Friday, 27 May 2016

கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை

கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர கோரிக்கை


கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்பம் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற்ற மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு வெளியான, 10 நாட்களுக்குள் கல்லுாரிகளில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, மே, 17ம் தேதி முதல், 10 நாட்கள் என்ற கணக்கில், மே, 27ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் விண்ணப்பம் வாங்கவே, காத்திருக்கும் சூழல் உள்ளது. பல மாவட்ட பள்ளிகளில், பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே, வழங்கப்பட்டுள்ளது. கல்லுாரி படிப்பில் சேர தேவையான மாற்று சான்றிதழ் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே, அண்ணா பல்கலையில் விண்ணப்ப தேதியை நீட்டித்தது போல, கலை, அறிவியல் கல்லுாரிகளில் விண்ணப்பம் சமர்ப்பிக்க, கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Monday, 23 May 2016

பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?

பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா?


'தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், கோடை விடுமுறையை நீட்டித்து, ஜூன், 1க்கு பதில், பள்ளிகள் திறப்பை, ஜூன், 8க்கு மாற்ற வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், ஏப்ரல், 23 முதல், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கும், மே, 1 முதல் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்கியது. விடுமுறை காலம் முடிந்து, ஜூன், 1ல், பள்ளிகள் திறக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், பள்ளிகள் திறப்பை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது.


விடுமுறை இல்லை: சட்டசபை தேர்தல் நடந்ததால், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை காலம் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விடுமுறை காலமாக இல்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டதால், மே, 21 வரை, அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் விடுமுறை கிடைக்காமல் பணிகளில் ஈடுபட்டனர். மேலும், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இன்னும் ஒரு வார காலம் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், ஆசிரியர்களும் விடுமுறை காலத்தை நீட்டிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.


இதுகுறித்து ஆசிரியர் சங்கநிர்வாகிகள் கூறியதாவது:ஏப்ரல் முதல், மே, 14 வரை, ஆசிரியர்கள் அனைவரும் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தம், மதிப்பிடும் பணியை பார்த்தனர். பின், 21ம் தேதி வரை தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். எனவே, இந்த ஆண்டு கோடை விடுமுறை காலம் முழுவதும் பணிக்காலமாகவே மாறி விட்டது. ஆசிரியர்களும், தங்கள் மனைவி, குடும்பம், குழந்தைகளுடன் கோடை விடுமுறையை கழிக்க வேண்டும்.


ஆக்கப்பூர்வமாக...பெரும்பாலான இடங்களில், பெற்றோர் பலர் அரசியல் பணிகளில் ஈடுபட்டதாலும், அவர்களின் பிள்ளைகள் கோடை விடுமுறையை ஆக்கப்பூர்வமாக கழிக்கவில்லை. மேலும், வானிலை மைய முன்னறிவிப்பின் படி, ஜூன் முதல் வாரத்தில் கோடை வெப்பம் அதிகம் இருக்கும் என்பதால், விடுமுறை காலத்தை நீட்டிக்க, புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை

புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை


நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக்காபாதில்மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா  செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:


தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கையில் சில அடிப்படை மாற்றங்களைச் செய்து, அதை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அதாவது தற்போதைய கல்விக் கொள்கையில், 8ஆம் வகுப்பு வரையில் தேர்வுகளில் மாணவர்களை தோல்வியடையாமல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


இந்தியக் கல்விக் கொள்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளும் இந்தியக் கல்விக் கொள்கையை ஏற்கத் தொடங்கியுள்ளன. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டில் புதிதாக 20 தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்தப் பல்கலைக்கழகங்களில்,மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு சர்வதேசத் தரம் வாய்ந்த 500க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், முஸ்லிம்கள் மீது காட்டும் அன்பு போலியானது. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கோருவதில் தவறில்லை.ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித்துகள் ஆகியோருக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அஸ்ஸாம் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குதான் முஸ்லிம் வாக்காளர்கள் வாக்களித்தனர். தலித்துகளின் பெயரில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நிதி வசூலிக்கிறார். ஆனால், அந்தப் பிரிவினரிடையே அவரால் மீண்டும் செல்வாக்கு பெற முடியாது என்றார் கட்டேரியா.
 

Friday, 20 May 2016

... கூவி விக்கிறாங்க!எம்.பில்., பட்டம் ரூ. 2 லட்சம் எம்.ஏ., தேர்வுக்கு ரூ.1700

கூவி... கூவி விக்கிறாங்க!எம்.பில்., பட்டம் ரூ. 2 லட்சம் எம்.ஏ., தேர்வுக்கு ரூ.1700

மதுரை காமராஜ் பல்கலை மாலை நேர கல்லுாரி மற்றும் தொலைநிலைக்கல்வி மையங்களில் எம்.பில்., மற்றும் எம்.ஏ., பட்டம் வழங்குவதில் லட்சக்கணக்கான ரூபாய் பேரம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் 26 மையங்கள், வெளி மாநிலங்களில் 190 மையங்கள் உள்ளன.
திண்டுக்கல், பழநி, தேனி, பெரியகுளத்தில் மாலை நேரக் கல்லுாரிகளும் உள்ளன.சில மையங்களில் பல்கலை அனுமதியை விட அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதும், எம்.பில்., பட்டங்களுக்கு ரூ. 2 லட்சம் வரை 'பேரம்' நடத்துவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.குறி வைக்கப்படும் ஆசிரியர்கள் முதுகலை முடித்த ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறுவதற்காக, எம்.பில்., படிக்கஆர்வம் காட்டுவர். இதனால் தேனி மையத்தில் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். அவர்களில் பலருக்குஎம்.பில்., பட்டம் வழங்க ரூ.2 லட்சம் வரை 'பேரம்' பேசப்படுகிறது.
இம்மையத்தில் கடந்த நவம்பரில், 400 பேர் எம்.பில்., தேர்வு எழுதி தோல்வி அடைந்தனர். அவர்கள் அனைவரும் பிப்ரவரியில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து தேர்ச்சி அடைந்த 'அதிசயமும்' நடந்தது. இதுகுறித்து உயர்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு விடைத்தாள் மோசடி தேனி தொலைநிலைக் கல்வி மையத்தில் ஒரு மாணவி, ஒரே தேர்வுக்கு இரண்டு விடைத்தாள்எழுதினார். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.சில மையங்களில் மாணவர்களுக்கு வழங்கிய மாற்றுச் சான்றிதழில் (டி.சி.,) இயக்குனருக்கு பதில் வேறு ஒருவரின் கையெழுத்து இருந்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலர் அபூர்வாவுக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: துணைவேந்தர் அறிவிப்பு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: துணைவேந்தர் அறிவிப்பு.

தமிழகத்தில் ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக். பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய நான்கு படிப்புகளில் சேருவதற்கு வெள்ளிக்கிழமை (மே 20) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் கூறினார்.
எத்தனை இடங்கள்?:
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு 320 இடங்கள், பி.டெக். உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பப் படிப்புக்கு 20, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 20 என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (மே 20) காலை 10 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது.ஜூன் 10-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். முதல் கட்டமாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிரின்ட் எடுத்து, தபால் மூலம், ஜூன் 17-ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.
ஆகஸ்ட் மாதம் கலந்தாய்வு:
 இது தொடர்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: ஒவ்வொரு படிப்புக்கும் தனித்தனியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 300 ஆகும். பிற பிரிவினர் ரூ. 600 விண்ணப்பகட்டணமாக செலுத்த வேண்டும்.கடந்த ஆண்டு கால்நடை மருத்துவப் படிப்புக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் முதல் அல்லது 2-ஆவது வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்றார் அவர்.

Thursday, 19 May 2016

சென்னை: தமிழக மக்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திருமாவளவனை தோற்கடித்துள்ளனர். நடிகர் கருணாஸை வெல்ல விட்டுள்ளனர்.
மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் திருமா தோற்றுப் போயுள்ளார். சற்றே பரவாயில்லை என்ற அளவிலான வாக்கு வித்தியாசத்தில் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார். இதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.
கருணாஸ் திருவாடானை தொகுதியில் வென்றுள்ளார். திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் தோற்றுள்ளார்.
கருணாஸ் மக்களுக்கு அப்படி என்ன செய்து விட்டார் என்று தெரியவில்லை. திருமாவளவன் மக்களுக்கு என்ன செய்யத் தவறினார் என்பதும் புரியவில்லை.
அதிமுக ஆதரவுடன் போட்டியிட்ட ஒரே காரணத்திற்காக கருணாஸ் வென்றுள்ளார். அதிமுக, திமுக, பண பலம் இல்லாமல் முயன்றவரை போராடிய ஒரே காரணத்திற்காக திருமா தோற்றுள்ளார்.
மிக மிக விசித்திரமாகத்தான் இருக்கிறது மக்களின் தீர்ப்பு... சபாஷ் மக்களே

Wednesday, 18 May 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் முதலிடத்தை பறிகொடுத்தது விருதுநகர்

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் முதலிடத்தை பறிகொடுத்தது விருதுநகர்


விருதுநகர்: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 2013 -2104 ம் ஆண்டை தவிர்த்து 29 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம், இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 199 பள்ளிகளை சேர்ந்த 10,812 மாணவர்கள் ,13,195 மாணவிகள் என,24,007 பேர் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1985 ல் விருதுநகர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது முதல் ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் மாநில முதலிடம் பிடித்து வந்தது. 2013 -2104 ம் ஆண்டில் முதலிடத்தை கோட்டை விட்டு மூன்றாம் இடத்தை பிடித்தது. கடந்த 30 ஆண்டுகளில் 29 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வந்த விருதுநகர் மாவட்டம் இந்தண்டும் முதலிடம் பிடிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
30 வது ஆண்டாக முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 95.73 தேர்ச்சி சதவீதம் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலிடத்தை தக்க வைக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள், சிறப்பு வகுப்புகள் நடத்தி கையேடும் வழங்கினர். ஆனாலும் உரிய பலன் கிடைக்காதது, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது
மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி கூறுகையில்,“ கடந்தாண்டை விட இந்தாண்டு 1.73 சதவீதம் குறைந்துவிட்டது. ஒரு பள்ளியில் 4 மாணவர்களே பிளஸ் 2 தேர்வை எழுதினர் .இதில் ஒரு மாணவர் மட்டுமே தேர்ச்சி பெற்று , 3 மாணவர்கள் தோல்வியடைந்தது, தேர்ச்சி சதவீதத்தில் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. இந்தாண்டு முன் கூட்டியே குறைபாடுகளை கண்டறிந்து, அடுத்தாண்டு மீண்டும் முதலிடத்தை பிடிக்க முயற்சிக்கப்படும்,”என்றார்.

Monday, 16 May 2016

தேர்தல் பணியில் ஆசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்... தடைபடாத வாக்குப் பதிவு!

தேர்தல் பணியில் ஆசிரியர் மாரடைப்பால் திடீர் மரணம்... தடைபடாத வாக்குப் பதிவு!


உடுமலை அருகே, பள்ளி ஆசிரியர் ஒருவர் தேர்தல் பணியில் இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம், கரடுமடம் உடுமலையில் உள்ள அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செல்வராஜ் (54). இவர் காங்கேயம் சட்டப்பேரவை தொகுதி வடசின்னேரிபாளையம் பஞ்சாயத்து, காங்கேயம் பகுதி தலைமை வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இவர், தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் காலை முதல் வாக்குப்பதிவு பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். செல்வராஜ், தேர்தல் பணியில் இருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சை பிடித்தப்படி கீழே சாய்ந்தவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துணைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

அங்கு செல்வராஜை மருத்துவர்கள் பரிசோதித்து முதலுதவி செய்துவிட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கின்றனர். இதை தொடர்ந்து செல்வராஜை அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

ஆனால், வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து, மீண்டும் கங்கேயம் அரசு மருத்துமனைக்கு செல்வராஜ் உடல் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஊதியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருக்னறனர். செல்வராஜுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து, மாற்று அதிகாரி மூலம் தொடர்ந்து அப்பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது

மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே

மருத்துவப் படிப்புகளில் சேர ஒரே வழி இனி நீட் தேர்வு மட்டுமே.....!!

மருத்துவப் படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேர்வதற்கு இனி ஒரே வழி இனி நீட் தேர்வு (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) மட்டுமே எனத் தெரியவந்துள்ளது. நமது நாட்டில் சில மாநிலங்களில் பிளஸ்2தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை வழங்கப்பட்டு வந்தது.
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் இந்த நடைமுறை இருந்தது.ஆனால் வட மாநிலங்களில் பொது நுழைவுத் தேர்வு(சிஇடி) முறை இருந்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றமானது,இனி தேசிய தகுதி நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மருத்துவ,பல் மருத்துவப் படிப்புகளில் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்தது. மேலும் அது வரும் கல்வியாண்டிலேயே அமலாக்கப்படவேண்டும் என்றும் அறிவித்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் இனி மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே வழி என்ற நிலை உருவாகியுள்ளது.2016-17-ம் கல்வியாண்டில் மருத்துவம்,பல் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும்.12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. ஆனால் பிளஸ்2தேர்வில்50சதவீத மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும்.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது : இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிடும் வரை நீட் தேர்வு மட்டுமே இனி ஒரே வழி. இல்லாவிட்டால் மருத்துவப் படிப்புகளில் ஏழை,எளிய மக்கள்,கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்கள் சேர முடியாத நிலை ஏற்படும். நீட் தேர்வு சிபிஎஸ்இ நிர்வாகம் நடத்துகிறது. மேலும் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்காக தனியாக மெரிட் பட்டியல் தயாராகும். அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கைக மருத்துவப் படிப்புகளில்15சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.

Saturday, 14 May 2016

தொலை நிலை கல்வி சான்றிதழுக்குவேலை வாய்ப்பு: யு.ஜி.சி., விளக்கம்

தொலை நிலை கல்வி சான்றிதழுக்குவேலை வாய்ப்பு: யு.ஜி.சி., விளக்கம்


'பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் அங்கீகாரம் பெற்ற பல்கலைகளின் தொலை நிலைக்கல்வி சான்றிதழ்கள், அரசு வேலை வாய்ப்புக்கு செல்லத்தக்கவை' என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து யு.ஜி.சி., சார்பில் அனைத்து மாநில பல்கலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம்:மத்திய மனிதவள அமைச்சகம் மூலம், 2015 ஜூலை, 27ல் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, பார்லிமென்டில், 1956ல் கொண்டு வரப்பட்ட யு.ஜி.சி.,

சட்டத்தின்படி அமைக்கப்பட்ட பல்கலைகளால் தொலைநிலையில் வழங்கப்படும், டிப்ளமோ, டிகிரி மற்றும் சான்றிதழ் படிப்பு சான்றிதழ்கள், அரசின் வேலைவாய்ப்புக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.இந்த அரசாணைக்கு முன், 1995ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் படி, தொலை நிலை கல்வி கவுன்சிலின் அனுமதியுடன் வழங்கப்பட்ட பட்டங்கள் செல்லத்தக்கவை.ஆனால், பல பல்கலைகள், தனியார் அமைப்புகள் மூலம் தொலைநிலை
கல்வியை நடத்தின. இதுகுறித்து, 2001ம் ஆண்டே பல பல்கலைகள் எச்சரிக்கப்பட்டன. மாநில பல்கலைகள் தங்கள் மாநிலத்தை விட்டும், தனியார் பல்கலைகள் தங்கள் பல்கலை வளாகத்தை விட்டும் வெளியே மையம் அமைத்து, தொலைநிலை கல்வி தரக்கூடாது.
எனவே, 'தனியார் ஏஜன்ட்கள் மூலம் தொலைநிலை கல்வியை அனுமதிக்க வேண்டாம்' என, எச்சரிக்கப்பட்டது.இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளதால், அனைத்து மாநில அரசுகளும், தங்கள் மாநிலங்களில்,
பல்கலைகள் விதி மீறாமல் நடந்து கொள்ளும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும். யு.ஜி.சி., வகுத்த எல்லைகளை மீறாமல், பல்கலைகள் செயல்
படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

Thursday, 12 May 2016

நாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்...! மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....!!

நாட்டில் உலா வரும் 22 போலி பல்கலை.கள்...! மத்திய அமைச்சகம் அளித்த அதிர்ச்சி லிஸ்ட்....!!

நாட்டில் போலியாக 22 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக ராஜ்யசபையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.இதுதொடர்பாக அவையில் அவர் தெரிவித்ததாவது:
நாட்டில் போலியாகசெயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) கேட்டுக்கொண்டோம்.அதன்படி யுஜிசி அளித்த பட்டியலில் நாடு முழுவதும்22பல்கலைக்கழங்கள் போலியாக செயல்பட்டு வருவதை அறிந்துள்ளோம்.அந்த பல்கலைக்கழகங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதில்9போலி பல்கலைகக்ழகங்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.
மேலும் டெல்லியில்5போலி பல்கலைக்கழங்களும்,மேற்கு வங்கத்தில்2பல்கலை.யு,ம்,பிகார்,கர்நாடகா,கேரளா,மகாராஷ்டிரம்,தமிழகம்,ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு பல்கலை.யும் போலியாக செயல்பட்டு வருகின்றன.இந்த விஷயத்தில் மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கேற்ப உரிய உத்தரவுகளை நாங்கள் பிறப்பித்துள்ளோம்.

Tuesday, 10 May 2016

தொடக்கக்கல்வி - வாக்குசாவடிகள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளையும் அதன் தலைமை ஆசிரியர்கள் 12.05.2016 அன்று திறந்து வைக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

இழிச்சவாய் அரசு ஊழியர்கள்..

இழிச்சவாய் அரசு ஊழியர்கள்..


தோண்டத் தோண்ட அடுக்கடுக்காய் எழும் திடுக்கிடும் தகவல்கள்


அரசு ஊழியர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டத்திற்கான அரசாணை எண் 243.தேதி 29.06.2012-ல் உள்ள முக்கிய சாராம்சங்கள்..






இதில் அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினரின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்கும் (கட்டணமில்லா சிகிச்சை) என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.


சிகிச்சைக்கான Claim % ஏதும் குறிப்பிடப்படவில்லை..


அதே போல் discharge ஆன பிறகு claim செய்ய இயலாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..


எந்தெந்த மருத்துவமனையில் இந்த கட்டணமில்லா சிகிச்சை செய்துகொள்ளலாம் மற்றும் எந்தெந்த அறுவை சிகிச்சைகள் இந்த திட்டத்தின் கீழ் வரும் என்ற பட்டியலும் உள்ளது..


ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனமானது முடிந்தவரை அரசு ஊழியர்களின் claim-ஐ நிராகரிக்கவும் அல்லது குறைந்தபட்ச தொகையினை மட்டுமே approve செய்தும் வருகிறது..


(Insurance Complaint number- 7373073730)


இந்தப் பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்போம்..


தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை வரும் ஜூன் மாதத்துடன் கைவிட்டு அரசு நிறுவனத்துடனே ஒப்பந்தம் செய்ய இந்த நிறுவனத்தின் மோசடிகளை விஸ்வரூபம் எடுக்கச் செய்து கோரிக்கையினை முன்வைப்போம்..


(திரு.அருண்,
இடைநிலை ஆசிரியர்,
பாப்பாபட்டி,
நத்தம் ஒன்றியம்,
திண்டுக்கல் மாவட்டம்.
Cell- 7448352052)


தற்பொழுது மதுரை சீனிவாசா  மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அறுவை சிகிச்சைக்கு முன்பே அந்த மருத்திவமனையில் claim உண்டா என்பதை விசாரித்து உண்டு என்ற பிறகே அறுவை சிகிச்சை செய்ய Admit ஆகியுள்ளார்.


Admit ஆனபிறகு claim பற்றி insurance department-ல் கேட்கையில் தாங்கள் வேறு ஒரு மருத்துவமனையில் பிளேட் வைக்க operation  செய்துள்ளீர்.. தற்பொழுது இரண்டாவது முறை அந்த பிளேட்ஐ எடுக்க அறுவை சிகிச்சை செய்ய உள்ளீர்..


பொதுவாக Second claim கிடையாது.. அதுமட்டும் இல்லாமல் பிளேட் வைத்த அதே  மருத்துவமனையில் பிளேட் remove செய்தால் மட்டுமே claim அனுப்ப இயலும் என்று கூறியுள்ளனர்..


New health insurance-ன் குறைகளை சுட்டிக்காட்டி நான் (தேவராஜன்-cell: 9994101709) செய்த பதிவினை படித்த திரு.அருண் அவர்கள், அந்த பதிவில் போராடி 100% claim பெற்றதாக குறிப்பிட்டிருந்த CPS போராளி திரு.பிரெட்ரிக் ஏங்கெல்ஸ்-ஐ (cell: 9629927400) தொடர்புகொண்டு விவரத்தைக் கூறியுள்ளார்.

Monday, 9 May 2016

அரசு ஊழியர் வீடு ஒதுக்கீடு கண்காணிக்க புது திட்டம்

அரசு ஊழியர் வீடு ஒதுக்கீடு கண்காணிக்க புது திட்டம்


அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்வதில், மோசடிகளை தடுக்க, புதிய நடைமுறையை, வீட்டுவசதி வாரியம் உருவாக்கி உள்ளது.
சென்னையில், பட்டினப்பாக்கம், லாயிட்ஸ் காலனி, பீட்டர்ஸ் சாலை, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா நகர், முகப்பேர் என பல்வேறு பகுதிகளில், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன. இதே போல், பிற மாவட்டங்களிலும், அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள் உள்ளன.

இந்த குடியிருப்புகளை பெற விரும்பும் அரசு ஊழியர்கள், முறையாக விண்ணப்பிக்க வேண்டும். காலியாக இருக்கும் வீடுகள் எண்ணிக்கை, விண்ணப்பங்கள் வந்த நாள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால், சிபாரிசு பெற்றவர்களுக்கும், அரசு ஊழியர் அல்லாத நபர்களுக்கும் வீடுகள் ஒதுக்குவதாகவும், வேண்டுமென்றே விண்ணப்பங்களை கிடப்பில் போடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. முறைகேட்டை தடுக்க, புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:முறைகேட்டை தடுக்க, புதிய திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக, வாடகை குடியிருப்புகள் குறித்த அனைத்து விவரங்களை, 'ஆன்லைன்' முறையில் கண்காணிக்க, பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பங்கள் பதிவு, விண்ணப்பங்களை வரிசைபடுத்துதல், ஒதுக்கீடு, வீடு ஒப்படைப்பு போன்ற பணிகள், ஆன்லைன் முறையில் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
07.05.2016 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் மட்டும் 12.05.2016 கலந்துகொண்டால் போதும் - விழுப்புரம் ஆட்சியர்

Saturday, 7 May 2016

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவு தொடங்கியது.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டு பதிவு தொடங்கியது.


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை இன்று முதல் வருகிற 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம்.தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆரம்ப சுகாதார ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டள்ளனர்.

போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று முதல் தபால் ஓட்டுக்களை போடலாம்.சென்னையில் 16 தொகுதிகளிலும் உள்ள 3,770 வாக்குச்சாவடிகளில் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக பணியில் உள்ளனர். இதைதவிர 16 ஆயிரம் போலீசாரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் செய்துள்ளார்.அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலகங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களிலேயே அவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தனி அறை உருவாக்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டுக்கான படிவம் 12-ஐ பூர்த்தி செய்து பயிற்சி அலுவலர்கள் மூலமாக அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளை 14-ந் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் கூறும் போது, “தபால் ஓட்டுக்களை போடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு பதிவுக்கு முந்தைய நாளான 15-ந் தேதி அன்று இரவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் வாக்குபதிவு மையங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

Friday, 6 May 2016

THE FOLLOWING PROOFS ARE ALLOWED INSTEAD OF VOTER ID

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்)
 * ஓட்டுனர் உரிமம்
* மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை
* வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகம் (புகைப்படத்துடன் கூடியது)
 * பான்கார்டு
* தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை
* தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு
* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
* தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட, அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்படச் சீட்டு
* லோக்சபா, சட்டசபை, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, அலுவலக அடையாள அட்டைஇத்தனை ஆவணங்கள் இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே, அவர் ஓட்டு போட முடியும்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் PO , PO 1 ,PO 2,PO 3 பயனுள்ள பதிவுகளின் தொகுப்பு.

மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!

'இ' கிரேடு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி!


எட்டாம் வகுப்பில், இ கிரேடு மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பட்டியலை, மே 10ம் தேதிக்குள் இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்விமுறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மூன்று பருவ தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள், பள்ளி சார்ந்த செயல்பாடுகள், சுற்றுச்சூழல் செயல்பாடுகள், விளையாட்டு திறன், தனித்திறன் உள்ளிட்டவை அடிப்படையில், கிரேடு வழங்கப்படுகிறது. இதில், ஏ, பி, சி. டி, இ என, ஐந்து கிரேடுகள் வழங்கப்படுகிறது.


இதில், எட்டாம் வகுப்பு முடித்து, ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவ, மாணவியரில், இ கிரேடு எடுத்துள்ள மாணவர்களின் பெயர்களை சேகரித்து, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பில், இ கிரேடு நிலையில் உள்ள மாணவர்களுக்கு, மே மற்றும் ஜூன் மாதத்தில் குறைதீர் கற்பித்தல் பயிற்சி நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.



இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:


எட்டாம் வகுப்பில், கற்பித்தலில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள், ஒன்பதாம் வகுப்புக்கு செல்லும் போது, மிகவும் தடுமாற்றம் அடைகின்றனர். உதாரணமாக தமிழில் எழுத படிக்க வராத மாணவர்கள், தமிழ் வழியில் படிக்கும் அனைத்து பாடங்களிலும், கற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.


இதை தவிர்க்க, குறைந்த பட்ச கற்றல் திறன் அடையும் அளவுக்கு, அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே மூன்றாவது வாரத்தில் துவங்கி, ஜூன் மாதம் வரை, இப்பயிற்சி வகுப்பு நடைபெற வாய்ப்புள்ளது. இ கிரேடு மாணவர்களின் பட்டியல்களை, இயக்குனரகத்துக்கு மே, 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thursday, 5 May 2016

ANNAMALAI UNIVERSITY -Hall Ticket for Directorate of Distance Education - May 2016 Examinations-HALL TICKET PUBLISHED

தேர்வுக்கு வராத மாணவர்களும் 'பாஸ்': அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.

தேர்வுக்கு வராத மாணவர்களும் 'பாஸ்': அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.

ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புணர்வு குறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை உள்ளது.

மேலும், அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், எட்டாம் வகுப்பு வரை, 'ஆல்பாஸ்' செய்யும் நடைமுறை அமலில் உள்ளது. எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்வது கட்டாயம் என்றாலும், ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கும் நிலை காணப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புகுறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது: முப்பருவக்கல்வி முறை அமல்படுத்தப்படும் முன், பள்ளி இறுதி தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு, அதற்கு முந்தைய அரையாண்டு தேர்வு அடிப்படையில், தேர்ச்சி வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. அதற்கு காரணம், அரையாண்டு மற்றும் இறுதி தேர்வு இரண்டுக்கும், ஒரே பாடங்களே இருந்ததுதான். ஆனால், தற்போது மூன்று பருவங்களுக்கும், வேறு வேறு பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு, இரண்டாவது அல்லது முதல் பருவ தேர்வு அடிப்படையில், தேர்ச்சி வழங்கும் நடைமுறை உள்ளது. மூன்றாம் பருவ பாடப்புத்தகம் முழுமையாக வேறுபட்டிருக்கும் நிலையில், அதில் தேர்வே எழுதாமல், தேர்ச்சி வழங்கும் நிலை உள்ளது.
 இதனால், மாணவர்களுக்கு கற்றல் குறித்த பொறுப்பு குறைந்து வருகிறது. 'எப்படியும் பாஸ் செய்துவிடுவார்கள்! பின் ஏன் படிக்க வேண்டும்' என்ற அலட்சிய போக்கு அதிகரித்துவருகிறது. அதைதவிர்க்க, தேர்வுக்கு வராதவர்களுக்கு, சிறப்பு தேர்வு ஒன்றை நடத்தி, பின் தேர்ச்சி வழங்கினால் கூட, அர்த்தமானதாக இருக்கும். அதை கல்வித்துறை அலுவலர்கள் கவனத்தில் கொண்டு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, தேர்வுக்கு வராதவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Wednesday, 4 May 2016

2 ஆம் கட்ட தேர்தல் வகுப்புக்குச் செல்லவில்லையெனில் ஒருமாத சம்பளம் நிறுத்தி வைக்க உத்தரவு.


 

பாரத ஸ்டேட் வங்கியில் 2200 காலிப்பணியிடம்: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் 2200 காலிப்பணியிடம்: 24-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 2200 புரொபேஷனரி அதிகாரி காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 24-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
   பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் "2200 புரொபேஷனரி அதிகாரி' பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 25-ஆம் தேதிக்குள் (புதன்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளம் அல்லது http://www.sbi.co.in/webfiles/uploads/files/PO_2016_ENGLISH_CRPD_PO_2016_17_02.pdf  என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேடு விளைவிப்பது உறுதியானால் மைதா மாவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; உணவு துறை ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கேடு விளைவிப்பது உறுதியானால் மைதா மாவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; உணவு துறை ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


அலொட்சான்’ ரசாயன கலவையுடன் கூடிய மைதா மாவு மனிதர்களுக்கு கேடு விளைவிக்கும் என்று ஆய்வு மூலம் தெரியவந்தால், அந்த மைதாவுக்கு 3 மாதங்களுக்குள் தடை விதிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆணையருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, தெற்கு தேத்தாக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கே.ராஜேந்திரன். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:


ரசாயன கலவை


கோதுமையில் உள்ள நார்ச்சத்துக்களை அகற்றி, வெள்ளை நிறத்துடன் மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இந்த மைதா வெண்மையாகவும், மிருதுவாகவும் இருக்க ‘அலொட்சான்’ ரசாயனப் பொருள் கலக்கப்படுகிறது.


இந்த அலொட்சான் என்பது விலங்குகளின் கணையத்தில் ‘பீட்டா செல்களை’ அழித்து, இன்சூலின் சுரப்பதை தடுக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருளாகும். இப்படிப்பட்ட மைதா மாவு மூலம் தயாரிக்கப்படும் புரோட்டாவையும், ‘பேக்கரி’ கடைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள், கேக் வகைகளையும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுகின்றனர்.


நீரழிவு


இதனால், மனிதர்களின் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிக்கப்படுகிறது. இன்சூலின் சுரப்பது தடுக்கப்பட்டு, ஏராளமானோர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்திலும் இந்த பாதிப்பு அதிகரிக்க நேரிடும். இதை தெரிந்துக் கொண்டுதான், இந்த வகையான மைதா மாவுகளுக்கு, அமெரிக்கா போன்ற நாடுகள் தடை விதித்துள்ளது.


மனிதர்களை மெதுவாக கொல்லும் விஷம் என்று ரசாயன கலவை கொண்ட மைதா மாவை, டாக்டர்கள் அழைக்கின்றனர். எனவே, அலொட்சான் மைதா குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உணவு தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் கடந்த மார்ச் மாதம் விளக்கம் கேட்டு மனு கொடுத்தேன்.


நிபுணர் இல்லை


ஆனால், இதுவரை பதில் எதுவும் அளிக்கவில்லை. எனவே, அலொட்சான் மைதாவை தடை விதிக்க வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுத்துறை ஆணையர், சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்தகத்துறை இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடவேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-


இந்த மனு மீதான விசாரணையின்போது, உணவு தரம் தொடர்பான விஷயத்தில் மனுதாரர் நிபுணத்துவம் பெற்றவர் இல்லை என்பது தெரிகிறது.


தடை விதிக்க வேண்டும்


அதேநேரம், மைதாவில் ரசாயன கலவை உள்ளது. அது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று மனுதாரர் கூறும் காரணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.


ஆனால், இந்த நிலையில், எங்களால் மனுதாரர் கொடுத்த மனுவை பரிசீலிக்கும்படிதான் அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியும்.


எனவே, மனுதாரர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத்துறை ஆணையர் ஆய்வுகளையும், விசாரணைகளையும் மேற்கொள்ளவேண்டும். அப்போது மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு உண்மை இருப்பதாக தெரியவந்தால், ரசாயன கலவை கொண்ட மைதாவை தடைவிதிக்க சட்டப்படியான நடவடிக்கைகளை 3 மாதங்களுக்குள் மேற்கொள்ளவேண்டும். இந்த மனுவை முடித்து வைக்கிறோம்.


இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Monday, 2 May 2016

திருத்தப்படுகிறதா அதிமுக தேர்தல் அறிக்கை ? – திடீர் முடிவின் பரபர பின்னணி! --ஜூ.வி

திருத்தப்படுகிறதா அதிமுக தேர்தல் அறிக்கை ? – திடீர் முடிவின் பரபர பின்னணி! --ஜூ.வி


திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கும் ‘பென்ஷன் ஸ்கீம்’ அதிமுக கூடாரத்திலேயே வியந்து ரசிக்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து,  ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தேர்தல் அறிக்கையில் பல புதிய மாற்றங்களை செய்யும் வேலை கடந்த பத்து நாட்களாக  கார்டனில் சீரியசாக நடந்து வருகிறது என்கிறார்கள்.


பிரசாரத்துக்குப் போகிற பத்து பாய்ன்ட்டுகளில் ஐந்திலாவது,  ‘இந்த தேர்தலின் கதாநாயகன், திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ‘ என்று மறக்காமல் சொல்லி வருகிறார், மு.க.ஸ்டாலின்.


ஸ்டாலினின் விடாத இந்த பன்ச் அதிமுகவை மட்டுமல்ல, பாஜக போன்ற கட்சிகளையும் கிளப்பி விட்டிருக்கிறது. குறிப்பிட்ட இந்த பன்ச் டயலாக் குறித்து பல இடங்களில் பாஜகவின் தமிழிசை, விடாமல் கவுன்ட்டர் கொடுத்து வருகிறார்.


இப்படிப்பட்ட சூழலில்தான் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் பல விஷயங்கள் குறித்து நமக்குத் தகவல் கிடைத்தன.


” அரசு சார்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ் (சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது), அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கைம்பெண், முதியோர் உதவித்தொகை இரட்டிப்பு,  மருத்துவ காப்புறுதி திட்டத்துக்கான உதவிப் பணம் ரூ.25 ஆயிரத்திலிருந்து 4 லட்ச ரூபாயாக உயர்வு. (சிகிச்சையோடு மருந்துகளும் பெறலாம்), சிறு குறு விவசாயிகளின் கடன்கள்  மொத்தமும் தள்ளுபடி,  வீடுகளுக்கு இலவச அரசு கேபிள், முன்னர் நடைமுறையில் இருந்த அதே பென்ஷன் ஸ்கீம் மீண்டும் செயலாக்கத்துக்கு கொண்டு வரப்படும்.


அரசு சார்பில் இலவச வேட்டி- சேலையுடன் பொங்கல் பரிசாக  வழங்கப்படும் ரூ.500, இனிமேல் ஆயிரம் ரூபாயாக  உயர்த்தி வழங்கப்படும்” என்பது உள்ளிட்ட பல புதிய அம்சங்களுடன் மே மாத துவக்கத்தில்    தனது தேர்தல் அறிக்கையை  அதிமுக,  வெளியிட உள்ளதுதான்  தமிழக அரசியல் ஏரியாவில்  தற்போது ஹை லைட்டாக பேசப்படும் மேட்டர்…!
--ஜூனியர் விகடன்