Sunday, 31 July 2016

August Diary




👉6-Grievance day,
👉RL- 2,12,18,19
👉15,25-Govt Holiday
👉27-Saturday School working day
👉 *_Transfer Counselling Schedule:_*
👉3-Aeeo Tfr,
👉4-Mid HM to Aeeo Tfr,
👉6 -Mid HM Tfr,To Mid HM Pro & BT Deployment,BT inside union Tfr,BT Promotion,BT Tfr union to union,
👉7-Pri HM Tfr,To Pri HM Pro,
👉13-SGT Surplus,
👉14-SGT Tfr,
👉20-BT dis to dis Tfr,
👉21-SGT Dis to Dis Tfr

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 9,060 போலி பேராசிரியர்கள் : தமிழகத்தில், 520 பேர் இருப்பதாக அண்ணா பல்கலை எச்சரிக்கை.




நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. மாநில பல்கலைகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு பாடத்திட்டம் குறித்த இணைப்பு அந்தஸ்தை வழங்கும். தமிழகத்தில், அண்ணா பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.
பல்கலை அதிகாரிகள், இணைப்பு அந்தஸ்து வழங்கும் முன் கல்லுாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்துவர். கட்டடத்தின் ஸ்திரத்தன்மை, நுாலகம் மற்றும் ஆய்வகம் வசதி, பேராசிரி யர்கள் எண்ணிக்கை, கல்வித்தகுதி,உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்வர்.இதன்படி, மாநிலங்களில் உள்ள பல்கலை களும், ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரிகளும் நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில், 9,060 போலி பேராசிரி யர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.இந்த எட்டு மாநிலங்களிலும், 7,155 இன்ஜி., கல்லுாரிகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கியுள்ளது.இவற்றில் பணியாற்றுவோர் என, 5.16 லட்சம் பேராசிரியர்களின் பெயர்கள், ஏ.ஐ.சிடி.இ., யிடம் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில், 9,060 பேர், போலியாக பதிவு செய்யப்பட்ட பேராசிரியர்கள்.நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்டிரா வில், 2,452 போலி பேராசிரியர்கள் உள்ளனர். உத்தர பிரதேசத்தில், 2,184; ஆந்திராவில், 1,040; தெலுங்கானா, 950; ஒடிசா, 809; குஜராத், 742 மற்றும் கர்நாடகாவில், 363 போலி பேராசிரி யர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர்.தமிழக இன்ஜி., கல்லுாரிகளில், கடந்த கல்வி யாண்டில், 520 பேராசிரியர்களின் பெயர்கள் போலியாக இடம்பெற்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த அறிக்கை, மத்திய அரசால் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட கல்லுாரிகளுக்கு,ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலை அதிகாரிகள், 'நோட்டீஸ்' அனுப்பி, நிரந்தர பேராசிரியர்களை நியமிக்கும்படி எச்சரித்துள்ளனர்.

Saturday, 30 July 2016

AUGUST 2016-Diary




🍁2.8.16- Tue, Aadi festival holiday,
🍁 6.8.16- Sat, Grievance day,
🍁12.8.16-Fri- R.L- Varalakshmi Nonbu,
🍁15.8.16- Mon- 69th Independence day -holiday ,
🍁18.8.16- Thurs, R.L, Rig, yazur Upakarma,
   🍁19.8.16- Fri- R.L, Gayathri Jebam,
🍁25.8.16- Thurs , Sri Krishna Jayanthi- holiday,
🍁27.8.16-sat, Working day(PRIMARY & MIDDLE SCHOOL)
Elementary education :-Transfer Shedule
 Application receiving 31.07.2015 to 06.08.2015
 1) AEEOs transfer and promotion 08.08.2015 Saturday
 2) Middle HM transfer and promotion-16.08.2015 Sunday
 3) BTs Deployment – 16.08.2015 Sunday
 4) BTs transfer with in Union-16.08.2015 Sunday
 5) BTs promotion – 16.08.2015 Sunday
 6) BTs transfer union to union -16.08.2015 Sunday
 7) Elementary HM transfer – 17.08.2015 Monday
 8) Elementary HM promotion – 17.08.2015 Monday
 9) SGTs deployment – 17.08.2015 Monday
 10) SGTs transfer within Union – 22.08.2015 Saturday
 11) SGTs transfer union to union – 22.08.2015 Saturday
 12) BTs transfer district to district (Online)-29.08.2015 Saturday
 13) SGTs Transfer district to district (Online) – 30.08.2015 Sunday.

Friday, 29 July 2016

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிரியர்: கடைசி நேரத்தில் பாடம் நடத்த வருதாக உருக்கமான பேச்சு: மாணவர்கள் கதறல்




மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத அரசு பள்ளி ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக தனி வகுப்பு எடுப்பேன் என்று உருக்கமாக பேசியிருந்தை கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர் இறந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் கதறினர்.

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிழக்கு செல்லையா மகன் ரவிச்சந்திரன் (50). விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுகலை உயிரியல் ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாக
பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆசிரியர் ரவிச்சந்திரன் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக வந்த பிறகு 7 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு செல்ல துணையாக இருந்துள்ளார் என்றும் அவரது பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சியும் மதிப்பெண்ணும் வாங்க சிறப்பாக பாடம் நடத்தினார் என்றும் மாணவர்கள், சக ஆசிரியர்கள் கூறினார்கள்.
இந்த நிலையில் ஆசிரியர் ரவிச்சந்திரன் கடந்த வாரம் காய்ச்சல் என்று திருச்சி தனியார் மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீராக கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ. 90 லட்சம் வரை செலவாகும் என்று சொன்னதால் எங்கள் ஆசிரியர் உயிரை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் கருணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11, 12 ம் வகுப்பு மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கண்ணீருடன் தனித்தனியாக கோரிக்கை மனு எழுதினார்கள். அதே போல ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்களும் கோரிக்கை மனு அனுப்பினார்கள். அதன் பிறகு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த தகவல் செய்திகளாக வெளிவந்த நிலையில் முதலமைச்சர் உத்தரவு படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆசிரியர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சிகிச்சைக்காக சிறப்பு மருத்தவர்கள் குழு அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறினார். இந்த நிலையில் தொடர்ந்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி ஆசிரியர் ரவிச்சந்தரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆசிரியர் ரவிச்சந்திரன் சிகிச்சை பெற்று உடல் நடமுடன் வந்து மீண்டும் பாடம் நடத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியதுடன் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் ஆசிரியர் விரைவில் குணமடைய வேண்டும் சிறப்பு வழிபாடுகளையும் மாணவர்கள் நடத்தினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் அறிந்ததும் மாணவர்கள் வகுப்பறைகளில் கதறி அழுதனர். இந்த சம்பவம் ஆசிரியர்களையும் கண் கலங்க செய்தது.
ஒரு ஆசிரியருக்காக மாணவர்களும், சக ஆசிரியர்கள், பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கண்ணீர் விடுவது அனைவரையும் நெகிழச் செய்யும் நிகழ்வு தான்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மேகநாதன் கூறும்போது, நேற்று முன்தினம் மதியம் ஆசிரியர் ரவிச்சந்திரன் என்னிடம் 15 நிமிடம் போனில் பேசினார். “எனக்காக மாணவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியதால் முதலமைச்சர் தனிக்கவணம் செலுத்தி அமைச்சரை நேரில் அனுப்பி சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்கள். உடல் நலமடைந்து வருவதாக அறிகிறேன். இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்து உடனே பள்ளிக்கு வந்துவிடுவேன்”.
மாணவர்களிடம் சொல்லுங்கள் ஒரு வாரத்தில் வந்து அவர்களுக்கு பாடம் நடத்துவேன் மேலும் இதுவரை தேங்கியுள்ள பாடத்தையும் சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் எடுத்து விரைவில் பாடங்களை முடித்து அனைத்து மாணவர்களையும் நல்ல முறையில் மதிப்பெண் பெற வைப்பேன், இந்த ஆண்டும் சிலரை மருத்துவ மாணவர்களாக அனுப்புவேன் என்று சொல்லுங்கள் என்று பேசினார். அவரது நம்பிக்கை எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. அதை மாணவர்களிடமும் சொன்னேன். அனைத்து மாணவர்களும் ஆறுதல் அடைந்த நேரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது என்றார்.

தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.

41 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு.


41  அரசு உயர்நிலை, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது.

அவர்களது பட்டியல் :
   1 என்.சுப்பிரமணியன் தலைமையாசிரியர் அரசு (ம) மேல்நிலைப்பள்ளி கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்
2 மு.மணிமேகலா தலைமையாசிரியை அரசு உயர்நிலைப் பள்ளி, நெய்வாசல், தஞ்சாவூர் மாவட்டம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் தஞ்சாவூர்
3 எம்.எஸ்.மல்லிகா தலைமையாசிரியை அரசு மேல்நிலைப் பள்ளி தொரப்பாடி, வேலூர்-2 மாவட்டக் கல்வி அலுவலர், ஓசூர்,  கிருஷ்ணகிரி மாவட்டம்
4 ஆர்.கலைச்செல்வன் தலைமையாசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி,  சின்னசேமூர், ஈரோடு மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், கோபிச்செட்டிபாளையம் ஈரோடு
5 ஆர்.சண்முகம் தலைமையாசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி அரிமழம்- 622 201 புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டக் கல்வி அலுவலர், திருச்சிராப்பள்ளி

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது-அரசாணை வெளியீடு

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆராயும் குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது-அரசாணை வெளியீடு



CLICK HERE TO DOWNLOAD IN PDF FORMAT - CPS PENSION EXPERT COMMITTEE FOR CONTINUING OLD PENSION SCHEME ..... 2016G.O.No.220 Dt: July 28, 2016 

COMMITTEE – Expert Committee on the Demand for Continuing Old Pension Scheme – Modification in the Composition and Extension of Term of the Expert Committee – Orders - Issued.

ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.

2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாமல் தவிப்பு.


கட்டாய பணி நிரவலில்துாக்கியடிக்கப்பட்ட, 2 ஆயிரத்து400 ஆசிரியர்கள் கலந்தாய்வில்பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர்.
தமிழகத்தில், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதித்தேர்வு, 2014 செப்டம்பரில் கடைசியாக நடந்தது.
   வெற்றி பெற்றவர்களுக்கு, பணி ஆணை வழங்கப்பட்டது. இதில், பணி அனுபவம் இல்லாத, இடைநிலை ஆசிரியர்களால், 2015ல் நடந்த கலந்தாய்வில் பங்கேற்க முடியவில்லை.அதே ஆண்டில், பணி நிரவலின்போது மாவட்டந்தோறும், ஒரு பாடத்துக்கு, 15 ஆசிரியர்கள் வீதம், 75 ஆசிரியர்கள் கட்டாய இடமாறுதலுக்கு உட்படுத்தப்பட்டனர்.இதன்படி, தமிழகம் முழுவதும், 2 ஆயிரத்து 400 ஆசிரியர்கள், தற்போது நடக்கவிருக்கும் கலந்தாய்வில், பங்கேற்க முடியாத சூழல் உள்ளது.ஏனெனில், புதிய கலந்தாய்வுவிதிப்படி, 1.6.2016ல், ஓராண்டு பணி அனுபவம் பெற வேண்டும். பணிநிரவலில் இடமாறுதல் பெற்றஆசிரியர்களுக்கென பிரத்யேக உத்தரவும் இல்லை. இதனால், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இடைநிலைஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'பணி நிரவல் என்பது கட்டாய பணிமாறுதல்தான். இதில், பலர் சொந்த ஊரை விட்டு துாக்கியடிக்கப்பட்டு, இருஆண்டுகளாக கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.'கடந்தாண்டு வரை, பணி நிரவல் பெற்ற ஆசிரியர்கள், கலந்தாய்வில்பங்கேற்க எவ்வித தடையும் இல்லை என அறிவிக்கப்பட்டது.நடப்பாண்டில் பின்பற்றும் புதிய நடைமுறையால், சொந்த ஊருக்கே திரும்ப முடியாத நிலை நீடிக்கிறது. அரசாணையில் தக்க திருத்தம் செய்ய வேண்டும்' என்றனர்.
கோவை முதன்மை கல்வி அலுவலர்அருள்முருகன் கூறுகையில்,''அரசாணை விதிப்படி, கலந்தாய்வு பணிகள் நடக்கின்றன. பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டால்,விண்ணப்பங்கள் பெறுவதில் சிக்கல் இல்லை,'' என்றார்.

Thursday, 28 July 2016

DEPUTATION TO ELE.H.M

மாணவர் பதிவு இன்மையால்தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கி நாமக்கல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அதிரடி!!

Monday, 25 July 2016

இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க உத்தரவு




அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவுதொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.
   தமிழகம் முழுவதும், 23 ஆயிரத்து 815 தொடக்கப்பள்ளிகள் மற்றும், 7,307 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு, எ.பி.எல்., எனப்படும் செயல்வழி கற்றல் அட்டை மூலம், பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதில், ஆசிரியர்களுக்கே அதிக எழுத்துப்பணி இருக்கும்.இதனால், மாணவர்களின், எழுத்து, வாசிப்பு திறன் மற்றும் கணிதத்தில் எளிய கூட்டல், கழித்தல் முறைகளை பின்பற்றுவதில், பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. இது, உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில், தேர்வை எதிர்கொள்ளுதல், தேசிய திறனாய்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்க தடையாக இருப்பதாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், தொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த, தர மேம்பாட்டு ஆய்வு நடத்தி, பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி, கடந்தாண்டில் கோவை மாவட்டத்தில், 1,300 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் நடந்தது.இதில், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில், மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன், 35 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. பின், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு,புத்தாக்க பயிற்சி அளித்து, கற்றல் முறையில் சில மாற்றங்கள்செய்யப்பட்டன.நடப்பாண்டில், அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை மாவட்டத்தில், முதற்கட்ட ஆய்வில், 650 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.அடுத்த மாதம் இறுதி வரை, மாணவர்களுக்கு எளிய பயிற்சிகள், தேர்வுகள் நடத்தி, கற்றல் திறன் குறித்து, அறிக்கை தயாரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கட்டணம்; திருப்பி வழங்க உத்தரவு


அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்விக்கு என, வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை, மாணவர்களுக்கே திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி பிரிவும் நடத்தப்பட்டு வருகிறது.


சேலம் மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வழங்கப்படுகிறது. இதில், தமிழ் வழிக்கல்வி மாணவர்களிடம், கல்விக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் உள்ளிட்டவை வசூல் செய்யப்படுவதில்லை.




ஆனால், நடப்பு கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வி படிக்கும் ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடம், தலா, 200 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், ஆங்கில வழிக்கல்விக்கென வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை, மாணவர்களுக்கே திருப்பி வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.



இதுகுறித்து, அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணத்தையும், அரசே திரும்ப செலுத்துவதால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டியதில்லை. ஆனால், தணிக்கையின் போது ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால், நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.



இதற்கான அரசாணை மற்றும் தெளிவுரை கிடைத்த நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணத்தை, திரும்ப மாணவர்களிடமே வழங்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, 24 July 2016

தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1.06 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் வரும், 28ல் நடக்கிறது.



தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1.06 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் வரும், 28ல் நடக்கிறது. இதற்கு, 27ல் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் சேருவதற்கான, பொது கவுன்சிலிங், 21ல் முடிந்தது.
இதன்முடிவில், 84 ஆயிரத்து, 352 இடங்களே நிரம்பின. ஒரு லட்சத்து, 1,318 இடங்கள் காலியாக உள்ளன.
ஆன்லைனில்... : இதேபோல, ஜூன், 23, 24ம் தேதிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 1,501 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; மேலும், 5,022 இடங்கள் காலியாக உள்ளன. இதன்படி, மொத்தம் ஒரு லட்சத்து, 6,340 இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களை நிரப்புவதற்கான துணை கவுன்சிலிங், ஜூலை, 28ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, 27ம் தேதி காலை, 9:00 மணி முதல், 5:30 மணி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
அறிவுறுத்தல் : பிளஸ் 2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களும், ஏற்கனவே கவுன்சிலிங்கில் பங்கேற்று, இட ஒதுக்கீடு பெற்றவர்களும் இந்த கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு இன்ஜி., கவுன்சிலிங் செயலர் இந்துமதி அறிவித்துள்ளார். கூடுதல் விவரங்களை, https://www.annauniv.edu/tnea2016/ என்ற, இணைய தளத்தில் காணலாம்.அருந்ததியர் ஒதுக்கீட்டுக்கு 29ல் நடக்கிறது : கடந்த ஜூன், 23ல் துவங்கி, இம்மாதம், 21ம் தேதியுடன் முடிவடைந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், அருந்ததியருக்கான ஒதுக்கீட்டில், 4,762 இடங்களும், தொழிற்கல்விக்கான கவுன்சிலிங்கில், 189 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை, ஆதிதிராவிடர் எனப்படும், பட்டியலின தலித் மாணவர்களுக்கு நிரப்புவதற்கான கவுன்சிலிங், 29ல் நடக்கிறது. கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்து பாடம் எடுக்காதோர், விண்ணப்பித்து வேறு பாடப்பிரிவுகளில் ஒதுக்கீட்டு பெற்றோரும், நேரில் இந்தகவுன்சிலிங்கில் பங்கேற்று, விருப்பமான கல்லுாரிகளில், முக்கிய பாடப்பிரிவுகளில் இடம் இருந்தால் எடுத்துகொள்ளலாம்.

கல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரியர்கள். தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.




             தமிழகத்தின் பல மாவட்டங்களில், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக பள்ளிக் கல்வித்துறை இக் காலியிடங்களை நிரப்ப, 2014ம் ஆண்டில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தியது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் எழுதினர்.
தேர்வு எழுதி ஓராண்டு ஆனபின், கடந்த ஆண்டு, மே மாதம் தேர்வு முடிவு வெளியானது. இதில், 3,000 ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர். அடுத்த கட்டமாக இவர்கள் கடந்த ஆக., மாதம், சென்னையில் முதன்மைத் தேர்வு எழுதினர். தேர்வு எழுதி முடித்து, ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்னும் முடிவு வெளியாகவில்லை. இந்த தேர்வு முடிவை எதிர்பார்த்து, 3,000 ஆசிரியர்களும் காத்திருக்கின்றனர். இதுகுறித்து தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சிலர் கூறுகையில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் விரைவாக முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். தேர்வானவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தி, பல மாவட்டங்களில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 suresh v

Convert your classroom into virtual classroom with augmental reality and 4D apps with 2 steps

Convert your classroom into virtual classroom with augmental reality and 4D apps with 2 steps





step1:Download the app to your mobile from below link
https://play.google.com/store/apps/details?id=com.OctagonStudio.Animal4DPlus&hl=en
https://play.google.com/store/apps/details?id=com.OctagonStudio.SolarSys&hl=en
https://play.google.com/store/apps/details?id=com.daqri.d4DAnatomy&hl=en



Step2:Take print out of the pictuers and scan with app you will get 4D effect


உங்கள் வகுப்பறையை 4D  வகுப்பறையாக மாற்ற எளிய வழி


1.கீழ்கண்ட லிங்கிலிருந்து மொபைலில் ஏப் டவுன்லோட் செய்க
https://play.google.com/store/apps/details?id=com.OctagonStudio.Animal4DPlus&hl=en


https://play.google.com/store/apps/details?id=com.OctagonStudio.SolarSys&hl=en


https://play.google.com/store/apps/details?id=com.daqri.d4DAnatomy&hl=en


2.கீழே உள்ள படங்களை பிரிண்ட் செய்து ஏப்பில் கேமராவில் ஸ்கேன் செய்தால் உண்மையான உருவம் கண் முன் தோன்றும்,


விலங்குகள்,பொம்மைகள்,தனிமங்கள்,இதயம்,உடலின் பாகங்களின் படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
 

Saturday, 23 July 2016

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை.

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்கு கருணாநிதி எச்சரிக்கை.


புதிய கல்விக் கொள்கை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
   ''மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர்டி.எஸ்.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய கல்விக் கொள்கை தொடர்பான 200 பக்க அறிக்கையை அளித்துள்ளது.5 பேர் கொண்ட இக்குழுவில் ஒருவர் மட்டுமே கல்வியாளர் என்பது கவனிக்கத்தக்கது. இக்குழு பரிந்துரைத்துள்ள பல அம்சங்கள் விவாதத்துக்கு உரியவை. பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது.4-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி என்பதை அமல்படுத்தினால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமற்று கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
உலகிலேயே கல்வியில் முதலிடத்தில் உள்ள பின்லாந்து நாட்டில் 7 வயதில் தான் கல்வி தொடங்குகிறது. 16 வயது வரை 9 ஆண்டுகளுக்கு தேர்வு இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது நலம்.ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால் தொழில் பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் உள்ளது. மறைமுகமாக குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில் தொழில் கல்வியை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதே நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.கல்வி நிர்வாகப் பணிக்கு இந்திய கல்விப் பணித் தேர்வு வைக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது. இதன்படி கல்வித் துறை இயக்குநர்களை மாநில அரசு நேரடியாக நியமிக்க முடியாது.பிளஸ் 2 முடித்தவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்மூலம் பாடத் திட்டங்களை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம் இந்தியாவின் அடிப்படைகூறான பன்முகம் சிதைவுறும்.வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும். வெளிநாடுகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றால் அதுபோன்ற கல்வியை இந்தியாவிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் லைசென்ஸ் அல்லது சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதி லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறைஆசிரியர்கள் பயிற்சி பெற வேண்டும் போன்ற பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது. இது ஆசிரியர்களிடம் ஒருவித இயந்திரத் தன்மையை தோற்றுவிப்பதோடு, காலப்போக்கில் சலிப்பு, விரக்தியை ஏற்படுத்தும்.தற்போது வகுக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வெளிப்படைத் தன்மையோடும், ஜனநாயக அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை. கடந்த 2015-ல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாத தலைப்புகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது.
அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் எதுவும் வரவில்லை. திரட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்துக்களை தொகுத்து சுப்பிரமணியன் குழு அறிக்கை அளித்துள்ளது.அந்த அறிக்கையையும் மத்திய அரசு வெளியிட மறுக்கிறது. இவ்வாறு ரகசியாக கல்விக் கொள்கையை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியிருப்பதில்ஆழ்ந்த பொருள் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை நவீன குலக்கல்வித் திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.கல்விக் கொள்கையை வரையறுக்க கல்வியாளர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். அக்குழுவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கல்வியாளர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இக்குழு அறிக்கை நாட்டு மக்கள் முன்பு வைக்கப்பட்டு, மக்கள் கருத்து அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்தத் தீர்மானத்தில், கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம்பெற வேண்டும்.புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. தமிழகத்துக்கு சிறிதும் பொருந்தாத இந்தப் பிரச்சினையை முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கையோடு கையாண்டு, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பி.ஆர்க்., படிப்புக்கு 26ல் கவுன்சிலிங் அதிகபட்ச 'கட் - ஆப்' 293 ஆக நிர்ணயம்

Saturday, July 23, 2016

  
பி.ஆர்க்., படிப்புக்கு 26ல் கவுன்சிலிங் அதிகபட்ச 'கட் - ஆப்' 293 ஆக நிர்ணயம்


சென்னை: பி.ஆர்க்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூலை 26ல் நடக்கிறது.
'ஆர்கிடெக்ட்' என்ற கட்டட வடிவமைப்பு தொடர்பான இன்ஜி., படிப்பு, பி.ஆர்க்., என்ற பெயரில் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள கல்லுாரிகளின், 2,800 இடங்களில், 1,800 இடங்கள், தமிழக அரசின், ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் அட்மிஷன் பெற, 2,500 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில், 'நாட்டா' என்ற தேசிய ஆர்கிடெக்ட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வை எழுதாத, 181 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

பி.ஆர்க்., கவுன்சிலிங், வரும் 26ல் நடக்கிறது. காலை 7:30 மணிக்கு, மாற்றுத்திறனாளி மாணவர்கள்; காலை 9:00 மணி முதல், மற்ற மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கும். ஒரே நாளில், அனைத்து இடங்களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.
இந்த ஆண்டு பி.ஆர்க்., படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில், 293, 'கட் - ஆப்' மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 'நாட்டா' தேர்வு மதிப்பெண்ணில், 200க்கு எடுத்த மதிப்பெண்ணும்; பிளஸ் 2 மொத்த மதிப்பெண்ணை, 200க்கு எவ்வளவு என மாற்றி, இரண்டையும் மொத்தம், 400 மதிப்பெண்களுக்கு மாற்றி, 'கட் - ஆப்' மதிப்பெண் நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!'


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.
   ஆசிரியர் இடமாறுதலுக்கு, ஜூலை, 19 முதல், முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்; 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.
 * அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 6ல்,மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்குமான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.
 * அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 7ல், பதவி உயர்வு கவுன்சிலிங்கும்,உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, ஆக., 13ல், மாவட்டத்திற்குள்ளேயும், வெளியிலும் கவுன்சிலிங் நடக்கும்.
 * அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள், ஆக., 20; வேறு மாவட்டத்துக்கு, 21ம் தேதி; பதவி உயர்வு கவுன்சிலிங், 22ம் தேதியும் நடக்கும்.
 * உடற்கல்வி, தையல், இசை, கலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் ஆக., 23ம் தேதி; வேறுமாவட்டங்களுக்கு, 24ல் கவுன்சிலிங் நடக்கும்.
 * பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆக., 27 முதல், 29ம் தேதி வரை பணி நிரவலும், செப்., 3ம் தேதிமாவட்டத்திற்குள்ளும், 4ல் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக, செப்., 6ல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்இந்நிலையில், ஆசிரியர், அலுவலர் சங்கங்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும்.
அரசியல் புள்ளிகள் மூலம், காலியிடங்களுக்கான கோரிக்கைகள் வரத் துவங்கி உள்ளன. அதிக போட்டி உள்ள, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும், தலைநகர் சென்னையிலும், பேரத்தை அரங்கேற்ற, சில இடைத்தரகர்கள் முயற்சித்து வருகின்றனர்.ஆனால், 'யாரிடமும், 'வி.ஐ.பி., கோட்டா' என்ற அடிப்படையில், இடமாறுதல் செய்யக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவு, தலைமைசெயலகத்தில் இருந்து வந்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Wednesday, 20 July 2016

பிச்சை எடுக்கும் அரசு ஊழியர்கள் - அதை கை கட்டி வேடிக்கை மட்டும் பார்க்கும் வீரம் செறிந்த சங்கங்கள்

பிச்சை எடுக்கும் அரசு ஊழியர்கள் - அதை கை கட்டி வேடிக்கை மட்டும் பார்க்கும் வீரம் செறிந்த சங்கங்கள்


பிச்சை எடுக்கும் அரசு ஊழியர்கள் - அதை கை கட்டி வேடிக்கை மட்டும் பார்க்கும் வீரம் செறிந்த சங்கங்கள்



(வசைபாடல்கள்- இயக்க நடவடிக்கைகளைப் பற்றி உனக்கென்ன தெரியும் நாங்கள் களத்தில் இறங்கி குரல் கொடுத்துள்ளோம்..)
  


குரல் கொடுக்க மட்டும் ( * ) தான் சங்கமா..


அநீதிக்கு எதிராக அரசின் குரல்வளையை இறுக்கிப் பிடிக்க வேண்டாமா..


{ ( * ) நானும் களத்தில் உள்ளேன் என்று காட்டிக்கொள்ள மட்டும் தான் இந்த குரலோ.. }


உயிர் காக்கும் அரசின் கட்டணமில்லா காப்பீட்டுத் திட்டம் இருந்தும்... மருத்துவமனையில் இன்னும் கொஞ்சம் சேத்துக் கொடுங்க (காப்பீட்டுத்தொகையினை) என்று அரசு ஊழியர்கள் பிச்சை எடுக்கும் அவல நிலை..


உன் அப்பன் வீட்டு காசையா கேட்கிறான் அரசு ஊழியன்..


மாதம் தவறாமல் பிடித்தம் செய்யப்பட்ட தனக்கான காப்பீட்டுத் தொகையினைத் தானே கேட்கிறான்..


ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை இருந்த பொழுதே அதில் ரூ.50,000 வாங்க படாத பாடு..


இதில் குறிப்பிட்ட 2 சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000-மாம் ..


யாருக்காக இந்த மாற்றம்..


அரசு ஊழியனிடம் பிடுங்கிக் கொடுத்த (தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம்) ரூ.150-ஐ ரூ.180 ஆக உயர்த்த மட்டும் தான் இந்த மாற்றம்..


2008 மே மாதம் வரை HF ரூ.10 பிடித்தம் செய்து 1,00,000 காப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது, பிறகு ரூ.25 க்கு 2,00,000 ஆக மாற்றம், அதன் பிறகு ரூ.150-க்கு 4,00,000 ஆனது. ஆனால் தற்பொழுதோ அதே 4,00,000 காப்பீட்டுத் தொகைக்கு ரூ.180 பிடித்தம்


கொடுப்பதோ ரூ.100 (MA) ஆனால் பிடுங்குவதோ ரூ.180


சரி பிடுங்கிய காப்பீட்டுத் தொகையாவது ஆபத்து காலத்தில் பெற முடிகிறதா அதுவும் இல்லை..


மாதம் மாதம் 10,20,000 அரசு ஊழியர்களிடம் ரூ.180 பிடித்தம் செய்தால்.


*10,20,000×180=ரூ.18,36,00,000 (ஒரு மாதத்தில் மட்டும் 18 கோடி)*


ஒரு வருடத்தில் 18,36,00,000×12=ரூ.220,32,00,000.


4 வருடத்தில் 220,32,00,000×4=ரூ.881,28,00,000


நான்கு வருடம் ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனத்திற்கு அரசு நம்மிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கும் மொத்த தொகை ரூ.800 கோடிகளுக்கு மேல்..  (4 வருடத்தில் மட்டும்)


ஆனால் காப்பீட்டு நிறுவனம் இதற்காக செலவிடும் காப்பீட்டுத் தொகை சொற்ப அளவு தான்..


இப்படி இருக்க 10,20,000 அரசு ஊழியர்களில் எத்தனை பேர் 4 வருடங்களில் சிகிச்சை பெறுவர்...???
இதுவும் சொற்ப அளவு தான்...


சொற்ப அளவில் மட்டுமே சிகிச்சை பெறும் அரசு ஊழியர்களுக்கு காப்பீட்டுத் தொகையும் சொற்ப அளவில் பிச்சையாக வழங்கப்படுகிறது..???


இந்த முறைகேடுகளை செய்தித்தாளில் வெளியிடுவதுடன் சங்கங்களின் பணி முடிந்துவிட்டதா...??


அதனால் மயிர்நுனி அளவுகூட பயன் ஏதும் இது வரை இல்லையே...


மாநில அமைப்பில் உள்ள இயக்கவாதிகள் இதுநாள்வரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லவில்லையா என்ன...???


இல்லை, இந்த முறைகேடுகளை தட்டிக் கேட்க திராணி இன்றி தனது சொந்த செலவில் சிகிச்சை பெறுகின்றனரோ..??


இல்லை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தான்மட்டும் முழு காப்பீட்டு உரிமையையும் பெற்றுவிடுவதால் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் அவல நிலை பற்றி கவலையில்லையோ...???


இது எதுவாயினும் அரசு ஊழியனின் உயிர்காக்க சங்கங்களின் ஒன்றுபட்ட போராட்டம் தேவை..


நமது உரிமைகளை பிச்சையாக பெற முடியாது தோழர்களே..

இனியும் இழப்பதற்கு அரசு ஊழியனின் உயிர் மட்டுமே மிச்சமுள்ளது..


அதைக் காக்கவாவது சங்கங்கள் சுயநலமின்றி ஓரணியாய் திரள வேண்டும்..


கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதிசெய்ய சங்கங்கள் கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டுமாய் அனைத்து அரசு ஊழியர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்
 

குரு பார்க்க கோடி நன்மை... யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா?


குரு பார்க்க கோடி நன்மை... யாருக்கு உயர் பதவி, செல்வம் கிடைக்கும் தெரியுமா?
Updated:  Wed, Jul 20, 2016, 15:17 [IST] 
By: Mayura Akilan



சென்னை: குரு பகவான் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு தான் நன்மை அதிகம் தருவார். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5,7, 9 ஆகிய இடங்களை பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றமான நிலையை பெறுகிறது.
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது நம் ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும். லக்னத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷம். ஏனென்றால் இவரின் பொன்னொளிப் பார்வை ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு விழும். ஆகையால் இந்த ஸ்தானங்களின் பலம் விருத்தியாகும்.


Guru Peyarchi: The Effects of Guru Parvai


நவகிரங்களில் மிகவும் முக்கிய யோக கிரகமாக கருதப்படுவது குரு ஆகும். ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற பெயர்ச்சிகள் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வருடம் ஆகஸ்டு மாதம் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. துர்முகி ஆண்டு ஆடி மாதம் 18 ம் நாள், அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.


இந்த குரு பெயர்ச்சி மூலம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் போன்ற ராசிகள் மிகவும் யோகம் அடைகின்றனர். மேலும், குரு வழிபாடு மூலம் மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் பலன் பெறுகிறது.
குரு பலம் இருந்தால்... சகல யோகமும் பெறலாம் என்பார்கள். பிரகஸ்பதி என்று குருகிரகத்தை அழைப்பார்கள் இதன் பொருள் ஞானத்தலைவன் என்பதாகும். விவேகத்தையும், அந்தஸ்தையும், ஆற்றலையும், புத்திர பாக்கியத்தையும் வாரி வழங்குவார். பஞ்ச பூதங்களில் ஆகாயம் குருபகவான்.
குருபகவான் ஜாதகங்களில் சிறப்பாக அமைந்தால் நல்ல குடும்பம், நல்ல கணவன்,மனைவி, செல்வசெழிப்பு அனைத்தும் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை பெறலாம். தெய்வ அருள் கிடைக்கும். ஜோதிட ஞானத்தை குரு வழங்குவார். திருமணம் ஒருவருக்கு செய்ய குரு பலம் , குரு பார்வை அவசியம். அறிவு உடைய குழந்தைகளை பெறுவதும் குருபகவான் அருள்தான்.
நவகிரங்களில் முழு சுபர் என்று அழைக்கப்படுபவர் குருபகவான் தான். இவர் ஒருவர் நல்ல நிலைமையில் இருந்தாலோ போதும் எவ்வளவு பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் நிலை கிடைக்கும். இவர் காரகம் வகிக்கும் செயல் குழந்தை பாக்கியம் திருமணம் நல்ல முறையில் பணவரவுகள் ஆகியவை ஆகும். இவரின் கருணை இருந்தால் தான் வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடைபெறும்.
ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதற்க்கு காரகம் வகிப்பவர் குரு பகவான். ஒழுங்கான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் குரு பகவான் நல்ல நிலையில் இருந்தால் மட்டும் தான் நடைபெறும். கன்னி லக்னமாக அமைந்து, குரு 3ல் அமர்ந்து பாவகிரகங்கள் பார்த்தாலோ,சேர்ந்தாலோ இரண்டு மனைவிகள் அமையும்.
ஜல ராசிகளில் குரு முக்கிய பங்கு வகிக்கிறார். காரணம், கடகம் என்ற ஜல ராசியில் குரு உச்சம் பெறுகிறார். மீனம் என்ற ஜல ராசியில் குரு ஆட்சி பெறுகிறார். மகரம் என்ற ஜல ராசியில் குரு நீச்சம் பெறுகிறார். ஒருவர் கடல் கடந்து அயல்நாடுகளுக்கு சர்வ சாதாரணமாக சென்றுவர குருவின் அருள் தேவை. வெளிநாடு சம்பந்தமான தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு தூதுவர், நிரந்தரமாக வெளிநாட்டில் தங்கும் அமைப்பு, கப்பல் வணிகம் ஆகியவை சிறக்க குருவின் கருணை வேண்டும்.
குரு எந்த வீட்டில் அமர்ந்தால் எத்தகைய நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
குரு 1 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தோற்றம் இருக்கும். நல்ல ஆயுளுடன் இருப்பார்கள். சிறந்த மனைவி அமையும். இவருடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் நல்ல ஆன்மிகவாதிகளாக இருப்பார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வ புண்ணிய பாக்கியம் கிடைக்கும். இவர்களின் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கையில் இவர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தந்தை இவருக்கு உதவி புரிவார்.


குரு 2 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பேச்சாளர்களாக இருப்பார்கள். இவர்களின் வாக்குக்கு சமுதாயத்தில் மதிப்பு இருக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கையிருப்பு பணம் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவார்கள். இவருடன் சேரும் வியாபார நண்பர்களும் நல்ல முறையில் இருப்பார்கள்.
குரு 3 ஆம் வீட்டில் இருந்தால் பக்தியில் ஈடுபாடு இருக்கும் இளைய சகோதரர் நல்ல முன்னேற்றம் இருக்கும் அவர் மூலம் இவருக்கு நன்மை கிடைக்கும். எதிர்பாலினரிடம் மோகம் இருக்கும். அளவோடுதான் மகிழ்ச்சி இருக்கும்.
குரு 4 ஆம் வீட்டில் இருந்தால் தாய் நல்ல நலத்துடன் இருப்பார். குழந்தை பாக்கியம் தாமதமாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்காது. பகைவர்கள் உண்டாகுவார்கள். விவசாய சம்பந்தபட்ட குடும்பமாக இருந்தால் விவசாயம் மூலம் நல்ல வருமானம் இருக்கும்.
குரு 5 ஆம் வீட்டில் இருந்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும். புத்திரக்களால் நல்ல நிலைக்கு வரலாம். நுண்ணிய அறிவு இருக்கும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கும். திடீர் பணவரவுகள் இருக்கும்.
குரு 6 ஆம் வீட்டில் இருந்தால் பகைவரை வெற்றி கொள்ளலாம். சமுதாயத்தில் மதிப்பு இருக்காது. குழந்தை பாக்கியம் தடை ஏற்படுத்துவார். மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெற தாமதம் ஆகும். உடம்பு பலம் இழந்து காணப்படும்.
குரு 7 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல மனைவி அமையும். குரு லக்கினத்தை பார்ப்பதால் உடல் நிலை நன்றாக இருக்கும். சமுதாயத்தில் நல்ல புகழ் கிடைக்க வழி செய்வார். மனைவியாக வருபவர் ஆன்மிக சம்பந்தப்பட்ட குடும்பமாக இருக்கும். மனைவியும் ஆன்மிக விஷயங்களில் நாட்டம் உள்ளவராக இருப்பார். இவர்களிடம் தொடர்பு வைத்துருப்பவர்கள் நல்ல மதகுருமார்களாக இருக்க வாய்ப்பு உண்டு.
குரு 8 ஆம் வீட்டில் இருந்தால் மனைவி அமைவது கஷ்டமாக இருக்கும். திருமணம் முடிந்தால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படும். செல்வ நிலை இருக்கும். சோதிடத்துறையில் நல்ல அறிவு ஏற்படும். மரண வீட்டை குறிப்பதால் உயிர் வதை இல்லாமல் உடனே போகும்.
குரு 9 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல பாக்கியம் கிடைக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார். ஆன்மிகத்தில் சிறந்து விளங்குவார். மிகப்பெரிய மடாதிபதிகளின் தொடர்பு ஏற்படும். மிக உயர்ந்த படிப்புகள் எல்லாம் படிப்பார்கள். வெளிநாடுகள் செல்ல வைப்பார். வெளிநாட்டு தொடர்பு மூலம் பணவரவுகள் இருக்கும். குலதெய்வ அருள் இருக்கும். மந்திர வித்தை நன்றாக இருக்கும்.
குரு 10 ஆம் வீட்டில் இருந்தால் நல்ல தொழில் அமையும். செல்வ நிலை உயரும். அரசாங்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும். அவரை சுற்றிய வட்டாரங்களில் மதிப்பு இருக்கும். வருமானத்தை பெருக்குவார். கோவில் சம்பந்தப்பட்ட இடங்களில் வேலைக்கு அமர்த்துவார்.
குரு 11 ஆம் வீட்டில் இருந்தால் தொழிலில் நல்ல வருமானம் இருக்கும். மூத்த சகோதர சகோதரிகள் மூலம் நன்மை நடக்கும். நல்ல நண்பர்கள் அமைவார்கள். வாகன வசதிகள் ஏற்படும். எந்த வேலையை எடுத்தாலும் வருமானத்திற்க்கு குறைவு இருக்காது. குழந்தை பாக்கியம் இருக்கும்.


குரு 12 ஆம் வீட்டில் இருந்தால் ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டார். புண்ணிய இடங்களுக்கு அடிக்கடி செல்ல வைப்பார். குழந்தை பாக்கியத்தில் குறை இருக்கும். சில பேர் பக்திமான்கள் போல் நடிப்பார்கள். கோவில் கட்டுதல் ஆறு குளம் வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வைப்பார். பணவிரையம் ஏற்படும்.
குரு பகவானால் ஞாபகமறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல் பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு போன்றவை உண்டாகும்.
ஒருவர் நல்லவரா ? கெட்டவரா? என்று குருவின் நிலையை வைத்து கூறிட முடியும். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம்.
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் கடைபிடிக்க வேண்டும். வெண் முல்லை மலர் சாற்றி குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது, மஞ்சள் நிற பூக்களை அணிவது நல்லது.

அசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி?"

அசல் தேனை கண்டுபிடிப்பது எப்படி?"




honeycomb-honey-wallpaper-4
மற்ற எந்த பொருள் மீதும் வராத சந்தேகம், தேன் என்றவுடன் ’அசல்’  தானா ? என்ற சந்தேகம்  நம்மில் ஏறத்தாழ 99 சதவீதம் பேருக்கு  வருவது   சகஜம் ! காரணம் தேன் மட்டுமல்ல விலை அதிகமுள்ள அனைத்து பொருள்களிலும் கலப்படம் செய்வது என்பது  நம் நாட்டில் சகஜம்.


இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் மற்ற பொருள்களில் உள்ள கலப்படத்தை பற்றி அதிகம் கண்டு கொள்ளாத மக்கள் தேன் என்றவுடன் ’ஒரிஜினல்’ தானா ? என்று ஆராய்வது பிரபல்யமாகி விட்டதால் இது கொஞ்சம் வித்தியாசமாக தென்படுகிறது.
உதாரணமாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலை எடுத்துக் கொண்டோமானால் அதில் பல்வேறு விதமான கலப்படங்கள் செய்வதாக செய்திகள் வெளியாகினறன. சமீபத்தில் ஒரு பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாக பதிவு செய்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன. தண்ணீரை அதிகம் கலந்தாலும் தெரியாமல் இருப்பதற்காக மரம் ஒட்ட பயன்படுத்தும் பசையை கலப்பது கண்பிக்கப்பட்டது. அதே போல் நுரை வருவதற்கு சோப்புத்தூள் போன்ற பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தேனைவிட பால் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாகவும் பச்சிளம் குழந்தைகளுக்கு உணவாக பயன்படக்கூடியதாகவும் இருக்கிறது.
எனவே தேனில் காட்டக்கூடிய அதே விழிப்புணர்வை மற்ற பொருட்களிலும் காட்ட வேண்டும் என்பதுதான் நமது ஆசையாகும்.
அசல் தேனை கண்டுபிடிக்க நம்மவர்கள் சொல்லும் வழிமுறைகள் என்னென்ன  என்று பார்ப்போம் !
– அசல் தேனை நாய் நக்காது !
– சுத்தமான தேனில் எறும்பு ஏறாது !
– கிளாஸ் தண்ணீரில் தேனை விட்டால் கரையாமல் அடிக்கு சென்று விடும் !
– பேப்பரில் ஊத்தினால் பேப்பர் நனையாது /ஊறாது
– நெருப்பில் எரியாது
போன்றவை பிரபலமானவையாகும்..
ஆனால் அறிவியல் பூர்வமாகவும் சரி, சாதரணமாக பரிசோதித்து பார்த்த வகையிலும் சரி மேற் சொன்ன எதுவுமே சுத்தமான தேனை கண்டுபிடிப்பதற்கு சரியான முறை இல்லை என்பது நிரூபனமாகி இருக்கிறது.
பல நேரங்களில் கலப்படத்தேனும்  இந்த பரிசோதனைகளில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது.
எனவே, நீங்கள் செய்த சோதனையில் வெற்றி பெற்றது அசல் தேனா அல்லது போலி தேனா என்பதை எப்படி முடிவு செய்வீர்கள் ?
எனவே, சுத்தமான அசல் தேனை நாமே கண்டுபிடிக்க இதுவரை எந்த நிரூபிக்கப்பட்ட வழிமுறையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இருக்கும் ஒரே வழிமுறை அதற்குரிய பரிசோதனை சாலையில் பரிசோதித்து பார்ப்பதுதான்.இது எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் சாத்தியபடாது என்பதால் தேன் வாங்கும் போது ஒரு சில வழுமுறைகளை கையாண்டால் ஓரளவு ஏமாற்றப்படாமல் இருக்கலாம்.
– நமக்கு தெரிந்த நம்பிக்கையான விவசாயிகள் அல்லது தேன் வளர்ப்பவர்களிடமிருந்து வாங்கலாம்.
– இந்தியாவை பொறுத்தவரை “அக்மார்க்” சின்னம் பொதித்த உணவுப்பொருட்களின் தரம் பரிசோதித்து பார்த்த பின்னரே அனுமதிக்கப்படுகிறது.  எனவே அக்மார்க் முத்திரையிடன் கூடிய தேன் மற்றவற்றை விட அதிக தரத்துடன் இருக்கும் என்பதை நம்பலாம். மேலும் அக்மார்க் முத்திரையுடன் கூடிய தேன் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடும் பெறலாம் என்பது கூடுதல் அனுகூலமாகும்.

DEE TRANSFER FORM

Tuesday, 19 July 2016

பிளஸ்-2 தேர்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக தலைமை ஆசிரியர்கள் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பிளஸ்-2 தேர்வில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்ததாக தலைமை ஆசிரியர்கள் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.


அந்தியூர் பள்ளியில் நடந்த இந்த மோசடி குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை நடந்தது. வேதியியல் தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. வேதியியல் தேர்வில் விடைகளை ஆசிரியர்கள் திருத்தியபோது, 5 மாணவர்களின் விடைத்தாள்களில் ஒரு மதிப்பெண் கேள்விகளில் சில கேள்விகளுக்கு விடை அளித்தது ஒரே கையெழுத்தாக இருந்தது.
அந்த 5 மாணவர்களும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. எனவே அந்த 5 மாணவர்களையும் தேர்வுத்துறை அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அந்த மாணவர்கள் விடைத்தாளில் உள்ள குறிப்பிட்ட கையெழுத்து ‘எங்களுடையது இல்லை’ என்று கூறி உள்ளனர். இதனால் அந்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. 4 ஆசிரியர்கள் இடைநீக்கம் இந்த நிலையில் தேர்வில் எவ்வாறு முறைகேடு நடந்தது என்பது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டம் மாத்தூர் மாடல் பள்ளி தலைமை ஆசிரியர் நஷீர், டி.ஜி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் சகாயராஜ், பவானி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆறுமுகம், முருகன் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கு சிபாரிசு செய்துள்ளனர்.இதையொட்டி அந்த 4 ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் சாமி சத்திய மூர்த்தி கூறியதாவது:- தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியில் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த 4 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுதவறு இல்லை. ஆனால் அந்த பள்ளியில் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நட வடிக்கை எடுக்கவேண்டும். ஒரே கையெழுத்து 5 மாணவர்களின் விடைத்தாளில் எப்படி வந்தது. இது பெரிய அளவில் நடந்த மோசடி ஆகும். இதில் பலரும் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உண்டு. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கல்விப்பணி தொடர வாய்ப்பு அளிக்க வேண்டும் தேர்வு முடிவு வெளியிடப்படாமல் இருக்கும் 5 மாணவர்களுக்கும் மீண்டும் தேர்வு நடத்தி அவர்கள் கல்விப்பணி தொடர வாய்ப்பு அளிக்க வேண்டும். விதிமுறைகளை மீறி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்கக்கூடாது. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு சாமி சத்திய மூர்த்தி தெரிவித்தார்

Monday, 18 July 2016

விரைவில் 1600 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்.

விரைவில் 1600 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்.


நீதிமன்ற ஆணைகளின் படி மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் 1600 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்படும் - பள்ளிக்கல்வி இயக்குநர்.

Sunday, 17 July 2016

'பேஸ்புக்'கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள் : பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை

'பேஸ்புக்'கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள் : பயிற்சியின் போது மொபைல் பயன்படுத்த தடை


'ஆசிரியர்களுக்கான பயிற்சியின் போது, மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.


அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் மூலமும், வட்டார வள மையங்கள் மூலமும், விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் மூலமும்;
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்பயிற்சி நிறுவனம் மூலமும், சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சிகளின் போது, ஆசிரியர்கள் தங்கள் கவனத்தை சிதறவிட்டு மொபைல் போன்களில், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதள பக்கங்களை பார்த்து, நேரத்தை வீணடிப்பதாக புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து, பயிற்சி நேரத்தின் போது, ஆசிரியர்கள் மொபைல் போனைபயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வட்டார வள மைய பயிற்சிக்கு வரும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், பயிற்சி நேரத்தில் மொபைல்போனை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கைமூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன பயிற்சி வகுப்புகளுக்கு வரும் ஆசிரியர்களிடம், நுழை வாயிலிலேயே, மொபைல் போன் வாங்கி வைக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Saturday, 16 July 2016

news : பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Flash news : பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு





•மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்
தொடக்கக் கல்வி துறை
•3.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல் 
•4.8.16 - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
•6.8.16 - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல்
•7.8.16 -  தொடக்கப்பள்ளி தலைமை யாசிரியர் மாறுதல் & பதவி உயர்வு
•20.8.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) 
•21.8.16 - இடைநிலை ஆசிரியர் மாறுதல்

மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்

Friday, 15 July 2016

TRANSFER NEWS:- புதிய விதிமுறைகளால் அரசாணை நிறுத்தி வைப்பு...

TRANSFER NEWS:- புதிய விதிமுறைகளால் அரசாணை நிறுத்தி வைப்பு...


புதிய விதிமுறைகளால் ஆசிரியர்கள் கொந்தளிப்பார்கள் என்பதால் அரசாணை நிறுத்தி வைப்பு...சில மாற்றங்களை இணைத்தபின் அரசாணை இன்று வெளியாக வாய்ப்பு!!

Tuesday, 12 July 2016

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.

ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல்.


*ஆசிரியர்கள் பணியிட  மாறுதல் கலந்தாய்வில் கடுமையான விதிகள் அமல் படுத்தப்பட்டுள்ளதாக தகவல்.


*கலந்தாய்வு அரசாணை மற்றும் விதிமுறைகள் தயார்நிலையில் உள்ள நிலையில் இன்று மாலை அல்லது நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் எனத்தெரிகிறது.


*வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு மாறுதல் செய்யப்படும் ஆசிரியர்கள் அங்கு 6 ஆண்டுகள் கட்டாயம் பணி புரிய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை  தகவல்.


*கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமயைாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்.


*1-08-2016ன் படி உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்மேற்காெள்ளுதல்.


* பணி நிரவல் *


*பள்ளிக்கல்வித் துறையில் மாநில அளவில் பணிநிரவல் நடைபெறும். தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தபட்சம் மாவட்டம் அளவில் பணிநிரவல் நடைபெறும்.


*சென்ற கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது.


*மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் நடத்திய பின் மட்டுமே பதவி உயர்வு மற்றும் மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடத்துதல்

கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும்-News7 தொலைக்காட்சி...

கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும்-News7 தொலைக்காட்சி...


​கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் பெறும் ஆசிரியர்களுக்கு புதிய நிபந்தனை!
கலந்தாய்வு மூலம் பணியிடை மாற்றம் பெறும் ஆசிரியர்கள் அங்கு குறைந்தது 6 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டுமென பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
   ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் உள்ளஆசிரியர் பணியிடை மாற்றம் கோரி விண்ணப்பிப்பர். இதில் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் அடிப்படையில், மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம்.  இதற்காக தொடக்கக்கல்வித் துறையில் குறைந்தப்பட்சம் மாவட்டம் அளவில் பணிநிரவல் நடைபெறுவதும், சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை வேறு மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்படுவதும் வழக்கம்.
இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாற்றம் நடத்திய பின் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருண்ணாமலை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் மாறுதல் பெறும்ஆசிரியர்கள் குறைந்தது 6 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட இடங்களில் பணிபுரிய வேண்டும் என்றும், கடந்த கலந்தாய்வில் இடமாறுதல் பெற்றவர்கள் நடப்புகலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது எனவும் கடுமையான விதிமுறைகள் அரசாணையாக வெளியிடபட்டுள்ளது.

Saturday, 9 July 2016

🗣வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில்...இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!

🗣வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில்...இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!'📢


மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள்.


தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன்படி,   பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகும், கல்லூரி படிப்புகளில் சேர மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்வி, ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே ஆல் பாஸ் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு,  இணையதளத்தில் மட்டுமே கருத்துக் கேட்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது." இந்திய மொழிகளில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஆங்கிலத்தில் கருத்துக் கேட்பு குறித்து விவரித்துள்ளனர்.


தேசிய கல்விக் கொள்கையை வரையறுப்பதில்கூட, அந்நிய மொழியில் கருத்துக் கேட்பு நடத்துவது கண்டனத்திற்குரியது. தேசிய கல்விக் கொள்கை குறித்து, மாநில அரசிடம் என்ன மாதிரியான கடிதப் போக்குவரத்தை மத்திய அரசு நடத்தியது என்பது குறித்துஎந்த விவரங்களும் தெரியப்படுத்தப்படவில்லை" என ஆதங்கப்படுகிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.


மேலும் அவர், " இப்படியொரு கருத்துக் கேட்பு நடப்பதே, பலருக்கும் தெரியவில்லை. இவை அமல்படுத்தப்பட்டால், மாநில அரசின் சுயாட்சி அதிகாரம் என்பது முற்றிலும் பறிபோய்விடும்.மாநிலத்திற்கென்று உள்ள மொழி, கல்வி, கொள்கை முடிவெடுக்கும் திறன் போன்றவை முற்றிலும் அடிபட்டுப் போய்விடும். அதற்கான முன்முடிவுகள் அனைத்தும் சுப்ரமணியன் கமிட்டி பரித்துரைத்ததேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கின்றன.


எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆங்கில மொழியை பிரதானப்படுத்தியே கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. சுமார் 230 பக்கங்களில் அவர்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகள் அனைத்தும், நமது கல்வி முறைக்கு எதிராகவே உள்ளது. இவற்றை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால், வரும் காலங்களில் கல்வி குறித்த முடிவுகளை மத்திய அரசே எடுக்கும். மாநில அரசுகள் வைக்கும் பொதுத் தேர்வுகளுக்கு எந்தவித மதிப்பும் இருக்காது. அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னதாக பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியதாகச் சொல்கிறார்கள். அவர்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை என்பதுதான் உண்மை.


இப்படியொரு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும், குழுவின் பரிந்துரைகளை விரிவாக எடுத்துக் கூறி, அவர்களின் கருத்துக்களைக் கேட்க முன்வர வேண்டும்.இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கும் மாநில முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். தேசிய கல்விக் குழுவின் அபாயங்கள் குறித்து வருகிற 14-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், கல்வியில் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னோக்கிய நிலைக்குத்தான் தள்ளப்படுவோம். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார் கவலையோடு.


'இணையதளத்தில் பெயரளவுக்குக் கருத்துக் கேட்பு வைபவத்தை நடத்திவிட்டு, ஏதோ ஒரு நாளில் நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுவிடக் கூடாது' என அச்சப்படுகின்றனர் கல்வியாளர்கள்.

7 PC - குறைந்தபட்ச அடிப்படை சம்பள உயர்வு நிர்ணயம் செய்ய குழு - வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு

7 PC - குறைந்தபட்ச அடிப்படை சம்பள உயர்வு நிர்ணயம் செய்ய குழு - வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு


புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக்குழு பரிந்துரைத்த படிகள் தள்ளுபடியை கைவிட வேண்டும் உட்பட 36 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்க உள்ளதாக அறிவித்தனர். இதற்கு பாதுகாப்பு, அஞ்சல், வருவாய், ரயில்வே உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு திரட்டி வந்தன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை போராட்டக் குழுவினர் சந்தித்தனர். அதன் பின்னர் வேலை நிறுத்தத்தை தள்ளி வைப்பதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


கண்ணையா (ெபாதுச்செயலாளர், எஸ்ஆர்எம்யூ): உள்துறை அமைச்சரை ஜூலை 6ம் தேதி போராட்டக்குழு நிர்வாகிகள் சந்தித்தோம். அப்போது ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி குறைந்தபட்ச அடிப்படை  சம்பள உயர்வு நிர்ணயம் செய்வது, ஊதிய நிர்ணய காரணியை உயர்த்துவது குறித்து உயர்மட்ட செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். அதன் அடிப்படையில் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் தகுந்த மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும்  என்று உறுதி அளிக்கப்பட்டது. எனவே அந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை நான் ஏற்கனவே அறிவித்தபடி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்துள்ளோம். அதேபோல், படிகள் குறித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை உத்தரவாதத்துடன் கூடிய ஓய்வூதியமாக மாற்றுவது குறித்தும் வலியுறுத்தினோம்.


சூர்யபிரகாஷ் (செயல் பொதுச்செயலாளர், எஸ்ஆர்ஈஎஸ்): எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற உயர்மட்டக்குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டது. அந்த குழு தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் திருத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதனை நிதி அமைச்சகமும் ஒப்புக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனால் வேலை நிறுத்தத்தை 4 மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளோம்.


அபிமன்னன் (கோட்டத் தலைவர், டிஆர்ஈயூ): எங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய உயர் மட்டக் குழு அமைக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அந்தக்குழு 4 மாதத்தில் பரிந்துரைகளை மத்திய அரசிடம் வழங்கும். அவை எப்படி இருக்கும், அதனை மத்திய அரசு அமல்படுத்துமா என்பது 4 மாதத்திற்கு பிறகுதான் தெரியும். அதனால் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்

'பாரா மெடிக்கல்' படிப்பு ஓரிரு நாளில் விண்ணப்பம்

'பாரா மெடிக்கல்' படிப்பு ஓரிரு நாளில் விண்ணப்பம்


மருத்துவம் சார்ந்த, 'பாரா மெடிக்கல்' படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவ படிப்புகளுக்கு இணையாக, பாரா மெடிக்கல் எனப்படும், துணை மருத்துவ படிப்புகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. இதில், பி.பார்ம்., - பி.எஸ்சி., பட்டப்படிப்புகளில், 'நர்சிங், பிசியோதெரபி, ரேடியாலஜி, ஸ்பீச் ஆடியோலஜி, லாங்குவேஜ் பெத்தாலஜி, ரேடியோ தெரபி, ஆக்குபேஷன் தெரபி' உள்ளிட்ட, ஒன்பது விதமான பாடத்திட்டங்கள் உள்ளன. தமிழகத்தில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகள்;

150 சுயநிதி கல்லுாரிகளில், துணை மருத்துவ படிப்புகளுக்கு, 8,000 இடங்கள் உள்ளன. படித்து முடித்ததும் உடனடியாக வேலை கிடைக்கும் என்பதால், பிளஸ் 2 முடித்த, அறிவியல் பிரிவு மாணவர்களின் முக்கிய தேர்வாக, இது உள்ளது. வழக்கமாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு முடிந்ததும், இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கும். முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 25ல் முடிந்தும், இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கவில்லை.


இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''இந்த படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள், அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. ஓரிரு நாளில், விண்ணப்ப வினியோகம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும்; ஆகஸ்ட் மாதத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்,'' என்றார்.

பதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள்!

பதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரியர்கள்!


தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்படாததால், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு பெறாமலேயே ஓய்வு பெறும் நிலை ஏற்படுவதாக உடற்கல்வி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே பணியாற்றி வருகின்றனர். இதனால், கடந்த 25 ஆண்டுகளாக பல பள்ளிகளிலும் உடற்கல்வி இயக்குநர் பணியிடம் உருவாக்கப்படாமல், உடற்கல்வி ஆசிரியர்களே அந்தப் பொறுப்பில் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத் தலைவர் டி.ரவிச்சந்தர் கூறியதாவது: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 2 உடற்கல்வி ஆய்வாளர்கள் மட்டுமே நிரந்தரப் பணியில் உள்ளனர். மீதமுள்ள 30 பணியிடங்களை மூத்த உடற்கல்வி இயக்குநர்கள் பொறுப்பில் கவனித்து வருகின்றனர். மேலும், ஒருவர் பொறுப்பு பதவியில் 6 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற அரசாணை இந்த விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. இதனால், 32 மாவட்டங்களில் ஆண்டுக் கணக்கில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பதவி பொறுப்பு பணியிடமாகவே தொடர்ந்து வருகிறது.


தோற்றுவிக்கப்படாத பணியிடங்கள்: இதேபோல, 3,566 மேல்நிலைப் பள்ளிகளில் 660 உடற்கல்வி இயக்குநர்களே உள்ளனர். மேல்நிலைக் கல்வி தொடங்கப்பட்ட காலம் முதல், பல பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் என்ற பதவி தோற்றுவிக்கப்படாமல் உள்ளது. இதனால், 6 முதல் பத்தாம் வகுப்பெடுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களே கூடுதலாக மேல்நிலை வகுப்புகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களாக இருக்கின்றனர். உரிய தகுதி இருந்தும் பதவி உயர்வு பெறாமல் 5,000 ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 99 சதவீதம் பேர் உடற்கல்வி ஆசிரியராகப் பணியேற்று, அதே பதவியிலேயே பணி ஒய்வு பெறுகின்றனர்.


மறுக்கப்படும் வாய்ப்பு: மற்ற பாட ஆசிரியர்கள் தலைமை ஆசிரியராகி, மாவட்ட கல்வி அதிகாரியாகி, முதன்மைக் கல்வி அதிகாரியாகி, இணை இயக்குநராகி, இயக்குநராகி பணி ஒய்வு பெறுகின்றனர். இந்த வாய்ப்பு பல ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குநர்களுக்கு மறுக்கப்படுகிறது. இதேபோல, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியமும் மறுக்கப்படுகிறது. ஆகவே, பொறுப்பு பதவி நிலையை மாற்றி, உடனே நிரந்திரப் பணியிடத்தில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும். மேலும், உடற்கல்வி இயக்குநர் நிலை- 1, உடற்கல்வி இயக்குநர் நிலை- 2 ஆகியவற்றுக்கு மாநில அளவிலான பணிமூப்பின்படி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய...

புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்ய...


*புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016*
பழைய காப்பீட்டு எண்ணைப் பயன்படுத்தி கீழுள்ள இணைப்பில் புதிய அடையாள அட்டையைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://tnnhis2016.com/TNEMPLOYEE/EmpECard.aspx
*பயனர்எண் :*
பழைய காப்பீட்டு அடையாள அட்டை எண். (எண் & எழுத்துகள் அடங்கிய 23 உறுப்புகள் உடையது)
*கடவுச்சொல் :*
பிறந்த தேதி

Thursday, 7 July 2016

அரசுப் பள்ளிகளில் பணிபுரிய 1062 முதுகலைப் பட்டதாரிகளுக்கு தேர்வு எப்போது ? பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

அரசுப் பள்ளிகளில் பணிபுரிய 1062 முதுகலைப் பட்டதாரிகளுக்கு தேர்வு எப்போது ? பட்டதாரிகள் எதிர்பார்ப்பு


 சென்னை, ஜூலை 4 &     தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிவதற்கு முதுகலை ஆசிரியர்கள் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் எப்பொழுது வெளியிடும் என பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர். தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் சுமார் 3 ஆயிரத்திற்கு மேல் காலியாக உள்ளதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். கடந்த 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தாக கூறினாலும், மருத்துவம், பொறியியல் உயர்கல்விக்கு வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை அரசுப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் யாரும் பெற முடியவில்லை.
ஆனால் பிற மாநிலங்களில் படித்த மாணவர்கள் முதலிடங்களை பிடித்தனர். இதற்கு காரணம் பெரும்பாலான அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தான்.  குறிப்பாக கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது. சென்னையில் வசிக்கும் ஆசிரியர்களில் பலர் வேறு மாவட்டத்திற்கு பணி நியமனம் அளித்தால், மாற்றுப் பணி என்னும் பெயரில் சென்னையை சுற்றியுள்ள ஏதாவது ஒரு பள்ளியிலோ, பள்ளிக்கல்வித்துறையின் அலுவலகத்திலோ பணியை பெற்று வந்து விடுகின்றனர். இதனால் அந்த பள்ளி மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது என ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.  இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், பள்ளிக் கல்வித்துறையில் 2015&16 ம் கல்வி ஆண்டில்  2125 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அவற்றை நிரப்புவதற்கு நேரடி நியமனத்தின் மூலம் 1062 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும், இதர நியமனம் முறைகள் மூலம் 1063 பேரும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.  இந்த நேரடி நியமனங்களுக்குரிய காலிப்பணியிடங்களில் தற்காலிக பணியிடங்கள் ஏதும் இருந்தால் மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான பொது விதிகளில் தளர்வு செய்யப்படுகிறது. பதவி உயர்விற்கான பணியிடங்களை நிறைவுச் செய்யும் போது சிறப்பு, பொது விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் அரசு விதிகளின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். இந்த 2125 முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் நேரடி நியமனம் மூலம் 50 சதவீதமான 1062 பணியிடங்களை தற்போதுள்ள நடைமுறைகளிலுள்ள விதிமுறைகளை பின்பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிக் கொள்ளலாம் என அதில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் நியமனம் செய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அளித்தது.  ஆனால் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை காரணம் காட்டி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருந்தது. தற்பொழுது மாநில கல்வியில் ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவனம், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள 272 பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் 15 ம் தேதி முதல் விண்ணப்பம் அளிக்க உள்ளது. எனவே இதனை தொடர்ந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ. 10,000 அபராதம்!

வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் ரூ. 10,000 அபராதம்!


சென்னை;வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கிண்டி பொறியியல் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.மாணவர்களுக்கு செல்போன், உடை கட்டுப்பாடு போன்றவற்றை பள்ளி, கல்லுாரிகள் விதித்து வருகின்றன. இருப்பினும் அவை மாணவர்களால் கடைபிடிக்கப்படுவதில்லை.
   சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிவரும் கிண்டி பொறியியல் கல்லூரி, செல்போன் உள்ளிட்ட விஷயங்களில் மாணவர்களிடையே ஒழுங்குமுறையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.அதன் ஒருகட்டமாக மாணவர்கள் வகுப்பறைக்கு செல்போன் கொண்டுவந்தால் அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த கல்லூரியின் நிர்வாகம் மாணவ-மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பிய சுற்றறிக்கையில், 'கிண்டி பொறியியல் கல்லூரியில் வாகனங்கள் நிறுத்தஉத்தரவிட்டுள்ள இடத்திற்கு மாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.2 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை நிறுத்தினால் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.
  இருசக்கர வாகனத்தை வளாகத்தில் ஓட்டினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களை ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடினால் அல்லது பட்டாசு வெடித்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை செலுத்தவேண்டும். கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களோ அல்லது மாணவிகளோ ராகிங் செய்தால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது 2 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் அல்லது அந்த மாணவர் அல்லது மாணவி கல்லூரியில் இருந்து நீக்கப்படுவார்.
மேலும் மாணவர் அல்லது மாணவி வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தினால் பயன்படுத்தியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அடையாள அட்டை அணியாமல் வந்தால் அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு' இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய பாடங்களுக்கு ஒரே ’சிலபஸ்’

நாடு முழுவதும் முக்கிய பாடங்களுக்கு ஒரே ’சிலபஸ்’

 மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட,புதிய கல்விக் கொள்கையில்,முக்கிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளது.இது,கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து,ஆதரவும்,எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. முரண்பட்ட பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்,புதிய கல்வி கொள்கைகுறித்து, 28பக்கங்கள் அடங்கிய,முக்கிய சாராம்சங்கள் நிறைந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.இதில்,பத்தாம் வகுப்பு வரை,முக்கிய பாடப்பிரிவுகளான,கணிதம்,அறிவியல் மற்றும் ஆங்கில பாடத்துக்கு,ஒரே பாடத்திட்டம் கொண்டு வரப்படும். சமூக அறிவியல்,மொழிப்பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு,மாநில அரசுகளே பாடத்திட்டத்தை உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
இதை செயல்படுத்தினால்,நாடு முழுவதும் எவ்வித ஏற்றத்தாழ்வு இன்றி,மாணவர்களின் கல்வித்திறன் மேம்பட வாய்ப்பாக இருக்கும் என்பது,பலரது கருத்தாக உள்ளது. மேலும்,அடிப்படைகல்வித்தரம் உயரும் பட்சத்தில்,மேல்நிலைக்கல்வி,உயர்கல்வி பெறுவதிலும்,போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதிலும் சிக்கல் இருக்காது. பின்தங்கிய கிராமப்புற மாணவர்களும்,தேசிய திறனறி தேர்வுகளில் பங்கேற்க முடியும் என்பதுகல்வியாளர்களின் கருத்தாக உள்ளது
.கல்வியாளர் சாமிசத்தியமூர்த்தி கூறுகையில்,நாடு முழுவதும் ஒரே கல்விமுறை பின்பற்றுவது வரவேற்கத்தக்கது. இதற்கான பாடத்திட்டம் தயாரிக்கும்போது,மாநில வாரியாக,கல்வியாளர்கள்,மூத்த ஆசிரியர்களின் கருத்துகளை பெற்று,நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.மேலும்,தேர்வு முறைகளும்,ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இதை,மேல்நிலை வகுப்புகளிலும் பின்பற்றினால்,தேசிய அளவிலான தேர்வுகளில் அனைத்து தரப்பு மாணவர்களும்பங்கேற்க உதவியாக இருக்கும்,என்றார்.

FLASH NEWS அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்

FLASH NEWS அரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்


சென்னை: தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய், உறுப்பு மாற்று சிகிச்சை நிதி ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 40 சதவீத குறைபாடுகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வயதுவரம்பின்றி சலுகை வழங்கப்பட்டுள்ளது. காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம். அரசு பணியாளர்கள் குடும்பத்துக்கான மருத்துவ காப்பீட்டு தொகை ரூ. 4 லட்சமாக தொடரும். இந்த திட்டத்தால் 10.22 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் கூறியுள்ளார்.
 

Wednesday, 6 July 2016

தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தயார்!

தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தயார்!


அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது.இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:


ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி, படைப்பாற்றல் கல்வி முறையில் தொடர், முழுமையான மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதற்காக மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர்கள் பயிற்சி நடத்தப்பட வேண்டும்.


அதன்படி, மாநில அளவில் ஜூலை 7-இல் புத்தாக்கப் பயிற்சியும், 19-இல் தொடர் மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சியும், 11-இல் மாவட்ட வாரியாக அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும், ஆசிரியர் கருத்தாளர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சியும், 25-இல் வலுவூட்டல் பயிற்சியும், 16-இல் அனைத்துத் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 30-இல் நடுநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மைய அளவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்தப் பயிற்சிகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களும் வழங்குவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

C ARRR C TIME TABLE

பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது

பட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது



அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.


2010ம் ஆண்டுக்கு பின்னர் ஆசிரியர் நியமனம் செய்ய போட்டித் தேர்வு வைக்கப்பட்டது. அதன்படி இரண்டு கட்டமாக 40 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டித் தேர்வு நடத்தப்படவில்லை.


தற்போது மீண்டும் ஆட்சி அமைத்துள்ள அதிமுக அரசு, அரசு உயர்நிலை மேனிலைப் பள்ளிகளில் இந்த ஆண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து இருந்தது. அதற்கான பணிகளை தொடங்கியுள்ள நிலையில், ஏற்கெனவே நீதிமன்றத்தில் போட்டித் தேர்வு குறித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாத கணக்கெடுப்பின்படி, அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கையோ 460 தான். மேனிலைப் பள்ளிகளில் முதுநிலைப் aபட்டதாரிகள் பணியிடம் 1065 தான் உள்ளது. மேற்கண்ட இந்த இடங்களை நிரப்ப வேண்டும் என்றாலும் போட்டித் தேர்வு நடத்த வேண்டும்.


பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தினால் சுமார் 6 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இருப்பதோ 460 இடங்கள் தான். அதனால் இந்த ஆண்டு போட்டித் தேர்வு நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது ஒரு புறமிருக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tuesday, 5 July 2016

'கவுன்சிலிங்' கவலையில் ஆசிரியர்கள்

'கவுன்சிலிங்' கவலையில் ஆசிரியர்கள்


தமிழகத்தில் இக்கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 'கவுன்சிலிங்' அறிவிப்பு அறிகுறி இல்லாததால், இந்தாண்டும் 'காலம் கடந்து 'கவுன்சிலிங்' நடத்தப்படுமோ' என ஆசிரியர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ரமலான் பண்டிகை விடுமுறை ஜூலை 7ம் தேதி.

ரமலான் பண்டிகை விடுமுறை ஜூலை 7ம் தேதி.


தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை வேலை (6.07.2016) நாள் என தகவல்.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 7ம் தேதி ரமலான் விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு.

Monday, 4 July 2016

மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலக குளறுபடி: 32 ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் காலதாமதம்

மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலக குளறுபடி: 32 ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் காலதாமதம்


மாதனூர் சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலக குளறுபடியால் 32 ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


 மாதனூர் ஒன்றியம், ஆம்பூர் நகரில் பணிபுரியும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல், அதற்கான ஆவணங்கள் மாதனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தயார் செய்யப்படுகிறது. பின்னர் அவை வாணியம்பாடியில் உள்ள சார்நிலை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. சம்பளம் பெறுவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாக சம்பள பட்டியல், அதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு சார்நிலை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.


 கடந்த மே மாதம் சம்பளப் பட்டியல் தயார் செய்யப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடியால் 12 ஆசிரியர்களுக்கு சம்பளம் இருமுறை வழங்குவது போல சம்பளப் பட்டியல், ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை சரிபார்த்த கருவூல அதிகாரிகள் தவறைக் கண்டறிந்து, அதனை சரிசெய்யும்படி மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு ஆவணங்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அதனால் 12 ஆசிரியர்கள் மே மாத சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


 பின்னர் ஜூன் மாதத்துக்கான சம்பளப் பட்டியல் காலதாமதமாக தயார் செய்யப்பட்டு மாத இறுதியில் அதாவது ஜூன் 28-ஆம் தேதி தான் கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  மாதத்தின் இறுதி வேலை நாளில் அந்த மாதத்துக்கான சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதற்கு 10 நாள்களுக்கு முன்பாக கருவூலத்தில் சம்பளப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் ஜூன் மாதம் காலதாமதமாக சம்பள பட்டியல் தயார் செய்யப்பட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால் மாதனூர் ஒன்றியம், ஆம்பூர் நகரைச் சேர்ந்த 32 ஆசிரியர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி வரை சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதனால் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையே விடுபட்ட 32 ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.


 இதற்கெல்லாம் மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் ஏற்படும் குளறுபடிதான் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.


போதிய அனுபவம் இல்லாததால்...


இந்த குளறுபடி குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:


சம்பளப் பட்டியல், அது சம்பந்தமான ஆவணங்களைத் தயாரிக்க வேண்டியது மாதனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் பணிபுரியும் எழுத்தரின் வேலையாகும். ஆனால் அந்த எழுத்தருக்கு சம்பளப் பட்டியலைத் தயாரிக்க போதிய அனுபவம் இல்லாததால், மாதந்தோறும், இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை விட்டுவிட்டு மாதனூர் சென்று சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியை செய்து தருகின்றனர். அலுவலக எழுத்தர், 2 ஆசிரியர்களால் ஏற்படும் காலதாமதம் மற்றும் குளறுபடிகளால் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி கற்பிக்கும் பணியை விட்டுவிட்டு அலுவலகப் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களால் மாணவர்களும் மாதந்தோறும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.


 உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்

TET:3 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவலை

TET:3 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித் தேர்வு இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவலை!


மத்திய அரசு திட்டமிட்டபடி, ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக தகுதித் தேர்வு நடத்தப் படாமல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித் தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
   மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.கேந்திரீய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், மத்திய திபெத்திய பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ‘சி-டெட்’ எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விலும், அதேபோல்குறிப்பிட்ட மாநிலத்தில் உள்ள பள்ளிகள் எனில் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர் விலும் (டெட்) தேர்ச்சி பெற வேண் டும்.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் பொறுப்பு ஆசிரி யர் தேர்வு வாரியத்திடம் ஒப் படைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 தடவை ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறை ஆகும். தமிழகத்தில் முதலாவது தகுதித் தேர்வு 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப் பட்டது. அந்த தேர்வில் நேரக் குறைவு காரணமாக தேர்ச்சி பெற்ற வர்களின்எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் நேரத்தை அதிகரித்து அதே ஆண்டு அக்டோபர் மாதம் துணைத் தேர் வாக இன்னொரு தேர்வு நடத்தப் பட்டது. அதைத் தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு தேர்வு என மொத்தம் 3 தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு 2014-ம் ஆண்டு மே மாதம் நடந்தது. பொதுவான தகுதித் தேர்வுகள் என்று பார்த்தால் இதுவரையில் 3 தகுதித் தேர்வுகளே நடத்தப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் மத்திய அரசு சார்பில் சி-டெட் தகுதித் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ அமைப்பு என்சிடிஇ விதிமுறையின்படி திட்ட மிட்டபடி ஆண்டுக்கு 2 தடவை (பிப்ரவரி, செப்டம்பர்) தகுதித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதுவரை யில் 9 சி-டெட் தேர்வுகள் நடத்தப் பட்டுள்ளன. 10-வது சி-டெட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு ஜூலை 18-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய அரசு ஆண்டுக்கு 2 தடவைஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டு காலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படா மல் உள்ளது. இதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களும், பி.எட். பட்டதாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் தகுதித் தேர்வு மதிப் பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு ஆசிரியர் படிப்பு மதிப்பெண் (வெயிட்டேஜ் மார்க் முறை) அடிப்படையில் நடைபெறுகின்றன. தகுதித் தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கது. எனினும் தேர்ச்சி பெற்ற ஒருவர் தங்கள் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை அதிகப் படுத்த விரும்பினால் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதலாம். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிவிடு கிறார்கள். கடந்த 3 ஆண்டுகளாக தகுதித் தேர்வு நடத்தப்படாததால் இந்த 3 ஆண்டுகளில் பட்டப் படிப்பை முடித்தவர்களால் தகுதித் தேர்வை எழுத முடியவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் குறிப்பாக கிறிஸ்தவ சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர விரும்புவோரும் தகுதித் தேர்வை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
  தகுதித் தேர்வு நடத்தப்படாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தகுதித் தேர்வு தேர்ச்சியில்இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5 சதவீத மதிப்பெண் சலுகை, வெயிட்டேஜ் நியமன முறை ஆகியவை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிவுக்கு வந்ததும் தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.
இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 5% மதிப்பெண் சலுகை, வெயிட்டேஜ் நியமன முறை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகள் முடிந்ததும் தகுதித் தேர்வுகள் நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

'இனி ஆசிரியர்களுக்கும் Exam! Pass ஆகாவிட்டால் ஊதிய உயர்வு

'இனி ஆசிரியர்களுக்கும் Exam! Pass ஆகாவிட்டால் ஊதிய உயர்வு ✂ கட்!


மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான புதிய கல்வி கொள்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொருஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலானபுதிய கல்வி கொள்கையைவெளியிட்டுள்ளது.


அதில் மாணவர்கள் கல்வி திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கு ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்துள்ளது.இந்தியாவில் பள்ளி ஆசிரியர்களின் திறமையின்மையால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் திறன் குறைவாக இருக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் தகுதியும், திறமையும் உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்ய தனியாக ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். தகுதி தேர்வின் அடிப்படையில்தான் புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும்.  (தமிழகத்தில் ஏற்கனவே இந்த நடைமுறை இருக்கிறது). அனைத்து ஆசிரியர் கல்வி நிறுவனங்களும் இனி மத்திய அரசின் அங்கீகாரத்தை கண்டிப்பாக பெற வேண்டும்.


தேசிய அளவில் ஆசிரியர் கல்வியியலுக்கான பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆசிரியரின் தகுதி மற்றும் திறனை சோதிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் திறன்தேர்வு நடத்தப்படும். இதில் ஆசிரியர்கள் கட்டாயம் பாஸ் செய்ய வேண்டும். திறன் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்குமட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்படும். தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு 'கட்'.


ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால் தேசிய அளவில்மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படுகிறது. எனவே தேசிய அளவில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் என்று 3 பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம்வகுக்கப்படும். இந்த 3 பாடங்களை தவிர மொழிப்பாடம், சமூக அறிவியல், தொழில்கவ்வி பாடங்களை அந்தந்த மாநிலங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.


6-ம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் வழிக்கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. இது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்து புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.இதுவரை மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி வந்த நிலையில், இப்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆசிரியர்களும் திறன் தேர்வு எழுதவேண்டும் என்பதால் ஆசிரியர்கள் தங்களது திறனை தொடர்ந்து மேன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படப்போகிறது

Sunday, 3 July 2016

பி.இ. கலந்தாய்வு: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இசிஇ பிரிவு

பி.இ. கலந்தாய்வு: தொடர்ந்து முன்னிலை வகிக்கும் இசிஇ பிரிவு


பொறியியல் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடங்கி ஒரு வார காலம் முடிவடைந்த நிலையில், அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவே தொடர்ந்து இருந்து வருகிறது.


இந்தப் பிரிவை இதுவரை 4,331 மாணவ, மாணவிகள் தேர்வு செய்துள்ளனர்.


பொதுப் பிரிவினருக்கு சேர்க்கை ஜூலை 21-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்படுகிறது.


ஒரு வார காலம் முடிவடைந்துள்ள நிலையில், அழைக்கப்பட்ட 26,273 பேரில் 19,117 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். 7,081 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கலந்தாய்வில் பங்கேற்ற 75 பேர் இடங்களைத் தேர்வு செய்யவில்லை.


சேர்க்கை பெற்றவர்களில் 4,331 பேர் இசிஇ பிரிவையும், பி.இ. கணினி அறிவியல் பிரிவை 3,167 பேரும், பி.இ. இயந்திரவியல் பிரிவை 3,102 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.


பி.இ. கட்டடவியல் தமிழ்வழி படிப்பை 45 பேரும், பி.இ. இயந்திரவியல் தமிழ்வழி படிப்பை 44 பேரும் தேர்வு செய்திருக்கின்றனர்.

மாணவர்களே இல்லாத அரசு பள்ளி: தலைமை ஆசிரியை மட்டும் ஆஜர்

மாணவர்களே இல்லாத அரசு பள்ளி: தலைமை ஆசிரியை மட்டும் ஆஜர்


வேடசந்துார்,:வேடசந்துார் அருகே, இரண்டு ஆண்டுகளாக மாணவர்களே இல்லாத அரசு பள்ளிக்கு, தலைமை ஆசிரியை மட்டும் தினமும் வந்து செல்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் ஒன்றியம், சித்துார் ஊராட்சியைச் சேர்ந்தது கெட்டியபட்டி. 50க்கும் குறைவான வீடுகளே உள்ளன. இங்கு, 1961 முதல், அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

ஆரம்பத்தில், 80 மாணவர்கள் இருந்தனர். சில ஆண்டுகளாக மாணவர் வருகை குறைந்து, இரண்டு ஆண்டுகளாக ஒரு மாணவர் கூட இல்லாமல் பள்ளி காற்றாடுகிறது. சுற்றுப்பகுதியில் மூன்று அரசு, ஒரு தனியார் பள்ளி துவங்கப்பட்டதே இந்நிலைக்கு காரணம்.
இப்பள்ளி தலைமை ஆசிரியை சுசீலா மட்டும், இரண்டு ஆண்டுகளாக தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறார். மாணவர்கள் வராததால், சத்துணவு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.
தலைமை ஆசிரியையை வேறு பள்ளிக்கு மாற்றவோ, இப்பள்ளிக்கு புதிய மாணவர்களை சேர்க்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஒரு ஆசிரியையின் உழைப்பு வீணாவதுடன், அரசு நிதியும் வீணடிக்கப்படுகிறது.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சன் கூறுகையில், ''பள்ளியில் மாணவர்கள் இல்லை என்பது உண்மை தான். இப்பள்ளியை மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.

ஆகஸ்ட் மாதம் இடமாறுதல் கவுன்சிலிங்-இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள்



  
ஆகஸ்ட் மாதம் இடமாறுதல் கவுன்சிலிங்-இடமாறுதல் கவுன்சிலிங்கில் புதிய விதிகள் அமல்?


தமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகளை கொண்டு வரவும், இடமாறுதல் கவுன்சிலிங்கை, ஆகஸ்ட் மாதம் நடத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும், மே மாதம் இடமாறுதலுக்கான விருப்ப கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில் தான் நடத்தப்படுகிறது.
   இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் எப்போது நடக்கும் என, ஆசிரியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து புதிய முடிவுகளை, தமிழக பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.
  சொந்த ஊர் :
தற்போது பள்ளிக்கல்வி செயலகத்தில், புதிய விதிகளை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வழக்கமான விதிகளில், பல மாற்றங்களை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பல ஆசிரியர்கள், தங்கள் சொந்த ஊர் கொண்ட மாவட்டத்தில் ஆண்டுக்கணக்கில் முகாமிட்டு, 'ஓபி' அடிக்கும் நிலையை மாற்றலாமா என ஆலோசிக்கப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு ஆசிரியரும், ஒரு குறிப்பிட்ட மண்டலத்தில், குறிப்பிட்ட ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என, கட்டுப்பாடு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலந்தாய்வு :
அதேபோல், பொதுத் தேர்வு தேர்ச்சி மற்றும் கற்றல் அடைவு தேர்வுகளில், பின் தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், வேலுார், திருவண்ணாமலை, கடலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரியில்,ஆசிரியர்கள் பணியிடம் காலி ஏற்படாதவாறு, முழுவதும் நிரப்பும் வகையில் கலந்தாய்வு நடத்தப்படும் என தெரிகிறது. மாணவர் எண்ணிக்கையை விட அதிக அளவில் ஆசிரியர்கள் கொண்ட, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட ஆசிரியர்களுக்கு, வட மாவட்டங்களில் பணிமாற்றம் வழங்குவது குறித்தும் விதிகளில், குறிப்பிட்ட அம்சங்கள் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. மேலும், ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன் எந்த விதமான, மறைமுக இடமாறுதலும் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி முடியும் போது, கவுன்சிலிங்கை துவங்கலாம் என்றும் பள்ளிக்கல்வி செயலக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்..

Friday, 1 July 2016

இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு

இனி 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு


அனைவரும் கட்டாயத் தேர்ச்சி திட்டம் இனி ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே செயல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது கட்டாயத் தேர்ச்சி திட்டம் எட்டாம் வகுப்பு வரை செயல்படுத்தப்படுகிறது. எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெறச் செய்வதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

குடிநீர் பரிசோதனை செய்யும் பணி ஆசிரியர்கள் ஆவேசம்.

குடிநீர் பரிசோதனை செய்யும் பணி ஆசிரியர்கள் ஆவேசம்.


'குடிநீர் தர பரிசோதனை பணிகளில்ஆசிரியர்களை ஈடுபடுத்துவதால், பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படும்,' என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.தமிழத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தின், நீர் ஆதாரங்களில் தரத்தை உறுதிப்படுத்தும் வகை யில், நீர் தர பரிசோதனை பணிகள் இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கவுள்ளது.
   கோவை மாவட்டத்தில், கடந்த ஜனவரியில் முதல் கட்ட குடிநீர் தர பரிசோதனை பணிகள் நடந்தது. இரண்டாம் கட்டமாகஇன்று முதல் ஊராட்சி, பேரூராட்சிகளில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குடிநீர் பரிசோதனை பணிகளில் ஈடுபடவுள்ளனர்.தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ராஜசேகரன் கூறியதாவது:மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகளை தவிர வேறுபணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த கூடாது என, கல்வி உரிமைச்சட்டம் தெரிவிக்கிறது. ஆனால், பலதரப்பட்ட பணிகள் ஒதுக்கப்படுகிறது.
தற்போது, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நடத்தப்படும் பரிசோதனை பணிகளும் கடந்தநான்கு ஆண்டுகளாக திணிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவித்து, கற்பித்தல்கற்றல் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உதவவேண்டும்,'' என்றார்.