Sunday, 20 March 2016

சத்துணவு வழங்கப்படாததால் மாணவர் வருகை குறைவு ஆசிரியர்கள் சங்கம் புகார்

சத்துணவு வழங்கப்படாததால் மாணவர் வருகை குறைவு ஆசிரியர்கள் சங்கம் புகார்.

'தமிழக பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படாததால் மாணவர்கள் வருகை சதவீதம் குறைந்துள்ளது' என, தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் புகார் தெரிவித்துள்ளது.தமிழக அரசு 1984 ஜூலை 26ல் அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் (சனிக்கிழமை உட்பட) ஆண்டுக்கு 220 நாட்கள் சத்துணவு வழங்க வேண்டும் என அரசாணை வெளியிட்டது.

பின், மாதந்தோறும் வாரம் இருமுறை என,மாதம் 8 முறை முட்டை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு சத்துணவு மற்றும் முட்டை வழங்கப்படுகிறது. இந்நிலையில் உயர்நிலைப் பள்ளிகளில் கடந்த சில நாட்களாக சத்துணவு வழங்காததால் மாணவர்கள் மயங்கி விழும் சூழ்நிலை உள்ளதாக ஆசிரியர்கள் சங்கங்கள் புகார் கூறியுள்ளன.இதுகுறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு உயர்நிலை -மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பியுள்ளது.மாணவர்கள் மயக்கம்:அதில் கூறியிருப்பதாவது: உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் கடந்த சிலநாட்களாக சத்துணவை நிறுத்தி விட்டனர். 'ஏப்., 1 முதல் புத்தாண்டு கணக்கு துவங்க உள்ளதால் சத்துணவு தர இயலாது' என அவர்கள் மாணவர்களிடம் கூறிவருகின்றனர். இதனால் சத்துணவின்றி வீடு திரும்பும் மாணவர்கள் மயங்கி விழுகின்றனர், என தெரிவித்துள்ளனர்.தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் முருகேசன்,ஜெகதீஷ்குமார், செந்தில்குமார் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 251 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளி சத்துணவு அமைப்பாளர்களின் மெத்தனத்தால் இவ்வாறு நடந்துள்ளது. நடப்பாண்டில் பள்ளிகளில் 200 வேலை நாட்கள் மட்டுமே முடிந்துள்ளது. இவர்களின் செயல்பாட்டை கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.
இதுகுறித்து விரிவான அறிக்கையைபள்ளிக்கல்வித்துறைக்கும் அனுப்பி உள்ளோம், என்றனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ஜெசி கூறுகையில், “200 வேலைநாட்களுக்குபின் சத்துணவை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேவையெனில் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து எழுத்துப்பூர்வ உத்தரவு வந்தால் மட்டுமே சத்துணவு வழங்குவோம்” என்றார்.

No comments:

Post a Comment