Wednesday, 2 November 2016

கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு கவுன்சலிங் தர மாவட்டத்துக்கு 100 ஆசிரியர்கள்


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர் முழு ஆண்டுத்தேர்வில் தோல்வி அடைந்தாலோ, மதிப்பெண் குறைந்தாலோ தற்கொலையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, சமூக பாதுகாப்புத்துறை இணைந்து ஆசிரியர்கள் மூலம் பள்ளி அளவில் மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.


இதற்காக மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா நூறு ஆசிரியர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்க உள்ளனர்.  தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்டத்திலேயே, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை குறைப்பது எப்படி, தற்கொலை எண்ணம் வராமல் தடுக்கும் வழிமுறை குறித்து மனவளக்கலை பயிற்சி அளிக்கப்படும்.


பயிற்சி பெறும் ஆசிரியர்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு கவுன்சலிங் அளிப்பர். ஆசிரியர்களுக்கான பயிற்சி விரைவில் அளிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Posts Widget
 

Friday, 28 October 2016

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு

'ஆல் பாஸ்' திட்டம் ரத்துக்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு.


'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்யும், மத்திய அரசின் முடிவுக்கு, தமிழகம் உட்பட, நான்கு தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கேரளா, புதுவை மாநிலங்கள் மட்டும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 முதல், பள்ளிகளில், ஆல் பாஸ் திட்டம் அமலில் உள்ளது.    இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், எந்த வித நிறுத்தமும் இன்றி, அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்யப்படுவர்.
இந்த திட்டத்தால், கல்வித் தரம் குறைந்துள்ள தாக, மத்திய அரசின் ஆய்வு குழு
 தெரிவித்துள் ளது.எனவே,ஆல்பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர் பாக, பல மாநிலங்கள், தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளன. அவற்றில், தென் மாநிலங்கள் மட்டுமே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Thursday, 27 October 2016

EMIS பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்

EMIS பதிவு குளறுபடி : ஆசிரியர்கள் திணறல்


பள்ளி மாணவர்களுக்கு, ஒருங்கிணைந்த அடையாள எண் வழங்கும், 'எமிஸ்' என்ற கல்வி மேலாண்மை திட்டத்தில், மாணவர் மற்றும் பள்ளி பெயர்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு நிதியுதவியுடன், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மூலம், 'எமிஸ்' கல்வி மேலாண்மை தொழில்நுட்ப திட்டம், அமலுக்கு வந்துள்ளது.
இத்திட்டத்தில், மாணவர்களின் பெயர், படிக்கும் பள்ளி, வகுப்பு, முகவரி, பெற்றோரின் மொபைல் போன் எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.    இப்பதிவில், மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு, புதிய மாணவர்களின் விபரங்களை சேர்த்தல், பள்ளிமாறிய மாணவர் விபரங்களை மாற்றுதல் போன்ற பணிகளுக்கு, பள்ளிகளுக்கு இம்மாத இறுதி வரை கெடு விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பெரும்பாலான தொடக்க, நடுநிலை பள்ளிகள் இந்த பணிகளை முடிக்கவில்லை.
ஆசிரியர்களுக்கு பொம்மலாட்ட பயிற்சி அளிக்கும், எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள், கணினியை இயக்கவும், மாணவர் விபரங்களை பதியவும் பயிற்சி அளிக்கவில்லை என, ஆசிரியர்கள் குமுறுகின்றனர். பயிற்சி அளிக்காமல், எமிஸ் திட்டத்தில் மாணவர் பெயர்களை பதிவு செய்ததால், பல மாவட்டங்களில், மாணவர்களின் பெயரும், அவர்கள் படிக்கும் பள்ளியும் மாறி, மாறி பதிவாகி உள்ளது. அதனால், ஆசிரியர்கள், தனியார் கணினி மையங்களை அணுகி உள்ளனர். கட்டண அடிப்படையில், அங்குள்ள ஊழியர்கள், கல்வித் துறையின் இணையதளத்தில், பெயர்களை பதிவு செய்கின்றனர். வரும் காலங்களிலாவது, இது போன்ற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Wednesday, 19 October 2016

மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல் ...!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் கற்பிக்கும் முறை 7-ந் தேதி முதல் ...!


தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.


பொம்மலாட்டம் முறை


தமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் (1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்து உள்ளது.


இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.


இதில் பொம்மலாட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் எஸ்.வி.மாணிக்கம், சுகந்தி டெய்சி ராணி உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.


பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட சீனியர் ஆலோசகர் ஆர்.மாலதி கூறியதாவது:-


7-ந் தேதி முதல்...


தமிழ் உள்பட அனைத்து பாடங்களையும் பொம்மலாட்டம் மூலமாக நடத்தி காண்பித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.


இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். பின்னர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வருகிற (நவம்பர்) 5-ந் தேதி முதல் நடத்தப்படும்.


பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கையேடு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி தங்கள் வகுப்பில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு பொம்மலாட்டம் மூலம் பாடங்களை கதைகளாக கூறி நடத்துவார்கள். இந்த புதிய கற்பிக்கும் முறை வருகிற 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.


இவ்வாறு மாலதி தெரிவித்தார்.

பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு

பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு


மாணவர்களின் ஆதார் எண் பதிவை, வரும், 30க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும், இலவச நலத்திட்ட உதவி வழங்குதல், உதவி தொகை வழங்குதல் போன்றவற்றை முறைப்படுத்த, மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இதில், போலிகள் இடம் பெறாமல் தடுக்க, மாணவர்களின் ஆதார் எண், பெயர் பட்டியலில் சேர்க்கப்படுகிறது.
  இதன்படி,    ஆதார் பதிவை, செப்., 30க்குள் முடிக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, சிறப்பு முகாம் நடத்தி, பெயர்களை பதிவு செய்ய வேண்டியிருந்ததால், அந்த காலக்கெடுவுக்குள், பள்ளிகளால் பதிவை முடிக்க முடியவில்லை. இந்நிலையில், வரும், 30க்குள் ஆதார் எண் பதிவை கட்டாயம் முடிக்க, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

Tuesday, 18 October 2016

பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு

பள்ளிகளில் ஆதார் அக்., 30 வரை கெடு


மாணவர்களின் ஆதார் எண் பதிவை, வரும், 30க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். அனைத்து மாணவர்களுக்கும், இலவச நலத்திட்ட உதவி வழங்குதல், உதவி தொகை வழங்குதல் போன்றவற்றை முறைப்படுத்த, மாணவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
இதில், போலிகள் இடம் பெறாமல் தடுக்க, மாணவர்களின் ஆதார் எண், பெயர் பட்டியலில் சேர்க்கப்படுகிறது.
  இதன்படி,    ஆதார் பதிவை, செப்., 30க்குள் முடிக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு, சிறப்பு முகாம் நடத்தி, பெயர்களை பதிவு செய்ய வேண்டியிருந்ததால், அந்த காலக்கெடுவுக்குள், பள்ளிகளால் பதிவை முடிக்க முடியவில்லை. இந்நிலையில், வரும், 30க்குள் ஆதார் எண் பதிவை கட்டாயம் முடிக்க, பள்ளிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இலவச புத்தகம்கல்வித்துறை மறுப்பு

இலவச புத்தகம்கல்வித்துறை மறுப்பு


அரசு உதவி பெறும் சில பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இலவச புத்தகம் மற்றும் சைக்கிள் வழங்க கல்வித்துறை மறுத்துள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசு சார்பில், 14 வகை இலவச நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழியில் நடத்தப்படும் சில வகுப்புகளுக்கு, அரசின் நிதி உதவி கிடைப்பதில்லை. இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் இலவசங்கள் வழங்கப்படக் கூடாது என்பது விதி.
ஆனாலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், தொடர்ந்து இலவச உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், 'உரிய கட்டணம் செலுத்தினால் மட்டுமே, பாடப் புத்தகங்கள் வழங்கப்படும்' என, வேலுார், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பிரச்னை எழுந்துள்ளது.அரசு நிதி உதவி இல்லாத வகுப்பு மாணவர்களிடம், புத்தகத்திற்கு கட்டணத்தை வசூலித்து தரும்படி, பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். அதனால், இந்த பிரிவு மாணவர்களுக்கு, புத்தகம் கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Thursday, 13 October 2016

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியையை கண்டித்து அரசு பள்ளிக்கு மக்கள் பூட்டு

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியையை கண்டித்து அரசு பள்ளிக்கு மக்கள் பூட்டு


மாணவ, மாணவிகளை தலைமையாசிரியை அடித்து காயப்படுத்துவதாக கூறி, அரசு பள்ளிக்கு கிராம மக்கள் பூட்டு போட்ட சம்பவம்   போடி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தேனி மாவட்டம், போடி அருகே கரட்டுபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தலைமையாசிரியையாக மகாலட்சுமி மற்றும் 10 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தலைமையாசிரியை, ஆசிரியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவ, மாணவிகளை அடித்து காயப்படுத்துவதாகவும் கரட்டுப்பட்டி மக்கள் ெதாடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இவரை பணியிட மாற்றம் செய்யக்கோரி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.


தொடர்ந்து புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரம் அடைந்த கரட்டுப்பட்டி மக்கள் நேற்று பள்ளியின் கேட்டை பூட்டினர். பின்னர் மாணவர்களை எதிரேயுள்ள மரத்தடியில் அமர வைத்தனர். இதனால் தலைமையாசிரியை மகாலட்சுமி, ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வாசலில் நின்றிருந்தனர். தகவலறிந்த போடி புறநகர் ேபாலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ‘அரசு பள்ளியை பொதுமக்கள் பூட்டுவதற்கு அதிகாரம் இல்லை. கல்வித்துறை உயரதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்கள்’ என தெரிவித்தனர். இதையடுத்து காலை 11.30 மணிக்கு பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமையாசிரியை மகாலட்சுமி மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

வாக்காளர் அட்டை வேண்டுமா?

வண்ண வாக்காளர் அட்டை வேண்டுமா?


🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா*
🗣 உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டதா
🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் புகைப்படம் பழையதாக உள்ளதா*


🗣பல தடவை மனு கொடுத்து அலைந்து விட்டேன் முடியலப்பா என்று சொல்லுகின்றீர்களா
✅ *கவலை வேண்டாம் அலைய வேண்டாம்*

🗣 உடனே உங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ - சேவை' மையத்திற்க்கு செல்லுங்கள்
🗣கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்;
🗣அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான புகைப்படத்தை மாற்றி புதியதாக பதிந்துபெற்றுக் கொள்ளலாம்.
🗣வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்;
🗣 25 ரூபாய் செலுத்த வேண்டும்.
🗣உடனடியாக உங்களுக்கு அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டை தந்துவிடுவார்கள்.
 *​சமூக நலனில் அக்கறையுடன்​*
🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டை பழையதாக உள்ளதா*
🗣 உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டதா
🗣 *உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உங்கள் புகைப்படம் பழையதாக உள்ளதா*
🗣பல தடவை மனு கொடுத்து அலைந்து விட்டேன் முடியலப்பா என்று சொல்லுகின்றீர்களா
✅ *கவலை வேண்டாம் அலைய வேண்டாம்*
🗣 உடனே உங்கள் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ - சேவை' மையத்திற்க்கு செல்லுங்கள்
🗣கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்;
🗣அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான புகைப்படத்தை மாற்றி புதியதாக பதிந்துபெற்றுக் கொள்ளலாம்.
🗣வாக்காளர்கள் மையங்களுக்கு சென்று, வாக்காளர் அட்டை எண்ணை கூறியதும், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை, அச்சிட்டு தரப்படும்;
🗣 25 ரூபாய் செலுத்த வேண்டும்.
🗣உடனடியாக உங்களுக்கு அப்போதே வண்ண வாக்காளர் அடையாள அட்டை தந்துவிடுவார்கள்.

ஆன்லைன் ஆசிரியர் ஆகலாமே!

ஆன்லைன் ஆசிரியர் ஆகலாமே!


அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும் உன்னதப் பணியை ஏற்றுக்கொள்பவர்கள் ஆசிரியர்கள். ‘வரலாற்றைப் படைப்பவர் ஆசிரியர்தான்’ என்றார் ‘அறிவியல் புனைகதைகளின் தந்தை’ என்றழைக்கப்படும் எச்.ஜி. வெல்ஸ். எப்போதுமே ஆசிரியர்களுக்கு உலக அளவில் தனி மதிப்புண்டு. இப்படியெல்லாம் ஆசிரியர் பணியை எப்போதுமே சிலாகித்தாலும் பெரும்பாலான சிறந்த மாணவர்கள் ஆசிரியர்கள் ஆக விரும்புவதில்லை.
பள்ளி, கல்லூரிப் படிப்பில் உச்சபட்ச மதிப்பெண்களும் தனித்திறமையும் வெளிப்படுத்தும் மாணவர்களில் எத்தனை பேர் ஆசிரியராகக் கனவு காண்கிறார்கள்? தலைசிறந்த பொறியாளர்களும் மருத்துவர்களும் வியாபாரிகளும் அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் எப்படி அவசியமோ அதே போல திறமைவாய்ந்த ஆசிரியர்கள் இன்றைய முக்கியத் தேவைகளில் ஒன்று.உலக அளவிலேயே நல்லாசிரியர்களுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது எனச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதைக் கேட்டதும், “நான்கூட ஆசிரியர் ஆக ஆசைப்பட்டேன்.ஆனால், என்ன செய்ய அதற்கான சூழல் வாய்க்கவில்லையே!” என நினைப்பவர்கள் இருக்கலாம். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தயாரானால் நிச்சயமாக உங்களுக்குள் இருக்கும் நல்லாசிரியரை இப்போதே வெளிகொணரலாம்.

Wednesday, 12 October 2016

நாளை விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை

நாளை விடுப்பு எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை


பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு ஊழியர்கள், நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிறுடன், ஆயுத பூஜை, விஜயதசமி மொகரம், பண்டிகை முன்னிட்டு, அரசுஊழியர்களுக்கு, இன்று வரைஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், அரசுஅலுவலகங்களில், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
எனவே, நாளையும், நாளைமறுநாளும், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த மாத இறுதியில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், அரசு நலத் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இம்மாதம், 17, 19ல், நடக்கவிருந்த தேர்தலுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டன. இதனால், திட்ட பணிகள் முழு வீச்சில் துவங்க உள்ளன.இந்த சூழலில், ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் என, தொடர்ந்து விடுமுறை இருந்ததால், பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
அவர்களில் பலர், வியாழன், வெள்ளியும் விடுப்பு எடுத்து கொள்வதாக, தொலைபேசியில் தெரிவிக்கின்றனர்.ஏற்கனவே, காலி பணியிடங்களால், ஒருவரேபலரது வேலையை செய்யவேண்டியுள்ளது. வியாழன், வெள்ளி விடுப்பு எடுத்தால், அரசு உதவியை எதிர்பார்த்து, அலுவலகம் வரும் மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, இரு நாட்களும் விடுப்பு எடுக்கக்கூடாது; கண்டிப்பாக அலுவலகம் வர வேண்டும் என, ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Sunday, 9 October 2016

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!

குழந்தைகளின் கையெழுத்தை அழகாக்க 7 டிப்ஸ்!!


"என் பையன் நல்லா படிக்கிறான்; படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான், ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியலை"னு புலம்பும் பெற்றோரா நீங்கள்?.உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம் நீங்களே மாற்றியமைக்க எளிமையான டிப்ஸ் இதோ.




குழந்தை எழுதுவது அழகாக இல்லை என்றவுடன் இரட்டைக் கோடு, நாலு கோடுகள் உள்ள நோட்டுகளை வாங்கி தந்து, அதிக நேரம் எழுத சொல்லி வற்புறுத்தாதீர்கள், இதனால் அவர்களுக்கு எழுதுவதன் மீது வெறுப்புதான் உண்டாகும்.குழந்தையின் கையெழுத்தை அழகாக மாற்ற வேண்டுமானால், முதலில் fine Motor skill என்ற கைகளின் தசைகளை வலுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி கை விரல்களுக்கு வேலைகள் கொடுக்க வேண்டும். இதனால் நரம்புகள் உறுதி அடைந்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.


1. உங்கள் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் கிடைக்கும் சைனா களிமண்ணை வாங்கி தந்து, பிசைந்து விளையாட வைப்பதும், சின்ன சின்ன உருவங்கள் செய்ய பழக்கப்படுத்தவும் செய்யுங்கள். இதனால் குழந்தையின் கைகள், தசைகள், கண்கள் என்று ஒரே நேரத்தில் பயிற்சி கிடைப்பதுடன், குழந்தையின் மனமும் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.


2. உங்கள் வீட்டில் இருக்கும் மைதா, சோளமாவு, கோதுமை மாவு இப்படி ஏதேனும் ஒரு மாவினை ஒரு பெரிய அகலமான தட்டில் வைத்து உங்கள் பிள்ளையை ஏதேனும் எழுதியோ, வரைந்தோ பழகச் சொல்லலாம். இதனால் குழந்தையின் கைகளுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.


3. சில்லறை காசுகளை எண்ணி, அவற்றை சிறுதுளையுள்ள உண்டியலில் போடச்சொல்லலாம். மேலும், பல்லாங்குழி போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட செய்யலாம். இதனால் குழந்தைகளின் நரம்புகள் வலுப்படும். இதனால் பென்சிலை வழுக்காமல் அவர்களால் பிடித்து எழுத விரல்கள் பழக்கப்படும்.


4. குழந்தைகள் விளையாட வைத்து இருக்கும் இடுக்கியால் பொருட்களை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நகர்த்தச் சொல்லுங்கள். இதனால் கைகளுக்கு பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்.


5. பேப்பர்களைக் கிழித்து பந்துகள் போல் உருட்டி விளையாடினால் தடைபோடாமல் அனுமதியுங்கள். இதனால் மொத்த கை நரம்புகளும் வலுப்படும்..


6. உல்லன் நூலைக் கொடுத்து அதில் மணிகள் சிறு பாசிகள் போன்றவற்றை கோர்க்கச் சொல்லலாம். கெட்டியான அட்டையில் சிறுதுளைகள் போட்டு அதில்நூலை கோர்க்கச் சொல்லி பழக்கப்படுத்தலாம்.


7. உங்கள் குழந்தைக்கு பிடித்த நிறத்தில் க்ரேயான்ஸ் அல்லது கலர் பென்சில்களைக் கொடுத்து முட்டைக்கூடு, காகிதக் கோப்பைகள் போன்றவற்றில் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லுங்கள்.


இப்படிச் செய்வதன்மூலம் அவர்களால் எழுத்துக்களை சீராக எழுத முடியும்.இதுபோன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தால் குழந்தையின் கையெழுத்து சரியில்லை என்று மதிப்பெண்கள் குறையாது!!

Saturday, 8 October 2016

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை


உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ என்ற அச்சம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.



 தமிழகம் முழுவதும், உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல் நடைபெறும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் பணி குறித்து, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.



கடந்த மாதம், பள்ளி காலாண்டு விடுமுறையின்போது, தேர்தல் பயிற்சி வகுப்புக்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன் காரணமாக, காலாண்டு விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்ட மிட்டிருந்தவர்களின் கனவு தகர்ந்தது. எனினும், தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, தேர்தல் பணிக்கு தயாராகினர்.


இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு செய்தது; இம்மனு மீதான விசாரணை, 18ம் தேதி நடைபெற உள்ளது.எனினும், குறித்த தேதியில் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.


உயர் நீதிமன்றம், டிச., 30க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று, தன் உத்தரவில் கூறியுள்ளது. அதன்படி, டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டால், அரையாண்டு தேர்வு விடுமுறையில், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல், ஆசிரியர்களுக்கு ஏற்படும். அரசு ஊழியர்களும், விடுமுறைக்கு வெளியூர் செல்ல இயலாது. இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை

அரையாண்டு விடுமுறையும் அம்போ? : ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கவலை


உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அரையாண்டு விடுமுறையும், தேர்தல் பணிக்காக பறிபோகுமோ என்ற அச்சம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ளது.



 தமிழகம் முழுவதும், உள்ளாட்சி தேர்தல், அக்., 17, 19ல் நடைபெறும் என, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. தேர்தல் பணியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேர்தல் பணி குறித்து, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.



கடந்த மாதம், பள்ளி காலாண்டு விடுமுறையின்போது, தேர்தல் பயிற்சி வகுப்புக்கு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். இதன் காரணமாக, காலாண்டு விடுமுறைக்கு, வெளியூர் செல்ல திட்ட மிட்டிருந்தவர்களின் கனவு தகர்ந்தது. எனினும், தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, தேர்தல் பணிக்கு தயாராகினர்.


இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து, மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு செய்தது; இம்மனு மீதான விசாரணை, 18ம் தேதி நடைபெற உள்ளது.எனினும், குறித்த தேதியில் தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது உறுதியாகவில்லை.


உயர் நீதிமன்றம், டிச., 30க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று, தன் உத்தரவில் கூறியுள்ளது. அதன்படி, டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டால், அரையாண்டு தேர்வு விடுமுறையில், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டிய சூழல், ஆசிரியர்களுக்கு ஏற்படும். அரசு ஊழியர்களும், விடுமுறைக்கு வெளியூர் செல்ல இயலாது. இதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தொடர் அரசு விடுமுறை : மின் ஊழியர்கள் 'அலர்ட்

தொடர் அரசு விடுமுறை : மின் ஊழியர்கள் 'அலர்ட்


சென்னை: ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக, அரசு விடுமுறை வருவதால், மின் வினியோக பணியில் கவனமாக இருக்கும்படி, ஊழியர்களை, மின் வாரியம், 'அலர்ட்' செய்துள்ளது.சென்னை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி தவிர்த்து, மற்ற மாவட்ட அரசு அலுவலகங்களுக்கு, இன்று முதல், 12ம் தேதி வரை விடுமுறை. பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கும், ஐந்து நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடுமுறை நாட்களில், மின் தேவை எப்போது அதிகரிக்கும் என்பதை கணிக்க முடியாது. ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், மின் தேவை வெகுவாகக் குறையலாம் அல்லது திடீரென அதிகரிக்கலாம். இதனால், 'லோ, ஹை வோல்டேஜ்' பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பிரிவு அலுவலகத்தினரும், மின் தடை நீக்கும் ஊழியர்களும், மின் வினியோகத்தில், கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Friday, 7 October 2016

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா? தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் ஊதியம்...கிடைக்குமா? தேர்தல் பணியை மேற்கொண்ட ஊழியர்கள் எதிர்பார்ப்பு


விருத்தாசலம்: உள்ளாட்சித் தேர்தலை ஐகோர்ட் ரத்து செய்துள்ளதால், கடந்த 26ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள், ஊதியம் கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர்.

சட்டசபை, லோக்சபா தேர்தல்களின்போது ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டை சரிபார்ப்பு, விரலில் மை வைப்பது போன்ற பணிகளிலும்; உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர், பஞ்., தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்களிடம் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது உள்ளிட்ட பணியிலும் கல்வித்துறை ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். அதன்படி, 17 மற்றும் 19ம் தேதிகளில் நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு, கடந்த மாதம் 26ம் தேதி முதல் 3ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இப்பணியில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு டி.இ.ஓ., மற்றும் உதவி செயற்பொறியாளர் கிரேடு அதிகாரிகள் வேட்புமனுக்கள் பெற்றனர். ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பஞ்., தலைவர் பதவிகளுக்கு ஏ.இ.ஓ., துணை பி.டி.ஓ.,க்கள்; வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆசிரியர்களும் வேட்பு மனுக்கள் பெற்றனர்.
வேட்பு மனுக்கள் பெற்று, 4ம் தேதி மனுக்கள் பரிசீலனையில் இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணம் ஆகியவற்றை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகங்களில் ஒப்படைக்கும் பணி, நேற்று (7ம் தேதி) நடந்தது.
பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பணித் தகுதி, ஊதியம் ஆகியவற்றுக்கு தகுந்தாற்போல், தேர்தல் கால பணி ஊதியம் (மதிப்பூதியம்) வழங்கப்படும். தற்போது, உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 26 முதல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு மதிப்பூதியம் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து கல்வித்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், 'உள்ளாட்சித் தேர்தலில் மனுக்கள் பெறுவது, பரிசீலனை, தள்ளுபடி, சின்னம் ஒதுக்குவது மட்டுமல்லாது தேர்தல் முடிந்து, பதவிப் பிரமாணம் செய்வது வரை தற்போது பணியில் ஈடுபடுவோரின் வேலையாகும்.
கடந்த 26 முதல் 4ம் தேதி வரை பணியில் ஈடுபட்டோம். முதல்பருவ (காலாண்டுத் தேர்வு) விடுமுறையில் தேர்தல் பணியில் ஈடுபட்டோம். அதில், 3 மற்றும் 4ம் தேதி பள்ளி வேலை நாட்கள்.நேற்று (7ம் தேதி) வேட்பாளர்களிடம் பெறப்பட்ட மனுக்கள், கட்டணத்தை அந்தந்த பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டியிருந்தது.
எனவே, 3, 4 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்கள் பள்ளி வேலை நாட்களாகும். இதன் மூலம், கடந்த 26ம் தேதி முதல் 7ம் தேதி வரை மொத்தம் 10 நாட்கள் பணிபுரிந்தோம். எங்களைப் போல, நகராட்சி, ஊரக வளர்ச்சி, வருவாய் மற்றும் வேளாண்துறை போன்ற துறை ஊழியர்களும் பணிபுரிந்துள்ளனர்.
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கான ஊதியம் கிடைக்குமா அல்லது மீண்டும் தேர்தல் நடக்கும்போது, இதற்கான ஊதியம் சேர்த்து வழங்கப்படுமா என தெரியவில்லை' என்றார்.

Epayslip வழங்கப்படுமா? - முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

Epayslip வழங்கப்படுமா? - முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு


THANKS : MR.JAYAPRAKASH
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப்படுத்தாமல் உள்ள DDOக்கள் (ஊதியம் வழங்கும் அலுவலர்கள்), இனி மேலாவது
நடைமுறைப்படுத்துவார்களா????????

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை அருகிலுள்ள சட்டையம்பட்டி
கிராமத்தை சேர்ந்த A.அமிர்தவள்ளி க/பெ ஜெயப்பிரகாஷ் என்பவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள -epayslip- திட்டத்தை, நடைமுறைப் படுத்தாமல் உள்ள
DDOக்களுக்கு, நடைமுறைப்படுத்த உத்திரவிட வேண்டி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு (TN CM SPECIAL CELL) அனுப்பிய கோரிக்கையின் விவரம் பின்வருமாறு:
அரசு ஊழியர்கள் சங்கமும், ஆசிரியர்கள் சங்கமும் ஊதியம் வழங்கும் அலுவலர்களை (DDO) வலியுறுத்தவில்லை என்பதும் உண்மை. கோரிக்கையின் விவரம் பின்வருமாறு:
மாண்புமிகு முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்!
தமிழகத்தின் முதல்வரான மாண்புமிகு அம்மா அவர்களின் கடந்த 5 ஆண்டு ஆட்சியில் டிசம்பர்-15ல் அவர்கள் இட்ட உத்தரவின் பேரில் கருவூலம் & கணக்குகள் துறையானது அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களின் மாதாந்திர ஊதிய விவரத்தை இருக்குமிடத்திலிருந்து இணையதளம் மூலம் அறிந்து கொள்ள வசதியாக http://epayroll.tn.gov.in/epayslip/ என்ற இணையதளத்தை அறிமுகம் செய்தது. இந்த தளத்தில் அரசு ஊழியர் ஒருவரின் Employee Code & Date of Birth உள்ளீடு செய்தால் அவரின் ஊதிய விவர பக்கம் open ஆகும். அதில் PaySlip , Annual Income Statement, Pay Drawn Particulars என காட்டும்.
இதிலுள்ள 2&3ல் மாதாந்திர ஊதியம்,அரசு பிடித்தங்கள் மட்டும் எவ்வளவு என்பதை ஒரு ஆன்டிற்கு தொகுத்து வழங்குகிறது.இதில் முக்கியமானது PaySlip. அதில் தான் அனைத்து பிடித்தங்களின் (சொசைட்டி தொகை உள்பட)
விவரங்களும்,அது போக வழங்கப்பட்ட சம்பளத்தின் விவரம் இருக்கும். இந்த
PaySlip திட்டமானது இந்தியாவிலே இராணுவத் துறைக்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை நமது மாநில அரசு, ஊழியர்களின் நலன் கருதி
நடைமுறைப்படுத்தியுள்ளது.இந்த மகத்தான திட்டமானது தமிழக
அதிகாரிகளின் அலட்சியத்தால்முடங்கியுள்ளது.அதாவது PaySlip டவுன்லோடு
செய்ய அந்தந்த DDOக்கள், கருவூலம் வழங்கும் டோக்கன் நெம்பரை மாதந்தோறும் UPDATE செய்ய வேண்டும்.அப்படி செய்தால் அவரின் PAY DETAILSஐ ஒரு நிமிடத்தில் அறிந்து கொள்ளலாம்.

Thursday, 6 October 2016

தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்

தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்


சென்னை: உள்ளாட்சி தேர்தல் பணிகளை, தற்காலிமாக நிறுத்தி வைக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், உள்ளாட்சி பதவிகளுக்கு, வரும், 17, 19ம் தேதிகளில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், அதற்கு தடை போட்டு விட்டது; டிச., 31க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தி உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து,
மாநில தேர்தல் கமிஷன், மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, கலெக்டர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 'மறு உத்தரவு வரும் வரை, தேர்தல் பணிகளை தொடர வேண்டாம்' என, மாநில தேர்தல் கமிஷனர், சீதாராமன்
அறிவுறுத்தி உள்ளார்.

Thursday, 29 September 2016

ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்

ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர்


மாணவர்களுடன் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.
 மாணவர்களுடன் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.

சர்வதேசப் பள்ளி என்ற அங்கீகாரத்தில் கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு ஆரம்பப் பள்ளி கம்பீரத்துடன் இயங்கி வருகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, கராத்தே, யோகா, ஓவியம், இசை, நடனம், பாட்டு ஆகிய பயிற்சிகள் இங்கு இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.


ஊர் மக்களின் ஆதரவோடு சுமார் ரூ.40 லட்சம் திரட்டப்பட்டு பள்ளிக்கு தேவையான சுற்றுச்சுவர், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள், தண்ணீர்க்குழாய்கள், கழிப்பறை, நூலகம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளால் பள்ளிக்கு, சர்வதேச தரச்சான்று ISO 9001:2015 கிடைத்துள்ளது. இவை அனைத்துக்கும் பின்னால் அமைதியாக, அதேசமயத்தில் ஆற்றலுடன் இயங்கி வருகிறார் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்.

Wednesday, 28 September 2016

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்

'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கைவிரித்தது ஆணையம்


சிவகங்கை: 'புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் குறித்த விபரம் எங்களுக்கு தெரியாது' என, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையம் (பி.எப்.ஆர்.டி.ஏ.,) கைவிரித்துள்ளது.


மத்திய அரசு செயல்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மற்ற மாநில அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர். இத்திட்டத்தில் 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர்கள், ஐந்து லட்சத்து ௪,௦௧௯ பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர்.
இவர்களிடம் இருந்து சந்தா தொகையாக (அரசு பங்கு உட்பட) ஒரு லட்சத்து 38
ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத் தொகை என 8,600 கோடி ரூபாயை ஆணையத்தில் செலுத்தவில்லை. இதனால் பணியின் போது இறந்தோரின் குடும்பம், ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இந்நிலையில் தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து வருகிறது.புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களில், பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டுமே நுாறு சதவீத பணப்பலன் தரப்படும். ஓய்வு பெறுவோர் 60 சதவீத பணப்பலன் மட்டுமே பெற முடியும்; மீத தொகை, ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
இதில் அதிகபட்சம் 7.5 சதவீத வட்டி மட்டுமே தரப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் கூட ஓய்வூதியம் கிடைக்கவில்லை; மற்ற மாநில அரசு ஊழியர்களுக்கும் இதேநிலை தான். ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர் பிரடரிக் ஏங்கல்ஸ் தகவல் உரிமைச் சட்டத்தில் விபரம் பெற்றுள்ளார். அதில், '2016 ஆக.,16 வரை தமிழகத்தைச் சேர்ந்த 390 மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். 38 பேர் பணியில் இறந்துள்ளனர். இறந்தோர் குடும்பத்திற்கு (நுாறு சதவீதம்), ஓய்வுப் பெற்றோருக்கு (60 சதவீதம்) பணப்பலனாக மொத்தம் 4.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.ஓய்வூதியத்திற்காக அரசு, தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை குறித்த விபரம் இல்லை' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'ஆணைய நிர்வாக செலவு, பணியாளர்களுக்கான சம்பளம் ஆகியவை அரசு ஊழியர்களிடம் பிடிக்கப்படும் தொகையில் கிடைக்கும் கமிஷன் மூலமே செலவழிக்கப்படுகிறது. 2005--06 முதல் 2015--16 வரை 151.33 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என தகவல் தரப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் கூறியதாவது: 10 ஆண்டுகள் பணிபுரிந்து (அதிகபட்ச சம்பளம் 30 ஆயிரம் ரூபாய்) சமீபத்தில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு, 810 ரூபாய் தான் ஓய்வூதியம் கிடைக்கிறது. மேலும், ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால், 40 சதவீத தொகையையும் திருப்பி தருவதில்லை. வங்கியில் டிபாசிட் செய்தால் கூட மூத்த குடிமகனுக்கு 9.5 சதவீதம் வட்டியும், இறந்த பின் டிபாசிட் தொகையும் தரப்படுகிறது; கடனும் பெற்று கொள்ளலாம். ஆனால், எங்களுக்கு எதுவும் இல்லை. ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஓய்வு பெறும்போது நுாறு சதவீத பணப்பலனும் திருப்பி தர வேண்டும், என்றனர்.

Tuesday, 27 September 2016

கல்விக்கடனில் இந்தியாவிலேயே தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!

கல்விக்கடனில் இந்தியாவிலேயே தமிழகம்தான் ஃபர்ஸ்ட்!





இந்தியாவில் கல்விக்காக  கடன்பட்டு இருக்கும்  மாநிலத்தில்  தமிழகம்  முதல் இடத்தில்  உள்ளது. இந்தியாவில் மொத்த கடனில்  21சதவிகிதம் தமிழகத்தில்  வாங்கபட்டு உள்ளது  என்று மாநிலங்கள் அவையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனது தேர்தல் வாக்குறுதியில்த வறாமல் குறிப்பிட்டு இருந்த ஒன்று கல்வி கடன் ரத்து. இதற்கு கட்சிகள் அளிக்கும் முக்கியத்துவம் மூலமே தெரிந்து கொள்ளலாம், தமிழகத்தில் எவ்வளவு பேர் கடன் பெற்றுள்ளனர் என்று. கல்விக்கான கட்டணங்கள் அதிகரித்து உள்ள சூழலில் வங்கிகளில் கடன் பெற்று மட்டுமே படிக்க வேண்டி கட்டாயத்தில் தமிழகம் இருக்கிறது.

இந்தியாவில் பொது துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் ,மூலம் கல்விக்காக 2013 முதல் 2016 வரை 25736 கோடி ரூபாய் கடன் வழங்க பட்டு உள்ளது. 21,79 லட்சம் பேர் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். இந்த கடன்கள் 92% பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. தனியார் வங்கிகள் மூலம் ரூ 2009 கோடி ரூபாய் வழங்கப்பட்டு 2.36 லட்சம் பேர் கல்விக் கடன்கள் பெற்றுள்ளனர் . இந்த வங்கிகள் கொடுத்த மொத்த கடன் தொகையில் 21% தமிழ்நாட்டில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


கடன் அதிகரிப்பும் பயனாளிகள் குறைவும்
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்ட கல்விக் கடன் தொகை அதிகரித்து வரும் வேலையில் பயனாளர்களின் எண்ணிக்கையை குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2014ல் 7060 கோடியாக இருந்த தொகை 2016ல் 9049 கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால் பயனாளிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் கடந்த ஆண்டை விட குறைத்து உள்ளனர். அதே நேரத்தில் தனியார் வங்கிகளில் கடன் பெறுபவர்கள் கடந்த ஆண்டை விட 30 ஆயிரம் பேர் அதிகரித்து உள்ளனர். இதன் பின்னணியில் பொறியியல் கல்லுரிகளின் சேர்க்கை முக்கிய பங்குவகிக்கிறது . இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்காக மொத்தமுள்ள ஒரு லட்சத்து 92 ஆயிரம் இடங்களில் 84 ஆயிரத்து 352 இடங்களே நிரம்பியுள்ளன. , ஏறத்தாழ 44 சதவீத இடங்களே மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும் கடன்களுக்கான விதிமுறைகளை பொது துறை வங்கிகள் கடினம் ஆக்கி விட்டதும் பயனாளர்கள் குறைவதுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு கல்விக் கடன்
பொதுத்துறை வங்கிகள் 2013முதல் 2016 வரை இந்தியா முழுவதும் கொடுத்துள்ள கல்விக் கடன்களில் அதிக கடன் வாங்கிய மாநிலத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. மொத்த கடன் தொகையில் 20.8% தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதே போல் தனியார் வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகையில் 24.8% பெறப்பட்டு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திலும் உள்ளது .தமிழகத்தில் கல்வி கடன் அதிகம் வாங்கப்படுவதற்கு கல்லூரிகளின் கட்டணம் தான் காரணம். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண ஒழுங்குமுறை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . இந்தக் குழு தனியார் கல்வி நிறுவனங்களில் வசூலிக்கக்கூடிய அதிகபட்ச கட்டணம் எந்த அளவுக்கு இருக்கலாம்

Monday, 26 September 2016

OCTOBER -2016 : DIARY

OCTOBER -2016 : DIARY


*OCTOBER -2016 : DIARY*
 03-10-2016 RH - *Hijri new year*
 08-10-2016: Saturday -
 09-10-2016 : Sunday -
 10-10-2016 : GH - Monday - *Ayutha Pooja*
 11-10-2016 : GH - Tuesday - *Vijaya Dhasami*

 12-10-2016 : GH - Wednesday - *Muharam*
 15.10.16 *Primary CRC*
 16-10-2016 : Sunday -
 22.10.16: *Upper primary CRC*
 23-10-2016 : Sunday - Holiday
 28.9.2016 RH - *Deepavali nonbu*
 29-10-2016 : Saturday - *Deepavali*
 30-10-2016 : Sunday - Holiday

Friday, 23 September 2016

ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா :

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3ம் நாளாக கருத்துக்கேட்பு


ஓய்வூதிய திட்டம் குறித்து முடிவு எடுப்பதற்காக, அரசு அமைத்துள்ள நிபுணர் குழு, மூன்றாவது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களிடம் கருத்து கேட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம், 2003 ஏப்., 1ல், அமல்படுத்தப்பட்டது. இதற்கு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என, அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தர, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையிலான நிபுணர் குழுவை, தமிழக அரசு அமைத்தது. இக்குழு, தலைமைச் செயலகத்தில், இம்மாதம், 15, 16ல், கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. நேற்று மூன்றாவது நாளாக, கருத்து கேட்பு கூட்டம் தொடர்ந்தது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, ஜாக்டா, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர்கள் சங்கம் உட்பட, பல சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி, நிபுணர் குழுவிடம் மனுவும் அளித்தனர்.
இது குறித்து, ஜாக்டா ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறியதாவது:
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்த பின், இதுவரை, ஓய்வூதியம் வழங்க விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்திற்கும் உத்தரவாதம் இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மன உளைச்சல் இன்றி வாழ, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த, அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, மனு கொடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, 21 September 2016

நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' :தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை

50 நாட்களில் 6 ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்' :தொடக்க கல்வி அலுவலர் நடவடிக்கை


           தேனி மாவட்டதொடக்க கல்வி அலுவலர் மொக்கத்துரை, தான் பொறுப்பேற்ற, 50 நாட்களில் புகாரில் சிக்கிய, ஆறு ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். மேலும் பலருக்கு 'மெமோ' வழங்கியுள்ள இவரின் நடவடிக்கையால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.


          தேனி மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக மொக்கத்துரை ஆக., 2ல் பொறுப்பேற்றார். பள்ளிகளுக்கு திடீர்,'விசிட்' செய்வது; ஆசிரியர்கள் குறித்து வரும் புகார்கள் மீது விசாரித்து, 'மெமோ' கொடுப்பது; பாலியல் புகாருக்கு உட்பட்டவர்களை உடனே, 'சஸ்பெண்ட்' செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.


உரிய நேரத்தில் பள்ளிக்கு வராத மேலப்பட்டி ஆசிரியர் ராஜேந்திரன், ஆண்டிபட்டி குமரகுருபரன், கம்பத்தை சேர்ந்த ராஜன்; பாலியல் புகாரில், ஜி.கல்லுப்பட்டி லாசர், கடமலைக்குண்டு கோகுல்பாண்டியன் மற்றும் ரவீந்திரன் என, ஆறு ஆசிரியர்கள் இவரால்,'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக, 13 ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' அனுப்பி உள்ளார்.

Saturday, 17 September 2016

காவிரி பிரச்னை தொடர்பாக, நேற்று நடந்த முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு, சில தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்;

காவிரி பிரச்னை தொடர்பாக, நேற்று நடந்த முழு கடை அடைப்பு போராட்டத்திற்கு, சில தனியார் பள்ளிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்;
 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். அதனால், சேலம், நாமக்கல், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாகை போன்ற சில மாவட்டங்களில், தனியார் நர்சரி பள்ளிகள் செயல்படவில்லை.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற முக்கிய மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளி, கல்லுாரிகள் வழக்கம் போல் இயங்கின. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்புக்கான காலாண்டு தேர்வு நடந்ததால், மெட்ரிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும், அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கின. இந்நிலையில், தன்னிச்சையாக, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த பள்ளி நிர்வாகத்தினருக்கும், சங்கத்தினருக்கும் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது

Friday, 16 September 2016

ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'

ஆதார் எண் பதிவுக்கு செப். 20 வரை 'கெடு'


அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும், 20ம் தேதிக்குள், மாணவர்களின், 'ஆதார்' எண் பட்டியலை வழங்குமாறு, பள்ளிக்கல்வித் துறை, 'கெடு' விதித்துள்ளது. தமிழகத்தில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2
வரையிலான மாணவர்களின் பெயர் மற்றும் விபரங்கள், 'ஆன்லைன்' முறையில், 'எமிஸ்' என்ற மின்னணு ஆளுமை திட்டத்தில் இணைக்கப்படுகிறது; இதில் மாணவர்களுக்கு தனியாக, ஒரு அடையாள எண் வழங்கப்படும். இந்த பதிவுக்கு, ஒவ்வொரு மாணவருக்கும், ஆதார் எண் மிகவும் அவசியம்.ஆனால், தமிழகத்தில் படிக்கும், 1.25 கோடி மாணவர்களில், இன்னும், 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, ஆதார் எண் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், எமிஸ் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், செப்., 20க்குள் பதிவு செய்து, அதன் பட்டியலை அனுப்புமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்

Thursday, 15 September 2016

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா?: தலைமைச் செயலகத்தில் இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்


அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.


         தலைமைச் செயலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது, அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதியதாக குழு: தமிழக அரசு அமைத்துள்ள குழுவின் தலைவராக, முதல்வர் அலுவலக சிறப்புப் பணி அலுவலர் சாந்தா ஷீலா நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், சென்னை பொருளாதார பள்ளியின் பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோரும், குழுவின் உறுப்பினர் செயலாளராக திட்டம்-வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணனும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், பேராசிரியர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர் குழுவில் தாங்கள் தொடர முடியாது என அரசுக்குத் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை பொருளாதார பள்ளியின் மற்றொரு பேராசிரியரான டாக்டர் பிரிஜேஷ் சி.புரோகித் நியமிக்கப்பட்டார்.
முதல் கூட்டம்: தமிழக அரசின் வல்லுநர் குழு புதிதாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அந்தக் குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை (செப். 15) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
இதுதொடர்பாக, வல்லுநர் குழுவின் உறுப்பினர் செயலாளரும், முதன்மைச் செயலாளருமான எஸ்.கிருஷ்ணன் சார்பில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
வல்லுநர் குழுவின் கூட்டம் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தங்களது கருத்துகளை அரசு ஊழியர்கள் சங்கங்கள் தெரிவிக்கலாம். இதற்காக, சங்கத்தின் 3 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மேலும், கருத்துக் கேட்பு கூட்டத்தின் போது நேரத்தை சிறப்பான முறையிலும், உரிய வகையிலும் பயன்படுத்த ஏதுவாக எழுத்துப்பூர்வமாகவும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று தனது கடிதத்தில் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

Wednesday, 14 September 2016

உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., 16ல் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., 16ல் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., 16ல் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் தேதி செப்., 16ல் அறிவிப்பு?


உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிப்பு, வரும், 16ம் தேதி வெளியாகலாம் என,


எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம், அடுத்த மாதம் நிறைவு பெறுகிறது. சமீபத்தில், மாநில தேர்தல் ஆணையம், 'அக்., 24ம் தேதிக்குள், உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.


அதன்படி, அடுத்த மாதம், உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. சென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள், எவ்வாறு நடைபெறுகின்றன என, மாநில தேர்தல் ஆணையர், ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்திஉள்ளார். இப்பணிகள் முடிவடைந்த நிலையில், தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, அரசியல் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில் வரும், 16 முதல், விருப்ப மனு வாங்கப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது; அன்று பவுர்ணமி. மேலும், 17ம் தேதி, புரட்டாசி பிறக்கிறது. எனவே, 16ம் தேதி, உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, 13 September 2016

கணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி

கணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி


மதுரை: தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பு; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை எழுதுகின்றனர். பாடங்கள் வாரியாக கணக்கிடும்போது, விடைத்தாள்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கின்றன. இவற்றை திருத்தி மதிப்பிட, பத்தாம் வகுப்பிற்கு, 50 ஆயிரம்; பிளஸ் 2 விற்கு, 20 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை. மறுகூட்டலில், பெரிய அளவில் மதிப்பெண் வித்தியாசம், விடைத்தாளின், ஒரு பக்கத்தையே திருத்தாமல் விடுவது போன்ற பிரச்னைகள் ஆண்டுதோறும் சர்ச்சையை ஏற்படுத்துகின்றன. இதை தவிர்க்க, விடைத்தாள் திருத்தும் பணியை, கணினி மயமாக்குவது குறித்து தேர்வுத் துறை பரிசீலித்து வருகிறது.


இதுகுறித்து, தேர்வுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதற்கட்டமாக, பத்தாம் வகுப்பு விடைத்தாளை மட்டும் புதிய நடைமுறையில் திருத்த ஆலோசிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் விடைத்தாள் இம்முறையில் தான் திருத்தப்படுகிறது. இதன்படி, வினாத்தாள் பக்கம் வாரியாக, 'ஸ்கேன்' செய்யப்பட்டு, தனி, 'போல்டர்' ஏற்படுத்தப்படும். திருத்தும் ஆசிரியர்களுக்கு பிரத்யேக, 'யூசர்நேம், பாஸ்வேர்டு' வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்தபடியே மதிப்பீடு செய்யலாம். அதற்கான, 'ஆன்சர் கீ' யும், 'அப்லோடு' செய்யப்படும்.இப்பணிக்கு, குறைந்த எண்ணிக்கையில் தான் ஆசிரியர் தேவை இருக்கும். வீட்டில் இருந்தே, கணினி மூலம் மதிப்பீடு செய்யலாம். இதற்கு ஏற்ப, வினாத்தாள் மற்றும் வினாக்களில் சில மாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், மதிப்பீடு துல்லியமாக இருக்கும். மறுகூட்டலில் மதிப்பெண் வித்தியாசம் போன்ற பிரச்னை ஏற்பாடாது. விடைத்தாள் தேவைப்படும் மாணவர் களுக்கு, 'ஆன்லைன்' மூலமே விடைத்தாள் பக்கங்களை அனுப்பி வைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.

பல்கலைகளில் பேராசிரியர் தேர்வு : திடீர் ரத்தால் பட்டதாரிகள் அதிர்ச்சி.


கோவை பாரதியார், நெல்லை மனோன்மணியம் பல்கலைகளில், நேற்று நடக்க இருந்த பேராசிரியர் நியமன தேர்வு, திடீரென ரத்து செய்யப்பட்டதால், பட்டதாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நேர்முகத் தேர்வு :
கோவை பாரதியார் பல்கலையில் காலியாக உள்ள, 72 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் இடங்களையும், 20 ஆசிரியர் இல்லாத பணி இடங்களையும் நிரப்ப, ஆக., மாதம் அறிவிப்பு வெளியானது.நெல்லை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையிலும், 54 உதவிப் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பும் அறிவிப்பும் வெளியானது. இந்த பணிகளுக்கு, 'நெட், செட்' தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, பல ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
நேற்று, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது. பல ஆயிரம் பேர், இரண்டு பல்கலைகளுக்கும் விரைந்தனர்; நேர்முகத்தேர்வு நடக்காததால், கடும் அதிருப்தி அடைந்தனர். இரண்டு பல்கலைகளும், 'தவிர்க்க இயலாத காரணங்களால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது; புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என, விண்ணப்பதார்களுக்கு, நேற்று முன்தினம் இரவு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பின.நெல்லை மனோன்மணியம் பல்கலையில், நேர்முகத் தேர்வு குழுவில் இடம்பெற்ற உறுப்பினர் வர முடியாததாலும்; நேர்முகத் தேர்வுக்கான அரசு தரப்பு உறுப்பினர் நியமிக்காததானாலும், பாரதியார் பல்கலையில், தேர்வு ரத்து செய்யப் பட்டதாக கூறப்படுகிறது.
பிரச்னை வராமல் : இந்த பதவிகளுக்கு, இடைத்தரகர்கள் நடத்திய பேரம் காரணமாகவே, நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாக, உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயர் கல்வியில், பல பதவிகள் நியமனத்தில் ஏற்கனவே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும்பிரச்னை வராமல் இருக்கவே நேர்முகத்தேர்வு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Monday, 12 September 2016

வேலைவாய்ப்பைக் கொட்டிக் குவிக்கும் நிதித்துறை படிப்பு!

வேலைவாய்ப்பைக் கொட்டிக் குவிக்கும் நிதித்துறை படிப்பு!


காப்பீட்டு கணிப்பு அறிவியல் (Actuarial Science), பலரும் பரவலாக அறியாத, ஆனால் எக்கச்சக்க டிமாண்ட் உள்ள கோர்ஸ். இத்துறை குறித்த தகவல்களைப் பகிர்கிறார் திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் காப்பீட்டு கணிப்பு அறிவியல் துறைத் தலைவர் முனைவர் மாரியப்பன்.'click here more details ...

Saturday, 10 September 2016

2 கல்வி அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்

2 கல்வி அதிகாரிகளின் இடமாறுதல் உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்


போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து கல்வித் துறை அதிகாரிகள் இருவரை இடமாறுதல் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஆர்.கணேசன், கல்வி அதிகாரி யு.ராஜன் ஆகிய 2 பேரையும் பணியிட மாறுதல் செய்து மே மாதத்தில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு, லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரகம் எனும் பெயரில் வந்த கடிதத்தின்பெயரில் பிறப்பித்த இடமாறுதல் உத்தரவு சட்ட விரோதமானது. ஆகவே, இதை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரியிருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.ராஜேந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.ஆனந்தி, "குற்றச்சாட்டு கடிதம் மனுதாரர்களுக்கு வரவில்லை. பார்க்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து கூட விசாரிக்காமல், இருவரையும் இடமாறுதல் செய்துள்ளனர்' என்றார்.
இதையடுத்து, கூடுதல் அரசு வழக்குரைஞர், "இதுபோல் எந்தவொரு கடிதத்தையும் லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பவில்லை' என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:-
புகார் கடிதம் வந்தால், உண்மைத் தன்மையைக் கூட ஆராயாமல், குறைந்தபட்சம் விசாரணையும் நடத்தாமல் இடமாறுதல் செய்திருப்பது சட்டப்படி தவறு. போலி கடிதத்தை ஆதாரமாக வைத்து இடமாறுதல் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருவரும் விடுப்பில் இருந்த நாள்களையும் பணியில் இருந்ததாகக் கருதி அதற்கான பலன்களை வழங்க வேண்டும். போலி கடிதம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சட்டத்துக்குள்பட்டு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.

Thursday, 8 September 2016

ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல் !

ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல் !


அறிந்து கொள்வோம்
 ஆதார் அட்டை பற்றி மிக முக்கிய தகவல் !
ஆதார் அட்டை பற்றி சில தகவல்கள்.
1.ஆதார் அட்டை என்னிடம் இல்லை. அதனை நான் பதிவு செய்வது எப்படி?
   இந்திய பதிவாளர் ஜெனரல் அவர்கள், மக்கள்தொகை கணக்கெடுப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
முகவரி:
The Director,Directorate of Cencus Operations, Tamilnadu,E-Wing, Third Floor, Rajaji Bhavan,Besant nagar,Chennai-600 090,Phone:91-44-24912993.Mail: dco-tam.rgi@nic.in
 2. ஆதார் அட்டைக்கு பதிவு செய்து, அது கிடைக்கப் பெறாமல் இருந்தால், அவற்றின் விபரங்களை எப்படி அறிவது?*
SMS ல் UID STATUS <14 digit EID> என டைப் செய்து 51969 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.*இலவச அழைப்பு எண்: 1800 300 1947 மூலம் போன் செய்யவும்.
 *https://resident.uidai.net.in/check-aadhaar-statusஇணைய தளத்தில் பெறலாம்.*
3. தொலைக்கப்பட்ட ஆதார் அட்டையை திரும்பப் பெறுவது எப்படி?
http://eaadhaar.uidai.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
4. தொலைக்கப்பட்ட ஆதார் பதிவுச்சீட்டு (Enrolment Slip)பெறுவது எப்படி?
ஆதார் இணையதளமானhttps://resident.uidai.net.inஉள் செல்லவும்.
பின்னர் "find UID/EID" என்பதினை அழுத்தவும்.
ஆதார் பதிவின்போது அளிக்கப்பட்ட பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து OTP (ஒரு முறை குறியீட்டு எண்) பெறவும். பெறப்பட்ட OTP எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யவும். பதிவான ஆதார் எண் / பதிவு எண்ணினை உங்கள் கைபேசியில் காணலாம்.
5. ஆதார் விவரங்களை திருத்தம் செய்வது (Updation) எப்படி?பெயர், விலாசம், பிறந்த தேதி மற்றும் கைபேசி எண்ணை திருத்தம் செய்ய ,*
இணையதளமானhttps://resident.uidai.net.inஉள்சென்று செய்யலாம்.*
விண்ணப்பம் எழுதி அதனுடன், அதனை சார்ந்த அடையாள ஆவணத்தை கீழ்கணட UIDAI மண்டல அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பலாம்.
முகவரி:UIDAI,Post box No.:10,Chhindwara,Mathya Pradesh-480 001,INDIA .அல்லதுUIDAIPost Box No:99Banjara Hills,Hyderabad - 500 034,INDIA.மறக்காமல் அனைத்து ஆவணங்களிலும் தங்களது சுய கையொப்பம் இட்டு அனுப்பவும்.

NHIS I D CARD

Wednesday, 7 September 2016

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம்.

பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம்.


பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மத்திய கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு தேர்வுகளை தமிழில் எழுதலாம் என்று தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவன தலைவர்சி.பி.சர்மா தெரிவித்தார்.
திறந்தநிலை பள்ளி
   தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சி.பி.சர்மா, சென்னை மண்டல இயக்குனர் பி.ரவி ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய கல்வி வாரியமான தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் சார்பில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. 14 வயது பூர்த்தியானவர்கள் வயது உச்சவரம்பின்றி யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து படிக்கலாம். விளையாட்டு, இசை, கலைத்துறையில் இருப்பவர்கள் தங்களது துறைகளில் கவனம் செலுத்துவதால் பள்ளி படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது.இதுபோன்று பள்ளி படிப்பை இடையில் நிறுத்தியவர்கள், பணிச்சூழல் காரணமாக பள்ளிகளுக்கு செல்ல முடியாதவர்கள் எங்களது கல்வி வாரியம் மூலம் பயனடைந்து வருகிறார்கள். தமிழக மாணவர்களின் தேவையை கருத்தில்கொண்டு 26 வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் 11 பாடங்களை தமிழில் மொழியாக்கம் செய்துள்ளது.
தமிழில் தேர்வு எழுதலாம்
 இதன்படி கணிதம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூகஅறிவியல், பொருளாதாரம், வர்த்தக பாடங்கள், மனையியல், உளவியல், இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியம், கணக்குப்பதிவியல், ஓவியம் தீட்டுதல் மற்றும் தகவல் பதிவியல் ஆகிய 11 பாடங்களை வருகிற கல்வி ஆண்டு முதல் தமிழில் எழுதலாம். இதில் ஏதேனும் 4 பாடங்களுடன், ஒன்றுஅல்லது 2 மொழிப்பாடங்களிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 10-ம் வகுப்பு சான்றிதழ் வழங்கப்படும்.இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து 12-ம் வகுப்பு பாடங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்படும். தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு படிக்க விரும்புபவர்கள் www.nios.ac.in என்ற இணையதளத்தில்பதிவு செய்யலாம். ஒரு முறை கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் அவர்கள் 5 ஆண்டுகளில் தேர்ச்சி பெறும் வரையிலும் தேர்வுகள் எழுதலாம்.
ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு
 இதேபோல ஐ.டி.ஐ. படித்த மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்களுடன், விரும்பிய 2 பாடங்களிலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்பு அல்லது 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும். இதன்மூலம் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு தற்போது உயர்கல்வி பெறும் வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.12-ம் வகுப்பு நிறைவு செய்யாத ராணுவ வீரர்களுக்காக 3 பாடப்பிரிவுகள் தொடங்கியுள் ளோம். ராணுவ வீரர்களுக்கு அவர்கள் பணி செய்யும் இடத்தின் அருகாமையிலேயே வகுப்புகள் நடத்தப்படும்.
தமிழக அரசுக்கு கோரிக்கை
 சென்னையில் 20 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 108 மையங்கள் உள்ளன. எங்கள் நிறுவனத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்கள் உயர் படிப்புகளில் சேர்க்க மறுக்கின்றனர். கல்வி நிறுவனங்கள் எங்களது சான்றிதழ்களை அங்கீகரிக்க தமிழகஅரசு உத்தரவிட வேண்டும். செவித்திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பதில்கள் குரல் பதிவு மூலமாக பதிவு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை

கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை


தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில் 'ஆசிரியர் சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவது குறித்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
   கல்வித்துறையில், ஒரு மாதமாக நடந்த பொது மாறுதல் மற்றும் பதவிஉயர்வு கலந்தாய்வில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயனடைந்தனர்.இதனால் கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம்,சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பின. பாட வாரியாக 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 'சர்பிளஸ்' ஆகவும் உள்ளனர்.
பணியிடங்கள் காலி
 ஆனால், வடக்கில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலுார், நாகபட்டினம், நீலகிரி, வேலுார், விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் பாடம்வாரியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்பணியிடங்கள் காலியாக உள்ளன.நேற்று நடந்த இடைநிலை ஆசிரியருக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்விற்கு முன் உள்ள நிலவரப்படி தமிழ்- 155,ஆங்கிலம்- 75, கணிதம்- 140, அறிவியல்- 263, சமூக அறிவியல்- 469 என வட மாவட்டங்களில் 1,102ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. பதவிஉயர்வில்ஒருசில இடம் நிரம்பினாலும், ஆயிரத்திற்கும் மேல் இடங்கள் காலியாக நீடிக்கவே வாய்ப்பு உள்ளது.
சங்கங்கள் எதிர்ப்பு
 இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை, நீலகிரி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகபட்ச காலியிடங்கள் உள்ளன.காரணம் என்ன: வடமாவட்டங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பெரும்பாலும், தென் மாவட்டங்களை சேர்ந்தவராக உள்ளனர். கலந்தாய்வில் சொந்த மாவட்டத்தில் காலியிடம் இல்லாதபட்சத்தில், அருகாமை மாவட்டத்தை தேர்வு செய்தனர். முதல்முறையாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பணியிடங்களும் இந்தாண்டு நிரம்பின.மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், துாத்துக்குடி, நெல்லையில் இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை காலியிடம் ஏற்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சங்கங்கள் எதிர்ப்புகாரணமாக 'சர்பிளஸ்' ஆசிரியருக்கான, மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலும் நடத்தாததால் இந்நிலை ஏற்பட்டது.தற்போது இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றால், ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,) நடத்த வேண்டும். ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளாக இத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Tuesday, 6 September 2016

HOW TO GET VOTER ID

HOW TO GET VOTER ID THROUGH ONLINE


*வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*
📫 _ஆன் லைனில் அனைத்தும்_
👉🏼 http://www.elections.tn.gov.in/
 *புதிதாக வாக்களர் அட்டை பெற*
👉🏼 http://104.211.231.134/ereg/
 *வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx
   *வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx
 *உங்கள் போன் நம்பரை இனைத்திட*
👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna
*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*
👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx
 *உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*
👉🏼 http://104.211.231.197/electoralservices/
👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.

Monday, 5 September 2016

கல்வித்தரத்தை உயர்த்த காத்திருக்கும் சவால்கள் : ஆசிரியர் தின விழாவில் பட்டியலிட்ட அமைச்சர்

கல்வித்தரத்தை உயர்த்த காத்திருக்கும் சவால்கள் : ஆசிரியர் தின விழாவில் பட்டியலிட்ட அமைச்சர்


கல்வித்தரத்தை உயர்த்துவதற்கான சவால்களை ஆசிரியர்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், 14 கட்டளைகளை பிறப்பித்தார். ஆசிரியர் தின விழாவில் அவரது பேச்சு, அதிகாரிகளை அசர வைத்தது.





தமிழக அரசின் சார்பில், ஆசிரியர் தின விழா நேற்று, சென்னை, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், 379 ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின விருதுகளை வழங்கி பேசியதாவது:


இந்தியாவில், தமிழகம் மட்டுமே கல்வித்துறையில் அதிக சாதனைகளை படைத்துள்ளது. அமெரிக்காவை விட அதிக விகிதத்தில், தமிழக மாணவர்கள் கல்லுாரி கல்வியில் சேர்கின்றனர். பள்ளிக்கல்வியை சர்வதேச அளவில் தரம் உயர்த்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியர்களுக்கு தொழில்நுட்ப வளர்ச்சி, போட்டித் தேர்வுகள் போன்றவற்றை சமாளிக்க சவால்கள் காத்திருக்கின்றன.


● இணையதளத்திலும் மாறி வரும் தொழில்நுட்பம் அடிப்படையிலும், ஆசிரியர்கள் தங்களை தரம் உயர்த்திக் கொள்ள, உயர் தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டும்


● மதிநுட்பம் மிகுந்துள்ள மாணவர்கள், வெறும் மாணவர்களாக அல்லாமல் நண்பர்களாக கற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றனர்; அதற்கேற்ப, ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்க தயாராக வேண்டும்


● கடைசி பெஞ்ச் மாணவர்களையும் முன்னேற்றும் அளவுக்கு, திட்டமிட்டு கற்றுக்கொடுக்க வேண்டும்


● அரசின் கொள்கைகளை, திட்டங்களை, செயல்பாடுகளை எப்படி அணுகுவது; எதிர்ப்புகளை குறைத்து கொள்வது; அரசுடன் இணைந்து செயல்படுவது என மாற வேண்டும்


● ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவு, பொறாமை போன்ற எண்ணங்களை வளர்க்காமல், ஒருவருக்கொருவர் குறை சொல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்


● புதிய கல்விக்கொள்கை வந்துள்ளது; அதை எப்படி அணுகுவது என, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரியும். அதேநேரம், தங்கள் கருத்துகளை அரசுக்கு தெரிவித்து, நாட்டின் உயர்வுடன் இணைந்து செயல்பட வேண்டும்


●  மாணவர்களின் படைப்புத்திறனை மதித்து வழி நடத்த வேண்டும். போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் போன்ற சவால்களை சமாளிக்க, பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வர உதவ வேண்டும்


● தொழிற்கல்வியில், திறன் வளர்ப்பு பயிற்சிகளில் மாணவர்களை சிறப்பாக உருவாக்க வேண்டும்.


இந்த சவால்களை படிக்கட்டுகளாக மாற்றி, முதல்வரின் கனவுப்படி, தமிழக பள்ளிக்கல்வியை சர்வதேச அளவில் உயர்ந்த தரத்திற்கு மாற்ற, ஆசிரியர்களும், நிர்வாகத்தினரும் முன் வாருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.


ஆங்கிலமும், தமிழும் கலந்த அமைச்சரின் பேச்சு, ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அசர வைத்தது.


பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி மற்றும் பாடநுால் கழக மேலாண் இயக்குனர் மைதிலி ராஜேந்திரனும், அமைச்சரின் பேச்சை கண் இமைக்காமல் கவனித்தனர்

Sunday, 4 September 2016

பள்ளிகல்வியில் காலியிடம் அதிகரிப்பு

பள்ளிகல்வியில் காலியிடம் அதிகரிப்பு


இணை இயக்குனர் முதல் அலுவலக உதவியாளர் வரை காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், பள்ளிக்கல்வி துறையினர் நிர்வாக பணிகளில் திணறி வருகின்றனர்.தமிழக பள்ளிக்கல்வி துறையில், மேல்நிலைப் பிரிவு இணை இயக்குனராக இருந்த பழனிச்சாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, முறைசாரா கல்வி பிரிவுக்கும், பணியாளர்பிரிவு இணை இயக்குனரான கருப்பசாமி, இயக்குனராக பதவி உயர்வு பெற்று, மெட்ரிக் இயக்குனரகத்துக்கும் மாற்றப்பட்டனர்.
   இவர்களின் பதவி உயர்வால், காலியான இரண்டு இணை இயக்குனர் பணியிடங்களுக்கும், மூன்று மாதங்களாக புதியவர்கள் நியமிக்கப்படவில்லை.இடைநிலை பிரிவு இணை இயக்குனர் நரேஷ் மற்றும் தொழிற்கல்வி பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி ஆகியோர், இரண்டு பொறுப்புகளையும், மூன்று மாதங்களாக கூடுதலாக கவனித்துவருகின்றனர்.இதுதவிர, தமிழகம் முழுவதும், 40 கல்வி மாவட்டங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளான, டி.இ.ஓ., பணியிடங்கள், 32 வருவாய் மாவட்டங்களில், கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி பணியிடங்கள், மேல்நிலைப் பள்ளிகளில், 4,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.பள்ளிக்கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், ஆயிரக்கணக்கில் உதவியாளர், அலுவலக பணியாளர் இடங்களும்காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வியின் மற்ற துறை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, பெரும்பாலான பணிகள் முடங்கி உள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க தலைவர் சாமி.சத்தியமூர்த்தி கூறுகையில், ''காலியாக உள்ள அதிகாரிகள், ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்பாததால், கல்வித்துறையில் குறித்த நேரத்திற்குள் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகின்றன. அந்தந்த பதவிக்குரிய ஆட்களை நியமித்தால் தான் குழப்பம் தீரும்,'' என்றார்.

Friday, 2 September 2016

புதிய ஓய்வூதியத் திட்டம் : அரசு ஊழியர் வலியுறுத்தல்

புதிய ஓய்வூதியத் திட்டம் : அரசு ஊழியர் வலியுறுத்தல்


'முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் அறிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்' என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியது.




மதுரையில் சங்க மாநில செயலாளர் செல்வம் கூறியதாவது: நேற்று நடந்த வேலை நிறுத்தத்தில், அரசு ஊழியர்கள் நான்கு லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தின் கீழ் இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக முதல்வர் கடந்த பிப்., 19ல் சட்டசபையில் அறிவித்தார்.



அந்த அறிவிப்பு இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள் என நான்கு லட்சம் ஊழியர்கள் தொகுப்பூதியம் பெறுகின்றனர். அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.


அரசு ஊழியர்கள் நலனை கருதி மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும். வருமான வரி உச்சவரம்பை உயர்த்த வேண்டும். எட்டாவது சம்பளக்குழுவை அமைக்க வேண்டும், என்றார்.

Thursday, 1 September 2016

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...

முக்கிய அறிவிப்பு :பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு செல்வோர் கவனத்திற்கு...


அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 04.09.2016 அன்று   மாறுதல் கோரியுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
   விண்ணப்பம் சமர்ப்பித்துள்ள ஆசிரியர்கள் முதன்மைக்கல்வி அலுவலரிடம் 2 மாறுதல் விண்ணப்பங்களில் 02.09.2016 மாலைக்குள்  கையொப்பம்  பெற்று மாறுதல் கோரியுள்ள மாவட்டத்தில்  04.09.2016 அன்று  கலந்தாய்வில்  கலந்துகொள்ள வேண்டும் .

Wednesday, 31 August 2016

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு Online -ல் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு Online -ல் நடைபெறாது ஏன் ???ஆசிரியர் சங்கங்கள் கொதிப்பு


பள்ளிக்கல்வித் துறையில் கடந்த இரண்டு வாரமாக பதவியுயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு இணையவழியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வந்தது.பட்டதாரி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர் நிலை-2 ஆகிய பதவிகளுக்கு 03-09-2016 அன்று மாவட்டத்திற்குள்ளும் 04-09-2016 வெளி மாவட்டத்திற்கும் இணையவழி 


ஆன்லைன் கலந்தாய்வு  நடைபெறவிருந்த நிலையில் திடீரென இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.043248/சி3/இ1/2016 நாள்:31.8.2016 -ல் குறிப்பிட்டுள்ள ஆணையின் படி ரத்து செய்து இணையம் வழி அல்லாது(Manual) ஆக நேரடியாக
கலந்துகொள்ள ஆணையிட்டதின் மர்மம் என்ன என்பது புதிராக உள்ளது.


ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடந்தால் பல ஆசிரியர்கள் சொந்த மாவட்டத்தில் காலிப் பணியிடம் இல்லையென்றாலும் கூட அருகாமை மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடத்தில் தனக்கு மாறுதலைப் பெற்றுக் கொள்வார்.ஆனால் தற்போது Manual ஆக மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றால் அந்த ஆசிரியர்கள் நேரிடையாக கலந்துகொள்ள வேண்டும்.இதனால் தனது சொந்த மாவட்டத்தில் நடைபெறும் மாறுதல் கலந்தாய்வில் மட்டுமே பங்கேற்க முடியும்.


அங்கு காலிப் பணியிடம் இல்லையென்றால் வேறு வழி இல்லாமல் பழைய இடத்திலேயே பணிபுரிய வேண்டும்.இந்த வருடம் அருகாமை மாவட்டத்திற்காவது மாறுதல் பெற்றுவிடலாம் என்ற கொஞ்ச ஆறுதலான கனவும் பறிபோகும்.  காலிப் பணியிடங்களை மறைத்து பணம் பெற்றுக்கொண்டு மாறுதல் வழங்கத்தான்  இப்படி ஒரு அறிவிப்பு கடைசி நேரத்தில் வந்துள்ளது என ஆசிரியர் சங்கங்கள் கொதிக்கின்றன.

Tuesday, 30 August 2016

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி


சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார்.


ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார். அங்கு செல்ல விருப்பம் இல்லாததால், தன் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி வந்தார்.



இந்த நிலையில், நேற்று, சேலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு வந்து, தன் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினார். அதற்கு வாய்ப்பு இல்லை என, அதிகாரிகள் கூறிய நிலையில், அங்கேயே, தர்ணா நடத்த முயன்றார். போலீசார் சமாதானப்படுத்தி, அவரை அனுப்பி வைத்தனர். பின், கழிப்பறை சென்று வந்த அவர், மாடிப்படி அருகில், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், பணி மாறுதலை ரத்து செய்யாததால், துாக்க மாத்திரைகள் சாப்பிட்டதாக, தனலட்சுமி தெரிவித்தார். இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தங்கராஜ் கூறுகையில், ''பணி நிரவல் பட்டியல், ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்தோம். அதில் குறைபாடு இருப்பின் தெரிவிக்கலாம் என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. 100 சதவீதம், முறையாக பணி நிரவல் நடந்த நிலையில், தற்போது, அதை ரத்து செய்வது சாத்தியமில்லை,'' என்றார்.

Friday, 26 August 2016

அரசு பள்ளியில் புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியைக்கு மாணவன் ‘பளார்’ : ஆசிரியர்கள் அதிர்ச்சி


புத்தகம் எடுத்து வராததை கண்டித்த ஆசிரியைக்கு  மாணவன் ‘பளார்’ விட்ட சம்பவம் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூரில், பள்ளி மாணவர்கள் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும், ரோடுகளில் விரட்டி விரட்டி அடித்துக் கொள்வதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதில் சில மாணவர்கள் பலத்த காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களில் பெரும்பாலும் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களே ஈடுபட்டு வருகின்றனர்.


இதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர்.   கடந்த 23ம் தேதி, திருப்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 மாணவர்களுக்கு, ஆசிரியை ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார்.


அப்போது, மாணவன் ஒருவன் புத்தகம் எடுத்து வரவில்லை. இதை அறிந்த ஆசிரியை அந்த மாணவனை கண்டித்ததோடு, அவன் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவன், ஆசிரியையின் கன்னத்தில் திருப்பி ‘பளார்’, ‘பளார்’ என அறைந்துள்ளான். இதில் ஆசிரியைக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த மாணவனுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, 24 August 2016

கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்.

கட்டாய இடமாற்றம்: ஆசிரியர்கள் பதற்றம்.


ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தைஎட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.
   கடந்த, 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு கவுன்சிலிங்கில், முக்கிய காலியிடங்கள் மறைக்கப்படாமல், ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். வரும், 27 முதல், 29ம் தேதி வரை, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பணி நிரவல் எனப்படும், கட்டாய இடமாற்றம் செய்யப்படுகிறது.
அதிக அளவில்... : ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, இத்தனை ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விகிதாச்சாரம் உள்ளது. அதையும் மீறி, சில மாவட்டங்களில், அதிகளவில் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை கணக்கெடுத்து, ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றுவதே, பணி நிரவல் கலந்தாய்வு என, கூறப்படுகிறது.அதன்படி, பள்ளிக் கல்வித்துறை எடுத்துள்ள பட்டியலில், 3,000 ஆசிரியர்கள் வரை, சில மாவட்டங்களில், கூடுதலாக பணியாற்றுவது தெரியவந்துள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர் இடங்களை, ஆசிரியர் தேவைப்படும் பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளனர். விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில், காலியிடங்கள் அதிகமாக உள்ளன. எனவே, தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், வரும், 27ம் தேதி முதல், எந்த மாவட்டத்திற்கும் அதிரடியாக மாற்றப்படலாம்.
எப்படியாவது... : அதேநேரம், பள்ளிக் கல்வித் துறையில் அதிகமாக பணியாற்றும் தென் மாவட்ட ஆசிரியர்கள், எப்படியாவது, சொந்த மாவட்டம் அல்லது அதையொட்டிய பகுதிகளுக்கு செல்ல, அதிகாரிகளை அணுகியுள்ளனர். ஆனால், சிபாரிசு கூடாது என, அரசிடமிருந்து கண்டிப்பானஉத்தரவு உள்ளதால், அதிகாரிகளுக்கு நெருக்கடியான நிலையும், ஆசிரியர்கள் மத்தியில் பதற்றமான சூழலும் ஏற்பட்டுள்ளது.

Saturday, 20 August 2016

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்


திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.


தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) இணையதளம் வாயிலாக சனிக்கிழமை நடைபெற்றது.


மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், திருவண்ணாமலை டேனிஸ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் இந்த கலந்தாய்வு நடைபெற்றது. இதில், 62 ஆசிரிய - ஆசிரியைகள் கலந்துகொண்டு வெளி மாவட்டங்களுக்குச் செல்ல காத்திருந்தனர்.


ஆனால், தாங்கள் விரும்பிய மாவட்டத்தில் விரும்பிய ஒன்றியத்தில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடம் இல்லாததால் 61 ஆசிரிய - ஆசிரியைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


ஒருவருக்கு மட்டும் மாறுதல்: 62 பேரில் ஒரே ஒரு ஆங்கில ஆசிரியர் மட்டும் வேலூர் மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றார். இதேபோல, வேலூர் மாவட்டத்தில் இருந்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.


இன்று கலந்தாய்வு நிறைவு: இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஞாயிற்றுக்கிழமை (ஆக.21) நடைபெறுகிறது. இத்துடன் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

Thursday, 18 August 2016

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்


சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வளர்மதி என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சுதந்திர தினத்தன்று பள்ளிக்குதாமதமாக வந்த வளர்மதி, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிக்காமல் தேசியக்கொடியை ஏற்ற முயற்சித்தார். இதையறிந்த ஊர் பொதுமக்கள் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் அவரைத் தடுத்து நிறுத்தி, இதுகுறித்து கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரிகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்த கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில், தலைமை ஆசிரியை வளர்மதியை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்

இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை

மருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை


தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும், கடந்த ஜூலை 24-ம் தேதி இரண்டாம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வையும் நடத்தியது. இந்த 2 கட்ட தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ நேற்று முன்தினம் வெளியிட்டது.


மாணவிகள் சாதனை


இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்திருந்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 1,83,424 மாணவர்கள், 2,26,049 மாணவிகள், 4 திருநங்கைகள் என மொத்தம் 4,09,477 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். 3,21,746 பேர் தகுதி பெறவில்லை.அடுத்த வாரம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.mcc.nic.in இணையதளம் மூலமாக ஆன்லைனில் கலந்தாய்வு தொடங்குகிறது. இந்த கலந்தாய்வுக்கு 11,058 மாணவர்கள், 8,266 மாணவிகள், 1 திருநங்கை என மொத்தம் 19,325 பேர் தகுதி பெற்றுள்ளனர். இரு கட்டங்களாக நடந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட கூடுதலாக 4,265 மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். தேர்வின்போது விதிமுறைகளை மீறிய 26 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


3.5 லட்சம் மாணவர்கள் பாதிப்பு


தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பற்றி சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும்போது, “இந்ததேர்வில் 4,09,477 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 52 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்களில் 35 ஆயிரம் இடங்கள் மற்றும் 22 ஆயிரம் பிடிஎஸ் இடங்களில் 16 ஆயிரம் இடங்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் மூலமாக நிரப்பப்பட உள்ளன. மீதமுள்ள 3.5 லட்சம் மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேர முடியாது. மருத்துவ நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் நுழைவுத் தேர்வில் தகுதி பெறவில்லை” என்றார்.


விழிப்புணர்வு வேண்டும்:


மருத்துவ நுழைவுத் தேர்வு பற்றி சீமான் ஸ்கூல் ஆஃப் மெடிக்கல் என்ட்ரன்ஸ் நிறுவனர் சீமான் கூறும்போது, “மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் வேண்டும். அதே நேரத்தில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை கொண்டுவர வேண்டும். தற்போது நடந்த நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் நடத்தப்பட்டது. தமிழக மாணவர்களால் நுழைவுத் தேர்வை எழுதமுடியவில்லை. நம்முடைய மாநில பாடத் திட்டத்தில் இருந்து3 மதிப்பெண்களுக்கு மட்டுமே கேள்விகள் இருந்தன. மற்ற அனைத்து கேள்விகளும் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டிருந்தன.ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பாடத் திட்டம் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தை ஒட்டியே உள்ளன. அதனால் அந்த மாணவர்கள் எளிதாக நுழைவுத் தேர்வை எழுதினர். சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வில் தேர்வாகி உள்ளனர். தமிழகத்தில் நுழைவுத் தேர்வு குறித்து ஆசிரியர்களுக்குமுதலில் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் நுழைவுத் தேர்வு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்வில் வெற்றி பெற முடியும். மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி மையங்களையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரிகளையும் அதிகரிக்க வேண்டும்” என்றார்.
 

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு

பள்ளி மாணவர்களுக்கு எரிசக்தி சேமிப்பு : விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்த உத்தரவு


பள்ளி மாணவர்களுக்கு, எரிசக்தி சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப்போட்டி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் சார்பில் தேசிய அளவில் எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.மாவட்ட வாரியாக 4,5,6 மற்றும் 7,8, 9ம் வகுப்பு மாணவர்களை ஏ, பி என இரு பிரிவுகளாக பிரித்து போட்டிகளைநடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. பள்ளி அளவில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் இரு படைப்புகளை, சென்னையில் உள்ள எரிசக்தி துறை அதிகாரிகளுக்கு, செப்., 30க்குள் கிடைக்கும்படி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறுகையில், “பள்ளி அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த இரண்டு படைப்புகள் தலைமை ஆசிரியர்கள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் மாநில போட்டிகளிலும், அதனை தொடர்ந்து தேசிய போட்டிகளிலும் பங்கேற்க உள்ளனர். மாநில போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயும், இரண்டாமிடத்திற்கு 15 ஆயிரம் ரூபாயும், மூன்றாமிடத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளன. ஆறுதல் பரிசாக 10 பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும், ”என்றார்.

Wednesday, 17 August 2016

வேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள்18 லட்சம் பேர்! தமிழக அரசு விழிக்க வேண்டிய நேரமிது


தமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர்.


ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.


வேலைவாய்ப்பு இல்லாதவர்களில், பட்டதாரி களின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிக ரித்து வருகிறது. அரசுத் துறை பணிகள், தனி யாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கு வதால், வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. கடந்த, 2015 ஜூன் நிலவரப்படி,வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 83 லட்சத்து, 35 ஆயிரம் பேர் வேலையின்றி காத்திருந்தனர். இந்த ஆண்டு, ஜூன், 30 நிலவரப்படி, 83.33 லட்சம் பேர், அரசு மற்றும் தனியார் வேலைக் காக, பதிவு செய்து காத்திருப்பதாக, வேலை வாய்ப்பு அலுவலக புள்ளி விபரங்கள் தெரிவிக் கின்றன.


இவர்களில், பி.ஏ., போன்ற கலை பட்ட படிப் பில், 4.50 லட்சம்பேர்; அறிவியலில், 6.14 லட்சம்; வணிகவியலில், 3.40 லட்சம் பேர், என, 14 லட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை எதிர் பார்த்துள்ளனர். பள்ளிகளில், பட்டதாரி ஆசிரி யராக பணிபுரிய, 3.82 லட்சம் பேர் காத்திருக் கின்றனர். மேலும், டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், 2.15 லட்சம் பேரும் வேலை தேடுகின்றனர்.


வேலை இல்லாதவர்கள் பட்டியலில், வேளாண்மை பட்டதாரிகள் மிகக்குறைவாக, 641 மட்டுமே உள்ளனர். கல்லுாரி பேராசிரியர் பணியை எதிர்பார்த்து, 2.69 லட்சம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருப்பதாகவும், அந்த புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில் நிறுவனங்களும், கல்வி நிறுவனங் களும், தமிழகத்தில்அதிகரித்து வரும் நிலையில்,வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதே அளவுக்கு உயர்ந்து வருவது, கல்வி யாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த எண்ணிக்கையை குறைக்க, தமிழக அரசு இப்போதே விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி.ஓ.சுரேஷ் கூறியதாவது:அரசுத் துறைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளில் பதவி உயர்வு, பணி ஓய்வு மற்றும் இறப்பால் ஏற்படும் காலியிடங்களை, உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். நீண்ட நாட்களாக காலியாக உள்ள இடங்களில், பட்டதாரிகள், ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.


தனியார் மெட்ரிக் பள்ளிகள், கல்லுாரிகள் போன்றவற்றில், தகுதியானவர்களை பதிவு மூப்பு மற்றும் கல்வித் தகுதியின் படி, பணி நியமனம் செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அரசே பணி அமர்த்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.




தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
   தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்தபிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.

தமிழகம் முழுவதும் ஆசிரியர்களுக்கு உள்ளாட்சி தேர்தல் பணிக்கான விண்ணப்பங்கள் விநியோகம்.


தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றை பூர்த்தி செய்து பிடிஓக்களிடம் சமர்ப்பிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
   தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வழக்கம்போல் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் தேர்தல் பணியில் பங்கேற்க வசதியாக முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அவற்றை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் பெற்று பூர்த்தி செய்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.அவற்றை தலைமையாசிரியர் சரிபார்த்து ஆசிரியர் பெயர், வசிக்கும் இடம் உள்ளிட்ட பிற விவரங்களை இணைத்து அந்தந்தபிடிஓ அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களை முதன்மை கல்வி அலுவலக வெப்சைட்டில் பார்க்கலாம்.

Tuesday, 16 August 2016

இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள் !

இடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள் !


*மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை


*விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை


*திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.


*தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை


*கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை

Monday, 15 August 2016

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'கிரெடிட் கார்டு'பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அடுத்த அதிரடி.

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'கிரெடிட் கார்டு'பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அடுத்த அதிரடி.


பீஹார் மாநிலத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வரும், முதல்வர் நிதிஷ் குமார்,உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'கிரெடிட் கார்டு' வழங்கும் திட்டத்தை நேற்று அறிவித்தார்.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஐந்து ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை, நிதிஷ் குமார் வெளியிட்டார்.'பூரண மது விலக்கு, அரசு வேலையில், 35 சதவீதம் மகளிருக்குஒதுக்கீடு' என, பல வாக்குறுதிகளை அவர், அப்போது தெரிவித்தார். அதன்படி, ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, அதிரடி திட்டங்களை அவர் அறிவித்து வருகிறார். முதல் கட்டமாக, ஏப்ரலில், பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டது; எனினும், அரசியல்வாதிகள் உட்பட பலர், மது குடித்து கையும் களவுமாக பிடிபட்டனர்.
சட்ட திருத்தம்
 இதையடுத்து, மது விலக்கை கடுமையாக அமல்படுத்தும் விதமாக,சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன்படி, ஒருவரது வீட்டில் மதுபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த வீட்டில் உள்ள, 18 வயது நிரம்பிய அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் ஒரு அசத்தல் அறிவிப்பை, நேற்று அவர்அறிவித்தார். சுதந்திர தினமான நேற்று, பாட்னாவில் தேசியக்கொடியை ஏற்றி, அவர் பேசியதாவது:பீஹாரில் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்; இதற்காக, பீஹார் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'ஐந்தாண்டுகளுக்குள்பீஹார் முழுமையான வளர்ச்சி அடையும் வகையில், பல திட்டங்களை செயல்படுத்துவேன்' என, தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தேன். அதன்படி, திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.பள்ளிக் கல்வியை முடித்து விட்டு, உயர் கல்வி சேர விரும்பும் மாணவர்களின் நலனுக்காக, 'கிரெடிட் கார்டு' வழங்கப்படும். இதன் மூலம், நான்கு லட்சம் ரூபாய், வட்டியில்லா கடனாக மாணவர்களுக்கு கிடைக்கும். இந்த திட்டம், அக்டோபர், 2 முதல் அமலுக்கு வரும்.இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி, மாணவர்கள், தாங்கள் விரும்பும் படிப்புகளில் சேரலாம். ஏழை, எளிய மாணவர்கள் உயர் கல்வி படிப்பதற்கு, கல்விக் கட்டணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சமூக வலைதளங்கள்
 சமூக வலைதளங்கள் மூலம், வதந்திகளையும், அவதுாறுகளையும் கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது, அதை, கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாணவர்களுக்கான கடன் திட்டத்தை, நிதிஷ் குமார் அறிவித்தாலும், இந்த திட்டம் எப்படி நடைமுறைப் படுத்தப்படும், மாணவர்கள், எப்போது, கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்பது பற்றிய விபரங்கள், இன்னும் இறுதி செய்யப்படவில்லை.அறிவிப்பு மழை
● உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு,வட்டியில்லாமல், நான்கு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும்
● 20 வயது முதல், 25 வயது வரை உடைய இளைஞர்கள் வேலை தேடுவதற்கு வசதியாக, மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்
● இளைஞர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க, பீஹார் முழுவதும், 534 இடங்களில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்
● இளம் தொழில் முனைவோர்க்கு நிதி உதவி வழங்க, 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்
● அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகளில், 2017 முதல் இலவச, 'வைபை' வசதி வழங்கப்படும்.

மாணவியை அடித்த ஆசிரியர் கைது

மாணவியை அடித்த ஆசிரியர் கைது


உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவியை அடித்த ஆசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.


 பண்ணைப்புரம் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஜீவரட்சகர் (32) தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி அடித்தாராம்.
இதில் அந்த மாணவிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மாணவி, கோம்பை போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, ஆசிரியர் ஜீவரட்சகரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

Sunday, 14 August 2016

B.ED பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி

பி.எட்., பயிற்சிக்கு பள்ளிகளில் அனுமதி


அரசு பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் பணிபுரியும் பள்ளிகளில், பி.எட்., பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தொலை நிலையில், ஆசிரியர் கல்வியியல் படிப்பான, பி.எட்., முடித்த பின், பயிற்சி மேற்கொள்ள விரும்பினால், தாங்கள் பணியாற்றும் பள்ளியிலேயே, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தி, பயிற்சி மேற்கொள்ளலாம்.


அதேநேரம், ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளியில் பயிற்சி பெறலாம்.



'இந்த பயிற்சிக் காலம், பணிக் காலமாக எடுத்துக் கொள்ளப்படாது; எனவே, பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள், விடுப்பு விண்ணப்பம் அளிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு

57 ஆயிரம் மாணவர்கள் 5-ம் வகுப்புடன் கைவிரிப்பு


தமிழகத்தில் 57 ஆயிரம் மாணவர்கள் 5-ம்வகுப்புக்கு பின் பள்ளிப்படிப்பை கைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.நாடு முழுவதும் 14 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமு் கட்டாய கல்வி சட்டம் மூலம் 8-ம்வ குப்பு வரை கல்வி வழங்க மத்திய அரசு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.


அதே போல் 10-ம் வகுப்பு வரை படிக்க அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்ககம் என்ற ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் நாடு முழுவதும் 6 முதல் 12 வயதிற்குட்பட்டோரில் 61 லட்சம் பேர் பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டது தெரிய வந்துள்ளது. இதற்கான அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.இதில் 26.65 லட்சம் பேர், 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோர்.


கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு எடுத்த கணக்கெடுப்பின் படி தமிழகத்தில் 11 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்ட 57 ஆயிரத்து 229 பேர் 5-ம் வகுப்பிற்கு பின், பள்ளி படிப்பை கைவிட்டுள்ளனர்
 

01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்.

01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பாதிப்புகள்.


ஊதியக்குழு அரசாணை எண்:234ன் படி மிகக்குறைந்த ஊதிய ஏற்றம் 5200-20200 +.2800 நிர்ணயம் செய்யப்பட்டுஊதியம் பெற்று வரும் இடைநிலை ஆசிரியர்களில் 01.01.2006 முதல் 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ளஇடைநிலை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டியவை.
   அரசாணை எண் :23ன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு 750 ரூபாய் தனி ஊதியமாக 01.01.2011 முதல் வழங்கப்படுகிறது.01.01.2006 முதல் 31.12.2010 க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை + தர ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.01.01.2011லிருந்து பதவி உயர்வு பெறுபவர்களுக்கு அடிப்படை + தர + தனி ஊதியத்திலிருந்து பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.
எனவே 01.01.2006 - 31.12.2010க்குள் பதவி உயர்வு பெற்றுள்ள இடைநிலை ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தில் தனி ஊதியம் 750 மற்றும் அதற்கான அகவிலைப்படி சேர்த்து ஒரு வருடத்திற்கு தோராயமாக 15000 ரூபாய் இழந்து வருகிறார்கள்.ஒன்றியத்திற்கு வருடத்திற்கு சுமார் 10 பேர் பதவி உயர்வு பெற்றிருப்பார்கள்.
தமிழ்நாட்டில் உள்ளது 365 ஒன்றியங்கள்.2006-2010 வரை உள்ள 5 ஆண்டுகளில் சுமார் 18650 பேர் பாதிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்கள்.
இதன் பாதிப்பு அறிந்ததும் அறியாமலும் பணியாற்றுபவர்கள் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

Thursday, 11 August 2016

ஆசிரியைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: 2-ஆவது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்




வந்தவாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளியில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


வந்தவாசியை அடுத்த உளுந்தை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளித் தலைமை ஆசிரியை அ.முனியம்மாள், ஆசிரியை வ.வளர்மதி ஆகியோர் மீது பள்ளியின் முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஒருவர் கல்வித் துறைக்கு புகார் மனு அனுப்பிய நிலையில், இது தொடர்பாக கல்வித் துறை விசாரணை மேற்கொண்டது.


இதைத் தொடர்ந்து, பள்ளித் தலைமை ஆசிரியை அ.முனியம்மாள், கொவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கும், ஆசிரியை வ.வளர்மதி, மணிமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கும் நிர்வாக மாறுதல் செய்து கல்வித் துறை உத்திரவிட்டது.


மேலும், கொவளை பள்ளித் தலைமை ஆசிரியை மரகதம், உளுந்தை பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.


இந்நிலையில், அ.முனியம்மாள், வ.வளர்மதி ஆகியோர் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, உளுந்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஒரு பிரிவைச் சேர்ந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செவ்வாய்க்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பள்ளியின் முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அதிகாரிகள் சமரசம் செய்ய முயன்றும் சமாதானத்தை ஏற்காத மாணவர்கள் போராட்டத்தை தொடர்வோம் என்று கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.


இந்நிலையில், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தை தொடர்ந்தனர். அந்தக் கிராம காலனி நுழைவுப் பகுதியில் தரையில் அமர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதையடுத்து, வந்தவாசி வட்டாட்சியர் எஸ்.முருகன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்களிடமும், பெற்றோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு புதன்கிழமை பிற்பகல் வகுப்புகளுக்குச் சென்றனர்.

தமிழில் கையெழுத்திட உத்தரவு.

ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட உத்தரவு.


ஆசிரியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும், என தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் முதல்எழுத்து உள்பட தங்களின் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும்.
   ஏற்கனவே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இதனை சரிவர பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்துள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர்களும், அலுவலர்களும் முதல் எழுத்துடன் பெயரை தமிழில் கையெழுத்திட வேண்டும். இதனைமாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tuesday, 9 August 2016

பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்.

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் - பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்.


* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்
* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்
* நடப்பு கல்வியாண்டில் 132353 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளடிக்கிய கல்வி ம்றறும் உதவி உபகரணங்கள் 32.18 கோடி வாங்கப்படும்
   * கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக கணினி மற்றும் சார்ந்த உபகரணங்கள் 4 கோடி செலவில் வாங்கப்படும்
* தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தினால் பல்வேறு தலைப்புகளில் வெளியிட்ட சுமார் 1000 நூல்கள் தமிழ்இணைய கல்வி கழகத்துடன் இணைந்து 5 கோடி செலவில் மின்மியமாக்கி இணையதளத்தில் பணிவேற்றபடும்
* மாணவர்கள் பாடங்களை பொருள் உணர்ந்து படிப்பதற்கு வசதியாக மல்டிமீடியா அனுபவத்தை தரகூடிய வகையில் பாடநூல்கள் 9 லட்சம் செலவில் மாற்றியமைக்கபடும்
* தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் சேவையினை மேம்படுத்தவாசகர்கள் பயன்பாட்டிற்காக 93 பகுதி நூலகங்கள் ஊர்ப்புற நூலகங்களாக 2.32கோடி செலவில் மேம்படுத்த படும்
* மாணவர்களின் ஆங்கில மொழி திறன் மேம்பட மூன்றாவது முதல் எட்டாம் வகுப்பு வரை ஆங்கில பாடம் புத்தகங்களுடன் மொழி திறனை வளர்க்க இலக்கண பயிற்ச்சிதாள்கள் வழங்கப்படும்
* தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் மைய நூலகங்களில் சூரிய ஒளியை பயண்படுத்தி மின்சாரம் வழங்கிட 64 லட்சம் செலவில் செயல்படுத்தப்படும்.

இவை உட்பட மொத்தம் 22 அறிவிப்புகள

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 796 பேருக்கு பணியிட மாறுதல்




தொடக்கக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற கலந்தாய்வில் 796 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசுத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


இதில், 796 தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர். 562 இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Monday, 8 August 2016

பி.வோக்., படிப்பு விரைவில் அறிமுகம்

பி.வோக்., படிப்பு விரைவில் அறிமுகம்


பி.வோக்., எனப்படும், தொழிற்கல்வி பட்டப் படிப்பை துவங்க, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, யு.ஜி.சி., அனுப்பிய சுற்றறிக்கையில், 'பல்கலை மற்றும் கல்லுாரிகள், பி.வோக்., எனப்படும் தொழிற்கல்வி பட்டப்படிப்பு துவங்க வேண்டும்.


இந்த படிப்புகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது

பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள்




அரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல்ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது.மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
   இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும்,அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பதுஉளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. மாவட்ட கல்விஅதிகாரிகள், தங்கள்கட்டுப்பாட்டில் உள்ளபள்ளிகளில், இந்த உளவியல் ஆலோசகர்கள் மூலம் மாணவர்களை நல்வழிப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

Sunday, 7 August 2016

அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்:

அண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்: உயர்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 300 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 87 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது. புதிதாக தோற்றுவித்த கல்லூரிகள் மற்றும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்த கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக நியமிக்கப்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை தேவைப்படும் அரசு கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்ய உயர்கல்வித்துறை முடிவு செய்தது.இதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 369 விரிவிரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மேலும் 300 விரிவுரையாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களை 3 வருட ஒப்பந்த அடிப்படையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் கூறுகையில், ''அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கூடுதலாக உள்ள பேராசிரியர்களை பல்கலைக்கழகங்கள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் நியமிக்கலாம். இதன் மூலம் அங்கு ஏற்கனவே பணியாற்றும் கரவுவ விரிவுரையாளர்களுக்கு பணியில் பாதிப்பு ஏற்படக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு தகுதியுள்ளவர்களை நியமிக்க உயர்கல்வித்துறை முன்வரவேண்டும்'' என்றனர்

தமிழ் எழுத்துக்களுக்கு இணையாக 'சைகை' முறை கண்டுபிடிப்பு : எளிதாக கற்பிக்க ஏற்பாடு




தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை எளிய முறையில் உச்சரிக்கவும், பிழையின்றி எழுதுவதற்கும் 30 வகையான புதிய 'சைகை' முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான 'சிடி'க்கள் தொகுப்பை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) தயாரித்துள்ளது.




தமிழில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் 'மயங்கொலிகள்' எனப்படும் 'ல, ள, ழ, ர, ற, ந, ண, ன' ஆகிய எட்டு எழுத்துக்கள் அதிகம் பயன்படுகின்றன.ஆனால் பேச்சு வழக்கில் இந்த எழுத்துக்களின் தன்மை குறைந்து உச்சரிப்பு மருவி விடுகிறது. இதன் காரணமாக தமிழ் எழுத்துக்களை உரிய ஓசை, ஏற்ற இறக்கத்துடன் உச்சரிக்க, எழுத மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.


சைகை முறை: இதை தவிர்க்கவும், தமிழ் எழுத்துக்களை உரிய வடிவில் எழுதுவதற்கும், 30 நாட்களில் சரியான உச்சரிப்புடன் பேசவும், பிழையின்றி எழுதும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களால் அனைத்து உயிரெழுத்து மற்றும் மெய் எழுத்துக்களுக்கு உரிய 'சைகை' முறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.இப்பணியில் எஸ்.சி.இ.ஆர்.டி., யின் மொழிப்புல (லாங்குவேஜ்செல்) ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். 1 - 5 வகுப்பு வரை உள்ள தமிழ் பாடநுாலின் அனைத்து பாடங்களையும் 'தாயெனப்படுவது தமிழ்' என்ற தலைப் பில் சி.டி., தொகுப்பை ஆக.,2ல் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். இவ்வாரத்தில் பள்ளிகளுக்கு 'சிடி'க்கள் வழங்கப்பட உள்ளன.


தொழில்நுட்ப இயக்குனர் அமலம் ஜெரோம் கூறியதாவது:எஸ்.சி.இ.ஆர்.டி., உதவியுடன் காது கேளாத, வாய் பேசாத மாணவர்களுக்கு கற்பித்தல், பரத நாட்டியத்தின் முத்திரைகள், உளவியல் மற்றும் உடல் மொழி ரீதியிலான 'சைகைகளை' அடிப்படையாக கொண்டு சரியான உச்சரிப்புடன் எழுத்துக்களை எளிதில் புரிய வைத்து பிழையின்றி எழுதுவதற்கு 'சைகைகளை' உருவாக்கி உள்ளோம். எழுத்துக்களை மிக துல்லியமாக புரிந்துகொள்ள பின்னணி காட்சிகள், நவீன தொழில் நுட்ப உத்திகளுடன் 'சிடி' க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, என்றார்.

Thursday, 4 August 2016

தலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு




சென்னை: அரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாற்றம் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது.
இதற்கு, 168 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 86 பேருக்கு மட்டும் விருப்பமான இடங்கள் கிடைத்தன. மீதமுள்ள, 82 பேர் தலைமை ஆசிரியர்களாகவே பணியை தொடர விருப்பம் தெரிவித்தனர். அவர்களுக்கு இன்னும், மூன்று ஆண்டுகளுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லை. ஆனால், உதவி தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இணையான ஊதியம், சலுகை பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.