Thursday, 31 March 2016

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்.

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்.


தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நாளை நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வரும் நிலையில் முக்கிய பாடங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.

இதனை போன்று பத்தாம் வகுப்புக்கு மார்ச் 29ம் தேதி மொழி பாடத்தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவு பெற்றுவிடும் நிலையில் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக கால அட்டவணையும் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும்ஏப்ரல் 24ம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்பும், மே 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி வகுப்பும், 12ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பும் நடத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து மே 15ம் தேதி இறுதி கட்ட பயிற்சி வகுப்புடன் தேர்தல் பணி ஆணைகளும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்.

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் இறுதியில் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடக்கம்.


தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள் நாளை நிறைவு பெறுகிறது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.மொழி பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வரும் நிலையில் முக்கிய பாடங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குகிறது.

இதனை போன்று பத்தாம் வகுப்புக்கு மார்ச் 29ம் தேதி மொழி பாடத்தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறைவு பெற்றுவிடும் நிலையில் தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக கால அட்டவணையும் வகுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வரும்ஏப்ரல் 24ம் தேதி முதல் கட்ட பயிற்சி வகுப்பும், மே 7ம் தேதி 2ம் கட்ட பயிற்சி வகுப்பும், 12ம் தேதி மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பும் நடத்தப்பட இருக்கிறது. தொடர்ந்து மே 15ம் தேதி இறுதி கட்ட பயிற்சி வகுப்புடன் தேர்தல் பணி ஆணைகளும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

பள்ளிக்கு பூட்டுபோட்ட தேர்தல் அதிகாரிகள்: குழந்தைகளுக்கு சர்ச்சில் நடந்த வகுப்புகள்

பள்ளிக்கு பூட்டுபோட்ட தேர்தல் அதிகாரிகள்: குழந்தைகளுக்கு சர்ச்சில் நடந்த வகுப்புகள்


நெல்லை அரசு உதவிபெறும் பள்ளியில் ஓட்டுச்சாவடிக்காக சாய்வுதளம் அமைக்காததால்,பள்ளிக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் மாணவ, மாணவிகளுக்கு கிறிஸ்துவ ஆலயத்தில் வைத்து வகுப்புகள் நடத்தினர்.


திருநெல்வேலி, சாந்திநகரில், தென்னிந்திய திருச்சபையின் சி.எஸ்.ஐ.,துவக்கப்பள்ளி உள்ளது.அரசு உதவிப்பெறும் இப்பள்ளியில் வரும் சட்டசபை தேர்தலுக்காக ஓட்டுச்சாவடி அமைக்கும் பணி நடந்தது. அங்கு ஊனமுற்றோர் நடந்துசெல்லும் வகையில், சாய்வுதளம் அமைக்க உத்தரவிட்டிருந்தனர்.ஆனால் பள்ளி நிர்வாகம் சாய்வுத்தளம் அமைக்கவில்லை. இதனை கண்டித்த தேர்தல் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து, பள்ளி வகுப்புகளுக்கு பூட்டுப்போட்டுவிட்டு சென்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் அதே வளாகத்தில் உள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிற்பகலில் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகள், சாய்வுத்தளத்தை விரைந்து அமைக்க உத்தரவிட்டனர். வகுப்பறைகள் திறக்கப்பட்டன.அரசு உதவி பெறும் தனியார் பள்ளி இருப்பினும் அங்கு மாணவ, மாணவிகளுக்கோ, ஆசிரியைகளுக்கோ கழிப்பறைகள்இல்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

EASY TEACH, EASY LEARN ENGLISH

Wednesday, 30 March 2016

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு


அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், உயர் பதவிகளுக்கான தேர்வு டிசம்பர் மற்றும் மே மாதம் நடைபெறும். மே மாதம் நடைபெற இருக்கும் துறைக்கு விண்ணப்பிக்க தேதி மார்ச் 31 ல் இருந்து ஏப்ரல் 11 என நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

'மே' மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இணையதளம் , (www.tnpsc.gov.in ) மூலமாக மட்டும் விண்ணபிக்க முடியும்

இன்று முதல், வாக்காளர் அடையாள அட்டையை, வீட்டிலேயே பெற்றுக் கொள்ளும் புதிய வசதி

வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை:புதிய திட்டம் இன்று முதல் அமல்

வண்ண வாக்காளர் அடையாள அட்டை, வீடு தேடி வரும் திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன்,புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் கமிஷன், பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தொலைந்து போன, வாக்காளர் புகைப்பட அட்டைக்கு பதிலாக, புதிய மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறவும்,அண்மையில் எடுக்கப்பட்ட, வண்ண புகைப்படத்தை, வாக்காளர் அடையாள அட்டையில் புதுப்பித்துக் கொள்ளவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல், வாக்காளர் அடையாள அட்டையை, வீட்டிலேயே பெற்றுக் கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் படி, வண்ண வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்பும் வாக்காளர், எந்த மையத்திற்கும் செல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே, கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போன் மூலமாக, 001 என்ற படிவத்தை பூர்த்தி செய்து, உரிய தொகையை, ஆன்லைனில் செலுத்தினால், வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
வாக்காளர் அடையாள அட்டைக்கு மட்டும், 25 ரூபாய் செலுத்தினால், தேர்தல் கமிஷன் தெரிவிக்கும், வசதியாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். தங்கள் இருப்பிடத்திற்கே, அடையாள அட்டை வரவேண்டும் என விரும்புவோர், கூடுதலாக தபால் செலவுக்கு, 40 ரூபாய், இதர செலவுக்கு, 2 ரூபாய் சேர்த்து, 67 ரூபாயை, தேர்தல் கமிஷன் இணையதளத்தில் செலுத்த வேண்டும்.இதற்காக, தேர்தல் கமிஷன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்தத்தில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, ஸ்டேட் பாங்க் சார்பில், தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான, தலைமை பொது மேலாளர் ரமேஷ் பாபு கையெழுத்திட்டனர்.
பணம் செலுத்தும் வசதி:தேர்தல் கமிஷன் இணையதளத்தில், ஏ.டி.எம்., கார்டு, கிரடிட் கார்டு, விசா கார்டு மூலம், வாக்காளர் அடையாள அட்டைக்கு, பணம் செலுத்தலாம். வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்தவர்கள் மட்டுமே, அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க முடியும்.

புதிய ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்து,பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா

புதிய ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்து,பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலாமா? மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் !



SUKHBIR SINGH JAUNPURIA
 Will the Minister of FINANCE be pleased to state:-
 (a) whether the Government proposes to replace the New Pension Scheme (NPS) with old pension scheme; and
 (b) if so, the details thereof and the reasons therefor?

ANSWER
 The Minister of State in the Ministry of Finance(a) & (b) there is no proposal under consideration to replace the National Pension System (NPS) with old pension scheme in respect of Central Government employees recruited on or after 01.01.2004.

Sunday, 27 March 2016

மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி

மத்திய அரசு பயிற்சிக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு


 மத்திய அரசின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மூலம், மாநில அரசுப் பள்ளிகளில், பயிற்சி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த, தமிழக அரசு மறுப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை உயர்த்த, மத்திய அரசு புதிய முன்னோடி திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்தி, அவர்கள் மூலம், மாநில அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தர, மத்திய அரசு திட்டமிட்டது.

இதுகுறித்து, மாநில அரசுகளின் விருப்பத்தை கோரியது. அதில், 19 மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் திட்டத்துக்கு விருப்பம் தெரிவித்து உள்ளன. ஆனால், தமிழக அரசு அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.இதேபோல், மத்திய அரசின், ஐ.ஐ.எம்., எனப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மூலம், அனைத்து பி.எட்., கல்லுாரி மாணவர்களுக்கு, சிறப்பு ஆசிரியர் பயிற்சி வழங்கவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

Friday, 25 March 2016

பளிச்சிடும் வண்ணத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்.

பளிச்சிடும் வண்ணத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்.


இந்த ஆண்டுக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நவீன, '2 டி பார்கோடு' மற்றும், 'வாட்டர் மார்க்' என்ற, ரகசிய குறியீடுடன் பளிச்சிடும் வண்ணத்தில் தயாராக உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. தேர்வு முடிவுகளை, சட்டசபை தேர்தலுக்கு
முன் வெளியிட, பள்ளிக்கல்வித் துறையும் மற்றும் தேர்வுத் துறையும் திட்டமிட்டு உள்ளன. * இந்த ஆண்டுக்கான மதிப்பெண் சான்றிதழ், பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் * வெயில் மற்றும் மழையால் பாதிக்கப்படாத வகையில், வழவழப்பான கனமான தாளில் தயாரிக்கப்படும் * பச்சை நிறத்தில் குறுக்கு கட்டம் போட்ட தாளில், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படும் * 'வாட்டர் மார்க்' என்ற ரகசிய குறியீடு, '2 டி பார்கோடு' மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கு தனி எண், பதிவு எண் போன்றவை இடம் பெறும் *தமிழக அரசு முத்திரையுடன், நடப்பு ஆண்டை குறிக்கும் ரகசிய எண்ணும், சான்றிதழில் இணைக்கப்படும். இந்த சான்றிதழ் உண்மையா, பொய்யா என ஆய்வு செய்யும் வகையில், சென்னை, அண்ணா பல்கலையிலுள்ள தேர்வுத் துறையின், கணினி வழி சான்றிதழ் ஆய்வு மையத்தில், சரிபார்க்க அதிகாரம் வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாணவர்களின் ஆதார் எண் விவரம்: சேகரித்து தர தலைமை ஆசிரியர்கள் தயக்கம்.


பள்ளி மாணவர்களின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து தர, பல முறை உத்தரவிட்டும், பெரும்பாலான பள்ளி தலைமைஆசிரியர்கள் அலட்சியப்போக்குடன் உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்துள்ள கல்வித்துறை நிர்வாகம், உடனடியாக விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஆதார் எண் விவரங்களைசேகரிக்க, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆதார் எண் எடுக்கப்படாத மாணவர்களுக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. முகாம்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டு, இரு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அனைத்து மாணவர்களின் ஆதார் எண் அடங்கிய விவரங்களை இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித்தொகை மற்றும் மாணவ, மாணவியர் சேர்க்கை விபரம் உள்ளிட்டவைகளை சரிபார்க்க, இவை ஆன்லைனில் அப்டேட் செய்யப்பட உள்ளன.


ஆனால், இவற்றை முழுமையாக கொடுக்கும் பட்சத்தில், பள்ளிகளில் உள்ள போலி மாணவர் சேர்க்கை உள்ளிட்ட முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால், பெரும்பாலான பள்ளி தலைமை ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், பல முறை வலியுறுத்தியும், ஆதார் எண் விவரங்களை சேகரித்து வழங்குவதில் தாமதம் செய்து வருகின்றனர். உடனடியாக இந்த விவரங்களை வழங்காவிடில், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Thursday, 24 March 2016

தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது
2 க்குபிறகு படிக்க டாப் 10 படிப்புகள்


டாப் 10 படிப்புகள் , கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாள​ரான ஜெயபிரகாஷ் காந்தி
காலேஜ் கேம்பஸ்
டாப் 10 படிப்புகள்
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.

என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.
”பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.
எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் ‘கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!
பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.
காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் ‘மோஸ்ட் வான்ட்டட்’ ஆக உள்ளன.
அவை என்னென்ன என்று பார்க்கலாம்..
இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.
கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.
இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான ‘நெஸ்ட்’, ‘ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்’-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் ‘அப்ஜக்டிவ்’ முறையில் அமைந்திருக்கும்.
விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.
இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.
பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள ‘சிக்ரி’ (சி.இ.சி.ஆர்.ஐ – சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படு-கிறது.
புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.
வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.
இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.
இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.
இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் ‘பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி’. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.
அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
டாப் 10 படிப்புகள்
பொறியியல் படிப்புகளைப் போல கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் எம்.பி.பி.எஸ்-க்கு இல்லை. கட் ஆஃப் மதிப்பெண்கள் 195-க்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதற்கு அருகில் எடுப்பவர்கள் போட்டிகளை சமாளித்து தனியார் கல்லூரிகளில் இடம் பெறுவார்கள். மெரிட் தவிர, மேனேஜ்மென்ட் மூலம் ஸீட் பெறுபவர்களும் உண்டு.
பல லட்சங்கள் வரை செல்லும் கட்டணங்கள், ஐந்து வருட படிப்பில் இறுதி வருடம் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி போன்றவை இதற்கான பொது விதிகள். மேற்படிப்பு படிப்பவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம், கண் மருத்துவம் என வளமான எதிர்காலம் உண்டு என்பது கண்கூடு.
”நமது நாட்டில் பல் மருத்துவர்களுக்கான முக்கியத்துவமும் தேவையும் அதிகமாகி வருகிறது” என்று மத்திய சுகாகாரத்துறை அமைச்சர் அன்புமணிகூட சமீபத்தில் கூறியிருக்கிறார். உலக சுகாதார அமைப்பும் உலகளவில் பல் மருத்துவர்களுக்கு நிலவும் பற்றாக்குறையை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கான முக்கியத்துவம் கொடுத்து, கிராமங்கள் வரை பல் மருத்துவ வசதியை எடுத்துச் செல்வது, இந்தத் துறையில் இன்னும் தேவையான விழிப்பு உணர்வைப் புகுத்துவது போன்ற திட்டங்களுக்கான ஆலோசனை களிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
படிப்பை முடித்த கையோடு வங்கியில் கடன் உதவி பெற்று, தேவையான இடவசதி, மருத்துவ உபகரணங்களுடன் கிளினிக்கை ஆரம்பித்து விடலாம். இதில் மேற்படிப்பான எம்.டி.எஸ் படித்தால், இன்னும் சிறப்பு.

மூன்று வருடப் படிப்பான இதில், நர்ஸிங்கை முடித்துவிட்டு, அதன் பின் சிறப்புப் படிப்புகளான ‘நியூரோ நர்ஸிங்’, ‘போஸ்ட் ஆபரேட்டிவ் நர்ஸிங்’ போன்றவற்றை எடுத்துப் படிக்கிறவர்களுக்கு, அதற்கான அங்கீகாரமும் தேவையும் கூடுகிறது. நர்ஸிங் படிப்புகளுக்கு வெளிநாடுகளிலும் மிகச் சிறந்த வேலை வாய்ப்பு உள்ளது.
தனியார் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வின் மூலமும், அரசு கல்லூரிகளில் செவிலியர் படிப்புக்கான தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நர்ஸிங்கில் டிப்ளமோ படிப்புகளும் பரவலாக வந்து விட்டன. இவற்றை முடித்து வேலையில் சேரும் பெண்கள் அதோடு தேங்கி விடாமல், வேலையில் இருந்து கொண்டே மேற்படிப்பையும் முடித்தால், நல்ல எதிர்காலம் உண்டு
படிப்புடன் கூடவே கற்பனைத்திறன், உலக நடப்பு அறிவு, ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு இதில் அதிக வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.
பத்திரிகை நிருபர், வானொலி நிலைய இயக்குநர், தொலைக்காட்சி செய்தி சேகரிப்பாளர், சினிமா ஒளிப்பதிவாளர், இயக்குநர், எடிட்டர், விளம்பரப்பட இயக்குநர், அனிமேஷன் உள்ளிட்ட பலப் பல வேலைகள் இந்தத் துறை-யில் விரிந்து உள்ளன.
பி.எஸ்சி., விஸ்காம் பி.எஸ்சி., எலெக்ட்ரானிக் மீடியா மற்றும் பி.ஏ., ஜர்னலிஸம் பாடப்பிரிவுகள் பல கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ளது. இதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடத்தை படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஹோட்டல்களில், பி.ஆர்.ஓ., நிர்வாகம் ஆகியவற்றில் வேலை வாய்ப்பு தரும் ‘ஃப்ரன்ட் ஆபீஸ்’ பாடப் பிரிவுகள், பராமரிப்பில் வேலை வாய்ப்பு தரும் ‘ஹவுஸ் கீப்பிங்’ பாடப் பிரிவுகள், உணவு உற்பத்தியில் வேலை வாய்ப்பு தரும் ‘குக் புரொடக்ஷன்’ பாடப் பிரிவுகள்.. என இதன் பாடத் திட்டமே வேலை வாய்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது ஹோட்டல், ரெஸ்ட்டாரன்ட், ஃபாஸ்ட் ஃபுட், காஃபி ஷாப், மோட்டல் என பல பெயர்களில் பெருகி வரும் இந்த முதல் தர உணவகங்களில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிரம்பி உள்ளன.
ப்ளஸ் டூ-வில் எந்தப் பாடத்தை எடுத்துப் படித்திருந்தாலும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப மூன்று வருடங்கள், நான்கு வருடங்கள் என கால அளவு மாறுபடும். இந்தப் படிப்பில் செறிவான ஆங்கில அறிவோடு இந்தி, ஜெர்மன், பிரெஞ்சு என வேற்று மொழி அறிவும் இருந்தால் மிக அதிக சம்பளத்தில் வேலையில் அமர முடியும்.
குறிப்பாக, பெங்களூரு, மும்பை போன்ற இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் நகரங்களிலும் வெளிநாடுகளில் உள்ள பெரிய ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும் முன்னுரிமை கொடுத்து பணியமர்த்தப் படுவார்கள்.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் வரும் சென்னை, தரமணி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் அரசால் நடத்தப்படும் ‘ஹோட்டல் மேனேஜ்மென்ட் கோர்ஸ்’கள் உள்ளன. இதற்கு ‘ஆல்இண்டியா ஹோட்டல் மேனேஜ்மென்ட்’டால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மற்ற தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிலையங்-களில் பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத் தேர்வு மதிப்-பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், சேலத்தில் உள்ள சேர்வராய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலிய பல கல்வி நிலையங்களில் இந்தப் பாடப்பிரிவு உள்ளது.
ஃபேஷன் டெக்னாலஜி படிப்புக்கு பன்னிரண்-டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இது கல்வி நிலையங்களைப் பொறுத்து மூன்று, நான்கு கால ஆண்டு படிப்பாக வழங்கப்படுகிறது.
ஃபேஷன் டெக்னாலஜி படித்தவர்களுக்கு இந்திய தொழில் துறைகளில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜவுளித் துறையில் அதிக அளவுல் வேலை வாய்ப்புகள் உள்ளன. தவிரவும், இந்திய ஆடைகளுக்கு உலகளவில் இருக்கும் வரவேற்பால் இவர்களுக்கு ஏற்றுமதி துறையிலும் வரவேற்பு உள்ளது.
ஃபேஷன் டிசைனிங்கில் பன்னிரண்டாம் வகுப்பில் எந்தப் பாடத்தைப் படித்தவர்களும் சேரலாம். இது இளங்கலை, டிப்ளமா படிப்பாக வழங்கப்படுகிறது. இதில் இமேஜ் கல்சல்ட்டன்ட், ஃபேஷன் டிசைனர், ஃபேஷன் கோ-ஆர்டினேட்டர் உள்ளிட்ட பல வேலை வாய்ப்புகள் உள்ளன.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘நிஃப்ட்’ (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி), உலகளவில் ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் ஃபேஷன் டிசைனிங் படிப்புகளை வழங்கும் முன்னணி கல்வி நிலையங்களில் ஒன்று. சென்னை, பெங்களூரு, குஜராத்தின் காந்திநகர், கொல்கத்தா, மும்பை, புதுடெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் இந்த கல்வி நிலையம் உள்ளது.
முக்கியமான விஷயம்.. இங்கெல்லாம் பொதுத் தேர்வு மதிப்பெண்களை விட அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அதில் வெற்றி பெற்று அங்கு சேர்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு.
நிஃப்ட்டின் கட்டுப்பாட்டின் கீழ் திருப்பூரில் இயக்கும் ‘நிஃப்ட் – டி.ஈ.ஏ.’ கல்வி நிலையத்-திலும் ஃபேஷன் டிசைனிங் மூன்று ஆண்டுகளுக்கான டிப்ளமா கோர்ஸாக நடத்தப்படுகிறது.
நிஃப்ட் தவிரவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ்கள் உள்ளன. கல்வி நிறுவனங்களுக்கு ஏற்ப பாடத் திட்டங்கள் வேறுபடும் என்பதால், அரசு அங்கீகாரம் பெற்ற தரமான கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
டாப் 10 படிப்புகள்
இவ்வாறு பணியில் சேர்ந்த பிறகோ, முன்னரோ தொடந்து இளங்கலை, முதுகலை படிப்பது, மேல்நிலைப் பள்ளி ஆசிரியையாக அவர்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும். டியூஷன் சென்டர் துவங்குவதன் மூலம் உடனடி வேலை வாய்ப்பைப் பெறலாம்.
சென்னை, கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல நகரங்களிலும் அரசு ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் உள்ளன. தவிரவும் அரசு அங்கீகாரம் பெற்ற பல தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் இந்தக் கல்வி உள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இதற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

டாப் 10 படிப்புகள்
நீதிமன்றங்களில் பணிபுரிவதைத் தவிரவும், இப்போது இந்தத் துறையில் இன்னும் பல வேலை வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. பி.எல்., முடித்தவர்களை தங்களுக்கான சட்ட ரீதியான ஆலோசனைகள் வழங்கும் ‘சட்ட ஆலோசகர்களா’க (லீகல் அட்வைஸர்கள்) பணியமர்த்திக் கொள்வதில் பல முன்னணி நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன.
இது தவிர பி.எல் படிப்புக்குப் பிறகு ஏ.சி.எஸ் (அசோசியேட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரி) கோர்ஸை படிப்பதன் மூலம், கம்பெனிகளுக்கென்று உள்ள சிறப்பு சட்டங்களைப் படித்து, அதற்கான வேலையில் அமர முடியும். இந்த ஏ.சி.எஸ் படிப்பில் பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகும் சேர முடியும் என்றாலும், சட்டப் படிப்பை முடித்து விட்டு இந்த கோர்ஸை படித்தால் இதற்கான மரியாதை அதிகம்.
டெல்லியை தலைமையகமாகக் கொண்ட அமைப்பான ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்கரட்டரிஸ் ஆஃப் இந்தியா’வின் கிளைகள் நம் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவையில் உள்ளன. பிளஸ் டூ மற்றும் சட்டம் முடித்தவர்கள், இங்கு விண்ணப்பித்து, இந்தப் படிப்பில் சேரலாம்.
ஐந்தாண்டுப் படிப்பான பி.எல்&க்கு சட்டப் படிப்புக்கான ‘தமிழ்நாடு பொது கவுன்சிலிங்’ மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளிலும், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியிலும் சட்டப் படிப்பு உள்ளது.
வணிகவியல் தொடர்பான படிப்புகளுக்கு அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்-களிலும் இருக்கும் தேவையே இதற்குக் காரணம். பி.காம், பி.பி.ஏ., முடித்துவிட்டு உடனே வேலை தேடுவதைவிட, படிக்கும்போதே சி.ஏ. (சார்டர்டு அக்கவுன்டன்ட்), காஸ்ட் அக்கவுன்ட்ஸ், கம்பெனி செக்ரட்டரிஷிப் போன்ற வணிகவியல் தொடர்பான படிப்புகளைப் படிப்பது, வேலை வாய்ப்புகளை எளிதில் வசப்படுத்தும்.
இன்று இந்தப் படிப்புகளில் சேரும் பலரும், மேற்படிப்பாக எம்.பி.ஏ அல்லது எம்.சி.ஏ., படிக்கும் எண்ணத்தோடுதான் சேருகிறார்கள். அந்த கணிப்பு சரிதான். அதிலும் எம்.பி.ஏ.,வில் ரீடெயில் மேனேஜ்மென்ட், ஃபார்மா மேனேஜ் மென்ட், ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் போன்ற சிறப்புப் பிரிவுகளை தேர்ந்தெடுத்துப் படிக்கும்போது, அதற்கான வேலை வாய்ப்பும் கூடுகிறது.
அரசு, தனியார் கல்லூரிகளில் வழங்கப்படும் இந்தக் கல்விக்கு, அந்தந்தக் கல்வி நிலையங்-களுக்கு விண்ணப்பிக்க, மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
பி.ஏ., ஆங்கிலம்: ஆங்கில இலக்கியம் படிப்பவர்களுக்குத்தான் இப்பொழுது பி.பி.ஓ (பிஸினஸ் பிராசஸ் அவுட்ஸோர்ஸிங்) துறையிலும், மொழிபெயர்ப்பு துறையிலும் வேலை வாய்ப்பு்புகள் விரிந்து கிடக்கின்றன. கூடவே, கைக்கடிகாரம் முதல் கணினி வரை மார்க்கெட்டில் விற்பனையாகும் பொருட்களை உபயோகிப்பது பற்றிய குறிப்புகள் அடங்கிய ‘பிரவுச்சர்’களுக்கு எழுத்தாக்கம் கொடுக்கவும் (டெக்னிகல் ரைட்டிங்), வெப் டிசைன் துறைகளில் எழுத்து சம்பந்தப்பட்ட வேலைகளிலும் ஆங்கில இலக்கியம் முடித்தவர்களின் தேவையே அதிகம் நாடப்படுகிறது.எனவே நல்ல ஆங்கில அறிவு அமையப் பெற்றிருக்கும் பி.ஏ., ஆங்கில இலக்கிய மாணவர்களுக்கு, சிறப்பான எதிர்காலம் உள்ளது.அதனால், இந்த இரு துறைகளுக்குமான முக்கியத்துவமும் அதிகரித்துள்ளது.ஜூஸில் இருந்து ரெடிமேட் மாவு வரை சந்தையில் கொட்டிக் கிடக்கும் உணவுப் பொருட்களே இவற்றுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துகின்றன.இவை தவிர ஆய்வகங்களிலும் மருத்துவமனைகளிலும் இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கான தேவை உள்ளது.மேற்சொன்ன இரண்டு படிப்புகளிலும், எம்.எஸ்சி படிப்பதை விடவும், மெடிக்கல் மைக்ரோ பயாலஜி, மெடிக்கல் பயோடெக்னாலஜி.. என்று மருத்துவம் தொடர்பானமேற்படிப்புகளை படித்தால், மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு விரிவுரையாளராகவும் பணியாற்றலாம். இதற்கு தற்போது அதிக தேவை இருக்கிறது.பயோ டெக்னாலஜியும் மைக்ரோபயாலஜியும் தமிழகத்தின் பல கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகின்றன.இதற்கு பன்னிரண்டாம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவர, விலங்கியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tuesday, 22 March 2016

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வருமானவரித்துறை ’நோட்டீஸ்’

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வருமானவரித்துறை ’நோட்டீஸ்’


பனமரத்துப்பட்டி யூனியனில் உள்ள அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள்,வருமானவரி கணக்கை தாக்கல் செய்யும்படி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சேலம், பனமரத்துப்பட்டி யூனியனில், 50க்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள், 2010-2011 முதல் நான்கு ஆண்டுகளுக்கான வருமானவரி கணக்கை, பத்து நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் வழங்கி உள்ளது.


இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: சம்பளத்தில்,வருமானவரிக்கான டி.டி.எஸ். பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆடிட்டர் மூலம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வருமானவரி கணக்கை பைல் செய்து தருவதாக, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் ஆசிரியர்களிடம் பணம் வசூல் செய்தார். அவர்,சொன்னபடி நான்கு ஆண்டுகளுக்கான கணக்கை பைல் செய்யாமல் விட்டுள்ளார். அதனால், வருமான வரித்துறையில் இருந்து எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tamil University (DDE) May 2016 UG & PG Examinations Time Table

Tamilnadu Revised Scales of Pay Rules,2009- Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade/Special Grade in the revised scales of pay - Orders -

Tamilnadu Revised Scales of Pay Rules,2009- Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade/Special Grade in the revised scales of pay - Orders - Issued on GO.237 ( Finance Dept) Dt.22.07.2013 GO.237 ( Finance Dept)


Dt.22.07.2013
 Tamilnadu Revised Scales of Pay Rules,2009- Grant of one additional increment of 3% of basic pay to employees on award of Selection Grade/Special Grade in the revised scales of pay - Orders - Issued.




 

Sunday, 20 March 2016

சத்துணவு வழங்கப்படாததால் மாணவர் வருகை குறைவு ஆசிரியர்கள் சங்கம் புகார்

சத்துணவு வழங்கப்படாததால் மாணவர் வருகை குறைவு ஆசிரியர்கள் சங்கம் புகார்.

'தமிழக பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படாததால் மாணவர்கள் வருகை சதவீதம் குறைந்துள்ளது' என, தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.தமிழக அரசு 1984 ஜூலை 26ல் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் (சனிக்கிழமை உட்பட) ஆண்டுக்கு 220 நாட்கள் சத்துணவு வழங்க வேண்டும் என அரசாணை வெளியிட்டது.

பின், மாதந்தோறும் வாரம் இருமுறை என,மாதம் 8 முறை முட்டை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த சில நாட்களாக சத்துணவு வழங்காததால் மாணவர்கள் மயங்கி விழும் சூழ்நிலை உள்ளதாக ஆசிரியர்கள் சங்கங்கள் புகார் கூறியுள்ளன.இதுகுறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு உயர்நிலை -மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பியுள்ளது.மாணவர்கள் மயக்கம்:அதில் கூறியிருப்பதாவது: உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் கடந்த சிலநாட்களாக சத்துணவை நிறுத்தி விட்டனர். 'ஏப்., 1 முதல் புத்தாண்டு கணக்கு துவங்க உள்ளதால் சத்துணவு தர இயலாது' என அவர்கள் மாணவர்களிடம் கூறிவருகின்றனர். இதனால் சத்துணவின்றி வீடு திரும்பும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர், என தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முருகேசன்,ஜெகதீஷ்குமார், செந்தில்குமார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 251 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி சத்துணவு அமைப்பாளர்களின் மெத்தனத்தால் இவ்வாறு நடந்துள்ளது. நடப்பாண்டில் பள்ளிகளில் 200 வேலை நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது. இவர்களின் செயல்பாட்டை கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.
இதுகுறித்து விரிவான அறிக்கையைபள்ளிக்கல்வித்துறைக்கும் அனுப்பி உள்ளோம், என்றனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெசி கூறுகையில், “200 வேலைநாட்களுக்குபின் சத்துணவை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையெனில் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவு வந்தால் மட்டுமே சத்துணவு வழங்குவோம்” என்றார்.
கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், பிளஸ் 1 வகுப்பு இறுதி தேர்வு நடந்து வரும் நிலையில்,அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ.,திட்டம் கீழ், மாணவர்களுக்கு பாடம் நடத்துவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன.

தேர்வு அறை கண்காணிப்பு பணி; விடைத்தாள் திருத்தும் பணி; 'டிஸ்லெக்சியா ' எனப்படும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர் மற்றும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்யும் பணி என, ஆசிரியர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.ஆனால், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, 'கட்டகங்கள்' எனப்படும் பயிற்சி கையேடு தயாரிப்பது குறித்து, 10 நாள் பயிற்சி முகாமை, ஆர்.எம்.எஸ்.ஏ., அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மார்ச், 17 முதல், மாநிலம் முழுவதும் இந்த பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. இதில் பங்கேற்க வரும்படி, சமூக அறிவியல் ஆசிரியர்கள் திடீரென கட்டாயமாக அழைக்கப்பட்டதால், தேர்வு பணி மற்றும் பள்ளிகளில், மூன்றாம் பருவ பாடம் எடுக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு வந்து விட்ட நிலையில்,பயிற்சியே கண்ணாய் இருக்கும் அதிகாரிகளின் நிலையை நினைத்து, தலைமை ஆசிரியர்களும், சமூக அறிவியல் ஆசிரியர்களும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். 'அதிகாரிகளே... உங்கள் கடமை உணர்வுக்கு அளவே இல்லையா?'என, மனம் நொந்தபடி நிலைமையை சமாளித்து வருகின்றனர்.

Saturday, 19 March 2016

EASY SHORT TO TEACH ENGLISH

CRC- மீட்டிங்

Saturday, March 19

   
CRC- மீட்டிங் -தற்செயல் விடுப்பு -இல்லை -SSA- இயக்குனர் பதில் --டாட்டா கிப்சன் -


 

அடையாளம்- முகவரிக்கு இனி ரேஷன் கார்டு செல்லாது

அடையாளம்- முகவரிக்கு இனி ரேஷன் கார்டு செல்லாது!

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

 "பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று ஆவணமாக குடும்ப அட்டையும் இடம் பெற்று இருந்தது. தற்போது முகவரிக்கான சான்றாவணத்தில் இருந்து குடும்ப அட்டை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோக துறை கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி வெளியிட்ட அரசாணையில் குடும்ப அட்டை வினியோகம் செய்யப்படுவது உணவு பொருட்கள் வாங்குவதற்காகதான். அதனை அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான ஆவணமாக பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த ஆணையை இந்திய வெளி விவகாரத்துறை ஏற்று உள்ளது. இதன் அடிப்படையில் குடும்ப அட்டையை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையின் நகலை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக இணைக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்

அடையாளம்- முகவரிக்கு இனி ரேஷன் கார்டு செல்லாது

அடையாளம்- முகவரிக்கு இனி ரேஷன் கார்டு செல்லாது!

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.இது தொடர்பாக திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

 "பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று ஆவணமாக குடும்ப அட்டையும் இடம் பெற்று இருந்தது. தற்போது முகவரிக்கான சான்றாவணத்தில் இருந்து குடும்ப அட்டை நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோக துறை கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி வெளியிட்ட அரசாணையில் குடும்ப அட்டை வினியோகம் செய்யப்படுவது உணவு பொருட்கள் வாங்குவதற்காகதான். அதனை அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான ஆவணமாக பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த ஆணையை இந்திய வெளி விவகாரத்துறை ஏற்று உள்ளது. இதன் அடிப்படையில் குடும்ப அட்டையை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையின் நகலை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக இணைக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்

Thursday, 17 March 2016

தொடக்க கல்வி அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை

தொடக்க கல்வி அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை


ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறாததால் வேடசந்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும், கோவிலூர் பள்ளி ஆசிரியர் செந்தில்குமாரின் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்த கோரியும், மாவட்ட அளவிலான காத்திருப்பு போராட்டம் மார்ச் 9ல் திண்டுக்கல்லில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
மாவட்ட கல்வி அதிகாரி வேடசந்தூர் தொடக்க கல்வி அலுவலகத்தின் மூலம் பள்ளி ஆசிரியர் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதன்பின், உதவி துவக்க கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரச்னையை தீர்க்க கோரினர்.
மாவட்ட அதிகாரியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என உதவி கல்வி அலுவலகத்தில் தெரிவித்தனர். இதனால் நேற்று மாலை அங்கு ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். இரவு 8 மணி வரை அலுவலர்கள் வெளியே வரஇயலவில்லை.
இதில் போராட்டத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அமல்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், வேடசந்தூர் வட்டார தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக பல்கலைகளில், தகுதியற்ற பட்டங்கள் வழங்கி, எழுத, படிக்க தெரியாத பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர்.

எழுத படிக்க தெரியாத பட்டதாரிகளை உருவாக்கும் பல்கலை கழகங்கள்.
தமிழக பல்கலைகளில், தகுதியற்ற பட்டங்கள் வழங்கி, எழுத, படிக்க தெரியாத பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். தகுதியற்றவர்கள், துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்கள் ஆகின்றனர். இதற்கு, ஊழல் மலிந்த உயர்கல்வித்துறையே காரணம். பல்கலைகளும், கல்லுாரிகளும் பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் விதிமுறைகளின் படியே செயல்பட்டு, பட்டதாரிகளை உருவாக்க வேண்டும். ஆனால், சில ஆண்டுகளாக, யு.ஜி.சி., விதிகளை துச்சம் என துாக்கி வீசி விட்டு, பல்கலைகளும், கல்லுாரிகளும் செயல்படுகின்றன.


பேராசிரியரில் துவங்கி, துணைவேந்தர் நியமனம் வரை, தகுதியற்றவர்களே பெரும்பாலும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியராக, 10 ஆண்டு அனுபவம் பெற்றவரையே, துணைவேந்தராக்க வேண்டும். ஆனால், இணை பேராசிரியரும், அனுபவம் இல்லாத பேராசிரியர் பலரும் துணைவேந்தராகி உள்ளனர். இதற்கு அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் மோசமான செயல்பாடுமே காரணம். தமிழ்நாடு ஆசிரியர் கல்வி வாரிய மான, டி.ஆர்.பி., மூலம், 1,000 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதில், உச்ச நீதிமன்ற உத்தரவையே மதிக்கவில்லை. யு.ஜி.சி.,யின், 2009 மற்றும், 2010 நெறிமுறைகளை, தமிழக பல்கலைகளில், ஆறு ஆண்டுகளாகியும் அமல்படுத்தவில்லை. அதனால், பல பல்கலைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி நிறுத்தப்பட்டு, பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல், நிதி நெருக்கடி உள்ளது. மதுரை தியாகராஜா கல்லுாரியில் மட்டும், 20 பேருக்கு பல மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை.


மதுரை காமராஜர் பல்கலையில், எம்.எஸ்சி., எலக்ட்ரானிக்ஸ் துறைக்கு, கடலியல் படித்தவரும், இளைஞர் நலன் துறைக்கு, நிர்வாகவியல் படித்தவர்களும் பேராசிரியராகியுள்ளனர். 'திருவள்ளூர் பல்கலையில், பெரும்பாலான பேராசிரியர்களுக்கு தகுதியே இல்லை' என, நீதிமன்றத்தில், யு.ஜி.சி., கூறியுள்ளது. அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் பேராசிரியர்களை நியமிக்கவும், முறைகேடுகள் நடக்கின்றன. முறைகேட்டுக்கு துணை போகாத கல்லுாரிகளுக்கு, ஆசிரியர்களை நியமிக்க அனுமதி அளிக்க வில்லை. அதனால், 4,000 பணியிடங்களில் ஆசிரியர்கள் இல்லை. பல பாடங்களுக்கு ஆசிரியர்களே இல்லாமல், பட்டங்கள் வழங்கப்படுகின்றன. பேராசிரியர் நியமனத்திற்கு போட்டித் தேர்வு வைத்து தகுதி பார்க்க வேண்டும். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி.,யில் மறைமுக சிபாரிசுப்படி நியமனம் நடந்துள்ளதால், பல கல்லுாரி ஆசிரியர்கள் பள்ளிப் படிப்பை கூட கற்பிக்க முடியாதவர்களாக உள்ளனர்.பல்கலைகள், 'ரெகுலர்' வகுப்புகளையும், தொலைதுார வகுப்புகளையும் நடத்த, பல விதிமுறைகள் உள்ளன. 'தொலைதுார கல்வியில் தனியார் ஏஜன்சிகள் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது' என, கட்டுப்பாடு உள்ளது. ஆனால், பல பல்கலைகள் பெட்டிக் கடை போல், தனியார் ஏஜன்சிகள் மூலம், வகுப்புகளை நடத்துகின்றன.


பல்கலை மற்றும் கல்லுாரிகளில் தங்கள் விருப்பத்துக்கு, கல்வி கட்டணத்தை உயர்த்துகின்றனர். உதாரணமாக, கோவையில் உள்ள பாரதியார் பல்கலை, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனம் மூலம், 'ரெகுலர்' கல்லுாரியை நடத்துகிறது. ஆனால், தொலைதுார கல்வி போல், வார விடுமுறை நாட்களில் தான் பாடம் நடத்துகின்றனர். இதுபோன்ற கல்லுாரிகளின் பட்டங்கள் செல்லாது என, மாணவர்களுக்கு தெரியாது. அவர்கள் அரசு பணிகளில் சேரும் போதோ, அல்லது சான்றிதழின் உண்மை தன்மையை ஆய்வு செய்யும் போதோ தான், உண்மை தெரியும். தரமான பேராசிரியர்கள் மூலம் கற்பித்து பட்டம் வழங்குவதற்கு பதில், மாநிலத்தின் உயர்கல்வி சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில், உயர்கல்வி செயல்படுவதால், எழுத, படிக்க தெரியாத பட்டதாரிகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளனர். ஆனால், இவற்றின் பெயரில் கல்லுாரி கல்வி இயக்ககம் மூலம், பண ஒதுக்கீடு, 'பில்' மட்டும், 'பாஸ்' ஆகுது. பி.எட்., தனியார் கல்லுாரிகளில், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு பெறவும், மாணவர் சேர்க்கை அனுமதி பெறவும், பல லட்சம் ரூபாய் வாங்கியதாக, கல்லுாரி முதல்வர்களே சமீபத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.


இப்படி, ஆயிரக்கணக்கில் முறைகேடுகளும், விதிமீறல்களும் உள்ளதால், லஞ்ச ஒழிப்பு துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகள், சுதந்திரமான விசாரணை நடத்தி, விதி மீறியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராசிரியர் ஏ.ஆர்.நாகராஜன் பொதுச் செயலர், 'நெட், ஸ்லெட்' அசோசியேஷன்

TNPSC ; Results of Departmental Examinations - DECEMBER 2015 (Updated on 17 March 2016

வேலூர்: திமுக ஐஸ்கிரீம் மாதிரி. தேமுதிக அதன் மீது வைக்கப்படும் செர்ரிப் பழகம்தான்

வேலூர்: திமுக ஐஸ்கிரீம் மாதிரி. தேமுதிக அதன் மீது வைக்கப்படும் செர்ரிப் பழகம்தான். ஐஸ்கிரீமைத்தான் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். செர்ரியைத் தூக்கி எறிந்து விடுவார்கள். விஜயகாந்த்தும், தேமுதிகவும், எங்களுக்குத் தேவையில்லை என்று திமுக மூத்த தலைவர் துரைமுருகன் கூறியுள்ளார்.பழம் கனிந்து வருகிறது. விரைவில் பாலில் விழும் என்று முன்பு தேமுதிக கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். ஆனால் பழம் என்ன ஆனது, எங்கே போனது என்று தெரியவில்லை.இந்த நிலையில் இன்னொரு பழக் கதையைக் கூறி திமுகவுக்கு தேமுதிக தேவையில்லை என்று துரைமுருகன் அட்டாக் செய்துள்ளார்.
Read l

'மட்டம்’ போடும் ஆசிரியர்களால் அரசுக்கு இழப்பு

'மட்டம்’ போடும் ஆசிரியர்களால் அரசுக்கு இழப்பு!


கல்வித் துறையில் உள்ள பல்வேறு ஊழல்களால், கல்வித் தரம் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுகிறது. இந்தியாவில், 25 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்காமல், மட்டம் போடுவதால், ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.



உலக அளவில் பல்வேறு துறைகளில் உள்ள ஊழல்கள் குறித்த ஆண்டு அறிக்கையை, ஜெர்மனியை தலைமையிடமாக வைத்து செயல்படும், டிரான்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அரசு சாரா அமைப்பு வெளியிட்டு வருகிறது. கல்வித் துறையில் உள்ள ஊழல்கள் குறித்த, 448 பக்கங்கள் அடங்கிய, மிக விரிவான அறிக்கையை, அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.


ஆரம்ப கல்வி:


கல்வித் துறையில் ஊழல்களுக்கான வாய்ப்புகள் குறித்தும், நடந்து வரும் மோசடிகள் குறித்தும் இந்த அறிக்கை தோலுரித்து காட்டியுள்ளது.குறிப்பாக, ஆரம்ப கல்வித் துறையில் உள்ள ஊழல்கள், முறைகேடுகள், அனைவருக்கும் கல்வி உரிமையை நசுக்குவதாக உள்ளதாக அறிக்கை கூறுகிறது. அதில், மிக முக்கியமான பிரச்னையாக இந்த அறிக்கை கூறுவது, ஆசிரியர்களின் விடுமுறையைத் தான். ஆண்டு விடுமுறைகளைத் தவிர, பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பது, பள்ளிக்கு மட்டம் போட்டு, தன் சொந்த வேலையைச் செய்வது ஆகிய வற்றையும் குறிப்பிடுகிறது.


மேலும், அரசு திட்டப் பணிகளுக்குசெல்வதாகக் கூறி, சொந்த வேலைக்கு செல்வதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு ஆசிரியர்கள் அதிகளவு விடுமுறை எடுக்கும் நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனால், இந்தியாவில் ஆண்டுக்கு, 14 ஆயிரம் கோடி ரூபாய் வீணடிக்கப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.


அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது:


உலக அளவில், ஆசிரியர்கள் அதிக அளவில் விடுமுறை எடுப்பது அல்லது பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதில், கென்யா, 30 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. உகாண்டாவில், 27 சதவீதம் பேரும்; இந்தியாவில், 25 சதவீதம் பேரும் விடுமுறையில் இருக்கின்றனர். இதில், தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையில் இருப்பவர்கள், 10 சதவீதத்தினர் மட்டுமே.


மக்கள் கணக்கெடுப்பு, போலியோ சொட்டு மருந்துகொடுப்பது உள்ளிட்ட அரசு பணிகளுக்காக செல்வது என, 7 சதவீதம் பேர் பள்ளிகளுக்கு வருவதில்லை. மீதமுள்ளவர்கள், தங்களுடைய சொந்த தொழில் அல்லது வேறு வேலையைச் செய்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 431 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 431 பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு


 இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 01/2016
பணி: Primary Teacher (PRTs)

காலியிடங்கள்: 141
சம்பளம்: மாதம் ரூ.21,250
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Trained Graduate Teachers (TGTs)
காலியிடங்கள்: 168
சம்பளம்: மாதம் ரூ.26,250
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்று பி.எட் முடித்திருக்க வேண்டும். மேலும் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Post Graduate Teachers (PGTs)
காலியிடங்கள்: 122
சம்பளம்: மாதம் ரூ.27,500
தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் கணினி துறையில் பி.எஸ்சி, பி.இ, பி.டெக், எம்.எஸ்சி, எம்சிஏ முடித்திருக்க வேண்டும். மற்ற பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டத்துடன் பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
.வயதுவரம்பு: அனைத்து பணிகளுக்கும் 31.03.2016 தேதயிஎன்படி 18 - 65க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:23.03.2016 முதல் 31.03.2016 வரை நடைபெறும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:18.03.2016
 

Wednesday, 16 March 2016

பள்ளிகளில் உலகவனநாள்

பள்ளிகளில் உலகவனநாள் - மார்ச் 21,உலக நீர் தினம்,மார்ச் -22 கொண்டாட அறிவுறுத்துதல்.

உலகின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பாலஸ்தீனிய ஆசிரியை.

உலகின் சிறந்த ஆசிரியர் விருது பெற்ற பாலஸ்தீனிய ஆசிரியை.

பாலஸ்தீனிய நாட்டில் உள்ள அகதிகளுக்கு ஆசிரியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் உலகிலேயே மிகச் சிறந்த ஆசிரியராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போப் பிரான்சிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 150 நகரங்களில் ஏப்ரல் 19 முதல் 25-ஆம் தேதி வரை இணையவழியில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருவதாலும் மாணவர், பெற்றோர் வலியுறுத்தியதாலும் இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப நாள் மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தேர்வெழுதும் நாளுக்கான பதிவு மார்ச் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் மே 1-ஆம் தேதி வெளியிடப்படும்.இதே போல் உடல் நல அறிவியல் ("ஹெல்த் சயின்ஸஸ்') பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, எம்.டெக் படிப்புக்கான எஸ்.ஆர்.எம்.ஜி.இ.இ.டி. தேர்வு, எம்.பி.ஏ. படிப்புக்கான எஸ்.ஆர்.எம். "கேட்' நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கும் விண்ணப்பிக்கும் நாள் மார்ச் 30-ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

Tuesday, 15 March 2016

7ம் வகுப்பு மாணவன் பலி; சக மாணவன் தள்ளியதால் விபரீதம்

7ம் வகுப்பு மாணவன் பலி; சக மாணவன் தள்ளியதால் விபரீதம்


வகுப்பறையில் சக மாணவன் தள்ளியதில், கீழே விழுந்த மாணவன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.  விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர், அன்பரசு மகன் பாலமுருகன், 12; அம்மையகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு, பள்ளியில் இரண்டாம் பாடவேளை ஆசிரியர் வருவதற்குள், பாலமுருகன், சக மாணவரை மற்றொரு மாணவன் மீது தள்ளி விட்டுள்ளார்.


ஆத்திரமடைந்த மாணவன், பாலமுருகனின் முகத்தில் தாக்கி, கழுத்தைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில், பாலமுருகனின் பின் மண்டை பெஞ்சில் மோதியதில், மயங்கி விழுந்தார்.


தகவலறிந்த தலைமை ஆசிரியை கவுசல்யா மற்றும் ஆசிரியர்கள், பாலமுருகனை, சின்ன சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாலமுருகன் இறந்தார். கள்ளக்குறிச்சி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம் : 3 இடங்களில் உடனடி வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை

தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் தொடக்கம் : 3 இடங்களில் உடனடி வாக்காளர் அட்டை வழங்க நடவடிக்கை


 தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கின. 3 இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை உடனடியாக தயாரித்து வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன.


         தமிழக சட்டப்பேரவைக்கு மே 16-ம் தேதி ஒரே கட்டமாக வாக் குப்பதிவு நடத்தப்படுகிறது. இதை யடுத்து, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன் ஏப்ரல் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, தற்போது கல்லூரி களில் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் ஆன்லைன் மூலம் சேர்த்துக் கொள்ள லாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத் தம், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அட்டை பெறுதல் உள் ளிட்ட பணிகளில் பொதுமக்களுக்கு உதவுவதற்காக டிஆர்ஓ அலுவல கங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவல கங்கள் மற்றும் சென்னை மாநக ராட்சி மண்டல அலுவலகங்கள் என என 363 இடங்களில் வாக்காளர் சேவை மையம் அமைக்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருந்தார்.
இதன்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் சேவை மையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங் கின. மேலும், சென்னையில் 3 இடங் களில் புதிய வாக்காளர் அடையாள அட்டை தயாரிப்பதற்கான இயந் திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மையங்களில், தேர்தல் தொடர் பான புகார் தெரிவிப்பதற்கான சேவையும் விரைவில் தொடங் கப்பட உள்ளது.
கூடுதல் துணை ராணுவப் படைகள்
தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 65, 616 வாக்குச் சாவடிகள் உள்ளன. வாக் காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்கெனவே 700-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ஆணையத்தின் அனுமதியை தமிழக தேர்தல் துறை கோரி யுள்ளது. இதுதவிர, தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் பதற்ற மான, மிக பதற்றமான வாக்குச் சாவடிகளை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
துணை ராணுவப்படையின் தேவை தொடர்பாக ஆலோசிக்க, தேர்தல் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘கடந்த தேர்தலின்போது 240 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். ஒரு கம்பெனிக்கு 72 வீரர்கள் இருப்பார்கள். இந்தமுறை துணை ராணுவப் படையினர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கப்படும் என தெரிகிறது’’ என்றார்
i

பகுதி நேர பயிற்றுநர் ஊதியம் 2015-16 - மார்ச் 2016 ஊதியம்

பகுதி நேர பயிற்றுநர் ஊதியம் 2015-16 - மார்ச் 2016 ஊதியம் வழங்கல் மற்றும் பயன்படுத்தாத பள்ளி மான்யத்தை 31.03.2016க்குள் திரும்ப பெற உரிய நடவடிக்கை எடுக்க இயக்குனர் உத்தரவு

Monday, 14 March 2016

தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி:பிளஸ் 2 வேதியியல் தேர்வில் வினாத்தாள் 'லீக்?'


பிளஸ் 2 வேதியியல் தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள, சில தனியார் பள்ளிகளுக்கு மட்டும் வினாத்தாள், 'லீக்' ஆகியுள்ளது. இதனால், வேதியியலுக்கு மறு தேர்வு நடத்தப்படுமா என, மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று கணித, அறிவியல் பிரிவுக்கு வேதியியல் பாட தேர்வும்; பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு, கணிதப் பதிவியல் தேர்வும் நடந்தது. இதில், வேதியியல் பாட தேர்வில், திருவள்ளூர் மாவட்டத்தில், வினாத்தாள், 'லீக்' ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகின.


குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையை ஒட்டி உள்ள முகப்பேர், அம்பத்துார், திருவொற்றியூர், திருமழிசை, பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில், சில தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு மட்டும், வினாக்களின் பட்டியல், நேற்று முன்தினம் மாலையில் கிடைத்துள்ளது.
இந்த பகுதி மாணவர்கள், வேறு மாவட்டங்களில் உள்ள தங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கும் வினாக்களை, நேற்று முன்தினம் இரவில் பகிர்ந்து, விடைகளை கண்டுபிடித்துள்ளனர்.
குறிப்பாக, பல ஆசிரியர்களிடம் நேற்று முன்தினம், விடைகளை கேட்டுள்ளனர். நேற்று தேர்வு துவங்கிய பின் தான், மாணவர்களும், சில பெற்றோரும் பகிர்ந்து கொண்ட வினாக்கள் அனைத்தும், நேற்றைய வினாத்தாளில் இருந்தது தெரியவந்தது. சில பள்ளிகள், மாணவர்களிடம் வினாத்தாளின் முக்கிய அம்சங்களை மட்டும், நகல் எடுத்து கொடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.


இதுகுறித்து தகவலறிந்த ஆசிரியர்கள், தேர்வுத்துறை, கல்வித்துறை அதிகாரிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் தகவல் அளித்துள்ளனர். இந்த புகாரால் தேர்வுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வினாத்தாள் எப்படி, 'லீக்' ஆனது; யாரால், எந்த பள்ளிக்கு வழங்கப்பட்டது என, கல்வித்துறை அதிகாரிகளும், போலீசும் இணைந்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்தப் புகாரால், வேதியியல் தேர்வு மீண்டும் மறு தேர்வாக நடத்தப்படுமா என, மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்து உள்ளனர்.


இதுகுறித்து விளக்கம் கேட்க, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியை தொடர்பு கொண்ட போது, ''நாங்கள் மிகவும் பாதுகாப்பாகவே, வினாத்தாள்களை அனுப்புகிறோம்; லீக் ஆவதற்கான வாய்ப்பே இல்லை,'' என்றார்.


திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சீதாலட்சுமிடம் கேட்ட போது, ''எனக்கு புகார் எதுவும் வரவில்லை,'' என்றார். இதற்கிடையில் திருவள்ளூர் மாவட்டத்தில், முறைகேடு புகாரில், 16 தனித்தேர்வர்கள், ஒரு பள்ளி மாணவர் பிடிபட்டனர்.
பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினம்:மாணவர்கள் திணறல்


தேனி:நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது என்றும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறையும் என்றும் மாணவர்கள் தெரிவித்தனர்.தேனி மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களின் கருத்து:நிவேதா லட்சுமி (தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, தேனி): வேதியியல் பாடத்தில் 3, 5 மற்றும் 10 மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்தபடி கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வினாக்கள் புத்தகம், 'புளூபிரின்ட்' அடிப்படையில் கேட்கப் பட்டிருந்ததால் பல வினாக்களுக்கு எளிமையாக பதில் அளிக்க முடிந்தது.


ஒரு மதிப்பெண் வினாவில் எண் 70ல் (ஆ) பிரிவில் தொகுதி 11 என்பதற்கு பதிலாக, ரோமன் லெட்டர் வடிவத்திலான இரண்டு என இருந்ததால், பதில் அளிப்பதில் குழப்பம் ஏற்பட்டது. நன்றாக படிக்கும் மாணவர்கள் மட்டுமே இக்கேள்விக்கு பதில் அளிக்க முடியும்.
எம்.லட்சுமி விநேகா (சிசம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போடி): ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண்களுக்கான கேள்விகள் மிக எளிதாக இருந்தது. 10 மதிப்பெண் கேள்விகளில், சப் -டிவிஷனாக கொடுக்கப்பட்ட இரண்டு கேள்விகளில் ஒரு கேள்வி கடினம். இதுவரை கேட்காத கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. இத் தேர்வில் கடந்த முறை கேட்ட வினாக்கள் எதுவும் கேட்கப்படவில்லை. புத்தகம் முழுவதும் புரிந்து படித்திருந்தால் மட்டுமே, அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.
பி.சரவணக்குமார் (என்.எஸ்.கே.பி.,மேல்நிலைப்பள்ளி, கூடலுார்.): மூன்று மதிப்பெண் வினாக்களில், எதிர்பார்த்தது எதுவும் வர இல்லை. இதே போல் 10 மதிப்பெண் வினாக்களிலும் எதிர்பார்க்காதவைகள் அதிகம் இருந்தன. அதில் 64வது வினா புதியதாக இருந்தது. கட்டாய வினாக்கள் எளிதாக இருந்தன. ஒட்டு மொத்தத்தில் வேதியியல் வினாத்தாள் கடினமாக இருந்தது. சென்டம் எடுப்பது சிரமம்.


முருகன் ( வேதியியல் ஆசிரியர், தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேனி): வினாத்தாள் 'புக்பேக்' , 'புளூபிரின்ட்' அடிப்படையாக அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால், சராசரி மாணவர்களும் எளிதில் தேர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது.
ஒரு மார்க் வினாவில் 'ஏ' சீரியலில் கேட்கப்பட்டிருந்த 18வது வினா,' C5H12 O' என வாய்ப்பாட்டில் ஈதர் மாற்றமைப்புகளின் எண்ணிக்கை என' கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் புத்தகத்தில் C4H10 O என இருக்கிறது. சீரியல் 20ல், மாணவர்கள் சிந்திக்கும்படி கேள்வி கேட்கப்பட்டிருந்தது. மாணவர்களை குழப்பும் வகையில் பல வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால், இத்தேர்வில் மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண் பெறுவது கடினம்.


நுாற்றுக்கு நுாறு எண்ணிக்கை குறையும்:திருநெல்வேலியை சேர்ந்த வேதியியல் ஆசிரியர்கள் கூறியதாவது:பத்து மதிப்பெண் தேர்வில் 70வது கேள்வியான தொகுதி 11, வரிசை 4 என துவங்கும் கேள்வி தவறாகும்.தொகுதியை ரோமன் எண்ணில் குறிப்பிடுவதற்கு பதிலாக, 11 என குறிப்பிட்டிருப்பதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதே போல 5 மதிப்பெண் கேள்விகளில், பிளஸ் 2 தேர்வுகளிலேயே இதுவரை கேட்கப்படாத கேள்வி கேட்டுள்ளனர். அந்த கேள்விக்கான விடை புத்தகத்தில் இருந்தாலும், புத்தகத்தையே கரைத்து குடித்தது போல படித்த மாணவர்கள் தான் அதற்கு சரியான விடையை எழுதியிருக்க முடியும். நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு கணிசமாக குறையும்.இவ்வாறு தெரிவித்தனர்.

மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!

மாற்றுத்திறன் மாணவியருக்கு உதவித்தொகை!


அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், 367 மாற்றுத்திறன் மாணவியருக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாற்றுத்திறன் மாணவியர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதத்துக்கு 200 வீதம், ஒரு கல்வியாண்டில், பத்து மாதத்துக்கு, 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.


நடப்பு கல்வியாண்டில், இந்த உதவித்தொகைக்கு, சேலம் மாவட்டத்தில், 367 மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவியர் நடப்பு கல்வியாண்டில், பத்து மாதங்கள் பள்ளிக்கு வந்ததை உறுதி செய்யும் சான்று, மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்கள் ஆகியவை தலைமை ஆசிரியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.


மாணவியருக்கான உதவித்தொகை நேரடியாக, அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. மார்ச், 31ம் தேதிக்குள் இத்தொகையை மாணவியருக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் குடும்ப நலநிதி ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90 பிடித்தம் செய்ய வேண்டும்

மார்ச் மாதம் குடும்ப நலநிதி ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90 பிடித்தம் செய்ய வேண்டும்


குடும்ப நலநிதி உயர்த்திய அரசாணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016
எனவே மார்ச் மாதம் ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90மட்டும் மார்ச் மாத ஊதியத்தில்  பிடித்தம் செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதம்  முதல் ரூ.60 மட்டும் பிடித்தால் போதும்.




இது ஆசிரியர், அரசு ஊழியர்கள மற்றும்  உதவி பெறும் பள்ளி உள்ளிட்ட சத்துணவு  அங்கன்வாடி அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்......
 

மார்ச் மாதம் குடும்ப நலநிதி ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90 பிடித்தம் செய்ய வேண்டும்

மார்ச் மாதம் குடும்ப நலநிதி ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90 பிடித்தம் செய்ய வேண்டும்


குடும்ப நலநிதி உயர்த்திய அரசாணை 57 dated 22.02.2016 பிப்ரவரி மாதம் முதல் அமல் FBF.
Deduction from Rs.30 to Rs.60
wef: 1.2.2016
எனவே மார்ச் மாதம் ரூ.60 பிப்ரவரி மாத நிலுவை ரூ.30 ஆக மொத்தம் ரூ.90மட்டும் மார்ச் மாத ஊதியத்தில்  பிடித்தம் செய்ய வேண்டும்.
ஏப்ரல் மாதம்  முதல் ரூ.60 மட்டும் பிடித்தால் போதும்.




இது ஆசிரியர், அரசு ஊழியர்கள மற்றும்  உதவி பெறும் பள்ளி உள்ளிட்ட சத்துணவு  அங்கன்வாடி அனைத்து பணியாளர்களுக்கும் பொருந்தும்......
 

முக்கியச் செய்தி +2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியீடு அரசு தேர்வுகள் இயக்கம் தகவல்.

முக்கியச் செய்தி +2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியீடு அரசு தேர்வுகள் இயக்கம் தகவல்.


12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி  தகவல் தெரிவித்துள்ளார்


தமிழகத்தில் நடைபெற்று வரும் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று முதல்
தொடங்கியது.  தமிழகம் முழுவதும் 74 மையங்களில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.


கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கிய 12ம் வகுப்பு தேர்வுகள், வரும் ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.


12ம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

350 மருந்துகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு

350 மருந்துகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு
அங்கீகாரம் பெறாத தயாரிப்பு முறையில் உற்பத்தியாகும் எப்.டி.சி., ரக மருந்துகளான பென்ஸிடில், கோரஸ் உள்ளிட்ட 350 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.

வலி நிவாரணத்திற்கு உட்கொள்ளப்படும் இவ்வகை மருந்துகளின், மார்க்கெட் மதிப்பு ரூ.1,500 கோடி இருக்கும் என மருத்துவத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தடை குறித்த அரசிதழ் அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மருத்துவ நுழைவு தேர்வில் ’0’; தமிழக கல்வி துறையின் அவலம்

மருத்துவ நுழைவு தேர்வில் ’0’; தமிழக கல்வி துறையின் அவலம்


நிறைய எதிர்வினைகள்; குறிப்பாக, பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அயல்நாடுகளில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து.


வருத்தங்கள், கோபங்கள், ஆதங்கங்களைப் பகிர்ந்து கொண்ட மின்னஞ்சல்களுக்கு மத்தியில், கோவை ஆனைமலையில் இருந்து வந்த குரு என்பவரின் மின்னஞ்சல், மிக முக்கியமான தகவல்களை தாங்கி வந்திருந்தது.


கடந்த, 28 ஆண்டுகளாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி மையம் நடத்தும் இவர், அகில இந்திய அளவில், தமிழக மாணவர்களின் நிலை குறித்து, தகவல் அறியும் சட்டத்தில், குறிப்பிடத்தக்க தகவல்களை பெற்றுள்ளார். இவருக்கு இரண்டு ஆதங்கங்கள் உள்ளன.


ஒன்று, எய்ம்ஸ் நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வில், கடந்த ஆண்டு ஒரே ஒரு தமிழ் மாணவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை. இரண்டு, 2001 முதல், 2014 வரை, தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில் படித்தோரில், 1.2 சதவீதம் பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள். மீதமுள்ள, 98.8 சதவீதம் பேர், தனியார் பள்ளி மாணவர்கள்.


அவரின் விருப்பங்கள் இரண்டு. மேற்கூறிய இரண்டு ஆதங்கங்களைப் போக்க, இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று, மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வை, நம் மாநில அரசும் ஏற்று நடத்த வேண்டும். இரண்டாவது, மாநிலம் முழுக்க, அகில இந்திய பொதுத்தேர்வில் நம் மாணவர்கள் வெற்றி பெறும்படி, அனைத்து தமிழக பள்ளிகளும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பது.


குருவின் மின்னஞ்சலில், எனக்கு மிக அதிர்ச்சியை ஏற்படுத்திய புள்ளி விவரம், நுழைவுத்தேர்வை ரத்து செய்த பின், அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம், 20 சதவீதத்தில் இருந்து, 1.2 சதவீதமாக குறைந்துவிட்டது. பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண்களை வைத்து, மருத்துவ கல்லுாரியில் இடம் பிடித்து விட முடியும் என்ற நிலை வந்த பிறகு, தனியார் பள்ளிகள் அனைத்தும், தங்களின் பள்ளி மாணவர்களுக்கு தீவிர பயிற்சி கொடுத்து, அதிக மதிப்பெண்களை வாங்க வைத்து, அரசுப் பள்ளிகளை பின்தங்க வைத்துவிட்டன என்ற உண்மையே, இதன் பின்னணியில் உள்ளது.


இதே நேரத்தில் தான், நுழைவுத் தேர்வு தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில், இந்திய பல் மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து, 2013ம் ஆண்டு, ஜூலை, 18ம் தேதி, உச்ச நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதினார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது.


தமிழக அரசு, நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதற்கான காரண மாக, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் மருத்துவப் படிப்புக்கான தளம் உருவாக்கப்பட்டுள்ளது என முதல்வர் சுட்டிக்காட்டிய காரணம், குறிப்பிடத்தக்கது. அரசின் விருப்பமும், முயற்சிகளும் இவ்விதம் இருக்க, புள்ளி விவரங்கள் நேர் எதிராக இருப்பதை பார்க்கும்போது, என்னதான் நடக்கிறது தமிழகக் கல்வி முறையில், என்ற குழப்பமே மேலோங்குகிறது.


தமிழகத்தில் கல்வியை போல் சிக்கலாக்கப்பட்ட விஷயம் வேறொன்றும் இல்லை. சி.பி.எஸ்.இ., மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன், மாநில அரசு என, பல்வேறு வகையான பாடத்திட்டங்கள், அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் என, பல்வேறு நிர்வாகங்கள். கல்வியை, ஏற்றத்தாழ்வு நிரம்பியதாக வைத்திருப்பதற்கான எல்லா அம்சங்களும் தமிழகத்தில் நிலைகொண்டு விட்டன. இந்த வேறுபாடுகளை களையவே, சமச்சீர் கல்வி திட்டம் வந்தாலும், அதையும் எளிதாக கடந்து போக, தனியார் பள்ளிகள் கற்றுக் கொண்டுள்ளன.


நுழைவுத் தேர்விற்கான பயிற்சி, பயிற்சி மையம், நுழைவுத் தேர்விற்கான பாடப்புத்தகங்கள் இவை, எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவு. மேலும், நகரப் பின்னணி கொண்ட மாணவர்களும், பொருளாதாரத்தில் மேம்பட்ட மாணவர்களுமே, நுழைவுத் தேர்விற்காக தயாராகி வெற்றி பெறும் நிலை இருந்தது.


இந்த நிலையை மாற்றுவதற்கு நுழைவுத் தேர்வில்லாமல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கு போக முடியும் என்ற நிலையை, தமிழக அரசு உருவாக்கியது.கிராமத்து மாணவர்கள் அறிவுநிலையில் மேம்பட்டு இருந்தாலும், வழிவகைகள் தெரியாததால், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேர வழியின்றி இருந்தனர். அதற்காகத் தான், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களை நோக்கும்போது, கிராமத்து ஏழை மாணவர்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நடுத்தர மாணவர்களும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவந்திருப்பது புரிகிறது.


காரணம், மாநில அரசின் பொதுத்தேர்வில், நிறைய மதிப்பெண்களை பெற்றுவிட்டால் போதும், எல்லா உயர்கல்வியும் கைவசம் தான். ஆனால், அந்த உயர்கல்வியை, கல்வி வியாபாரிகள், ஒரு நவீன தொழிலாக்கி விட்டனர். பல தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வாங்கப்படும் கல்விக் கட்டணமும், கெடுபிடிகளும், மாணவர் சேர்க்கைக்கான கடுமையான விதிமுறைகளும், நம்மை மிரட்டுகின்றன.


பல லட்சங்களை செலவு செய்து, ஒரு ஆண்டின் பாடத்தை, இரண்டு ஆண்டுகள் படிக்க வைத்து, பிள்ளைகளை ஓயாமல் எழுத வைத்து, முக்கிய பாடங்களில் அதிக மதிப்பெண் வாங்க வைத்து விடுகின்றனர். நுழைவுத் தேர்வு ரத்துக்கு பிறகே, முக்கிய பாடங்களில் நுாற்றுக்கு நுாறு வாங்குவதும்,மொத்த மதிப்பெண்கள் அதிகமானதும் நடந்து வருகிறது. முன்பெல்லாம் ஆயிரம் மதிப்பெண்களை வாங்கவே கண்ணைக் கட்டும். இப்பொழுது பிள்ளைகள், எளிதில், 1,190 மதிப்பெண்ணை தொட்டு விடுகின்றனர் என்றால், அவர்களின் அறிவுத் திறன் மேம்பட்டிருக்கிறது என்பதை விட, பயிற்சி மேம்பட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.


பிளஸ் 1 வகுப்பு பாடங்களை முழுமையாக விட்டுவிட்டோ, அல்லது பெயருக்கு தொட்டு விட்டோ, இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து, பிளஸ் 2 வகுப்பு பாடங்களையே, தனியார் பள்ளி மாணவர்கள் படிக்க வைக்கப்படுகின்றனர். அதனால் அதிக மதிப்பெண் என்பது, தரமான கல்வி நிலைக்கான குறியீடு இல்லை.இதில், இன்னொரு முரண்பாட்டையும் கவனிக்க வேண்டும். எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை அதிக லட்சங்களை கொட்டி, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கப்படும் மாணவர்கள், உயர்கல்விக்கு, அரசு மருத்துவ, பொறியியல் கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களையே நாடுகின்றனர். காரணம், அவை, உயர்கல்வியை குறைந்த கட்டணத்தில், தரமாக அளிக்கின்றன. ஆனால், முதல் வகுப்பில் இருந்து, மேனிலைக்கல்வி வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களோ, அரசு மருத்துவக் கல்லுாரிகள், பல்கலைக்கழகங்களுக்கு போக முடிய வில்லை. இதற்கு, மாணவர்கள் காரணம் அல்ல; மற்றவர்கள் தான் காரணம்.


இந்திய அளவில் தனக்கென பாடத்திட்டம் வைத்துள்ள ஒரே மாநிலம், தமிழகம் மட்டுமே. மற்ற மாநிலங்கள் எல்லாமே, மத்திய அரசின் பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன. இது மிக நல்ல விஷயமே.அதேபோல், ஏழை மாணவர்களின் கல்வி உரிமையை பாதுகாக்க, தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்ததும், பாராட்டுக்குரிய துணிச்சலான முயற்சியே.


ஆனால், இந்த முயற்சிகள் எல்லாம் முழுமையான பலன் கொடுக்க வேண்டுமானால், அரசு இன்னொரு கடினமான முடிவை எடுக்க வேண்டும். மிக மோசமான விளைவுகளை முதலில் உண்டாக்கும் என்றாலும், துணிந்து அந்த முடிவை எடுத்துவிட்டால், கல்வியின் அநேக குறைபாடுகளை அரசால் உடனே களைந்துவிட முடியும். அதுதான் கல்வியை முழுக்க, முழுக்க அரசுடைமையாக்குவது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. பிளஸ் தேர்வுகள் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் விடைத்தாளை திருத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.


முதல் நாளான ஒன்று தமிழ் மொழிப்பாடத்திற்கான விடைத்தாள் திருத்தப்படுகின்றன. இந்த பணி வரும் ஏப்ரல் 1-ம் தேதி நிறைவடைகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக மார்ச் மாதமே விடைத்தாள் திருத்தப்படுகின்றன.


இதனிடையே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இதில் 12,53 பள்ளிகளை சேர்ந்த 10,72,185 பேர் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் சுமார் 50000 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

7th Pay commission latest news.

7th Pay commission latest news.


1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. HRA 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6.Date of effect from 1.1.2016.

7. Calculations 2.86 x basic pay agreed.7th CPC joint draft memorandum submitted on by the member of CPC from DOPT, MHA, MEA and DS&T etc with recommendations to implement w.e.f. 1st January 2016. Member (attached 26 pages report) Pay scale are calculated on the basis of pay drawn in PB including GP multiply by the factor 2.15 and new basic pay will be (old PB+GP)*2.15 (.) Pension and family pension multiply factor should be 2.50. Member (attached 14 pages report) annual rate of increment divided into five categories(A) 2500 for fixed basic (B) 1500 for class 1(C) 1200 for class 2 (D) 1000-Group A,800-Group B,600-Group C for class 3 (E) 400 for class 4 annually. Member(attached 32 pages report) The present MACPs scheme should be replaced by giving 4 up gradation after completion of 10,18,25,30 years of continues service. Member (attached 28 pages report) house rent allowance should be as it was in 6th CPC and date of increment should be 1st January in place of 1st July w.e.f. 01-01-2016 and house building advance should be 50 times of new basic pay. Member (attached 12 pages report) Transport allowance should be 10% of new basic pay+DA in X class cities and 5% of new basic pay+DA in Y class cities. Member (attached 38 pages report) (a)All India transfer allowance @5% of new basic pay per month to only those who have completed minimum three postings in different three States. (b)Maximum service length 33years, Maximum age 60 years for retirement from service with condition whichever is early.(c)Pata military special pay should be @5% of new basic pay to only those who have completed minimum three years service either in NE region or J&K region. Member (attached 24 pages report)
 New pay scale .
Old PB-1,GP-1800 New pay scale are 15000-33600,
Old PB-1,GP-1900&2000 New pay scale are 21500-40100,
Old PB-1, GP-2400&2800 New pay scale are 25000-43600.
Old PB-2, GP-4200 New pay scale are 30000-54800,
Old PB-2, GP-4600&4800 New pay scale are 40000-71000,
Old PB-2,GP-5400 New pay scale are 45000-90000,
Old PB-3.GP-6600 New pay scale are 52000-100000.
Old GP-7600 New pay scale are 60000-110000.
Old GP-9000 New pay scale are 75000-125000.

7th Pay commission latest news.

7th Pay commission latest news.


1. Minimum pay 21000/-
2. No grade pay system and open ended scales.
3. Retirement - 33yrs of service or 60yrs of age whichever is earlier.
4. HRA 30% CCA to be reinforced.
5. Categories of posts to be modified.
6.Date of effect from 1.1.2016.

7. Calculations 2.86 x basic pay agreed.7th CPC joint draft memorandum submitted on by the member of CPC from DOPT, MHA, MEA and DS&T etc with recommendations to implement w.e.f. 1st January 2016. Member (attached 26 pages report) Pay scale are calculated on the basis of pay drawn in PB including GP multiply by the factor 2.15 and new basic pay will be (old PB+GP)*2.15 (.) Pension and family pension multiply factor should be 2.50. Member (attached 14 pages report) annual rate of increment divided into five categories(A) 2500 for fixed basic (B) 1500 for class 1(C) 1200 for class 2 (D) 1000-Group A,800-Group B,600-Group C for class 3 (E) 400 for class 4 annually. Member(attached 32 pages report) The present MACPs scheme should be replaced by giving 4 up gradation after completion of 10,18,25,30 years of continues service. Member (attached 28 pages report) house rent allowance should be as it was in 6th CPC and date of increment should be 1st January in place of 1st July w.e.f. 01-01-2016 and house building advance should be 50 times of new basic pay. Member (attached 12 pages report) Transport allowance should be 10% of new basic pay+DA in X class cities and 5% of new basic pay+DA in Y class cities. Member (attached 38 pages report) (a)All India transfer allowance @5% of new basic pay per month to only those who have completed minimum three postings in different three States. (b)Maximum service length 33years, Maximum age 60 years for retirement from service with condition whichever is early.(c)Pata military special pay should be @5% of new basic pay to only those who have completed minimum three years service either in NE region or J&K region. Member (attached 24 pages report)
 New pay scale .
Old PB-1,GP-1800 New pay scale are 15000-33600,
Old PB-1,GP-1900&2000 New pay scale are 21500-40100,
Old PB-1, GP-2400&2800 New pay scale are 25000-43600.
Old PB-2, GP-4200 New pay scale are 30000-54800,
Old PB-2, GP-4600&4800 New pay scale are 40000-71000,
Old PB-2,GP-5400 New pay scale are 45000-90000,
Old PB-3.GP-6600 New pay scale are 52000-100000.
Old GP-7600 New pay scale are 60000-110000.
Old GP-9000 New pay scale are 75000-125000.

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு

பின்தங்கிய பள்ளியில் ஆய்வு நடத்த உத்தரவு


கல்வி தரத்தில் பின்தங்கிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


தொடக்க கல்வித்துறை இயக்குனரகத்தில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) மற்றும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் யல்படுகின்றன; அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆய்வு நடத்த வேண்டும்.


உதவி மற்றும் கூடுதல் தொடக்க கல்வி அலுவலர்கள், அறிவியல் மற்றும் நர்சரி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுனர்கள் குழு அமைத்து, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தலைமையில், முன்னறிவிப்பின்றி, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.


தொடர்ந்து புகார் வரும் பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய பள்ளிகளை தேர்வு செய்து, இத்தகைய ஆய்வை நடத்த வேண்டும். ஆசிரியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருகின்றனரா; பணி நேரம் முழுவதும் பள்ளியில் இருக்கின்றனரா; பாடங்கள் முழுமையாக நடத்தப்படுகிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.


மாணவர்களின் கல்வி முன்னேற்றம், நூலகம் பயன்பாடு, அரசின் நலத்திட்டங்கள் வழங்கிய விவரம், கழிப்பறை வசதி மற்றும் துப்புரவு பணி, பாதுகாப்பான குடிநீர் போன்றவை ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வு அறிக்கையை, தொடக்க கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, 13 March 2016

ஜெ.வுடன் சந்திப்பு

ஜெ.வுடன் சந்திப்பு..இந்த சூழ்நிலையில், அகில இந்திய பார்வர்டு பிளாக் எம்.எல்.ஏ.பி.வி.கதிரவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்தியக் குடியரசுக் கட்சியின் செ.கு.தமிழரசன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பாக்கர், கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு, தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் இன்று போயஸ் தோட்டம் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளனர்.

மாயமாகும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள்

மாயமாகும் ஆசிரியர்களின் தபால் ஓட்டுகள்
தமிழகம் முழுவதும், ஆசிரியர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை தருமாறு, கல்வி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலையொட்டி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். தேர்தல் பணிக்கு விருப்பமுள்ளவர்களின் பட்டியலை தயார் செய்ய, மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டன.


ஆனால், கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து ஆசிரியர்களுக்கும் விண்ணப்பம் வழங்கி, அதில் தேர்தல் பணியாற்ற விருப்பமுள்ளதாக கட்டாயமாக எழுதி வாங்குகின்றனர்.



அந்த விண்ணப்பத்துடன் அனைத்து ஆசிரியர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பட்டியல் விவரங்களையும் சேகரிக்கின்றனர்.அதனால் பள்ளி ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். உடல் நலன் குறைவான ஆசிரியைகள், மகப்பேறு காலத்திலுள்ள ஆசிரியைகள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய் பாதிப்புள்ள ஆசிரியர்கள் போன்றோருக்கு, தேர்தல் பணிகளில் விலக்கு உண்டு.



ஆனால், அவர்களிடம் வாக்காளர் விவரங்களை, தொகுதி வாரியாக, பாகம் எண்ணுடன் பெறுவதால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.லோக்சபா தேர்தலில் நடந்தது போல், இந்த முறையும் தங்களின் தபால் ஓட்டு மாயமாகி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்த பிரச்னை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.



வேதனையாக உள்ளது!ஆசிரியர்களின் வாக்காளர் விவரங்களை பெற்று,
தேர்தல் பணிக்கு செல்லும் முன், முகாம் அலுவலகத்திலேயே மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வைத்து, ஆசிரியர்களின் ஓட்டுக்களை பதிய செய்ய வேண்டும். இல்லையென்றால் எங்களின் தபால் ஓட்டுக்கள் பறிபோய் விடும். தேர்தல் பணியில் இருக்கும் எங்களுக்கே ஓட்டுரிமை மறைமுகமாக பறிக்கப்படுகிறது என்பது வேதனையாக உள்ளது



தேர்தல் பணியில் ஈடுபடும்அனைவருக்கும் தபால் ஓட்டு!தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் தபால் ஓட்டு வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:



இதுவரை நடந்த தேர்தல்களில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் ஆகியோருக்கு மட்டும், தபால் ஓட்டு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், வரும் தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், அரசு வாகன டிரைவர்கள், தனியார் வாகன டிரைவர்கள், கிளீனர்கள் ஆகியோருக்கும் தபால் ஓட்டு வழங்கப்படும். அதேபோல, ஓட்டுச் சாவடிகளில், 'வெப் கேமரா, வீடியோ' பதிவு போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளன.



இப்பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கும், தபால் ஓட்டு வழங்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார், தனியார் என, அனைவரிடமும் வாக்காளர் அடையாள அட்டை எண் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



மே 2ம் தேதி, தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது. பயிற்சி வகுப்பு நிறைவு நாளில், அனைவருக்கும் தபால் ஓட்டு வழங்கப்படும்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.



லோக்சபா தேர்தலில் ஓட்டுரிமை பறிபோனது!
கடந்த லோக்சபா தேர்தலில், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் யாரும் தபால் ஓட்டு போடவில்லை. ஆனால், அனைவரின் ஓட்டுகளும் பதிவானதாக குறிப்பிட்டிருந்தனர். இது எப்படி என்று, தற்போது வரை மர்மமாகவே உள்ளது.



வழக்கமாக, தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன், வாக்காளர் பட்டியல் விவரம் வாங்குவர். தேர்தலுக்கு, ஐந்து நாட்களுக்கு முன் தபால் ஓட்டு விண்ணப்பம் கொடுப்பர். தேர்தல் பணிக்கு செல்லும் முன், தேர்தல் அலுவலர் முகாம்களில் வைக்கப்பட்ட பெட்டியில், தபால் ஓட்டாக, விண்ணப்பங்களை பதிவு செய்து விட்டு செல்வோம்.



ஆனால், லோக்சபா தேர்தலில் விண்ணப்பமே வழங்காமல், எங்கள் ஓட்டுரிமை பறிபோனது. இந்த முறை அனைத்து ஆசிரியர்களின் வாக்காளர் விவரங்களை முன் கூட்டியே பெறுவது, எங்களின் ஓட்டுகளை மறைமுகமாக பதிவு செய்வதற்காவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



மேலும், பல ஆசிரியர்கள் முகவரி மாற்றம், பெயர் திருத்தம் தொடர்பாக விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போதே வாக்காளர் விவரங்களை பெறுவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS : 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி இந்த பதிவு:

HOW TO INCREASE THE MEMORY POWER FOR STUDENTS : 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி இந்த பதிவு:


முதலில் மாணவகளின் நினைவுத்திறன் மேம்பட மூளை நன்கு செயல்பட சில குறிப்புகளை ஆராய்வோம்:


குறைவான தூக்கம், கூடுதலான மன இறுக்கம் இவை உடலில் செரிமானத் தன்மையை பாதிக்கிறது. எனவே இது போன்ற வேளைகளில் கடினமான உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. அதிக உணவை, கடின உணவை உண்ணும் போது வயிற்றுக்கு அதிக ரத்தம் பாய்வதால் மூளையின் செயல்திறன் பாதிப்படைகிறது. எனவே, எண்ணெய் பதார்த்தங்களை தொடக்கூடாது. காரம், மசாலாக்கள் அதிகமான உணவுகளில் கை வைக்கக்கூடாது. குறிப்பாக நிலக்கடலை உண்பதை தவிர்க்க வேண்டும்.


அதிக தாகத்தை உருவாக்கும் இட்லி, தோசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக புளிப்பு உள்ள தயிர் தவிர்க்கப்பட வேண்டும்'


எடுத்துக்கொள்ள வேண்டியவை : காலையில் சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி இவற்றின் சாறுகளில் தேன் கலந்து குடிக்கலாம். அதன்பின் சத்துமாவு, கஞ்சி, ஓட்ஸ், கம்பு, ராகி, கோதுமை, அரிசி இவற்றில் ஏதாவது ஒன்றின் கஞ்சியை அருந்தலாம். மதியம் பருப்பு, கீரை இவற்றை வேகவைத்து கடைந்து சாதத்துடன் சேர்த்து உண்ணலாம். இரவு வேளை வாழைப்பழம், பப்பாளி, ஆப்பிள் பழங்களின் கலவையை (சாலட்) உண்ணலாம். படிக்கும் வேளைகளில் தேவைப்பட்டால் உலர் திராட்சை எடுத்துக்கொள்ளலாம். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பின் பொடியும் கலந்து உண்ணலாம். இவைகள் எளிதாக செரிமானம் ஆகும். அதே வேளையில் மூளைக்கு வேண்டிய சத்துக்களை கொடுக்கும்.


அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?


*வெற்றி பெறுவதற்கு, குறுக்கு வழி இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.* தேர்வைக் கண்டு பயப்படவோ, வெறுக்கவோ கூடாது. என்னால் நல்ல மதிப்பெண் பெற முடியும் என நீங்கள் உங்களை நம்பினால், கண்டிப்பாக அந்த எண்ணமே உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.


* ஒவ்வொரு பாடத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும், என்பதை முன்பே அட்டவணைப்படுத்த வேண்டும். கஷ்டமான பாடத்துக்கு அதிக நேரமும், எளிதான பாடத்துக்கு குறைந்த நேரமும் ஒதுக்கலாம். தொடர்ந்து படிக்காமல், இடையிடையே ஓய்வு எடுத்து படிக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு முறையும் ஈடுபாட்டோடு படிக்க முடியும்.


* படிக்கும் இடம் முக்கியமானது. அமைதியான இடமாக இருக்க வேண்டும். ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும் போது, மற்ற புத்தகங்கள் உங்கள் பார்வையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் கவனம் சிதறாமல் ஒரே பாடத்தை படிக்க முடியும்.


* அதிகாலை படிப்பது நல்லது. அப்போது, உங்களைச் சுற்றி அமைதியான சூழல் இருக்கும். இது உங்களை படிக்க துõண்டும். படிக்கும் அறையில், கண்ணாடி இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களது கவனத்தை சிதறச் செய்யும். கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி அமர்ந்து படியுங்கள். இது உங்களுக்கு, பாசிடிவ் எனர்ஜியை தரும்.


* படிக்கும் போது, குறிப் பெடுத்துக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தேர்வு சமயத்தில் அனைத்து பாடத்தையும் திரும்ப படிக்க முடியாது. அந்த தருணத்தில், குறிப்பேடு பயன் தரும்.


* போதிய துõக்கம் அவசியம். இரவு முழுவதும், விழித்திருந்து படிப்பது தவறு. நன்றாக உறங்கினால் தான், அடுத்த நாள் தேர்வை ஒழுங்காக எழுத முடியும்.


* கேள்விக்கு எப்படி பதிலளிப்பது, என்பது முக்கியம். ஒரு நாளில் 20க்கும் மேற்பட்ட விடைத்தாள்களை ஆசிரியர் மதிப்பீடு செய்வர். அப்படி இருக்கும் போது, உங்கள் விடைகள் குறுகியதாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். கையெழுத்து நன்றாக இருப்பது அவசியம்.


* படிக்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்களே என ஒருபோதும் மாணவர்கள் எண்ணக் கூடாது. நீங்கள் படிப்பது, அவர்களுக்காக அல்ல; உங்களுக்காகத்தான் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.


* தேர்வில் எக்காரணம் கொண்டும் மோசடியில் ஈடுபடாதீர். இது உங்கள் வாழ்க்கையை, ஏதாவது ஒரு வழியில் பாதிக்கும்.


* உங்கள் மீது நம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். நிச்சயம் அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.


* தேர்வு முடிந்ததும், அதைப் பற்றி பிற மாணவர்களுடன் விவாதிக்காதீர்கள். இது அடுத்த தேர்வுக்கு தயாராவதை பாதிக்கும். அனைத்து தேர்வுகளும் முடிந்த பின் மட்டுமே, எழுதிய தேர்வை பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.


படிப்பது என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது.


1) கூர்ந்து கவனித்தல் (Observation):- கூர்ந்து கவனித்தல் என்பது நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அது எதைப்பற்றிக் கூறுகிறது. எவ்வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.


2)தொடர்பு படுத்துதல் (Correlation):-அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.


3) செயல்படுத்தல் (Application):-நாம் புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோமென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வதோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள்பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்துவிடாமல் இருக்க உதவுகிறது.


கற்றல் செயற்பாங்கு: (Learning Process)
கவனத்தோடு கேட்பது அல்லது படிப்பது: என்ன பாடம் - அதிலிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்பது தெளிவாகத் தெரிந்தால் மிக எளிதாகக் கல்வி கற்கலாம்.


குறிப்பு எடுக்க வேண்டும்:
ஆசிரியர் பாடங்களைக் கற்றுத்தரும்போதும், படிக்கும்போதும் குறிப்பு எடுக்க வேண்டும். குறிப்பெடுத்த பின் என்ன கற்றோம் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும்.


புதிதாகக் கற்றவற்றை அடிக்கடி சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பார்க்க வேண்டும். புதிதாகக் கற்றவற்றைத் தகுந்த சூழ்நிலைகள் கிடைக்கும்போதெல்லாம் நடைமுறைப்படுத்தல் அல்லது செயல்படுத்தல் வேண்டும்.


எவ்வாறு படிப்பது?:
தலைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்டு அதனைக் கேள்வியாக மாற்றுவதன் மூலம் நாம் என்ன படிக்கப் போகிறோம் என்பது நமக்கு நன்கு புரியும்.


முக்கியத் தலைப்புக்குக் கீழ் உள்ள சிறிய தலைப்புகளையும், எடுத்துக்காட்டுகளையும் வரைபடங்களையும் ஆராய்ந்து அறிவதன் மூலம் நாம் படிக்கும் புத்தகம், பாடம் நமக்குக் கூறும் முக்கியக் கருத்து என்ன என்பது தெரியும்.


ஒவ்வொரு தலைப்புக்குக் கீழ் உள்ள முதல் பத்தியும், பாடத்தின் பின்பகுதியில் உள்ள சுருக்கமான தொகுப்புகளும் மற்றும் வினாக்களை நன்கு படித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்தபின், நீங்கள் என்ன கற்றுக் கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்திப் பார்க்க வேண்டும். ஒரு தாளில் நீங்கள் தெரிந்து கொண்ட அனைத்தையும் எழுதிப் பார்க்க வேண்டும்.


அதனைச் சரிபார்த்து, மேலும் என்ன தெரிய வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு மீண்டும் படித்தால் அப் பாடத்தை எளிதாய் நம் மனத்தில் நிறுத்த முடியும். ஒரு பாடத்தைப் படிக்கத் தொடங்கும் முன் எந்த முறையில் படிப்பது என்பது மிக அவசியம். புத்தகத்தை எடுத்தவுடன் முதல் பத்தியில் இருந்து மனப்பாடம் செய்ய ஆரம்பித்து விடக்கூடாது. கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றிப் படிக்க ஆரம்பித்தால் மிக எளிதாகக் குறுகிய நேரத்தில் மனத்தில் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.


படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும், துணைத் தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும். பாடச் சுருக்கத்தை நன்றாகப் படிக்க வேண்டும்.


இதிலுள்ள சில வார்த்தைகளைப் படிக்கும்போது மனத்தில் கேள்விகள் எழும். (எடுத்துக்காட்டு : உயிரியலில் சைட்டோபிளாசம் என்ற சொல்லை வாசிக்கும்போது சைட்டோபிளாசம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் வரும்.)


வினா எழுப்புதல்: (Asking Questions)
பாடச்சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும்.


இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.எதற்காக இதைப் படிக்கிறேன். அதன் பயன் என்ன? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும். (எடுத்துக்காட்டு) அறிவியலில் மின்னாற் பகுப்பு என்ற தலைப்பை வாசிக்கும்போது மின்னாற் பகுப்பு என்றால் என்ன? என்ற கேள்வியை மனத்தில் எழுப்ப வேண்டும்.)


வாசித்தல் (Read):
அர்த்தம் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும்.


படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புப்படுத்தி எடுத்துக்காட்டோடு படிக்க வேண்டும்.

புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடிடுவதைத் தவிர்க்க வேண்டும்.மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிட வேண்டும்.

இதனால் திரும்பிப் பார்க்கும் போது குழப்பமில்லாமல் எளிதாகப் பாடத்தை நினைவிற்கு கொண்டு வர முடியும்.


திரும்பச் சொல்லிப் பார்த்தல்: வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும்.

இம்முறையானது படித்தவற்றை நினைவில் நிறுத்திக் கொள்ள மிகச் சிறந்த வழியாகும். படித்தவற்றை சொந்த வார்த்தைகளில் சத்தமாகச் சொல்லிப் பார்க்க வேண்டும்.

மேற்கண்ட முறைகளைப் பின்பற்றி ஒரு பிரிவை முடித்தவுடன் அடுத்த பிரிவிற்குச் செல்ல வேண்டும்.


தேர்வு எழுதிப் பார்த்தல்: இந்த முறைகளில் பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப்பார்க்க வேண்டும். ஒரு முறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பிப் பார்க்க வேண்டும். தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடைசியாக பாடச்சுருக்கத்தை இன்னொரு முறை வாசிக்க வேண்டும்.

எங்கே உங்கள் முயற்சிகள் திருவினையாகட்டும் என்ற வாழ்த்துக்களுடன் வணக்கம்.

மே 2-ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள்

மே 2-ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது- பேட்டி ஒன்றில் ராஜேஷ் லக்கானி

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான, இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன. அரசு
உத்தரவு:மார்ச், 14 முதல் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் துவங்குகின்றன. சட்டசபை தேர்தல் வருவதால், தேர்வு பணிகளை விரைந்து முடிக்க, தேர்வுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளன. தமிழ் பாட விடைத்தாள்களை, தேர்வு மையம் வாரியாக தொகுத்து அவற்றை விடைத்தாள் திருத்தும் மையத்தில் பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது. கண்காணிப்பு:மார்ச், 14 முதல் விடைத்தாள் திருத்த பணி துவங்குகிறது. முதல், இரண்டு நாட்களுக்கு, தலைமை விடை திருத்துனர் மற்றும் விடை திருத்தும் மைய கண்காணிப்பு அதிகாரிகள், விடைத்தாள்களை கலக்கி, பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் அடையாளம் தெரியாத வகையில், விடைத்தாள்களை பிரிக்க உள்ளனர். அதன்பின், அவை, விடை திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்படும். மார்ச், 16 முதல், விடை திருத்துனர்களின் பணி துவங்கும். இதற்காக, மாவட்ட மையங்களுக்கு தேர்வுத்துறை மூலம் விடை குறிப்புகள் அனுப்பப்படும். 'விடை திருத்தத்தில், எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறியீடு இருந்தால்...விடைத்தாள் திருத்தம் தொடர்பாக, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்: மறுகூட்டல், மறு திருத்தம் போன்றவை அதிக அளவில் இல்லாத அளவுக்கு சரியாக விடைத்தாள்களை திருத்த வேண்டும்விடைத்தாளில் துளையிட்டிருத்தல், தேர்வு எண் எழுதியிருத்தல், பென்சில், 'ஸ்கெட்ச்' போன்றவற்றால் குறியீடு மற்றும் கோடிடல், வினாத்தாளுக்கு தொடர்பில்லாத வாசகம் எழுதியிருத்தல் போன்றவற்றை கண்டறிந்தால், அத்தகைய விடைத்தாள்களை திருத்தி தனியே வைக்க வேண்டும்தேர்வுத்துறை மண்டல இணை இயக்குனர் அல்லது தேர்வுத்துறை இணை இயக்குனர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும்.

Saturday, 12 March 2016

அரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை - தேர்தல் கமிஷன்

அரசு கல்லூரி, பள்ளிகளில் ஆண்டு விழாவுக்கு தடை - தேர்தல் கமிஷன்


அரசு கல்லுாரி, பள்ளிகளில் ஆண்டு விழா, பட்டமளிப்பு விழா நடத்த தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

Friday, 11 March 2016

பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

பள்ளி மாணவனை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்
கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் ஹாஜா தமீம், தாம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி செயலாளர். இவரது 12 வயது மகன், கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம், 7ம் வகுப்பு ஆசிரியர், தேர்வு பணிக்காக சென்று விட்டதால், 6ம் வகுப்பு ஆசிரியர் குணசேகரன் தற்காலிகமாக 7ம் வகுப்பை கவனித்ததாக கூறப்படுகிறது.


அப்போது, ஹாஜா தமீம் மகனிடம் ‘வகுப்பை சிறிது நேரம் கவனித்துக்கொள், நான் மற்ற வகுப்புக்கு பாடம் நடத்திவிட்டு வருகிறேன்,’ என ஆசிரியர் குணசேகரன் கூறிவிட்டு சென்றுள்ளார். வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் கூச்சலிட்டனர்.



இதனால், ஆத்திரமடைந்த குணசேகரன், 7ம் வகுப்புக்கு வந்து மாணவர்களை கண்டித்ததுடன், வகுப்பை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு சென்றும், மாணவர்கள் சத்தம்போடுவதை தடுக்கவில்லையே என கேட்டு மேற்கண்ட மாணவனை சரமாரியாக அடித்தாக கூறப்படுகிறது. இதனால், பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற சிறுவன் அழுது கொண்டே இருந்துள்ளான். அவனிடம், பெற்றோர்கள் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறியுள்ளான். உடனே, மகனை அழைத்து கொண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


இந்நிலையில், நேற்று காலை மாணவனின் உறவினர்கள், பொது நல அமைப்புகள், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, புகாரை மனுவாக கொடுத்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன், என தலைமை ஆசிரியர் கூறினார். இதையடுத்து அவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. அதன்பேரில் ஆசிரியர் குணசேகரன் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவன், வகுப்பில் இருந்த மாணவர்களிடம் விசாரணை நடந்தது. பின்னர், ஆசிரியர் குணசேகரனை சஸ்பெண்ட் செய்து, தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.

Thursday, 10 March 2016

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம், மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 4ல் துவங்கியது. தமிழ் பாடத்துக்கான, இரண்டு தாள்களுக்கு தேர்வு முடிந்துள்ளது. இன்றும், நாளையும், ஆங்கில பாட தேர்வுகள் நடக்கின்றன. அரசு
உத்தரவு:மார்ச், 14 முதல் முக்கிய பாடங்களுக்கு தேர்வுகள் துவங்குகின்றன. சட்டசபை தேர்தல் வருவதால், தேர்வு பணிகளை விரைந்து முடிக்க, தேர்வுத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்த பணிகள் நடக்க உள்ளன. தமிழ் பாட விடைத்தாள்களை, தேர்வு மையம் வாரியாக தொகுத்து அவற்றை விடைத்தாள் திருத்தும் மையத்தில் பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது. கண்காணிப்பு:மார்ச், 14 முதல் விடைத்தாள் திருத்த பணி துவங்குகிறது. முதல், இரண்டு நாட்களுக்கு, தலைமை விடை திருத்துனர் மற்றும் விடை திருத்தும் மைய கண்காணிப்பு அதிகாரிகள், விடைத்தாள்களை கலக்கி, பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களின் அடையாளம் தெரியாத வகையில், விடைத்தாள்களை பிரிக்க உள்ளனர். அதன்பின், அவை, விடை திருத்தும் மையங்களுக்கு அனுப்பப்படும். மார்ச், 16 முதல், விடை திருத்துனர்களின் பணி துவங்கும். இதற்காக, மாவட்ட மையங்களுக்கு தேர்வுத்துறை மூலம் விடை குறிப்புகள் அனுப்பப்படும். 'விடை திருத்தத்தில், எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கக் கூடாது' என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குறியீடு இருந்தால்...விடைத்தாள் திருத்தம் தொடர்பாக, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்: மறுகூட்டல், மறு திருத்தம் போன்றவை அதிக அளவில் இல்லாத அளவுக்கு சரியாக விடைத்தாள்களை திருத்த வேண்டும்விடைத்தாளில் துளையிட்டிருத்தல், தேர்வு எண் எழுதியிருத்தல், பென்சில், 'ஸ்கெட்ச்' போன்றவற்றால் குறியீடு மற்றும் கோடிடல், வினாத்தாளுக்கு தொடர்பில்லாத வாசகம் எழுதியிருத்தல் போன்றவற்றை கண்டறிந்தால், அத்தகைய விடைத்தாள்களை திருத்தி தனியே வைக்க வேண்டும்தேர்வுத்துறை மண்டல இணை இயக்குனர் அல்லது தேர்வுத்துறை இணை இயக்குனர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும்.

4 நாட்கள் வங்கிகள் 'லீவு': சுதாரியுங்க மக்களே

4 நாட்கள் வங்கிகள் 'லீவு': சுதாரியுங்க மக்களே...!
                         

இம்மாத இறுதியில் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இதனால் ஏடிஎம் மையங்களில் முன்பே தேவையான பணம் எடுத்து வைத்துக் கொள்ளுதல் மற்றும் கணக்கு வழக்குகளை பார்த்து, திட்டமிட்டு செயல்பட்டால், பாதிப்பை தவிர்க்க முடியும்.




மார்ச் 24ம் தேதி ஹோலி பண்டிகை, மார்ச் 25ம் தேதி புனித வெள்ளி, மார்ச் 26 நான்காவது சனிக்கிழமை (மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது). மார்ச் 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை. ஆக தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக வங்கிகள் மூடப்பட உள்ளன. இதனால், வங்கிகளில் பணம் செலுத்துவது, பண பரிவர்த்தனை, ஏடிஎம்.,க்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.



ஏடிஎம்.,களில் பணம் எடுப்பவர்கள் முன்னரே போதிய அளவு பணம் எடுத்து வைத்துக் கொள்வதன் மூலம் சிரமத்தை தவிர்க்கலாம். தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது என்பது கவனத்தில் கொண்டும் மக்கள் பணத்தை கையிருப்பு வைத்துக் கொள்வது நலமாக இருக்கும்.


தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கு செல்வோர் முன்னரே திட்டமிட்டு, பயண அட்டவணையை வகுத்தால் ரயில் டிக்கெட் கிடைக்காமல் அல்லது காத்திருப்பு பட்டியலில் வைப்பது போன்ற கடைசி நேர அல்லல்களை தவிர்க்கலாம்

FOODS MAY BE POISON..CLICK BELOW..

ரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வசதி: ராஜேஷ் லக்கானி தகவல்

ரூ.25 செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற புதிய வசதி: ராஜேஷ் லக்கானி தகவல்


தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இதுவரை பெறாதவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி எளிய முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெறலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.


இன்று சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் வானொலியில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கான ஒரு நாள் தேர்தல் செய்திகளை சேகரிப்பது பற்றிய பயிற்சி முகாமை ராஜேஷ் லக்கானி தொடங்கி வைத்தார்.


அதற்குப் பிறகு அவர் பேசியதாவது:


''தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இது வரை பெறாதவர்கள் எளிய முறையில் பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 363 வாக்காளர் சேவை மையம் வரும் திங்கட்கிழமை முதல் செயல்படும். அடுத்த மாதம் 15ம் தேதி வரை இத்தகைய வசதி இருக்கும்.


இந்த மையங்களுக்கு செல்ல முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் . இத்தகைய மையங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் போது ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். தபால் மூலம் பெற விரும்பினால் கூடுதல் துரித அஞ்சல் (ஸ்பீடு போஸ்ட்) கட்டணமாக ரூ.25 வசூலிக்கப்படும்.


தமிழகத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் 100 சதவீதம் நேர்மை 100 சதவீதம் வாக்களிப்பு பற்றிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஊடகங்கள் எடுத்து செல்ல வேண்டும்.


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 மாதிரி வாக்குச் சாவடி என மொத்தம் 1000 மாதிரி வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். மேலும், வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் நெரிசலை தவிர்க்க 1950 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி விவரத்தை தெரிந்துக் கொள்ளும் வசதி இந்த தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகள் மூலம் இதுவரை ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை முறையாக பரிசீலனை செய்து சரியான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தலைமையிலான குழு அரசிடம் ஒப்படைக்கும்'' என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

புற்றுநோய் செல்லை அழிக்கும் மஞ்சள்: ஆய்வில் தகவல்

புற்றுநோய் செல்லை அழிக்கும் மஞ்சள்: ஆய்வில் தகவல்

புதுச்சேரி பல்கலைக்கழக உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்துறை இணை பேராசி ரியர் முனைவர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் பீட்டர்பர்க் புற்று நோய் மையத்துடன் இணைந்து மஞ்சளில் உள்ள ‘குர்குமின்’ வேதிப்பொருளைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர்.இதுகுறித்து முனைவர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குர்குமினின் புற்றுநோய் எதிர்ப்பு திறனானது ஏற்கெனவே ஆவணப்படுத்தி இருந்தாலும் பெருங்குடல் புற்றுநோய் செல்களை அழிப்பதில் அதன் பங்கு தெரியாமலே இருந்து வந்தது. நாம் உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் உள்ள’குர்குமின்’ சிறந்த புற்றுநோய் எதிர்ப்பு காரணியாகும். எங்களுடைய ஆய்வில் டிஎன்ஏவை பழுது நீக்கும் ஜீன்களில் ஏற்படும் திடீர் மரபணு மாற்றங்களில் உண்டாகும் நான்-பாலிபோசிஸ் பெருங்குடல் புற்றுநோய் செல்களை குர்குமின் அழிக்க வல்லது என உறுதி செய்யப்பட்டது.மேலும், முக்கிய புரதத்தின் அளவை தூண்டி பெருங்குடல் புற்றுநோய் செல்களின் இறப்பையும் அதிகப்படுத்துகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.