசிரியர்களுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது எனச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதைக் கேட்டதும், “நான்கூட ஆசிரியர் ஆக ஆசைப்பட்டேன்.ஆனால், என்ன செய்ய அதற்கான சூழல் வாய்க்கவில்லையே!” என நினைப்பவர்கள் இருக்கலாம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தயாரானால் நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும் நல்லாசிரியரை இப்போதே வெளிகொணரலாம்.

Wednesday, 12 October 2016

நாளை விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை

நாளை விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை


பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுடன், ஆயுத பூஜை, விஜயதசமி மொகரம், பண்டிகை முன்னிட்டு, அரசுஊழியர்களுக்கு, இன்று வரைஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அரசுஅலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
எனவே, நாளையும், நாளைமறுநாளும், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மாத இறுதியில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், அரசு நலத் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இம்மாதம், 17, 19ல், நடக்கவிருந்த தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன. இதனால், திட்ட பணிகள் முழு வீச்சில் துவங்க உள்ளன.இந்த சூழலில், ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என, தொடர்ந்து விடுமுறை இருந்ததால், பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
அவர்களில் பலர், வியாழன், வெள்ளியும் விடுப்பு எடுத்து கொள்வதாக, தொலைபேசியில் தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே, காலி பணியிடங்களால், ஒருவரேபலரது வேலையை செய்யவேண்டியுள்ளது. வியாழன், வெள்ளி விடுப்பு எடுத்தால், அரசு உதவியை எதிர்பார்த்து, அலுவலகம் வரும் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இரு நாட்களும் விடுப்பு எடுக்கக்கூடாது; கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Sunday, 9 October 2016

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!


"என் பையன் நல்லா படிக்கிறான்; படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான், ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியலை"னு புலம்பும் பெற்றோரா நீங்கள்?.உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க எளிமையான டிப்ஸ் இதோ.




குழந்தை எழுதுவது அழகாக இல்லை என்றவுடன் இரட்டைக் கோடு, நாலு கோடுகள் உள்ள நோட்டுகளை வாங்கி தந்து, அதிக நேரம் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள், இதனால் அவர்களுக்கு எழுதுவதன் மீது வெறுப்புதான் உண்டாகும்.குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால், முதலில் fine Motor skill என்ற கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.


1. உங்கள் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை வாங்கி தந்து, பிசைந்து விளையாட வைப்பதும், சின்ன சின்ன உருவங்கள் செய்ய பழக்கப்படுத்தவும் செய்யுங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.


2. உங்கள் வீட்டில் இருக்கும் மைதா, சோளமாவு, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து உங்கள் பிள்ளையை ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.


3. சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும். இதனால் பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.


4. குழந்தைகள் விளையாட வைத்து இருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.


5. பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடினால் தடைபோடாமல் அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும்..


6. உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில்நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.


7. உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறத்தில் க்ரேயான்ஸ் அல்லது கலர் பென்சில்களைக் கொடுத்து முட்டைக்கூடு, காகிதக் கோப்பைகள் போன்றவற்றில் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள்.


இப்படிச் செய்வதன்மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தையின் கையெழுத்து சரியில்லை என்று மதிப்பெண்கள் குறையாது!!

Saturday, 8 October 2016

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை


உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ என்ற அச்சம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.



 தமிழகம் முழுவதும், உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல் நடைபெறும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் பணி குறித்து, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.



கடந்த மாதம், பள்ளி காலாண்டு விடுமுறையின்போது, தேர்தல் பயிற்சி வகுப்புக்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன் காரணமாக, காலாண்டு விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்ட மிட்டிருந்தவர்களின் கனவு தகர்ந்தது. எனினும், தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, தேர்தல் பணிக்கு தயாராகினர்.


இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு செய்தது; இம்மனு மீதான விசாரணை, 18ம் தேதி நடைபெற உள்ளது.எனினும், குறித்த தேதியில் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.


உயர் நீதிமன்றம், டிச., 30க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று, தன் உத்தரவில் கூறியுள்ளது. அதன்படி, டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டால், அரையாண்டு தேர்வு விடுமுறையில், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல், ஆசிரியர்களுக்கு ஏற்படும். அரசு ஊழியர்களும், விடுமுறைக்கு வெளியூர் செல்ல இயலாது. இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை


உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ என்ற அச்சம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.



 தமிழகம் முழுவதும், உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல் நடைபெறும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் பணி குறித்து, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.



கடந்த மாதம், பள்ளி காலாண்டு விடுமுறையின்போது, தேர்தல் பயிற்சி வகுப்புக்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன் காரணமாக, காலாண்டு விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்ட மிட்டிருந்தவர்களின் கனவு தகர்ந்தது. எனினும், தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, தேர்தல் பணிக்கு தயாராகினர்.


இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு செய்தது; இம்மனு மீதான விசாரணை, 18ம் தேதி நடைபெற உள்ளது.எனினும், குறித்த தேதியில் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.


உயர் நீதிமன்றம், டிச., 30க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று, தன் உத்தரவில் கூறியுள்ளது. அதன்படி, டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டால், அரையாண்டு தேர்வு விடுமுறையில், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல், ஆசிரியர்களுக்கு ஏற்படும். அரசு ஊழியர்களும், விடுமுறைக்கு வெளியூர் செல்ல இயலாது. இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் அரசு விடுமுறை : மின் ஊழியர்கள் 'அலர்ட்

தொடர் அரசு விடுமுறை : மின் ஊழியர்கள் 'அலர்ட்


சென்னை: ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக, அரசு விடுமுறை வருவதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்கும்படி, ஊழியர்களை, மின் வாரியம், 'அலர்ட்' செய்துள்ளது.சென்னை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி தவிர்த்து, மற்ற மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு, இன்று முதல், 12ம் தேதி வரை விடுமுறை. பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கும், ஐந்து நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடுமுறை நாட்களில், மின் தேவை எப்போது அதிகரிக்கும் என்பதை கணிக்க முடியாது. ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், மின் தேவை வெகுவாகக் குறையலாம் அல்லது திடீரென அதிகரிக்கலாம். இதனால், 'லோ, ஹை வோல்டேஜ்' பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பிரிவு அலுவலகத்தினரும், மின் தடை நீக்கும் ஊழியர்களும், மின் வினியோகத்தில், கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Friday, 7 October 2016

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா? தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா? தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு


விருத்தாசலம்: உள்ளாட்சித் தேர்தலை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதால், கடந்த 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஊதியம் கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர்.

சட்டசபை, லோக்சபா தேர்தல்களின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டை சரிபார்ப்பு, விரலில் மை வைப்பது போன்ற பணிகளிலும்; உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர், பஞ்., தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களிடம் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது உள்ளிட்ட பணியிலும் கல்வித்துறை ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். அதன்படி, 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு, கடந்த மாதம் 26ம் தேதி முதல் 3ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இப்பணியில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு டி.இ.ஓ., மற்றும் உதவி செயற்பொறியாளர் கிரேடு அதிகாரிகள் வேட்புமனுக்கள் பெற்றனர். ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பஞ்., தலைவர் பதவிகளுக்கு ஏ.இ.ஓ., துணை பி.டி.ஓ.,க்கள்; வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆசிரியர்களும் வேட்பு மனுக்கள் பெற்றனர்.
வேட்பு மனுக்கள் பெற்று, 4ம் தேதி மனுக்கள் பரிசீலனையில் இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணம் ஆகியவற்றை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்களில் ஒப்படைக்கும் பணி, நேற்று (7ம் தேதி) நடந்தது.
பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பணித் தகுதி, ஊதியம் ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல், தேர்தல் கால பணி ஊதியம் (மதிப்பூதியம்) வழங்கப்படும். தற்போது, உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 26 முதல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'உள்ளாட்சித் தேர்தலில் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது மட்டுமல்லாது தேர்தல் முடிந்து, பதவிப் பிரமாணம் செய்வது வரை தற்போது பணியில் ஈடுபடுவோரின் வேலையாகும்.
கடந்த 26 முதல் 4ம் தேதி வரை பணியில் ஈடுபட்டோம். முதல்பருவ (காலாண்டுத் தேர்வு) விடுமுறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டோம். அதில், 3 மற்றும் 4ம் தேதி பள்ளி வேலை நாட்கள்.நேற்று (7ம் தேதி) வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணத்தை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியிருந்தது.
எனவே, 3, 4 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் பள்ளி வேலை நாட்களாகும். இதன் மூலம், கடந்த 26ம் தேதி முதல் 7ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் பணிபுரிந்தோம். எங்களைப் போல, நகராட்சி, ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் வேளாண்துறை போன்ற துறை ஊழியர்களும் பணிபுரிந்துள்ளனர்.
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கான ஊதியம் கிடைக்குமா அல்லது மீண்டும் தேர்தல் நடக்கும்போது, இதற்கான ஊதியம் சேர்த்து வழங்கப்படுமா என தெரியவில்லை' என்றார்.

Epayslip வழங்கப்படுமா? - முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

Epayslip வழங்கப்படுமா? - முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு


THANKS : MR.JAYAPRAKASH
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப்படுத்தாமல் உள்ள DDOக்கள் (ஊதியம் வழங்கும் அலுவலர்கள்), இனி மேலாவது
நடைமுறைப்படுத்துவார்களா????????

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள சட்டையம்பட்டி
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி க/பெ ஜெயப்பிரகாஷ் என்பவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப் படுத்தாமல் உள்ள
DDOக்களுக்கு, நடைமுறைப்படுத்த உத்திரவிட வேண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (TN CM SPECIAL CELL) அனுப்பிய கோரிக்கையின் விவரம் பின்வருமாறு:
அரசு ஊழியர்கள் சங்கமும், ஆசிரியர்கள் சங்கமும் ஊதியம் வழங்கும் அலுவலர்களை (DDO) வலியுறுத்தவில்லை என்பதும் உண்மை. கோரிக்கையின் விவரம் பின்வருமாறு:
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்!
தமிழகத்தின் முதல்வரான மாண்புமிகு அம்மா அவர்களின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டிசம்பர்-15ல் அவர்கள் இட்ட உத்தரவின் பேரில் கருவூலம் & கணக்குகள் துறையானது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் மாதாந்திர ஊதிய விவரத்தை இருக்குமிடத்திலிருந்து இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதியாக http://epayroll.tn.gov.in/epayslip/ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. இந்த தளத்தில் அரசு ஊழியர் ஒருவரின் Employee Code & Date of Birth உள்ளீடு செய்தால் அவரின் ஊதிய விவர பக்கம் open ஆகும். அதில் PaySlip , Annual Income Statement, Pay Drawn Particulars என காட்டும்.
இதிலுள்ள 2&3ல் மாதாந்திர ஊதியம்,அரசு பிடித்தங்கள் மட்டும் எவ்வளவு என்பதை ஒரு ஆன்டிற்கு தொகுத்து வழங்குகிறது.இதில் முக்கியமானது PaySlip. அதில் தான் அனைத்து பிடித்தங்களின் (சொசைட்டி தொகை உள்பட)
விவரங்களும்,அது போக வழங்கப்பட்ட சம்பளத்தின் விவரம் இருக்கும். இந்த
PaySlip திட்டமானது இந்தியாவிலே இராணுவத் துறைக்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை நமது மாநில அரசு, ஊழியர்களின் நலன் கருதி
நடைமுறைப்படுத்தியுள்ளது.இந்த மகத்தான திட்டமானது தமிழக
அதிகாரிகளின் அலட்சியத்தால்முடங்கியுள்ளது.அதாவது PaySlip டவுன்லோடு
செய்ய அந்தந்த DDOக்கள், கருவூலம் வழங்கும் டோக்கன் நெம்பரை மாதந்தோறும் UPDATE செய்ய வேண்டும்.அப்படி செய்தால் அவரின் PAY DETAILSஐ ஒரு நிமிடத்தில் அறிந்து கொள்ளலாம்.

Thursday, 6 October 2016

தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்

தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்


சென்னை: உள்ளாட்சி தேர்தல் பணிகளை, தற்காலிமாக நிறுத்தி வைக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி பதவிகளுக்கு, வரும், 17, 19ம் தேதிகளில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு தடை போட்டு விட்டது; டிச., 31க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து,
மாநில தேர்தல் கமிஷன், மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, கலெக்டர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 'மறு உத்தரவு வரும் வரை, தேர்தல் பணிகளை தொடர வேண்டாம்' என, மாநில தேர்தல் கமிஷனர், சீதாராமன்
அறிவுறுத்தி உள்ளார்.