மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலக குளறுபடி: 32 ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் காலதாமதம்
மாதனூர் சரக உதவி தொடக்கக் கல்வி அலுவலக குளறுபடியால் 32 ஆசிரியர்களுக்கு சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மாதனூர் ஒன்றியம், ஆம்பூர் நகரில் பணிபுரியும் தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல், அதற்கான ஆவணங்கள் மாதனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் தயார் செய்யப்படுகிறது. பின்னர் அவை வாணியம்பாடியில் உள்ள சார்நிலை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. சம்பளம் பெறுவதற்கு 10 நாள்களுக்கு முன்னதாக சம்பள பட்டியல், அதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு சார்நிலை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.
கடந்த மே மாதம் சம்பளப் பட்டியல் தயார் செய்யப்பட்டதில் ஏற்பட்ட குளறுபடியால் 12 ஆசிரியர்களுக்கு சம்பளம் இருமுறை வழங்குவது போல சம்பளப் பட்டியல், ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை சரிபார்த்த கருவூல அதிகாரிகள் தவறைக் கண்டறிந்து, அதனை சரிசெய்யும்படி மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்துக்கு ஆவணங்களை திருப்பி அனுப்பியுள்ளனர். அதனால் 12 ஆசிரியர்கள் மே மாத சம்பளம் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் ஜூன் மாதத்துக்கான சம்பளப் பட்டியல் காலதாமதமாக தயார் செய்யப்பட்டு மாத இறுதியில் அதாவது ஜூன் 28-ஆம் தேதி தான் கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாதத்தின் இறுதி வேலை நாளில் அந்த மாதத்துக்கான சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதற்கு 10 நாள்களுக்கு முன்பாக கருவூலத்தில் சம்பளப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆனால் ஜூன் மாதம் காலதாமதமாக சம்பள பட்டியல் தயார் செய்யப்பட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால் மாதனூர் ஒன்றியம், ஆம்பூர் நகரைச் சேர்ந்த 32 ஆசிரியர்களுக்கு ஜூலை 1-ஆம் தேதி வரை சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. அதனால் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையே விடுபட்ட 32 ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இதற்கெல்லாம் மாதனூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களால் ஏற்படும் குளறுபடிதான் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.
போதிய அனுபவம் இல்லாததால்...
இந்த குளறுபடி குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
சம்பளப் பட்டியல், அது சம்பந்தமான ஆவணங்களைத் தயாரிக்க வேண்டியது மாதனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட பிரிவில் பணிபுரியும் எழுத்தரின் வேலையாகும். ஆனால் அந்த எழுத்தருக்கு சம்பளப் பட்டியலைத் தயாரிக்க போதிய அனுபவம் இல்லாததால், மாதந்தோறும், இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை விட்டுவிட்டு மாதனூர் சென்று சம்பள பட்டியல் தயாரிக்கும் பணியை செய்து தருகின்றனர். அலுவலக எழுத்தர், 2 ஆசிரியர்களால் ஏற்படும் காலதாமதம் மற்றும் குளறுபடிகளால் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கல்வி கற்பிக்கும் பணியை விட்டுவிட்டு அலுவலகப் பணிக்குச் செல்லும் ஆசிரியர்களால் மாணவர்களும் மாதந்தோறும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தார்

No comments:
Post a Comment