Wednesday, 29 June 2016

7thPay commission - cps pension - ஓர் பார்வை.

7thPay commission - cps pension - ஓர் பார்வை.


ஏழாவது ஊதியக்குழுவிலும் NPS என்ற CPS PENSION திட்டம் தான் இடம் பெற்றுள்ளது  ஒருவர் ஓய்வு பெறும் போது CPS பிடித்தத்தில் உள்ள மொத்த தொகையில் 60% உங்கள் கையிலும் மீதமுள்ள 40% தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து   ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தான் இதில் உள்ளது.......
மேலும் CPS திட்டத்தில் உள்ள ஒருவர் தன் வாழ்நாளில் 3முறை  மட்டுமே LOAN பெறும் வசதி உள்ளது அதுவும் CPS சேமிப்பு தொகையில் 25%தான் LOAN பெறமுடியும்

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு...யோகம் ! 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு அமைச்சரவை

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு...யோகம் ! 7வது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல்


 நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஊதிய உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்காது...!?

இனி மாணவர்களின் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணுக்கு மதிப்பு இருக்காது...!?


நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1200க்கு 1180 மதிப்பெண் பெற்று இருக்கிறீர்களா...? ஆனால், உங்களுக்கு இளங்கலை ஆங்கிலம் படிக்க தான் விருப்பமா...? நல்லது. ஆனால், அந்த மதிப்பெண்ணை தூர வையுங்கள். இன்னும் சில ஆண்டுகளில் அது உங்களுக்கு பயன்படாமல் போகலாம்..
ஆம். நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிபெண்கள் பெற்றிருந்தாலும், நீங்கள் உயர் கல்வியில் சேர இன்னொரு தகுதிதேர்வு எழுத வேண்டும். அதில் வெற்றி பெற்றால் தான், நீங்கள் விரும்பிய படிப்பைபடிக்க முடியும்.என்ன... கலை படிப்பில் சேர தகுதி தேர்வா? மருத்துவத்திற்கே தகுதி தேர்வு கூடாது என போராடி வரும் சூழலில், கலை படிப்பிற்கு ஏன் தகுதி தேர்வு? உளறாதீர்கள் என்கிறீர்களா. இல்லை நான் உளறவில்லை. புதிய கல்வி கொள்கையை வடிவமைப்பதற்காக வழங்கப்படுள்ள சுப்பிரமணியன் குழு அறிக்கையில் அவ்வாறு தான் உள்ளது.அந்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டால், நிச்சயம் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பின், நீங்கள் என்ன படிப்பு படிக்க விரும்பினாலும், அதற்கான தனி தகுதி தேர்வு எழுத வேண்டி நிலை வரும்.

Tuesday, 28 June 2016

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம் பற்றி அறியுங்கள்!


பொதுவாக அரசு ஊழியர்களுக்குக் சலுகைகள் அதிகம்தான். அவற்றுள் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை; இன்னும் சில சிறப்பம்சங்கள். ஒரு சில நலத்திட்டங்கள் பயனாளியை முழுமையாகச் சென்றடையாமைக்கு இரு காரணங்கள்:
1) பயனாளி திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் திட்டம் பற்றிய சந்தேகத்துக்குத் தாமே விடையைக் கற்பித்துக்கொள்வது.

2) இத்தனை பயனுள்ள திட்டம் நமக்குக் கிட்டுமா என்ற எதிர்மறை எண்ணம். அதைத் தீர்க்கவே இக்கட்டுரை. வட்டி வீதம்: கடன் தொகையில் முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 % 50,001 முதல் 1,50,000 வரை : 7% 1,50,001 முதல் 5,00,000 வரை: 9% 5,00,000க்கு மேல் : 10% இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும்உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.
கடன் வரம்பு:
அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும். யாரெல்லாம் கடன் பெறலாம்?: சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
கடனின் பல்வேறு பிரிவுகள்:
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.
2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.
3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின்அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.
4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.
6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.
7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.
8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலானமனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.
9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கிமூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.
10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம்: வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.
* மனை வரைபடம்
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்
கடன் ஏற்பளிப்பு: மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம்.

சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் மாணவர்கள் புகார் செய்யலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

சுயநிதி கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் மாணவர்கள் புகார் செய்யலாம்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.

அண்ணா பல்கலைக்கழகம் நடத் தும் பொதுகலந்தாய்வு மூலம் தனியார் சுயநிதி கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு குறிப் பிட்ட கல்விக்கட்டணம் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய தர வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளுக்கு ரூ.45 ஆயிரமும், இதர படிப்புகளுக்கு ரூ.40 ஆயிரமும் கல்விக்கட்டணம் செலுத்த வேண்டும்.
தனியார் கல்லூரிகளில் இதற்கு மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதுதொடர்பாக மாணவர்கள் புகார் செய்யலாம்.

Monday, 27 June 2016

எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்து பி.இ. படிப்பில் சேர்ந்த 7 மாணவர்கள்!

எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்து பி.இ. படிப்பில் சேர்ந்த 7 மாணவர்கள்!


பி.இ. கலந்தாய்வின் முதல் நாளில் 7 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடத்தை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் படிப்புகளில் சேர்ந்தனர்.


அரசு மருத்துவக் கல்லூரிகள், சிறந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சிலர், தாங்கள் தேர்வு செய்த எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று பி.இ. படிப்பைத் தேர்வு செய்வது ஆண்டுக்கு ஆண்டு தொடர்கிறது.


அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சேரும் மாணவர் ஆண்டுக்கு ரூ. 11,000 கட்டணம் செலுத்தினால் போதுமானது. ஆனால், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர் ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியச் சூழல் உள்ளது. இதை செலுத்த முடியாத சில மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு, பி.இ. இடத்தைத் தேர்வு செய்வது வழக்கம்.


அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு பொதுப் பிரிவு பொறியியல் கலந்தாய்வு தொடங்கிய முதல் நாளான திங்கள்கிழமை 7 பேர் தங்களின் எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு, பி.இ. படிப்பைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதத்தையும் பெற்றுச் சென்றனர்.


இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள், மூன்றாம் நாள் பொறியியல் கலந்தாய்விலும் சில மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைக்க வாய்ப்பு உள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த 7 பேரில் கோவையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கிடைத்த எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு, கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த முரளி பிரசாத். இவரும் ஆரம்பம் முதல் பி.இ. சேரும் ஆர்வத்திலேயே இருந்துள்ளார். அதன் காரணமாகவே, அரசு எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு பி.இ. சேர்ந்திருக்கிறார். இவருடைய பி.இ. கட்-ஆஃப் 198.50 ஆகும். இதேபோல, சென்னையைச் சேர்ந்த சவுமியா, சென்னை அரசு இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் கிடைத்த எம்.பி.பி.எஸ். இடத்தை உதறிவிட்டு, அண்ணா பல்கலைக்கழக துறைகளில் ஒன்றான அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரியில் (ஏ.சி. டெக்) பி.டெக். கெமிக்கல் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளார். இவருடைய மருத்துவ கட்-ஆஃப் 197.75. பொறியியல் கட்-ஆஃப் 198.25.


இதுகுறித்து சவுமியா கூறியதாவது: கெமிக்கல் பொறியாளராவதுதான் எனது லட்சியம். அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில்தான் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்திருந்தேன். இந்த நிலையில், எதிர்பார்த்ததுபோல் பொறியியல் கலந்தாய்வில் அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கெமிக்கல் பொறியியல் இடம் கிடைத்தது. எனவே, எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு, அதில் சேர உள்ளேன் என்றார் அவர். ஈரோட்டைச் சேர்ந்த தமிழிக்கு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்தது. ஆனால், அந்த இடத்தை ஒப்படைத்துவிட்டு இப்போது கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் பி.இ. கணினி அறிவியல் படிப்பைத் தேர்வு செய்திருக்கிறார். இவருடைய பி.இ. கட்-ஆஃப் 197.75. இவருடைய தந்தை, தாய் இருவரும் பொறியியல் பட்டதாரிகள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.


இதுகுறித்து தமிழி கூறியதாவது: நிர்வாகம் சார்ந்த பணிக்குச் செல்வதுதான் எனது குறிக்கோள். சிறந்த கல்லூரியில் பி.இ. கிடைக்குமா என்ற சந்தேகத்தில், எம்.பி.பி.எஸ். தேர்வு செய்திருந்தேன். பின்னர், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று, நினைத்ததுபோலவே பி.எஸ்.ஜி. கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.


மருத்துவப் படிப்பைத் தவிர்த்ததற்கு, அதன் நீண்ட படிப்புக் காலமும் ஒரு காரணம். எம்.பி.பி.எஸ். ஐந்தரை ஆண்டுகள், அதன்பிறகு முதுநிலைப் படிப்பு இரண்டு ஆண்டுகள் முடித்த பிறகுதான் நல்ல மருத்துவப் பணி வாய்ப்பு கிடைக்கும். ஆனால். பி.இ. அப்படியல்ல என்றார் அவர்.

Sunday, 26 June 2016

ஓபிசி(OBC) CREAMY LAYER - விளக்கங்கள்!

ஓபிசி(OBC) CREAMY LAYER - விளக்கங்கள்!


யாரெல்லாம் ஓபிசி ஒதுக்கிட்டில் வருவார்கள் ? யார் வரமாட்டார்கள் என்பது சற்று சிக்கலான குழப்பமான விஷயமாக மாறியுள்ளது. கிரிமி லேயர் யார் நான் கிரிமிலேயர் யார் என்று நிர்ணயம் செய்யப் பல அரசாணைகள் உள்ளன.தமிழ்நாடு அரசின் வருவாத்துறை இந்தச் சான்றிதழை வழங்க வேண்டும்.இதற்கு மூன்று சோதனைகள் உள்ளன.


1. அரசுவேலை தர நிர்ணயம். ( Class of govt employees)
2. வருமானச் சோதனை. (Income test)
3. செல்வச்சோதனை (wealth test)ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.


1. அரசு வேலை தர நிர்ணயச் சோதனை:ஓபிசி கோரும் நபருடைய பெற்றோர் அரசு வேலையில் இருந்தால் அவர்களின் குரூப் என்ன என்று சோதிக்கப்படும். மத்திய மாநில அரசு வேலைகள் குரூப் ஏ,பி, சி, டி என வகைப்படுத்தப் பட்டுள்ளன.ரூ. 6600 க்கும் மேல் தர ஊதியம்- கிரேட் பே பெறும் அரசு ஊழியர்கள் குரூப் ஏ பிரிவில் வருவார்கள். அதாவது, மாவட்ட வருவாய் அலுவலர் டிஆர்ஓ, இணை இயக்குநர் - ஜேடி, இணை பதிவாளர் - ஜேஆர், காவல் கூடுதல்கண்காணிப்பாளர்- ஏடிஎஸ்பி, செயற் பொறியாளர் - இ.இ, முதன்மைக் கல்வி அலுவலர் - சிஇஓ, போன்ற மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அலுவலர்கள் குரூப் ஏ என்று வகைப்படுத்தப் படுவர் .இது போன்ற உயர் அலுவர்களின் குழந்தைகள் நல்ல கல்வி வசதியும் நல்வாய்ப்புகளையும் குழந்தைப் பருவத்தில் பெற்றுவிடுவதால் அவர்கள் கிரிமி லேயர் - வசதியான பிரிவினர் என்று வகைப்படுத்தப்பட்டு பொதுப்பிரிவினராக கருதப்படுவர். ஓபிசி இட ஒதுக்கீடு இவர்களுக்கு இல்லை.இதில் அடுத்த நிலை ஒன்று உள்ளது. பதவி உயர்வில் குரூப் ஏ நிலையை அடைந்த பெற்றோர் அதை நாற்பது வயதுக்குள் அடைந்திருக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை வசதியான பிரிவு - கிரிமி லேயரில் சேர்க்கத் தேவையில்லை. ஏனெனில் நாற்பது வயதுக்குள்தான் வளரும் இளம்பருவ குழந்தைகள் அவருக்கு இருக்கும்.


குழந்தைகளின் கல்விகொடுக்கும் காலத்தில் ஒருவர் குரூப் சி, குரூப் பி நிலையில் இருந்துவிட்டு ஓய்வு பெறும் நிலயில் குரூப் ஏ நிலையைஅடைபவரால் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வசதியை அளித்திருக்க முடியாது என்பது இந்த நாற்பது வயது என்பதற்கான காரணம்.அடுத்து பெற்றோர் இருவர் குரூப் பி நிலையில் நேரடியாக அரசு வேலை பெற்றிருந்தால் அவர்களின் குழந்தைகள் கிரிமி லேயர்- வசதியான பிரிவில் வருவர். இடஒதுக்கீடு கிடையாது.இது தவிர குரூப் பி, குரூப் சி நிலையில் வேலைபார்க்கும் பெற்றோரின் குழந்தைகள் நான் கிரிமி லேயர்- வசதியற்ற பிரிவினர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பெற்றோரின் ஆண்டு வருமானம் பல ஆண்டுகள் வேலை பார்த்த ஊதிய உயர்வின்மூலம் ஆறு இலட்ச ரூபாயை மீறினாலும் அதை. கருத்தில் கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. இவைதான் விதிகள்

It may be help u to transfer

ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்

ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்


1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,
 பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


2. பணி நியமன முழு விபரம்.


3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.


4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.


5. GPF/TPF/CPS எண் விபரம்.


6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்.


7. ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (Service Verification).


8. ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம் .


9. மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம்.


10. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்).


11. உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம்.


12. உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம்.


13. சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம்.


14. ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்.


15. தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்கப்பட்ட விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்


16. ஊதியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது பற்றிய முழு விபரம். எடுத்துக்காட்டாக தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூ.750மற்றும் 4300 தர ஊதியம் பெறுவோருக்கு சிறப்பு படி ரூ.500 வழங்கப்படும் விபரம்.


17. பதவி உயர்வு பெறும்போது தொடர்புடைய ஆணை பதிவு, புதிய பதவி பணி வரன் முறை செய்யப்பட்ட விபரம், 22B சான்று பெறப்பட்ட விபரம், பதவி உயர்வு ஊதிய நிர்ணய விபரம்.


18. பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயம் செய்யப்படும் தேதி குறித்து தனியரின் விருப்பம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய பதிவு.


19. ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் முழு விபரம் மற்றும் தனியரின் விருப்பம் (option)குறித்த பதிவு.


20. வாரிசுதாரராக யாரை நியமனம் செய்திருக்கிறோம் என்பது பற்றிய விபரம்.


21. பொது மாறுதல்களில் வந்த விபரம்.

Friday, 24 June 2016

7-வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் தலையில் விழுந்தது இடி7-வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் தலையில் விழுந்தது இடி

7-வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் தலையில் விழுந்தது இடி7-வது ஊதியக் குழு மத்திய அரசு ஊழியர்கள் தலையில் விழுந்தது இடி


7 pay commission Alowance hike may be delayed by 2 years
 Government staff face two-year wait for allowance hike
 New Delhi, June 24: In what could a disappointing news for government employees, Prime Minister Narendra Modi led government may defer the allowance hike proposed in the 7th Pay Commission recommendations. In order to save about Rs 60,000 crore, the government may delay the a revision of allowances recommended by the 7th Pay Commission by two years to 2018-19, reported .

Thursday, 23 June 2016

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மீது குறைந்து வரும் ஆர்வம்.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி மீது குறைந்து வரும் ஆர்வம்.


12,000 இடங்களுக்கு 3,008 பேர் மட்டுமே விண்ணப்பம்சமீப காலமாக இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவர்கள் மத்தியில் குறைந்துகொண்டே வருகிறது. இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் உள்ள 12 ஆயிரம் இடங்களுக்கு வெறும் 3,008 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர்.
   தமிழகத்தில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் (டயட்), அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் சுயநிதி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் என 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு 2 ஆண்டு கால இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு (தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு) வழங்கப்படுகிறது. இதில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம்.இப்படிப்பை முடிப்பவர்களுக்கு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணி கிடைக்கும். இடைநிலை ஆசிரியர்கள் முன்பு மாவட்ட அளவி லான பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையிலும், அதன்பிறகு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையிலும் தேர்வு செய்யப் பட்டு அரசுப் பள்ளிகளில் நியமிக்கப் பட்டனர்.
தற்போது நியமன முறை முற்றிலும் மாற்றப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடிப்பவர்கள்கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் பெற்ற மதிப்பெண், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறுகிறது.முன்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். இப்படிப்பை முடித்தாலே சற்று தாமதம் ஆனாலும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு மூலம் அரசு வேலை கண்டிப்பாக கிடைத்து விடும் என்பதால் பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் இப்படிப்பில் ஆர்வத்துடன் சேர்ந்தனர். தகுதித் தேர்வு தேர்ச்சி அறிமுகப்படுத்தப் பட்ட பின்பு ஆர்வம் சற்று குறையத் தொடங்கியது.ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு அரசு வேலைக்காக ஏறத்தாழ 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டு காலமாக ஆசிரியர் தகுதித் தேர்வும் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக, இடைநிலை ஆசிரியர் நியமனமும் அரசுப் பள்ளிகளில் நடைபெறவில்லை.
இதனால் இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் மாணவ, மாணவிகள் மத்தி யில் குறைந்து வருகிறது.இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர் சேர்க்கையைப் பொறுத்த வரையில், ஏறத்தாழ 12 ஆயிரம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்படுகின்றன.நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் 12 ஆயிரம் இடங்களுக்குவெறும் 3,002 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் உறுதி. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அல்லது அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைக்குமா என்பதில்தான் போட்டி இருக்கும்.இதுகுறித்து மாநில கல்வியி யல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகனிடம் கேட்டபோது,“இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேரும் ஆர்வம் முற்றிலும் குறைந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 500 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் அனைத்தும் நிரம்பிவிடும்.பல மாணவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துவிடு கிறார்கள். அத்தகைய மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிப்பது இல்லை.பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் இடைநிலை ஆசிரியர் பயிற்சியிலும் நல்ல மதிப்பெண் பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன” என்றார்.
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேருவோர் பணியில் இருந்தவாறே பட்டப் படிப்பையும், பிஎட் படிப்பையும் முடிக்கலாம். அதன்பிறகு அவர் கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது

மத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடில்லியில் ஆலோசனை

மத்திய அரசுக்கு அடுத்த நெருக்கடி :ஜூன் 25ல் புதுடில்லியில் ஆலோசனை


மத்திய அரசை கண்டித்து ஜூலை 11 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள மத்திய அரசு ஊழியர்கள், அடுத்த நெருக்கடி கொடுப்பது குறித்து ஜூன் 25ல் புதுடில்லியில் ஆலோசிக்கின்றனர். ஊதிய உயர்வு உட்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 11 முதல் ரயில்வே, தபால், ராணுவம் உட்பட மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.

வேலைநிறுத்தத்திற்கு முன்னோட்டமாக 5 லட்சம் ஊழியர்கள், ஜூன் 24ம் தேதி பார்லிமென்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில், மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்கள் சிவகோபால் மிஸ்ரா, கண்ணையா, குட்டி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து, மத்திய அரசுக்கு எவ்வகையில் நெருக்கடி தருவது என்பது குறித்து ஆலோசிக்க, புதுடில்லியில் ஜூன் 25ம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு ஆலோசிக்க உள்ளதாக  நிர்வாகிகள்தெரிவித்தனர்.

 

Wednesday, 22 June 2016

எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு?

எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு? - அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு


பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.


விளையாட்டுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வை தொடர்ந்து பொது கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.


எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது, எந்த நேரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்? என்ற பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதன்மூலம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு நாள், நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்.


கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் யாருக்கும் தபால் மூலம் அனுப்பப்படாது. மாணவர்கள் அழைப்புக்கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Tuesday, 21 June 2016

தோழிக்கு எம்.பி.பி.எஸ்., இடத்தை விட்டுக்கொடுத்த பாசக்கார மாணவி!

தோழிக்கு எம்.பி.பி.எஸ்., இடத்தை விட்டுக்கொடுத்த பாசக்கார மாணவி!


தோழிக்காக, சென்னை மருத்துவ கல்லுாரியில் தனக்கு கிடைத்த, எம்.பி.பி.எஸ்., இடத்தை மாணவி விட்டுக் கொடுத்த ருசிகர சம்பவம், மருத்துவ படிப்பு கலந்தாய்வில் நடந்தது.




தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வில், 199.00 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன் திருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்த மாணவி வர்ஷினி பங்கேற்றார்.




 ஓசி என, அழைக்கப்படும், இதர பிரிவைச் சேர்ந்த இவருக்கு, சென்னை மருத்துவ கல்லுாரியான, எம்.எம்.சி.,யில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது. அவரது தோழி ஜனனி, 198.75 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன் பங்கேற்றார். பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த இவருக்கு, இந்த ஒதுக்கீட்டில், எம்.எம்.சி.,யில் இடம் கிடைக்கவில்லை.



இதை அறிந்த வர்ஷினி, 'எனக்கு இந்த பிரிவில் இடம் வேண்டாம்' எனக்கூறி, தோழிக்கு விட்டுக் கொடுத்தார்; இதையடுத்து, ஜனனிக்கு, எம்.எம்.சி.,யில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது.



இதுகுறித்து மாணவி வர்ஷினி கூறுகையில், ''ஜனனியும், நானும் ஒரே பள்ளியில் படித்தோம். எனக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் இன்று இடம் கிடைக்கவில்லை என்றாலும், பொது பிரிவு கலந்தாய்வில், இதே கல்லுாரியில் சேர முடியும். ஜனனிக்கு, எம்.எம்.சி.,யில் படிக்க ஆசை என்பதால், விட்டுக் கொடுத்தேன்; இதனால், எனக்கு எந்த பாதிப்பும் இல்லை,'' என்றார். இதை அவரது பெற்றோரும் ஏற்றனர்.



தோழியின் விருப்பத்தை நிறைவேற்றிய மாணவியை, மருத்துவக்கல்வி அதிகாரிகள், கலந்தாய்வுக்கு வந்த மாணவ, மாணவியரும் பாராட்டினர்.
 

பழைய பென்சன் திட்டம்: அரசு விளக்கம்

பழைய பென்சன் திட்டம்: அரசு விளக்கம்


சென்னை: தமிழக நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.

 

Sunday, 19 June 2016

'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க்கு இணையாக சான்றிதழ்'

'10ம் வகுப்பு முடித்து ஐ.டி.ஐ., படித்தால் பிளஸ் 2க்கு இணையாக சான்றிதழ்'


துாத்துக்குடி;''பத்தாம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ., படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்தவுடன், பிளஸ் 2 முடித்ததற்கு இணையாக, சான்றிதழ் வழங்கப்படும்,'' என, திறன் மற்றும் தொழில் முனைவோர் துறை மத்திய இணையமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.


துாத்துக்குடியில், நேற்று அவர் அளித்த பேட்டி: மாநிலங்களில் ஐ.டி.ஐ., தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசின் என்.சி.வி.டி., கட்டுப்பாட்டின் கீழ் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும், 18 லட்சம் மாணவர்கள், இப்படி படித்து வருகின்றனர்.
இவர்கள், 8ம் வகுப்பு முடித்து, ஐ.டி.ஐ.,யில் இரண்டு ஆண்டுகள் படித்தால், தங்களது உயர் படிப்பை தொடர விரும்பும்போது, 10ம் வகுப்பு முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப்பட்டு, நேரடியாக, பிளஸ் 1ல் சேர்த்துக் கொள்ளப்படுவர்.


அதேபோல், 10ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள், ஐ.டி.ஐ.,யில் படித்து விட்டு, உயர் படிப்பு படிக்க நினைக்கும்போது, அவர்கள், பிளஸ் 2 முடித்தவர்களாக கணக்கில் கொள்ளப்
படுவர்.அவர்கள் நேரடியாக, இன்ஜினியரிங், பட்டப் படிப்பில் சேர்ந்து கொள்ளலாம். இந்த திட்டத்தை வரும் ஜூலை, 15ல், பிரதமர் மோடி அறிவிக்கிறார். தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, 18 June 2016

பி.இ., - எம்.பி.ஏ., படிப்பு இரு கல்லூரிகளுக்கு தடை.

பி.இ., - எம்.பி.ஏ., படிப்பு இரு கல்லூரிகளுக்கு தடை.


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் விதிகளை மீறியதால், இரண்டு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், 530 இன்ஜி., கல்லுாரிகள் பி.இ., - பி.டெக்., படிப்பையும், 40க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பி.ஆர்க்., படிப்பையும் நடத்துகின்றன.


இந்த கல்லுாரிகள் அனைத்தும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்று, அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்து பெற்று, மாணவர்களை சேர்க்கின்றன. இந்த ஆண்டு, இன்ஜி., கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் மற்றும் இணைப்பு அந்தஸ்து நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன. 2015ல், இணைப்பு பெற்ற, 500க்கும் மேற்பட்ட கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், விதிகளை பூர்த்தி செய்யாத, இரண்டு இன்ஜி., கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை.சென்னை அருகில் மாங்காட்டில் உள்ள முத்துக்குமரன் இன்ஜி., கல்லுாரியும், திருச்சியில் எம்.பி.ஏ., மட்டும் நடத்தும் கல்லுாரியும் அங்கீகாரத்தை இழந்துள்ளன. இதற்கிடையில், இரண்டு புதிய கல்லுாரிகள் அங்கீகாரம் கேட்டுள்ளன. ஈரோடு, ஸ்பெக்ட்ரம் இன்ஜி., கல்லுாரி மற்றும் கன்னியாகுமரி நீரஜ் இன்ஜி., கல்லுாரி ஆகியவை, புதிதாக அங்கீகாரம் கேட்டு, அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளன; அவை பரிசீலினையில் உள்ளன.


அதேபோல், தமிழகத்தில் முதல் முறையாக, ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு எம்.பி.ஏ., படிப்புக்கு, அண்ணா பல்கலை இணைப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது. கோவை எக்செல் கல்வி நிறுவன கல்லுாரிக்கு, இந்த படிப்பு துவங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவை தவிர, 40க்கும் மேற்பட்ட பி.ஆர்க்., படிப்புக்கான கல்லுாரிகளின் விண்ணப்பங்களும், அண்ணா பல்கலை யின் பரிசீலினையில் உள்ளன. எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் பல, தங்களது மாணவர் எண்ணிக்கை அளவை குறைத்துள்ளன. அதன் மூலம், பேராசிரியர்களுக்கான பற்றாக்குறை நீங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர்ப்பாணை

RTI-31.07 க்குள் 5 வயது பூர்த்தியடையாத மாணவனை முதல் வகுப்பில் சேர்க்க தவிர்ப்பாணை கிடையாது- தொடக்கக்கல்வி இணை இயக்குனர் அவர்களின் (த.அ.உ)பதில்


 

Friday, 17 June 2016

பள்ளிக்கு வராமலே கையெழுத்து தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'

பள்ளிக்கு வராமலே கையெழுத்து தலைமை ஆசிரியை 'சஸ்பெண்ட்'.


வேடசந்துார் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராமலே முன்கூட்டியே கையெழுத்திட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்
குஜிலியம்பாறை ஒன்றியம் நாகுல்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஏழு மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக திண்டுக்கல்லை சேர்ந்த இந்திரா உள்ளார். இவர் வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே பள்ளிக்கு வருவதாகவும், மற்ற நாட்களில் பள்ளிக்கு வந்ததாக முன்கூட்டியே கையெழுத்திட்டு செல்வதாகவும் புகார் எழுந்தது. இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை மிக குறைந்துள்ளது. இதனால் பள்ளியே மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் சார்பில் தொடக்க கல்வித்துறைக்கு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாண்டியராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில், அன்றைய தினமும், மறுநாளும் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டது தெரியவந்தது. இதையடுத்து பள்ளிக்கு வராமலும், வந்ததாக முன்கூட்டியே கையெழுத்திட்டு சென்ற தலைமை ஆசிரியை இந்திராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்

Thursday, 16 June 2016

DGE- HSE

DGE- HSE March 2016- Original Mark Sheet will be issued on 20.06.16 for school students & private candidates in concern schools-Reg

11ம் வகுப்பு மாணவர்களுக்கு 23ம் தேதி வகுப்பறைகள் தொடக்கம்...

11ம் வகுப்பு மாணவர்களுக்கு 23ம் தேதி வகுப்பறைகள் தொடக்கம்...


தமிழகத்தில் 11ம் வகுப்பு சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி முதல் வகுப்பறைகள் தொடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

அரசு மற்றும் தனியார் துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை தமிழக அரசு தகவல்

அரசு மற்றும் தனியார் துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை தமிழக அரசு தகவல்


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நீலோபர் கபீல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தில் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.



வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82.94 லட்சம் மனுதாரர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். இதில் உத்தேசமாக 45 லட்சம் மனுதாரர்கள், கடந்த 2011–ம் ஆண்டு முதல் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு பயின்ற மாணவர்கள்.


அவர்கள் தங்கள் கல்வித் தகுதியினைத் தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இம்மனுதாரர்கள் தங்களின் உயர்கல்வியினை தொடர்ந்து கொண்டிருப்பவர்களாக கருதப்படுவார்கள்.


கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு, அரசுத் துறையில் 77 ஆயிரத்து 271 நபர்களும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 931 நபர்கள் தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.


வேலைவாய்ப்பு உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 5.82 லட்சம் பதிவுதாரர்கள் 171.14 கோடி ரூபாய் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையாக பெற்றுள்ளனர்.


இந்த கூட்டத்தில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அரசு முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் துறை ஆணையர் பி.அமுதா மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் சி.சமயமூர்த்தி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, 15 June 2016

வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...தடை!:

வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு...தடை!: மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு வரவே கூடாது என எச்சரிக்கை


தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 

50 சதவீதம் அதிகாரிகள் பணியிடம் காலி 'காற்றாடுது' கல்வித்துறை.

50 சதவீதம் அதிகாரிகள் பணியிடம் காலி 'காற்றாடுது' கல்வித்துறை.
தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பணியிடங்கள் 50 சதவீதம் வரை காலியாக இருப்பதால், கல்வித்தரம் மற்றும் அரசு நலத் திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதித்துள்ளன.


மாநிலத்தில் 67 பணியிடங்களில், மதுரை, நெல்லை, துாத்துக்குடி, கன்னியாகுமரி (எஸ்.எஸ்.ஏ.,) உட்பட 30 சி.இ.ஓ.,க்கள் மற்றும் கூடுதல் சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல் 128 டி.இ.ஒ., பணியிடங்களில் நாகபட்டினம், தேனி (டி.இ.இ.ஓ.,க்கள்), மயிலாடுதுறை, சேலம், கரூர், செங்கல்பட்டு, செய்யாறு (டி.இ.ஓ.,க்கள்) காஞ்சிபுரம் (ஐ.எம்.எஸ்.,) உட்பட 60 பணியிடங்கள் வரை காலியாக உள்ளன.


சட்டசபை தேர்தலால் பொதுத் தேர்வை முன்னிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப கல்வி அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி தரம் ஆய்வு, நிர்வாகப் பணி கண்காணிப்பு, அரசின் 14 வகை நலத் திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதித்துள்ளன.


இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலியானால் அதை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மூச்சு முட்டும் வகையில் நலத் திட்டங்களை வழங்க அரசு வற்புறுத்துகிறது. கல்விப் பணி பாதிக்கிறது. பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைந்தாலும் ஆசிரியர்கள் பதில் அளிக்க வேண்டியுள்ளது. அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tuesday, 14 June 2016

அட்டையில் முதல்வர் படம் இடம்பெறும் விவகாரம் காரணமா?

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு வழங்குவதில் காலதாமதம்: அட்டையில் முதல்வர் படம் இடம்பெறும் விவகாரம் காரணமா?


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 77 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் நோட்டுகள் வழங்கப்படாததால் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தரமான கல்வி அளிக்கும் நோக்கில் இலவசபாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடை, புத்தகப் பை, ஜியாமெட்ரி பாக்ஸ், அட்லஸ், காலணி, லேப் டாப், சைக்கிள் என14 விதமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா பள்ளிகள் திறக்கப் பட்ட ஜூன் 6-ம் தேதி அன்று தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து,முதல் நாள் அன்றே அனைத்து மாணவ-மாணவி களுக்கும் பாடப் புத்தகங்கள், சீரு டைகள் வழங்கப்பட்டன.கோடை விடுமுறை முடிந்து வகுப்புகள் மீண்டும் தொடங்கி மாணவ-மாணவிகளுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பள்ளிகள் திறந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கப் படவில்லை. நோட்டுகள் வழங்கு வது தாமதமாகி வருவதால் பல பள்ளிகளில் தற்காலிக ஏற்பாடாக மாணவர்களை நோட்டுகள் வாங் கிக்கொள்ளுமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதிய நோட்டுகள் வாங்க முடியாத மாணவர்கள் குறைந்தபட்சம் பழைய நோட்டுகளையாவது வாங் கிக்கொள்ளுமாறும் இலவச நோட்டு கள் வழங்கப்பட்டதும் அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம் என் றும் மாணவர்களுக்குஅறிவுரை வழங்கியுள்ளனர். இலவச நோட்டு கள் எப்போது வழங்கப்படும் என்பது பள்ளி தலைமை ஆசிரியர் களுக்குக் கூட சரியாகத் தெரிய வில்லை.இலவசப் பாடப் புத்தகம், நோட்டு உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கான பெரும்பாலான நலத்திட்ட உதவி வழங்கும் பணி களை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்தான் மேற்கொண்டு வருகிறது. இலவச நோட்டுப் புத்தகங்கள் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன. நோட்டுகளின் எண்ணிக்கை வகுப்புக்கு வகுப்பு மாறுபடும்.
ஒன்று மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு 7 நோட்டுகளும், 3-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு 10 நோட்டுகளும், 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 8 நோட்டுகளும் வழங்கப்படுகின்றன. இதில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கட்டுரை நோட்டு, வரைபட நோட்டு ஆகியவையும் அடங்கும்.பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச நோட்டுப் புத்தகத் தின் முன் அட்டையில் தமிழக அரசு முத்திரையுடன்முதல்வரின் படம் அச்சிடப்படுவது வழக்கம். தற்போது நோட்டு அட்டையில் முதல்வர் படம் அச்சிடும் பணியில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாகவே பள்ளி மாணவர்களுக்கு இன்னும் நோட்டுகள் வழங்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.காலதாமதத்துக்கு காரணம்இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறும்போது, “வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் நோட்டுகள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கான திட்டங் களுக்கு முன்கூட்டியே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டுவிடும். கடந்த 5 ஆண்டுகளும் இதன்படியே பணிகள் நடந்துவந்தன.
ஆனால், இந்த ஆண்டு மே மாதம் சட்டப் பேரவை தேர்தல் வந்த காரணத்தால் அடுத்த முதல்வர் யார் என்ற தெரியாத நிலையில், மே 19-ம் தேதி (வாக்கு எண்ணிக்கைநாள்) வரை காத்திருக்க வேண்டியிருந்தது. புதிய அரசு பொறுப்பேற்ற பின்னரே மாணவர்களுக்கான இலவச நோட்டுகள் அச்சிடுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டன. முன் அட்டையில் முதல்வரின் படத்துடன் நோட்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணி முடிந்ததும் அனைத்து பள்ளிகளுக்கும் நோட்டுப் புத் தகங்கள் அனுப்பப்பட்டுவிடும்” என்றன.இலவச நோட்டுகள் எப்போது வழங்கப்படும் என்பது பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குக் கூட சரியாகத் தெரியவில்லை.

கல்வித்திறன் குறைந்த மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்

கல்வித்திறன் குறைந்த மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்


சிவகங்கை;அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. இதனால் பலர் கல்வித்திறனில் பின்தங்கியுள்ளனர். அவர்கள் 9, 10 வகுப்புகளில் தோல்வி அடைகின்றனர்.


இதனை தவிர்க்கும் வகையில் இந்த ஆண்டு முதல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி சார்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் அரசு மற்றும் உதவிப்பெறும் பள்ளிகளில் 9 ம் வகுப்பில் சிறப்பு தேர்வு நடத்தி, கல்வித்திறன் குறைந்த மாணவர்கள் கண்டறியப்பட உள்ளனர். அவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் காலை, மாலை பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளன.


அதே போல் டி.என்.பி.எஸ்.சி.,போன்ற போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக 10 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளன. இதற்காக அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அதிகாரிகள் பள்ளிகளின் பட்டியலை தயாரித்து வருகின்றனர்.

Monday, 13 June 2016

7th pay calculator

வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?


வீடு கட்ட அனுமதி பெறுவது எப்படி?
சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்றால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். வீட்டுக் கடனைத் தாண்டி வீடு கட்ட அங்கீகாரம், திட்டத்துக்கு ஒப்புதல் என நிறைய அனுமதி பெற வேண்டியிருக்கும். வீடு
கட்ட அனுமதி வாங்க எங்கே, எப்படி அணுக வேண்டும் என்று பார்ப்போம்.




புதிதாக வீடு கட்ட வேண்டும் என்றாலும், ஏற்கெனவே கட்டப்பட்ட வீட்டில் கூடுதலாகக் கட்டடங்களைக் கட்டுவதாக இருந்தாலும் அதற்குத் திட்ட அனுமதி பெற வேண்டும்? இந்த திட்ட அனுமதியை எங்கே வாங்குவது? இந்த அனுமதியைச் சென்னை நகர எல்லைக்குள் இருந்தால் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்திடமும் (சிஎம்டிஎ), சென்னை அல்லாத தமிழகத்தின் பிற பகுதிகள் என்றால் நகரத் திட்ட இயக்ககம் (டிடிசிபி) அமைப்புகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.



வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று தெரியுமா? வீடு அல்லது வர்த்தக் கட்டிடங்கள் எதுவாக இருந்தாலும் திட்ட வரைபடம் தேவை. இதை லே-அவுட் என்று சொல்வார்கள். இந்த லே-அவுட் சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபியால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். வீடு கட்ட விண்ணப்பிக்கும்போது வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைப்படி லே-அவுட் இருக்கிறதா என்பதை அதிகாரிகள் நேரில் வந்து மனையை ஆய்வு செய்வார்கள்.



இந்தத் திட்ட வரைபடமானது முழுமையாக விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால்தான் திட்ட அனுமதி கிடைக்கும். அப்படி இல்லையென்றால் அந்தத் திட்ட வரைபடத்துக்கான அனுமதியை சிஎம்டிஏ அல்லது டிடிசிபி வழங்காது. சென்னையில் வீடு அல்லது கட்டடம் கட்ட வேண்டும் என்றால் சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ. அலுவலகம் செல்ல வேண்டும். அங்கு மட்டுமே திட்ட அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும். மற்ற பகுதிகள் என்றால் டிடிசிபியின் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். டிடிசிபி அலுவலகம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் செயல்பட்டுவருகின்றன. .



யார் விண்ணப்பிக்க வேண்டும் என்ற சந்தேகம் இப்போது உங்களுக்கு வரலாம். நிலம் அல்லது மனையின் உரிமையாளர் அல்லது குத்தகைதாரர் ஆகியோர் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியைக் கோரி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பம், அதற்கென வரையறுக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே வழங்கப்பட வேண்டும். சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் அனுமதி கோரும் இந்த விண்ணப்பப் படிவங்கள் ஏ, பி, சி என மூன்று வகைகளில் இருக்கும்.



விண்ணப்பம் ஏ என்பது வீடு கட்டும் மனைப்பிரிவுக்கான விண்ணப்பம். இந்த விண்ணப்பத்தை வழங்கும்போது மனைக்குரிய எல்லா ஆவணங்களையும் இணைக்க வேண்டும். மனையை வாங்கும்போதே சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அமைப்பின் அங்கீகர வீட்டு மனையாக இருந்தால் பெரும்பாலும் எந்தச் சிக்கலும் வராது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.



விண்ணப்பம் பி என்பது கட்டிடம் கட்டுவதற்கும், ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடங்களுடன் சேர்த்து புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு உரியது. வீட்டை விரிவாக்கம் செய்வதாக இருந்தாலும் இந்த விண்ணப்பத்தை வழங்க வேண்டும். கட்டிடத்தின் திட்ட வரைபடத்தை இணைக்க வேண்டும். வீட்டைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுற்றுச்சூழல் விவரங்கள் ஆகியவற்றையும் முழுமையாகக் குறிப்பிட வேண்டும்.



விண்ணப்பம் சி என்பது மிகப் பெரிய அளவில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் தொகுப்புக் கட்டிடங்களுக்கு உரியது. இந்த விண்ணப்பம் சிறப்பு அந்தஸ்து உள்ளது என்பதால், இந்த வகை கட்டடங்களுக்கு சிஎம்டிஏ அமைப்பின் உறுப்பினர் செயலரின் அங்கீகாரம் அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டும் கட்டுநர்கள் இந்த விண்ணப்பத்தைத்தான் வழங்குவார்கள்.



இந்த விண்ணப்பங்களை வழங்கினால் மட்டும் போதாது. திட்ட அனுமதி மற்றும் விண்ணப்பத்தோடு உறுதி மொழிப் படிவத்தையும் கண்டிப்பாக இணைக்கச் சொல்வார்கள். உறுதிமொழி அளிப்பதற்கான மாதிரி படிவமும் சிஎம்டிஏ அமைப்பால் வரையறுக்கப்பட்டுள்ளது. பல உறுதிமொழிகள் அதில் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக அனுமதியை மீறிக் கட்டடம் கட்டினால் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டு கையொப்பம் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பங்கள் சிஎம்டிஏ அல்லது டிடிசிபி அலுவலகங்களில் கிடைக்கும். தற்போது இந்தப் படிவங்களை சிஎம்டிஏ மற்றும் டிடிசிபியின் இணையதளங்களிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் வந்துவிட்டது.



வீடு கட்டுவதற்கு அனுமதி கோரி பெரும்பாலும் விண்ணப்பம் பி-யே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த விண்ணப்பத்துடன் உரிமையாளர் கையொப்பம், குத்தகைதாரரின் கையொப்பம், அங்கீகாரம் பெற்ற நில அளவையர் கையொப்பம், வீட்டைக் கட்டும் பொறியாளரின் கையெழுத்து, கட்டடம் கட்டுவதற்கான திட்ட வரைபடம் ஆகியவற்றைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.


தரைத்தளத்துடன் மூன்று மாடிச் சிறப்புக் கட்டிடம், நான்கு அடுக்குக்கு மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். கட்டிடங்கள் கட்டுவதற்கு சிடிஎம்ஏ அல்லது டிடீசிபியின் அனுமதி வாங்குவதோடு வேலை முடிந்துவிடாது. கட்டுமானப் பணி நடைபெற்று கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நிலையிலும் விதிமுறைப்படி வீடு ஒழுங்காகக் கட்டப்படுகிறதா எனக் கண்காணிப்பார்கள். விதிமுறையை மீறாமல் வீட்டைக் கட்டுவது வீட்டு உரிமையாளரின் பொறுப்பும்கூட!

 at  7:43:00 AM

ரூ.7 லட்சம் வரை விலை போகும் பி.காம் படிப்பு

ரூ.7 லட்சம் வரை விலை போகும் பி.காம் படிப்பு


 தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டம் அலைமோதுகிறது. ' பொறியியல் படிப்புகளைவிடவும், பி.காம் உள்ளிட்ட கலைப் பிரிவு பாடங்களை நோக்கியே மாணவர்கள் அணிவகுக்கிறார்கள்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

Saturday, 11 June 2016

ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு


தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-


ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் பண, பணி மற்றும் இதர பலன்கள் தொடர்பான கோரிக்கை மனுக்களை பெற்றதும் உடனுக்குடன் 5 நாட்களுக்குள் அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஒவ்வொரு ஆசிரியரின் பணிப் பதிவேட்டில் அவர்களின் ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, வருடாந்திர ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு வரவு பதிவு, பணி சார்பார்த்தல் பதிவு ஆகிய விவரங்கள் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். இப்பணிகளைச் செய்ய ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது


இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்.
மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும்கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.




  இதற்காக ஒன்றியத்திற்கு 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் 3, 5, 8 ம் வகுப்புகளில் தலா 15 மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும் 3, 5 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களிலும், 8 ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களிலும் தேர்வு நடத்தப்பட்டன.இதில் பெரும்பாலும் நன்றாக படிக்கும் மாணவர்களை தேர்வுசெய்து எழுத வைத்தனர். இதனால் உண்மையான கல்வித் தரத்தை அறிந்து கொள்வதில் குழப்பம் இருந்தது. இதையடுத்து இந்த ஆண்டு முதல் அடைவுத் தேர்வு முறையில் சில மாற்றங்களை அனைவருக்கும் கல்வி இயக்கம் செய்துள்ளது.


அதன்படி அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்.மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் என, அனைத்து பாடங்களிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்களின் உண்மையான கல்வித்தரத்தை அறிய திட்டமிடப்பட்டுள்ளது.

Friday, 10 June 2016

4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு.

4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு.



 *மாணவர்களுக்கு கற்பூரம் சூடு*


விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை பாலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு கற்பூரத்தால் சூடு வைப்பு.
4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு.
இதனால் மாணவர்கள் தீ காயத்துடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி..
 *மாணவர்களுக்கு கற்பூரம் சூடு - ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்*
உளுந்தூர்பேட்டையில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பூரம் சூடு வைத்த ஆசிரியர் வைஜெயந்தி மாலா மற்றும் தலைமை ஆசிரியர் வரதராஜன் சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை

Wednesday, 8 June 2016

கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு


அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது. 7வது ஊதியக்குழுவான இது, ஏற்கனவே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுகுறித்து பரிந்துரைக்க முடிவுசெய்துள்ளது. அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இறுதிசெய்து அரசுக்கு அளிக்கவிருக்கிறது.




இது, தனது பரிந்துரையில் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.2.7 லட்சம் வரை அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உயர்வானது கீழ்மட்ட ஊழியர்களுக்கு ரூ.3,000 அதிகமாகவும், உயர்மட்ட ஊழியர்களுக்கு ரூ.20,000 அதிகமாகவும் இருக்கும். இந்த உயர்வின் காரணமாக, 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் பயனடைவார்கள்.

Tuesday, 7 June 2016

அரசு பள்ளிகளில் விசாரணை.

அரசு பள்ளிகளில் விசாரணை.
அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் நிதிவழங்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களும் தரப்படுகின்றன.


அரசின் நிதியில், ஆசிரியர்களுக்கான சம்பளமும் தரப்படுகிறது. ஆனால், சில, அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில், நன்கொடை மற்றும் பலவித கட்டணங்கள் வசூலிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு, ரசீதும் தருவதில்லை.


குறிப்பாக, 6ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த வசூல் வேட்டை நடப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தினமலர் நாளிதழில், நேற்றுசெய்தி வெளியானதும், பல மாவட்டங்களில், முதன்மை கல்வி அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர்.திடீர் ஆய்வு நடத்தவும், புதிதாகச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் விசாரணை நடத்தவும், அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனினும், இதுகுறித்து, பள்ளிக் கல்வி செயலகம் மற்றும் இயக்குனர் அலுவலத்தில் இருந்து, எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

Monday, 6 June 2016

கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி:'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்

தேர்வு நிலை அந்தஸ்தை பெற, கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி:'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுதல், இடமாறுதல், 'பென்ஷன்' போன்றவற்றுக்கு அதிகாரிகளை கவனித்தே உத்தரவு பெறும் நிலையில், எதையும் எதிர்பார்க்காமல் உத்தரவிட்ட அதிகாரிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் வாழ்த்துகள் குவிகின்றன.
தமிழகத்தில் தொடக்கப் பள்ளி, பள்ளிக்கல்வி, அனைவருக்கும் கல்வி இயக்கம், எஸ்.எஸ்.ஏ., எனப்படும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கமான ஆர்.எம்.எஸ்.ஏ., என, பல துறைகளின் கீழ், ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இடம் மாறுதல், விடுப்புகளை சரிசெய்தல், பாஸ்போர்ட் வாங்க அனுமதி, பி.எப்., மற்றும் பதவி உயர்வு பெறுவதுஎன, அனைத்து வகையான பணிகளுக்கும், கல்வி அலுவலக பணியாளர்களையும், மேலதிகாரிகளையும், 'கவனிக்க' வேண்டியதுகட்டாயம். இதில் சிலஅதிகாரிகளும், பணியாளர்களும் மட்டும் விதிவிலக்கு.இந்த வகையில், தற்போது,10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை அந்தஸ்து வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவுகளை, 5ம் வகுப்பு வரை, தொடக்கக் கல்வி அதிகாரியான, ஏ.இ.இ.ஓ., பிறப்பிக்கிறார்; 10ம் வகுப்பு வரை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரியான டி.இ.ஓ.,வும், அதற்கு மேல், சி.இ.ஓ.,வும் பிறப்பிக்கின்றனர்.
இந்தாண்டு இந்த தேர்வு நிலை அந்தஸ்தை பெற, ஆசிரியர்கள் தங்கள் அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தலைமை ஆசிரியர்கள் மூலமும் தேவையானவற்றைகவனித்துவருகின்றனர்.ஆனால், மதுரை மாவட்ட, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான் கென்னடி அலெக்சாண்டர், நேற்று முன்தினம், அலுவலகத்துக்கு மனுக்கள் கொண்டு சென்ற, 50 ஆசிரியர்களுக்கு, உடனடியாக ஆவணங்களை ஆய்வு செய்து தேர்வு நிலை அந்தஸ்து சான்றிதழ் வழங்கிஉள்ளார்.
இதனால், திக்குமுக்காடி போன ஆசிரியர்கள் வந்த காரியம் இவ்வளவு எளிதில் முடிந்துவிட்டதே' என, ஆச்சர்யமடைந்து, அந்த அதிகாரிக்கு பரிசளிக்க நினைத்துள்ளனர். அதையும் அவர் ஏற்றுக் கொள்ளாமல், 'பள்ளிக்கு சென்று சிறப்பாக கல்வி பணியாற்றுங்கள்' என, அறிவுரை கூறி அனுப்பியுள்ளார். இந்த தகவல், ஆசிரியர்களின் மொபைல் போன்களில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் உலா வந்து அனைவரின் பாராட்டையும் பெற்ற வண்ணம் உள்ளது.

Sunday, 5 June 2016

கல்லூரி பெயரை விட கவுன்சிலிங் குறியீடு முக்கியம்:'தினமலர்' உங்களால் முடியும் நிகழ்ச்சியில் தகவல்

கல்லூரி பெயரை விட கவுன்சிலிங் குறியீடு முக்கியம்:'தினமலர்' உங்களால் முடியும் நிகழ்ச்சியில் தகவல்


'இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கல்லுாரி பெயர்களை விட, கல்லுாரிகளின் குறியீட்டு எண்ணை தெரிந்து கொள்ள வேண்டும்,'' என, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார். அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்பது குறித்த, வழிகாட்டும் நிகழ்ச்சியான, 'தினமலர் உங்களால் முடியும்' நிகழ்ச்சி, நேற்று சென்னை பெரம்பூரில் நடந்தது.
'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' சேர்மன் ஸ்ரீராம் மற்றும் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பங்கேற்று, பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர்

\
கெஜட் அந்தஸ்து:கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
இன்ஜி., கவுன்சிலிங்குக்கு செல்லும் முன், விண்ணப்பங்களை நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், அரசின் கெஜட் அந்தஸ்து பெற்ற அதிகாரிகளின் இணைப்பு சான்றிதழ்
போன்றவற்றுடன், சாதி, வருமான, இருப்பிட சான்றிதழ்கள், முதல் தலைமுறை சான்றிதழ்
ஆகியவற்றை தயார் படுத்தி கொள்ளுங்கள்.அவற்றை பல நகல்கள் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். அத்துடன் அசல் சான்றிதழ் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். கலை, அறிவியல் கல்லுாரிகளில், அசல் சான்றிதழ் மூலம் சேர்ந்திருந்தால், கவுன்சிலிங்குக்கு ஒரு வாரம் முன்னரே அந்தக் கல்லுாரிக்கு சென்று, கல்லுாரி முதல்வரிடம் சான்றிதழ் நகல் மற்றும், 'அட்டெஸ்டேஷன்' இணைப்பு கடிதம் வாங்கி வைத்திருப்பது முக்கியம்.


இதுதவிர அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும், 5 சதவீத மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பெற, ஆண்டுக்கு, 4.5 லட்சம் ரூபாய் மட்டும் பெற்றோருக்கு வருவாய் உள்ளோர், வருமான சான்றிதழும் பெற்று கொள்ள வேண்டும்.
கவுன்சிலிங் கடிதம் வீட்டுக்கு வராவிட்டாலும், இணையதளம் மற்றும் அண்ணா பல்கலை,
இ-மெயில் தகவல் மூலம் தெரிந்து கொண்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்கு இரண்டு மணி நேரம் முன் சென்று, அழைப்பு கடித நகல் அங்கேயே வாங்கிக் கொள்வது நல்லது.


மூன்று வித விருப்பங்கள்:கல்லுாரியில் சேர்வதற்கான முதல் வைப்புத் தொகை, 5,000 ரூபாயை, அண்ணா பல்கலை வளாக வங்கி கவுன்டரில், கவுன்சிலிங்குக்கு முதல் நாள் கூட சென்று அதற்கான சலானை பெற்றுக் கொள்ளலாம். கவுன்சிலிங்கில் எந்த பாடப்பிரிவு, எந்த கல்லுாரியை தேர்வு செய்வது என, முதலிலேயே மூன்று வித விருப்பங்களை முடிவு செய்து கொள்ள வேண்டும்.


'கட் -- ஆப்' மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசைப்படி மட்டுமே, இடம் ஒதுக்கீடு செய்யப்
படும். எனவே, அவரவர் மதிப்பெண்ணுக்கான வாய்ப்பு வேறு யாருக்கும் செல்லாது.
கல்லுாரிகளை தேர்வு செய்யும் போது, அந்த கல்லுாரியின் பெயரை மட்டும் தெரிந்திருக்காமல், கல்லுாரியின் கவுன்சிலிங் அடையாள குறியீடு எண் கண்டிப்பாக தெரிந்தால் தான், நினைத்த கல்லுாரியை தேர்வு செய்ய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.


பிளஸ் 2 முடித்த பின், என் போன்ற மாணவ, மாணவியர் எதைப் படிப்பது, எங்கு படிப்பது என்ற குழப்பத்தில் தடுமாறுவது வழக்கம். இந்த நிலையில், 'தினமலர்' நடத்திய, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, என் குழப்பத்தை போக்கியது. ஜே.பி., சார், நிறைய தகவல்களை தெரிவித்தார்.
நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க முடிவு செய்து விட்டேன்.கி.அஷ்மிதா மாணவி, பெரம்பூர்.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நல்ல வாய்ப்பு. அதற்காக முதலில் தினமலருக்கு நன்றி. அடுத்து, எந்த துறையை தேர்ந்தெடுத்து படித்தால், எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பை பெற முடியும் என்ற கேள்விக்கு, ஜெயபிரகாஷ் காந்தி சாரின் புள்ளி விவரமான விளக்கங்கள் எனக்கு நல்ல தெளிவை கொடுத்துள்ளது. நான், பி.டெக்., ஐ.டி., படிக்க உள்ளேன்.
சா.மோதிகா,மாணவி, பழைய வண்ணாரப்பேட்டை.


பிளஸ் 2 தேர்ச்சி அடைந்த என் மகனை, எந்த துறையில் படிக்க வைக்கலாம் என்று, எங்கள் வீட்டில் உள்ளவர்கள் பல ஆலோசனைகளை வழங்கினர். ஆனால், எல்லாப் பெற்றோருக்கும் இருப்பது போல, எனக்கும் தீராத குழப்பம் இருந்தது. இங்கு வந்து, 'உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தெளிவு கிடைத்து விட்டது. என் மகனுக்கு சரியான துறையை தேர்ந்தெடுத்து படிக்க வைப்பேன்.ந.கிரிஜா,பெற்றோர், மூலக்கடை.


என் மகளின் 'கட்-ஆப்' மார்க் குறைவு :என்றாலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்துள்ளேன். ஆனாலும், எதிர்காலத்தை பயனுள்ளதாக அமைக்க, சரியான துறை அதற்கான படிப்பு குறித்த குழப்பத்தில் இருந்தேன். இந்த சூழலில் தினமலரின், 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி எனக்கும், என் மகளுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.ரமேஷ்பெற்றோர், மணலி.

சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.

சிறையில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு.


கோவை மத்திய சிறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.கோவை மத்திய சிறை எஸ்.பி., வெளியிட்டுள்ளஅறிக்கை:
கோவை மத்திய சிறையில், ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. தேவையான கல்வி தகுதியுடன், 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
   பொது பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 32 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பள ஏற்றமுறை 5,200 - 20,200 தர ஊதியம் 2,800 ரூபாய்.இதேபோன்று ஒரு சிறுதொழில் பயிற்றுநர் பணியிடம் காலியாகஉள்ளது. இதற்குகல்வி தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி மற்றும் ஓவியப்பயிற்சி சான்றிதழ் வேண்டும். ஆறு மாதம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பொது பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 32 வயது, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை ஜாதியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பள ஏற்றமுறை 5,200 - 20,200 தர ஊதியம் 2,800 ரூபாய்.இப்பணியிடங்களுக்கு தகுதியுடையவர்கள், உரிய கல்வி சான்றிதழ், தொழிற்கல்வி சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் ஆகியவற்றுடன், வரும் 13ம் தேதி காலை 11:00 மணிக்கு, மத்திய சிறை எஸ்.பி., முன் ஆஜராக வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, 4 June 2016

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர் சேர்க்கை விவரம் சேகரிப்பு.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி; மாணவர் சேர்க்கை விவரம் சேகரிப்பு.


கடந்த, 2012-13ம் ஆண்டில் இருந்து, அரசு பள்ளிகளில் துவங்கப்பட்டு, ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை, உடனடியாக அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்றோர் இடையே, சமீப காலமாக ஆங்கிலவழிக்கல்வி மீதான மோகம் அதிகரித்து கொண்டே வருகிறது.


அதனால், சரியும் மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்த, அனைத்து பள்ளிகளிலும், ஆங்கில வழிக்கல்வியை துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில், கடந்த, 2012-13ம் கல்வியாண்டில் இருந்து, படிப்படியாக பெரும்பாலானஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி பிரிவு துவக்கப்பட்டுள்ளது.


ஆனால், அவர்களுக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல், ஏற்கனவே உள்ள ஆசிரியர்கள் மூலமாகவே நடத்தப்படுவதால், பெற்றோர்களுக்கு, பெரிய அளவில் ஈர்ப்பினை ஏற்படுத்தவில்லை. இதனால், தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆங்கிலவழிக்கல்வி பிரிவுக்கு உள்ள வரவேற்பினை கண்டுபிடிக்கும் வகையில், கடந்த,2012-13ம் ஆண்டில் இருந்து, ஆங்கிலவழிக்கல்வி பிரிவு துவக்கப்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கையை, ஆண்டு வாரியாக தொகுத்து, தனித்தனியேஅறிக்கையாக அனுப்பி வைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

Friday, 3 June 2016

இலவச பஸ் பாஸ் தாமதம்: மாணவர்கள் அச்சம்

இலவச பஸ் பாஸ் தாமதம்: மாணவர்கள் அச்சம்


அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, பஸ் பாஸ் கிடைக்க, இன்னும் இரு வாரங்களாகும் என, தெரிகிறது. பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களும், கட்டணமின்றி பள்ளிகளுக்கு சென்று வரலாம்.



இந்த அட்டைகளை, பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே குழு அமைத்து, போக்குவரத்து துறை மூலம், மாணவர்களுக்கு வழங்குகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், இலவச பஸ் பாஸ் வழங்க காலதாமதமாகிறது. ஜூனில் பள்ளி திறந்த பின்னே, மாணவர்களின் பெயர் விவரங்களை, போக்குவரத்து துறைக்கு வழங்குகின்றனர்.


இந்த நடைமுறைக்கு, ஒரு மாத காலம் ஆவதால், பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள முடியாமல், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.


இந்த ஆண்டும், நேற்று பள்ளி திறந்த நிலையில், பஸ் பாஸ் வழங்க தேவையான தகவல்களை, மாணவர்களிடம் ஆசிரியர்கள் பெறவில்லை. இதுகுறித்து, பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், 'ஜூன் 10ம் தேதிக்குள், மாணவர்களின் விவரங்களை சேகரித்து, போக்குவரத்து துறை அதிகாரி
களிடம் ஒப்படைக்க வேண்டும்' என, கூறப்பட்டு உள்ளது. ஆனாலும், பள்ளிகளில் இந்த பணி துவங்கப்படவில்லை.
ஒரு வாரத்திற்கு பின்னே, இப்பணிகள் துவங்கும் என்பதால், மாணவர்களுக்கு பஸ் பாஸ் கிடைக்க, எப்படியும் ஒரு மாதமாகி விடும். அதுவரை, இந்த மாணவர்களால், பஸ்களில் சென்று வர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இந்த பிரச்னை உள்ளது. பாஸ் இல்லை என்றால், நடத்துனர்கள் அனுமதிப்பதில்லை. அதனால், மாணவர்களும் பஸ்சில் ஏறவே பயப்படுகின்றனர்.
எனவே, பஸ் பாஸ் வழங்கும் போதே, அதன் கால வரம்பை, ஜூன், 30ம் தேதி வரை நீட்டித்து
வழங்கலாம். கோடை விடுமுறையான, மே மாதத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கலாம்.

ஓபிசி பிரிவினருக்கான "கிரீமிலேயர்' வரம்பு ரூ.8.50 லட்சமாக உயர வாய்ப்பு!

ஓபிசி பிரிவினருக்கான "கிரீமிலேயர்' வரம்பு ரூ.8.50 லட்சமாக உயர வாய்ப்பு!


இதர பிற்படுத்தப்பட்டோரில் (ஓபிசி) வசதியானவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் விலக்கு அளிக்கும் வருமான வரம்பை தற்போதுள்ள ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8.50 லட்சமாக உயர்த்த மத்திய பாஜக அரசு உத்தேசித்துள்ளது.


இதர பிற்படுத்தப்பட்டோரில் வசதியானவர்கள், ஏழைகள் என்று தனியாக அடையாளம் காண்பதற்காக "கிரீமிலேயர்' என்ற முறையை மத்தியில் ஆட்சிபுரிந்த காங்கிரஸ் அரசு கடந்த 1993இல் அமல்படுத்தியது. இதன்படி, ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஒரு குடும்பத்துக்கு ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம் மற்றும் அதற்கும் கூடுதலாக இருந்தால் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியிலும், அரசு வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற முடியாது. இந்நிலையில், இந்த வருமான உச்ச வரம்பை ரூ.8.50 லட்சமாக உயர்த்துவது என்று மத்திய அரசு உத்தேசித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைச்சகங்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகே மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""கிரீமிலேயருக்கான உச்சவரம்பை நாங்கள் இறுதிசெய்துள்ளோம். அது ரூ.8.25 லட்சத்தில் இருந்து ரூ.8.50 லட்சத்துக்குள் இருக்கும்'' என்றார்.


இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகமும், மத்தியப் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையும் உரிய உத்தரவுகளை மத்திய கல்வி நிலையங்களுக்கும் அரசுத்துறைகளுக்கும் பிறப்பிக்கும். இந்த வருமான உச்சவரம்பின் மூலம் ஓபிசி பிரிவைச் சேர்ந்த மேலும் பலருக்கும் இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்கும்.

Thursday, 2 June 2016

increase in DA from July 2016 working out to be 6%

Possibility of increase in DA from July 2016 working out to be 6%
Even if index gets lower by 3 points during both of these months compared to previous month, viz., May 2016 registers 3 point reduction from April and further three point reduction in June 2016 compared to May 2016, increase in DA from July 2016 will be 6%.
DA from July 2016=[(263+264+266+269+270+269+269+267+268+271+268@+265@)-115.76]X100/115.76


=131% -125% (6% increase in DA from July 2016)
விரைவில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு...அரசு உத்தரவு ஒரு சில நாட்களில்வெளியாக வாய்ப்பு...