Monday, 29 February 2016

Though salaried employees are not happy on account of no change in the income tax slab in the Budget 2016, Central Government Employees including Railway Employees, Defence Personnel and Pensioners have something to cheer about as a result of Finannce Minister Mr.Arun Jaitley’s Budget Speech 2016-17.

In the Budget Speech FM observed that financial year 2016-17 will face an additional burden due to implementation of the 7th Pay Commission and OROP. He has also mentioned that his Govt will have to prioritise expenditure due to implementation of 7th Pay Commission and OROP scheme. What could be understood from the FM’s budget speech is that Govt is preparing itself for implementation of 7th Pay Commission recommendations in this financial year. However, the same could be confirmed on the basis of budget allocation made for salary of Central Government Employees for the financial year 2016-17. Fine Print of Budget paper may throw some light on this.

பட்ஜெட் 2016 எதிரொலி: விலை உயருபவையும் குறைபவையும்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.


வரி விதிப்புகளில் மேற்கொண்டுள்ள மாற்றத்தின் எதிரொலியாக விலை உயருபவை பட்டியல்:
1.ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்கள்
2. சிறிய ரக கார்களுக்கு 1 சதவீத வரி, டீசல் கார்களுக்கு 2.5 சதவீதம், சொகுசு கார்களுக்கு 4 சதவீதம் வரி உயர்த்தப்படுகிறது.
3.வெள்ளி அல்லாத ஆபரணங்கள்
4.பீடி நீங்கலாக சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள்.
5.விமானப் பயணச்சீட்டு
6.பிராண்டட் உடைகள்
7.தங்க ஆபரணங்கள்
8.வைரம்
9.ஹோட்டல் உணவுகள்
10.செல்போன் கட்டணம்
11.இன்சூரன்ஸ் திட்டங்கள்
12. ஸ்மார்ட் ஃபோன்கள்
13. திரைப்பட கட்டணம்
14. மினரல் வாட்டர்

குறைபவை:
1.டயாலிஸிஸ் மருத்துவ உபகரணங்கள்
2. பிரெயில் தாள்களுக்கு (பார்வையற்றவர்களுக்கான பிரத்யேக தாள்) வரி விலக்கு.
3. டயாலிஸிஸ் மருத்துவச் செலவு குறைகிறது. காரணம், அனைத்து மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும் தேசிய இலவச இரத்த சுத்திகரிப்பு சேவை அமலாகிறது.
4. இன்டர்நெட் மோடம்
5. ஆம்புலன்ஸ் சேவை
6. செட்டாப் பாக்ஸ்

மாணவியரை தொட்டு சோதிக்காதீங்க! தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவு

பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும், 4ல் துவங்குகிறது. 2,420 தேர்வு மையங்களில், ஒன்பது லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வின் போது, 30 ஆயிரம் ஆசிரியர்கள், 5,000 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.


தேர்வு கண்காணிப்பாளர்களுக்கு, கல்வித்துறை சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன; அதன் விவரம் வருமாறு: மாணவியர் உள்ள தேர்வு அறைகளில், ஆண் ஆசிரியர்களை கண்காணிப்பாளராக பணி அமர்த்த வேண்டாம். ஆசிரியைகளை மட்டுமே, பணி அமர்த்த வேண்டும்
மாணவியரின் உடைகளை தொட்டு, எந்த ஆசிரியையும் சோதனை செய்யக் கூடாது
மாணவியரிடம் தவறாக நடந்து கொள்ளக்கூடாது
மாணவியர் மனம் தளரும் வகையில், கண்காணிப்பாளர் நடந்து கொள்ளக்
கூடாது தேர்வு அறைக்கு நிலையான படை மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வந்தால், மாணவியர் பகுதியில், பெண் அதிகாரி மட்டுமே விசாரிக்கலாம்.


தவறான தகவலை பரப்ப கூடாது:இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவியர் காப்பியடிப்பது மற்றும் முறைகேடு என்பது மிக மிக குறைவான நிகழ்வு தான். ஆசிரியர், அதிகாரிகள் தேவையின்றி சந்தேகப்பட்டு மாணவியரிடம் சோதனை செய்யும் போது, அந்த மாணவி பற்றி, சக மாணவியரோ, மாணவரோ வெளியில் வந்து தவறான தகவல்களை பரப்பக் கூடும்.
கடந்த காலங்களில், இதுபோன்ற நேரங்களில், மாணவியர் விரக்தி அடைந்து, தற்கொலை உள்ளிட்ட விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மாணவியர் விஷயத்தில் அவர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படாதபடி நடந்து கொள்ள ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


'ஈவ் டீசிங்' தடுக்கப்படுமா?பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது, தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். தேர்வு முடிந்த கையுடன், போலீசார் அங்கிருந்து சென்று விடுவர். அதனால், தேர்வு எழுதி முடித்த மாணவர் மற்றும் மாணவியர், பள்ளி அருகிலேயே நின்று சண்டை போடுதல், மாணவியரை மாணவர்கள் கிண்டலடித்தல் போன்ற நிகழ்வுகள் நடப்பது உண்டு.
கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு எழுதிய, சென்னை, எழும்பூர் மாநில மகளிர் பள்ளி மாணவி ஒருவர், தேர்வு மையத்தின் முன், மற்ற மாணவர்களால், 'ஈவ் டீசிங்' செய்யப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டார். இதுபோன்ற சம்பவங்கள், இந்த ஆண்டு நடக்காமல், போலீசாரும், ஆசிரியர்களும் கடைசி வரை, தேர்வு மையத்தில் நின்று, மாணவ, மாணவியரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது

இந்த வார இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு

இந்த வார இறுதியில் தேர்தல் தேதி அறிவிப்பு.

இந்த வார இறுதியில் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்க தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மறுத்து விட்டார்.தமிழகம் உள்பட ஐந்து மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அநேகமாக இந்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளியாகக் கூடும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள்தெரிவித்தனர். தேதி அறிவித்தவுடனேயே, மாநிலத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்து விடும் என அவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்: முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு தீர்வு காணவேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் கடந்த 10–ந் தேதி முதல் 19–ந் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது சுமுகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் தமிழக அரசின் சில துறைகளின் தலைமை பொறுப்பில் உள்ள இயக்குனர்கள், ஆணையர்கள் ஆகியோர் வேலை செய்யாத நாளில் சம்பளம் இல்லை என்று 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்து வருகின்றனர். இதன்மூலம் அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதுடன், அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.
மேலும், வேலை நிறுத்த போராட்டத்துக்கு, அரசு உயர் அதிகாரிகள்தான் காரணமாக உள்ளனர். ஊழியர்களின் கோரிக்கையை உடனுக்குடன் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதில்லை. எனவே சம்பளத்தை பிடித்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடும் ஆட்சேபனையை தெரிவிப்பதுடன், மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்த விவகாரத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உடனே தலையிட்டு, ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணை வருகிற வாரம் வர உள்ளது. மத்திய அரசின் ஓய்வுதிய ஒழுங்கு முறை ஆணையம்  (PFRDA) அறிவிப்பு. தமிழ்நாடு, திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் புதிய ஓய்வுதிய திட்டத்தில் இல்லை என அறிவிப்பு.
 இதன் அடிப்படையில் நமது வழக்கறிஞர் 19 வினாக்களை தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் மத்திய மாநில அரசுகளுக்கு கேட்டு
 அதன் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...http://www.tnstudy.in/2016/02/thiruvalluvar-university-recruitment.html

Annamalai university Exam instruction-2016 May

IMPORTANT POINTS OF BUDJET

வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடுபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாகதனது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.மத்திய பொது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

 * மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
* நாடு முழுவது 160 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
* 1,500 திறன் மேம்பாட்டு மையங்களுக்காக ரூ.1700 கோடி நிதி ஒதுக்கீடு.
* உட்கட்டுமான துறைக்கு ரூ.2.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
கல்வித் துறை:
1. 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.
2. பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.
3. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.
* 2016-17 நிதியாண்டில் சாலை, ரயில் போக்குவரத்துத் துறைக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.2.18 லட்சம் கோடி.
* ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் 5 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு, அந்தந்தகுடும்பத்திலுள்ள பெண்களின் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் 5 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு, அந்தந்தகுடும்பத்திலுள்ள பெண்களின் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*அனைத்து மாவட்ட சுகாதார மையங்களிலும் டயாலஸிஸ் சிறப்பு முகாம்கள் அவ்வப்போது நடத்தப்படும். டயாலஸிஸ் சிகிச்சைக்கான சில மருத்துவ உபகரணங்களுக்கு அனைத்து விதமான சுங்கவரியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
*பொதுத் துறை - தனியார் துறை பங்களிப்பில் தேசிய டயாலஸிஸ் சேவை திட்டம் தொடங்கப்படும்.
* பிரதான் மந்திரி ஜன் அவுசாதி யோஜனா திட்டத்தின் கீழ் தரமான பொது மருந்துகள் கிடைக்கும் வகையில், நாடு முழுவதும் 3000 அரசு மருந்துக் கடைகள் தொடங்கப்படும்.
*ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் மதிப்பீட்டில்மருத்துவ சேவை அளிக்கும் வகையில் அரசு மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்படும்.
* எஸ்.சி. / எஸ்.டி (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின) தொழில் முனைவோருக்காக சிறப்பு மையம் அமைக்கப்படும்.
*கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.87.769 கோடி ஒதுக்கீடு.
*அடுத்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 6 கோடி இல்லங்களில் கணினி அறிவியல் அறிவை வளர்ப்பதற்கு இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* கால்நடை நலன் பேண 4 பிரத்யேக திட்டங்கள் அமல்.
*பிரதான் மந்திரி கிராமின் சடக் யோஜனா திட்டத்தின் கீழ்சாலைப் பணிகளுக்காக ரூ.19,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*பிரதான் மந்திரி கிருஷி சிச்சாய் யோஜனாவின் கீழ் 28.5 லட்சம் ஹெக்டே விளைநிலத்துக்கு நீர்ப்பாசன வசதி ஏற்படுத்தப்படும்.
* கிராமப்புறம் மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு ரூ.2.87 கோடி நிதி ஒதுக்கீடு.
*'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்கீடு.
* விவசாயிகள் வருமானத்தை அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
* நீர்பாசன திட்டங்களுக்காக நபார்டு வங்கியில் பிரத்யேகமாக ரூ.20,000 கோடி முதலீட்டில் நீப்பாசன நிதியம் உருவாக்கப்படும்.
* இயற்கை வேளாண் முறையை ஊக்குவிக்க ரூ.412 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மழை வளம் நிறைந்த பகுதிகளில் இயற்கை வேளாண் முறையில் மகசூலை பெருக்க இரண்டு திட்டங்கள் அறிமுகம்.
* 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீடு. கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக இவ்வளவு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இது முதன்முறையாகும்.
*கடலுக்கு அடியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை வழங்கப்படும்.
*89 நீர்ப்பாசன திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படும்.
* பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
*வேளாண் பொருட்களுக்கான ஆன்லைன் சந்தை அம்பேத்கர் பிறந்தநாளில் தொடங்கப்படும்.
*வேளாண் சந்தைகள் இணையதளம் மூலம் இணைக்கப்படும்.
* பிரதான் மந்திரி கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப்படும்.(இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டம்)
* விவசாயத்துறை 35,984 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*2015- 16 நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 7.6% ஆக அதிகரித்துள்ளது.
*2016-17 நிதியாண்டு அரசுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்
*7-வது ஊதிய கமிஷன், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டங்களால் 2016-17 நிதியாண்டில் கூடுதல் நெருக்கடி ஏற்படும்.
"உலகளவில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையிலும்கூட இந்தியப் பொருளாதாரம் எட்டாத உயரத்தை எட்டியிருக்கிறது. சவால்களை நாம் வாய்ப்புகளாக பயன்படுத்திக் கொண்டு பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளோம்"

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில்,

முதல் முறையாக ரூ.50 லட்சத்திற்குள் வீடு வாங்குவோருக்கு ரூ.50 ஆயிரம் கூடுதல் வரிச்சலுகை.60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு.புதிய வீட்டுக்கடன் வட்டி மீது ரூ.50 ஆயிரம் கூடுதல் வரிச் சலுகை

வருமானவரி கழிவு 2000லிருந்து 5000ஆக உயர்வு

2016-17ஆம் தனி நபர் வருமான வரி கழிவு ரூ.2000லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை

 ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை
 தனி நபர் வருமான உச்சவரம்பு மாற்றம் இல்லை

TNPSC :டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் பணி

தமிழக அரசில் காலியாக உள்ள Tester பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 430/2016
பணி: Tester
பணிக்கோடு: 1905காலியிடங்கள்: 04சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.5,100தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Assistant Tester

பணிக்கோடு: 1908
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,400தகுதி: பொறியியில் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் டிப்ளமோ அல்லது டிகிரி  முடித்து 6 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2016


விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். முதல் பதிவு செய்யாதவர்கள் ரூ.50 செலுத்தி முதல் பதிவு செய்துகொள்ளவேண்டும். கட்டணத்தை 21.03.2016க்கு முன்பாக செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2016மேலும் விவரங்கள் அறிய www.tnpsc.gov.inwww.tnpscexams.net என்ற இணையதளத்தை பார்க்கவும்

ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு

மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய 8.33% பங்களிப்பை அரசே அளிக்கும் என்று கூறினார்.ஊதியக் குழு பரிந்துரையை செயல்படுத்த இடைக்கால நிதி ஒதுக்கீடு

ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கலின் போது பெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது.

அதாவது ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை அறிவிக்கப்பட்டது.இந்த வருமான வரி சலுகையால் ரூ5 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் 1 கோடி பேர் பயனடைவர் -வணிக நிறுவனங்களுக்கான வரி 29% ஆக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி 15 சதவீதமாக அதிகரிக்கபட்டுள்ளது.
எனினும் மாத சம்பளம் பெருபவர்களுக்கான வருமான வரியில் மாற்றம் இல்லை

Sunday, 28 February 2016

TNTET : ஆசிரியர் தகுதித்;தேர்வில் (2013 ) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்கள் பணிநியமணம் வேண்டி மார்ச் 01 முதல் தொடர் உண்ணாவிரதம்

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வி;ல் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2014ம் ஆண்டு பணி நியமணத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்த நிலையில்  வெய்ட்டேஜ்  என்னும்  முறையால்  வாழ்வுரிமை இழந்தனர்.


பின்னர் 2014ம் கல்வியாண்டுக்கான காலி ஆசிரியர் பணியிடமும் 2015ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் காலி;ப்பணியிடமும் அரசு இன்று வரை தெரிக்கவில்லை.. இருப்பினும் அரசு நம்மை வைத்தே இனிவரும் ஆசிரியர் பணியிடங்ளை நிரப்பும் என்று நம்பிக்கை வைத்தனர்...


அனைத்தும் கானல் நீராகவே இருந்தது... அதனால் டி.இ.டி தேர்வில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மன உளைச்சலுக்கு ஆளாயினோம்... ஆகவே அரசு டி.இ.டி 2013ல் தேர்வில் தேர்ச்சிப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த நமக்கு பணிநியமனம் வழங்க வேண்டியும்... வெய்ட்டேஜை திரும்ப பெறுமாறும்... இனிவரும் காலங்களில் தேர்ச்சிப்பெற்ற ஆசிரியர்களாகிய எங்களை வைத்தே காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியும் மார்ச் 01 முதல் தொடர் போராட்டம் நடைபெற முடிவெடுத்துள்ளோம் நண்பர்களே...


இத்தனை நாள் ஏதோ எனக்கென்ன என்று இருந்து விட்டாய் இனியும் நீ அவ்வாறு இருந்தால் .. டி.இ.டி 2013 என்ற அத்தியாயம் முடிந்து விடும்... துணிந்து வா.. தோல்விகள் நமக்கில்லை...
போராட்டம் ஒன்றும் நமக்கு புதிதல்ல... புதிரல்ல...
நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு துளிக்காற்றும் கூட தேசப்பிதா காந்தி திருப்பூர் குமரன் வ.உ.சி போன்ற எண்ணற்றோர் போராடி தான் நமக்கு விடுதலை சுவாசத்தை அள்ளித்தந்தார்கள்... போராட்டக்குணம் நம் இரத்தத்தில் ஊறிப்போனது தான்... உரிமைக்காக போராடுவனே சிறந்த மனிதன்...
உன்னிடம் எதிர்பார்ப்பது உன் வருகையை மட்டும் தான்... உன் பிள்ளைகள்.. உன் குடும்பத்தார்.. உன் தந்தை தாய் ...உறவினர்கள் என அனைவரோடும் கலந்து கொள்.... ஏனெனில் இது நம் இறுதிகட்ட முயற்சி.... நம் பணிநியமனம் இழந்து தவிக்கும் உன் உறவினர்கள் மற்றும் குடும்பத்தார்கள் என அனைவரும் திரட்டு.. அரசுக்கு பணிவாய் நமது கோரிக்கையை எடுத்துரைப்போம்...


அன்று சுதந்திர போராட்ட வீரர்கள் 'முழு சுதந்திரத்தை தவிர வேறு எதனாலும் திருப்தி அடையமாட்டோம்' என முழுங்கினார்கள்...


இன்று... நாம் ' பணிநியமணம் அல்லது பணிநிமணம் சார்ந்த எழுத்துப்பூர்வ அறிக்கையினால் மட்டுமே தவிர வேறு எதனாலும் நமது போராட்டதிலிருந்து பின்வாங்க போவதில்லை'


ஆகவே தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு வருகை தந்து உங்கள் உரிமையை நிலைநாட்ட வாரிர்...
நாள் : மார்ச் 01 முதல்... இடம் : டி.பி.ஐ வளாகம் ... சென்னை


தொடர்புக்கு:
பி.இராஜலிங்கம் 9600208188
கபிலன் 9092019692
செல்லத்துரை 9843633012
சிவா 8807148088
கோவிந்தன்
 

VAO தேர்வில் கேட்கப்பட்ட கணித வினாக்களுக்கான காஞ்சி TNPSC அகாடமியின் விளக்கமான விடைகள்.

கோரிக்கை ஏற்கப்பட்டதால்ஆசிரியர் போராட்டம் 'வாபஸ்

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.தமிழக தொடக்க பள்ளிகளில், 2009 ஜூன், 1க்கு பின், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய கோரி, ஆசிரியர்கள் பல முறை மனு அளித்தும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கத்தினர், எட்டு நாட்களாக, சென்னையில், கல்வித்துறைதலைமை அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். 25 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதையடுத்து, சங்கத்தினருடன், தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் பேச்சு நடத்தினார். பின், கல்வித்துறை செயலர் சபிதாவுக்கு அறிக்கை அனுப்பினார். அதில் ஆசிரியர்களின் சம்பளத்தில் தவறு நிகழ்ந்துள்ளதை அரசுசெயலரும் கண்டுபிடித்தார்.
இதை தொடர்ந்து, போராடிய ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின் போது, சரி செய்வதாக கல்வித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவும் தருவதாக அதிகாரிகள் கூறியதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, குறைந்த செலவிலான ஏர்செல் நிறுவனத்தின் CUG திட்டம்

AIRCEL POST PAID CORPORATE CUG PLAN FOR Govt. STAFFS and TEACHERS:
PLAN NATIONAL SME @ Rs149,
(Service Tax 14% Extra) •CUG CALLS UNLIMITED FREE
•400 MIN FREE LOCAL TO TN MOBILE
•500MB 2G DATA FREE PER MONTH
AFTER FREE MINUTES,CALL RATE: •ALL NETWORK TN MOBILE 30p Min
•LOCAL LANDLINE 40p Min
•STD ALL INDIA 50p Min
•MOBILE NUMBER PORTABILITY Fecility Available.
•PREPAID TO POSTPAID MIGRATION Fecility Available.
•DEPOSIT Rs.250 only.
•NO ACTIVATION FEE
•250 AIRCEL SMS FREE
•250 OTHER SMS 10 PAISE ONLY.
•EBILL FECILITY AVAILABLE.
•One Govt Employee can get 3 sims for relatives/Family Members/Friends. These sims are also covered in CUG.


1 photo, Govt Employee id card Xerox or Bonafide Certificate, ID proof Xerox, Cash 250.
எந்த மாவட்டமாக இருந்தாலும், மேலே சொல்லப்பட்ட ஆவணங்களின் நகலைக் கொடுத்து, இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களும் இந்த திட்டத்தில் இருப்பதால், அவர்களிடம் பேசுவதற்கு கட்டணம் இல்லை. முற்றிலும் இலவசம்
NMMS EXAM 2016 TENTATIVE ANSWER KEY...
1-ii
2-i
3-i
4-iii
5-ii
6-iii
7-ii
8-i
9-iii
10-iv
11-iv
12-ii
13-i
14-iv
15-ii
16-i
17-iii
18-i
19-iv
20-iii
21-i
22-ii
23-iv
24-i
25-iii
26-iv
27-iv
28-iii
29-ii
30-i
31-ii
32-iii
33-i
34-iii
35-iv
36-i
37-iii
38-iv
39-i
40-ii
41-ii
42-iv
43-iii
44-i
45-ii
46-i
47-iii
48-ii
49-i
50-ii
51-i
52-iii
53-iv
54-ii
55-iii
56-i
57-ii
58-iv
59-iv
60-iii
61-iv
62-iii
63-i
64-iii
65-ii
66-i
67-ii
68-ii
69-i
70-iv
71-iii
72-ii
73-iii
74-iii
75-i
76-iii
77-iv
78-i
79-iii
80-iv
81-ii
82-ii
83-i
84-iv
85-iii
86-iii
87-iv
88-iii
89-ii
90-ii...
Thank you

CSIR-UGC NET EXAM JUNE 2016 | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 29.02.2016. தேர்வு நடைபெறும் நாள் 19.06.2016.

சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு

மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார். டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், மானவ் ரச்னா பல்கலையில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர் மேனகா, கூறியதாவது:


மாணவியரிடம் ஒழுக்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களை பரிசளித்து, கவுரவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.விரைவில் இது குறித்து அறிவிக்கப்படும். பெண்களுக்கு ஆபத்து காலத்தில் உதவக் கூடிய வகையில், மொபைல் போன்களில் அலாரம் பட்டன் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.


ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, இந்த பட்டனை பெண்கள் அழுத்தினால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அலாரம் அடிக்கும். உடனடியாக போலீசார் உதவிக்கு வர முடியும். இதற்கான தொழில்நுட்ப ஆலோசனை நடந்து வருகிறது. குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்கொள்வது குறித்து பெண்களுக்கும், மாணவியருக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு மேனகா கூறினார்.

Saturday, 27 February 2016

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ்பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில்பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழையதிட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதியதிட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்
வருகிற 29ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல்செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லிபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.


தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைள்,
அறிவிப்புகள் இருக்கும்.


குறிப்பாக வருமானவரி செலுத்வோர் பட்டியலில் அதிகஅளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள்அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுக்குதற்போது ரூ.2½ லட்சமாக இருக்கும் வருமானவரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படக்கூடும்என்று தெரிகிறது.
மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கவரும் வகையில்எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள்மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்குவரிச்சலுகைகள் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன்பரிந்துரைகளை அமல்படுத்த பட்ஜெட்டில் நிதிஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம்கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமைஅதிகரிக்கும்.
தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டிச் சலுகை ரூ.2லட்சம் வரை என உள்ளது. இதுவும் அதிகரிக்கும்வாய்ப்பு உள்ளது.

நிதி கட்டுப்பாடு தொடர்பாக பொருளாதாரவல்லுனர்களிடம் கருத்து கேட்டு அறியவும் மத்தியஅரசு முடிவு செய்துள்ளது

ஆண்டுக்கணக்கில் மாயமாகும் ஆசிரியர்கள் பட்டியல் எடுக்க அதிகாரிகள் உத்தரவு

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில், ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்விபடிக்க; பாஸ்போர்ட் பெற; வெளிநாடு செல்ல; சொத்துகள் வாங்க, உயர் அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்து, முன் அனுமதி பெற வேண்டும்.ஆனால், கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், பல விதமாக விடுப்பு எடுக்கின்றனர்.
கல்வி ஆண்டின் இறுதியில், தங்கள் பிள்ளைகள், பொதுத்தேர்வு அல்லது கல்லுாரி தேர்வு எழுத பயிற்சி தரவேண்டும்; குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்; வீடு கட்ட வேண்டும்; வெளியூரில் உள்ள சொத்து பிரச்னைகளை தீர்க்க வேண்டும் எனக்கூறி, மாதக் கணக்கில் விடுப்பு எடுக்கின்றனர்.


பல நேரங்களில், மருத்துவ விடுப்பாக இதற்கு அனுமதி பெறுகின்றனர். சிலர் கடிதம் மட்டும் கொடுத்து விட்டு, அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து விடுகின்றனர்; வீடு, முகவரி மற்றும் போன் எண் வரை மாற்றி விட்டு செல்கின்றனர். இப்படி மாயமாகும் பலர் தனியார் நிறுவன பணி; வெளிநாட்டில் உயர்படிப்பு மற்றும் வெளிநாட்டு வேலைக்கு செல்வது உண்டு.பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்த பணி முடிந்ததும், மீண்டும் அரசு பணியில் சேர முயற்சிக்கின்றனர்.


சில ஆசிரியர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் விடுப்பு எடுத்து விட்டு, திடீரென மீண்டும் பணி கேட்டுள்ளதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, நீண்ட நாள் வேலைக்கு வராமல், விடுப்பில் உள்ளோரின் பட்டியலைஅனுப்பும்படி, தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார். இதில், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்சிக்குவர் என, தெரிகிறது.

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு-விளக்கம்

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.



திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும் இதில் சேர்ந்த யாராலும் ஓய்வூதியம் பெற முடியவில்லை. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆசிரியர், அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.,19அன்று, தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து,
ஓய்வு பெற்ற மற்றும்ராஜினாமா செய்த, மரணம் அடைந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, பிப்.,22ல்
அன்று தமிழக அரசின் நிதித்துறை சார்பில், அரசாணை எண்-59 வெளியிடப்பட்டுள்ளது.
இத்தொகையை பெற, கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநர் அலுவலகத்தில், விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான கணக்கு தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தொகை அனைத்தும் மின் பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கடந்த பல ஆண்டுகளாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது இந்த அரசாணையால், ஓய்வூதியம் குறித்த சர்ச்சைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்துள்ளது. நிரந்தர தீர்வு வேண்டுமெனில்
தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை
ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்.

தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - துவக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி கணுக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு - பணிகளை துரிதப்படுத்த மாநில/மாவட்ட அளவில் "NODAL OFFICER" நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - துவக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி கணுக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு - பணிகளை துரிதப்படுத்த மாநில/மாவட்ட அளவில் "NODAL OFFICER" நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

Friday, 26 February 2016

16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம்: அரசு நடவடிக்கைக்கு வலியுறுத்தல்


அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தில் பணிபுரியும் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 'டி.இ.டி.,' ஆசிரியர் தகுதி தேர்வின்றி 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளி மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில் பணிபுரிகின்றனர்.
மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் 2009ல் அமலானது. அப்போது அனைவருக்கும் கல்வி இயக்கம், இடைநிலை கல்வித்திட்டம் போன்றவற்றில் மத்திய அரசின் 75 சதவீத நிதி, மாநில அரசின் 25 சதவீத நிதியுடன்
ஆசிரியர்களுக்கான சலுகைகள், 700 தலைமை ஆசிரியர்கள் நியமனம், பள்ளிக் கட்டடங்களை அமைப்பது போன்ற பணிகளுக்கு நிதி வழங்கப்பட்டது.இந்நிலையில் மாநில அரசு கடந்த 2011 ஜன., 15ல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிட்டது. அதில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில் தேர்வாகியிருக்க வேண்டும்.
அல்லது அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் 'டி.இ.டி.,' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் 2016 நவ., 15ல் இந்த அரசாணை வெளியிடப்பட்டு ஐந்தாண்டு நிறைவடைகிறது. இதனால், தற்போது ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் சந்திரசேகரன் கூறியதாவது: இன்னும் 9 மாதங்களில் அரசு அறிவித்த 5 ஆண்டு காலம் முடிவடையும் நிலையில் 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின்
பணி கேள்விக்குறியாக உள்ளது. அரசு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து 16 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் காக்க வேண்டும், என்றார்.

 

TRB:மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பதவிகளை போட்டித்தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு.

ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது? தேர்வு எழுதிய 8 லட்சம் பேர் காத்திருப்பு

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாததால், தேர்வெழுதிய, எட்டு லட்சம் பேர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள, 4,362 ஆய்வக உதவியாளர் பணிக்கு, கடந்த ஆண்டு மே, 31ல் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது; இதில், எட்டு லட்சம் பேர் பங்கேற்றனர்.

தேர்வில் வெற்றி பெறுவோரில், ஒரு காலியிடத்திற்கு, ஐந்து பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வு நடத்தி, அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பணி நியமனம் செய்ய அரசு திட்டமிட்டது. நேர்முகத் தேர்வில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எனப்படும், 'சீனியாரிட்டி'க்கு - 10; உயர் கல்வித் தகுதிக்கு - 5; பணி அனுபவத்துக்கு - 2; நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு - 8 என, மொத்தம், 25 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவருக்கே பணி ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கணக்கிடாமல், நேர்முகத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்தால், அதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக, தேர்வர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத் தேர்வையும் கணக்கிட்டு, தேர்வு முடிவை அறிவிக்க உத்தரவிட்டது.
எனினும், தேர்வு நடந்து முடிந்து, எட்டு மாதங்கள் ஆகியும், முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது, தேர்வர்கள் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்திஉள்ளது.
நேர்முகத் தேர்வு மூலம், ஆய்வக உதவியாளர் பணியில் சேர்த்து விடுவதாக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர், லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக புகார் எழுந்துள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், பணத்தை கொடுத்த தேர்வர்கள் பலரும், தங்கள் பணம் என்ன ஆகும் என தெரியாமல் புலம்பத்
துவங்கியுள்ளனர்

8ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியீடு

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுகான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.


அதன் விவரம்:


தேதி                பாடம்
18-04-2016      தமிழ்
20-04-2016      ஆங்கிலம்

21-04-2016      கணிதம்
22-04-2016      அறிவியல்
23-04-2016      சமூக அறிவியல்

தொடக்ககல்வி - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - துவக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் வைப்பு நிதி கணுக்குகள் மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்து அரசானை வெளியீடு - பணிகளை துரிதப்படுத்த மாநில/மாவட்ட அளவில் "NODAL OFFICER" நியமனம் செய்து இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுஒரே மேஜருக்கு அதிக வாய்ப்பு

சிவகங்கை,:அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதவி உயர்வு மூலம் 1000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஒரே 'மேஜருக்கு' (பட்டமேல்படிப்பு) அதிக வாய்ப்பு உள்ளது என, கல்வித்துறை தெரிவிக்கிறது.அரசு உயர்,மேல்நிலைப்பள்ளிகளுக்கான காலியிடங்களில் 50 சதவீதம் பதவி உயர்விலும், 50 சதவீதம் நேரடி தேர்வு மூலமும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதன்படி, தமிழகத்தில் 2016--17ல் 1000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி, காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 2002 முதல் 2008க்குள் பணிக்கு சேர்ந்த அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்களின் தகுதி விபரம் சேகரிக்கப்படுகிறது. ஒரே பாடத்தில் இளநிலை, முதுநிலைபட்டம் பெற்றவர்களுக்கு 1:1, வேறு பாடத்தில் (கிராஸ் மேஜர்) பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு 1:3 என்ற அடிப்ப டையில் பதவி உயர்வு வழங்க
பள்ளிக்கல்வித்துறை திட்ட மிட்டுள்ளது. தமிழ் பாடத்திற்கு 2002--03 லும், ஆங்கி லத்திற்கு 2005--06 லும், அறிவியல் பாடங்களுக்கு 2007--08லும், கணிதத்திற்கு 2005--06லும், வரலாறுக்கு 2003--04 வரையிலும் உத்தேச பட்டியல் தயாரிக்கின்றனர். இதன் மூலம் அடுத்தக் கல்வியாண்டு துவக்கத்தில் 50 சதவீத முதுநிலை ஆசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் என, கல்வித்துறை தெரிவிக்கின்றது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த இரு ஆண்டாக டி.ஆர். பி.,நேரடி தேர்வு நடக்கவில்லை.மொத்த காலியிடங்களில் பதவி உயர்வில் செல்வோரின் எண்ணிக்கை குறையும். அரசு உத்தரவில் 1,063 பேருக்கு வாய்ப்பு என குறிப்பிட்டு இருந்தாலும், பட்டியலில் இடம் பெற்ற எல்லோருக்கும் பதவி உயர்வு கிடைப்பது அரிது,” என்றார்.

தொடக்கக்கல்வி செயல்முறைகள் -திருச்சி வருமான வரித்துறை அலுவலர் பள்ளிகளின் பெயர் மற்றும் பள்ளிகளின் முகவரி அனுப்ப கோருதல் சார்பு.

அழகப்பா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தொலைதூரக் கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

7வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களில் 13 பேர் மயக்கம்

சென்னையில் 7வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை ஆசிரியர்களில் 13 பேர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.சென்னை டிபிஐ வளாகத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பணிநியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிகரித்து தர வேண்டும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 10,000 ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே பணி, ஒரே கல்வி தகுதி, ஊதியம் மட்டும் குறைவாக வழங்கபடுவது ஏன்? எனஅவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் நடத்தப்போவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

EMIS ....DONT MISS

EMIS -அறிவுரைகள்



•EMIS update all schools.முதல் வகுப்பு மாணவர்களை பதிவேற்றம் செய்யலாம்.
•முதலில் நாம் செய்ய வேண்டியது நம்மிடம் படித்து ஜூன்-2015 க்கு பிறகுTC வாங்கி சென்ற மாணவர்களை transfer செய்ய வேண்டும்.


•Transfer செய்வதற்கு முன் மாணவனின் admission no, date of TC issued கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டும்.
•பின் வெளி பள்ளிகளில் இருந்து நம் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை common pool லிருந்து நம் பள்ளிக்கு கொண்டு வந்து சரியான வகுப்பில் சேர்த்து கொள்ள வேண்டும்.
•Common pool என்பது Transfer செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் இதில் இருப்பார்கள். அதிலிருந்து தான் நம் பள்ளிக்கு கொண்டு வர வேண்டும்.
•இதெல்லாம் முடித்த பிறகே முதல் வகுப்பு மாணவர்களின் பதிவை மேற்கொள்ளலாம்.
•ஏனென்றால் முதல் வகுப்பு மாணவனின் விவரங்கள் (blood group, height,weight போன்ற 43 விவரங்கள் திரட்டுவதற்கு ஓரிரு நாட்கள் ஆகும்)அனைத்தும் விடுபடாமல் இருந்தால் மட்டுமே save செய்ய முடியும்.
•முதலில் நாம் transfer மற்றும் உள்ளீடு செய்வோம்.

ELECTION MAY BE DECLARED ON MARCH 6

தில்லியில் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி நேற்று இறுதி கட்ட ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் தேர்தல் ஒரே கட்டமாகவும், மே.வங்கம்,அசாமில் பல கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் மத்தியில்நடைபெறலாம். தமிழகத்துக்கு ஏப்ரல் கடைசி வாரம் அல்லது மே முதல்வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

Thursday, 25 February 2016

புதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் அரசாணை வெளியீடு-விளக்கம்

புதிய ஓய்வு ஊதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்க, அரசாணை வெளியிட்டுள்ளதால் நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது.1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.


திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 12 ஆண்டுகள் ஆனபின்பும் இதில் சேர்ந்த யாராலும் ஓய்வூதியம் பெற முடியவில்லை. ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆசிரியர், அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்.,19அன்று, தமிழக முதல்வர், சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து,
ஓய்வு பெற்ற மற்றும்ராஜினாமா செய்த, மரணம் அடைந்த, பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனை தொடர்ந்து, பிப்.,22ல்
அன்று தமிழக அரசின் நிதித்துறை சார்பில், அரசாணை எண்-59 வெளியிடப்பட்டுள்ளது.
இத்தொகையை பெற, கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குநர் அலுவலகத்தில், விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் கிடைத்த ஒரு மாத காலத்திற்குள் தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கான கணக்கு தலைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தொகை அனைத்தும் மின் பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கடந்த பல ஆண்டுகளாக நீடித்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்த திண்டுக்கல் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது இந்த அரசாணையால், ஓய்வூதியம் குறித்த சர்ச்சைக்கு தற்காலிக தீர்வு மட்டுமே கிடைத்துள்ளது. நிரந்தர தீர்வு வேண்டுமெனில்
தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை
ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார்

வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அனைத்து வள மையப் பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டனர்.


மாவட்டத் தலைவர் பெ.மாங்கனி தலைமை வகித்தார். பொருளாளர் க.செந்தில்குமரன் வரவேற்றார். மாநில இணைச் செயலாளர் கோ.ரா.ரவிச்சந்திரன் பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி 1,385 ஆசிரியர் பயிற்றுநர்களை உடனடியாக பள்ளிக்கு மாற்றம் செய்ய வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்புவதன் மூலம் ஆசிரியர் பயிற்றுநர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பணிச் சுமையைக் குறைக்க வேண்டும். கட்டாயப் பணி நிரவலில் வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

டி.பி.ஐ., வளாகத்தில் வலுக்கிறது போராட்டம் ஆசிரியர், பணியாளர் 20 பேர் கவலைக்கிடம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு வாரமாக உண்ணாவிரதம் இருந்து வரும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களில், 20 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாகி உள்ளது.சென்னையில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் இயங்கும், டி.பி.ஐ., வளாகத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர், ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 உண்ணாவிரதம் இருந்து வரும் பலர், உடல் நிலை மோசமாகி மயங்கி விழுந்துள்ளனர். பதிவு மூப்பு ஆசிரியர்களில், ஐந்து பேர்; துப்புரவு பணியாளர்களில், 15 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, முதலுதவிக்கு பின், வெளியேற்றி விட்டதாக, சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். பலர் ரத்த அழுத்தம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என, பல பிரச்னைகளுக்கு ஆளாகி, படுத்த படுக்கையாக உள்ளனர்.


தங்களை பள்ளிக்கல்வி அதிகாரிகள் சந்தித்து பேசாததால், போராட்டம் தொடரும் என, ஆசிரியர் சங்க பொதுச் செயலர் ராபர்ட் மற்றும் துப்புரவு பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளனர்.


கோரிக்கைகள் என்ன


* துப்புரவு பணியாளர்கள், தங்களுடன் நியமிக்கப்பட்ட பள்ளி காவலர்கள் போன்று, தங்களுக்கும் தொகுப்பூதியத்தை, காலமுறை ஊதியமாக மாற்றி, மாதம், 14 ஆயிரத்து, 500 ரூபாய் வழங்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


* இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், 2009ல் தங்களுக்கு, ஒரு நாள் முன்னதாக நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போல், தங்களுக்கும், அடிப்படை ஊதியத்தில், முரண்பாடில்லாத சம்பளம் வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

7th Pay Commission Latest News – Empowered Committee may submit its report in April

There is good news in the store for central government employees who are waiting for the implementation of Seventh Pay Commission. Reportedly, review report will be submitted to Finance Ministry at April end. Pay commission Sources say that P K Sinha headed Empowered Committee of Secretaries will submit its report to Finance Minister Arun Jaitley in April end.


At the moment, implementation Cell of the Pay Commission is looking into the recommendations. After processing the report, it will be sent to Empowered Committee in April. “After submission of the report by the Implementation Cell, the report would be examined by the Empowered Committee for cabinet nod immediately”, Finance Ministry sources said. Earlier, PMO had ordered officials to speed up review process so that it could be implemented soon. Prime Minister Narendra Modi had asked Committee of Secretaries to provide maximum benefits to central staff.


Pay Commission recommends 3% annual increment and 24% hike in pension for central government staffers. Recently, the Defence Ministry also sought a fresh analysis of the concerns raised by the Army, Navy and the Air force- over the recommendations of the seventh pay commission.


The government has studied representations from the armed forces vis-a-vis the 7th Pay Commission and their concerns will be addressed “in the near future”, Defence Minister Manohar Parrikar said.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு TAMILAGAASIRIYAR– TIPS 1

பள்ளிக்கல்வி - 4393 ஆய்வக உதவியாளர் / 1764 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி இயக்குனர் உத்தரவு

பள்ளிக்கல்வி - 3550 பட்டதாரி ஆசிரியர் / 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 01.01.2016 முதல் 31.12.2016 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

NMMS STUDY MATERIALS CLICK HERE

ரயில்வே பட்ஜெட் 2016-17: முக்கிய அம்சங்கள்

பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின், 2-வது ஆண்டாக ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்டஅறிவிப்புகளின்முக்கிய அம்சங்கள்:

* பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.
*பத்திரிகையாளர்கள் இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவின்போது சலுகைகள் பெறலாம்.
*முழுமையான ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
*ரயில் பந்து பத்திரிகை மாநில மொழிகளிலும் அச்சடிக்கப்படும்.
* அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த விவரம் பயணிகளுக்குஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவிக்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.
* டிக்கெட் முன்பதிவின்போது காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.
* சரக்குகளை இருப்புவைக்க ரயில்வே சார்பில் இரண்டு பிரத்யேக கிடங்குகள் உருவாக்கப்படும்.
* தேர்வு செய்யப்பட்ட சில ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் பார் கோடு வசதி கொண்ட ரயில் டிக்கெட்டுகள்வழங்கப்படும்.
* ஆஜ்மீர், அமிர்தசரஸ், கயா, மதுரா, நான்டெட், புரி, திருப்பதி, வாரணாசி, நாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்படும்.
* இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் ரயில் தானியங்கி மையம் அமைக்கப்படும்.
சில சலுகைகள்:
*வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.
*இ-கேட்டரிங் சேவை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது.
*பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.
* குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.
*ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனைசெய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.
* மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
* முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.
*வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் வசதிக்காக:
1. பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
2. டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் வசதிக்காக நீண்டதூரம் செல்லும் அந்தோதயா ரயில்கள் இயக்கப்படும்.
*மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் அகல ரயில் பாதை அமைக்கப்படும்.
* இந்த ஆண்டு 100 ரயில் நிலையங்களிலும்; அடுத்த ஆண்டில்400 ரயில் நிலையங்களிலும் வைபை சேவை வழங்கப்படும்.
* 2016-17-ல் 2000 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கப்படும்.
*மாநிலங்களுடன் இணைந்து ரயில்வே செயல்திட்டங்களை நிறைவேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 17 மாநிலங்கள் இத்தகைய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.
* அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
* ரயில்களில் பெண் பயணிகள், மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு 50% இருக்கை ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
*இ-டிக்கெட்டிங் சேவை மூலம் நிமிடத்துக்கு 7200 பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.
* ரூ.40,000 கோடி செலவில் இரண்டு புதிய ரயில் பெட்டி தயாரிப்பு மையங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
*ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம்கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.
* ரயில்வே வாரியத்தில் பணியிடங்கள் நிரப்புவதில் வெளிப்படத்தன்மையை உறுதி செய்ய ஆன்லைன் மூலம் காலிப் பணிகளை நிரப்புவதை பின்பற்றுகிறோம்.
*நாட்டின் பிற பகுதிகளுடன் வட கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Wednesday, 24 February 2016

TNPTF - கூடுதல் நிதித்துறை செயலர் மற்றும் நிர்வாகசீர்திருத்தத் துறை அவர்களை சந்தித்து கோரிக்கை குறித்து விவாதித்தனர்

24.2.2016, இன்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு ஆரம்பபப்ள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் திரு.மோசஸ் ஆகியோர் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் திரு.பா.வி.டேவிதார் அவர்களையும் மற்றும் நிதி துறையில் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. கே.சண்முகம் அவர்களையும் சந்தித்து கோரிக்கைகள் குறித்து விவாதித்தனர்.


இச்சந்திப்பில் முக்கிய துளிகள்:


1.முதல்வர் அறிவித்த அறிவிப்புகளில் எஞ்சியுள்ளவைகளுக்கு ஓரிரு நாளில் அரசாணை வெளியீடு


2. சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இறந்தவர்களுக்கு உடனடியாக பங்கு தொகையுடன், அரசின் பங்கும் சேர்த்து தொகை வழங்கிட அரசாணை இரண்டு நாட்களுக்குள் வெளியிட உறுதி



3. சி.பி.எஸ். திட்டத்தை பழைய ஓய்வூதிய திட்டமாக மாற்ற அமைக்கப்படவுள்ள குழு உறுப்பினர்களின் பட்டியல் விரைவில் வெளியிட உறுதி.


4. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம் குறித்து விரிவான ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் தற்பொழுது உள்ள சூழலில் இயலவில்லையென்றால் 7வது ஊதியக்குழுவில் இக்குறைகள் களையப்படும் வண்ணம் உடனடியாக குழு உறுப்பினர்களை அறிவிப்பது  என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றத்தில் அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும் என நமது சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.


5.வேலைநிறுத்த நாட்களில் ஊதியம் பிடித்தம் இல்லையெனவும், அதை முறைப்படுத்திடவும் ஆணை வழங்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது

SSLC :English 2 MARKS IMPORTANT QUESTIONS AND ANSWERS FOR CENTUM STUDENTS

CPS பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிமுறைக்கான படிவங்கள் வெளீயீடு

தொடக்க/நடுநிலைப்பள்ளி வகுப்பறை சுவரில் ஆங்கில வார்த்தைகளை உச்சரிப்பதற்கான வரையவேண்டிய 16 படங்களும் அளவுகளும்

5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை

புதுடெல்லி: தமிழகத்தில் எப்போது தேர்தல் நடத்துவது என்பதை டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன. அதோடு, தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், மத்திய போலீஸ் படை, துணை ராணுவம் அனுப்புவது ஆகியவை குறித்தும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.


தமிழக சட்டபேரவையின் பதவிக்காலம் வருகிற மே 22ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்க வேண்டிய பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. ஏற்கனவே பல கட்டமாக தமிழக தேர்தல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, அதிகாரிகள் தேர்தல் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளும் அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.இந்த சூழலில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா, பல கட்டங்களாக நடத்துவதா என்ற பரிசீலனையும் தேர்தல் ஆணையத்தின் வசம் உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதற்கிடையில் தமிழகத்தோடு சேர்ந்து புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன.
தேர்தல்   தேதிகள் முடிவாகி விட்டதாக தெரிகிறது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம். இந்தநிலையில், தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் நேற்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையத்தில் தலைமை கமிஷனர் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்பட்டன.


அதில், குறிப்பாக தேர்தலில் வாக்களிக்க வரும் மாற்று திறனாளிகளுக்கு ஒட்டு சாவடியில் தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதையடுத்து மாநில தேர்தல்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள துணை ராணுவத்தினர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில் மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப எத்தனை துணை ராணுவ படையினரை வரவழைப்பது என்பது குறித்து முடிவு செய்து மத்திய அரசின் உள்துறை அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பாக மேற்கு வங்கம், அசாம் போன்ற நக்சல் பாதிப்பு உள்ள மாநிலங்களில் கூடுதல் பாதுகாப்பை தேர்தல் ஆணையம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தமிழகத்திற்கு துணை ராணுவத்தினரை வரவழைப்பது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் நஜீம் ஜைதி ஆலோசனை நடத்தினார். தேர்தல் தேதி குறித்தும், நேற்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டன.


இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்றும் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ைஜதி ஆலோசனை நடத்துகிறார். இதை தொடர்ந்து மார்ச் 1ம் தேதி அல்லது முதல் வாரத்தில் தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

உண்மை தன்மை சான்று இல்லைஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு சிக்கல்

ராமநாதபுரம் :பல ஆண்டுகளாகியும் உண்மை தன்மை சான்று கிடைக்காததால் பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் இடம்பெறுவதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் முதுநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2016 ஜன.,1 ன் படி பாடவாரியாக சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதில் தகுதிகாண் பருவம் முடித்த ஆசிரியர்கள் மட்டுமே இடம்பெற முடியும். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.

இதற்கு ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்களின் உண்மை தன்மை சான்று அவசியம். இந்த சான்றை பட்டப்படிப்புக்கு பல்கலைகளும், பள்ளி படிப்புக்கு அரசு தேர்வுத்துறையும் வழங்குகின்றன. விண்ணப்பித்த சில மாதங்களிலேயே பல்கலைகள் உண்மைத் தன்மை சான்றை வழங்கி விடுகின்றன. ஊழியர்கள் பற்றாக்குறை, அதிகாரிகள் மெத்தனம் போன்ற காரணங்களால் அரசு தேர்வுத்துறை பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 க்கான
உண்மைத்தன்மை சான்றை உடனடியாக வழங்குவதில்லை. சான்று கிடைக்காததால் பலர் தகுதிகாண் பருவம் முடிக்க முடியாமல் உள்ளனர். இதனால் இந்த ஆண்டு பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க முடியாமல் பட்டதாரி ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: உண்மைத் தன்மை சான்று பெற தலைமைஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலகம் மூலமாக தான் அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைத்தோம். என்ன காரணமோ பல ஆண்டுகளாகியும் சான்று கிடைக்கவில்லை. இதனால் பதவி உயர்வு பட்டியலில் சேர முடியாமல் தவிக்கிறோம், என்றனர்

NMMS Q @ A CLICK HERE

CPS SETTLEMENT FORMS UNDER GO 59 FINANCE DATE:22/02/16

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை


40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை..

சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐ சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன் வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/- வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊனத்தின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 40 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் இருந்தாலே இனிமேல் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் இல்லாதவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவராகவும், குடும்ப சொத்து மதிப்பு ரூ.50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும், குடும்பத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் வாரிசு இருக்க கூடாது என்பது உள்ளடக்கிய ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற விதி மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி, பணி இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பெயர் மாற்றம்
 சமூக பாதுகாப்பு திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்பதை மாற்றி, மாற்றுத்தினாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்று இனிமேல் அழைக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  

Share


 

நீண்ட விடுப்பில் ஆசிரியர்கள்: தொடக்கக்கல்வியில் விபரம் சேகரிப்பு

தொடக்கக்கல்வியில் நீண்ட நாள் விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் விவரங்கைளை அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலரும் கல்வியாண்டின் இறுதியில் நீண்ட விடுப்பு எடுத்து வருகின்றனர்.

உதாரணமாக, தங்களது குழந்தைகள், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்வெழுதும் பட்சத்தில், பெற்றோராக உதவி செய்ய வேண்டும் எனக்கருதி, இரண்டு மாதம் வரை, மருத்துவ விடுப்பு எடுத்துவிடுகின்றனர். இதனால், ஈராசிரியர் பள்ளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும் தகவல் எதுவும் தெரிவிக்காமலும், போராட்டத்தை காரணம் காட்டியும், நீண்ட விடுப்பு எடுத்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த, முறைகேடாக நீண்ட விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும், தங்களது அதிகாரத்துக்குட்பட்ட பள்ளிகளில், நீண்ட விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள், அதற்கான உண்மை தன்மை உள்ளிட்டவைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாகிறது

தமிழக சட்ட சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வருகிற மே மாதம் 22–ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.அதற்கு சரியாக இன்னும் 3 மாத கால அவகாசமே உள்ளது. எனவே புதியசட்டசபை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தலைமை தேர்தல் கமிஷன் தொடங்கியுள்ளது.தமிழ்நாட்டில் எப்போது தேர்தல் நடத்தலாம் என்று சமீபத்தில் தலைமை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.அந்த அடிப்படையில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதிஅட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நடைமுறைகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அந்த அடிப்படையில் தமிழக சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.மார்ச் 2–ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகலாம் என்று தெரிகிறது.
TAMILNADU GOVT SERVANT'S FAMILY SECURITY FUND SCHEME-Lump sum amount payable in case if death of govt. Servant while in service-Enhancement from Rs.1,50,000/-to 3,00,000/-orders issued.G.O.NO:57 Dated:-22 Feb 2016

அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்கி சட்டசபையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்புக்கு அரசாணை வெளியீடு

கடந்த 19–ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர்ஜெயலலிதா, பேரவை விதி 110–ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், அரசு ஊழியர்களுக்காக செயல்படுத்தப்படும் குடும்ப நல நிதி திட்டத்தின் கீழ் அவர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.30–ல் இருந்து ரூ.60 என்று உயர்த்தப்படுகிறது.

அதுபோல அந்த ஊழியர் இறந்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு வழங்கப்படும் தொகை ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டார்.இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில்,நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம் அரசாணை பிறப்பித்துள்ளார். அதில், முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பு 1.2.16 அன்றிலிருந்து செயல்பாட்டுக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், அதே தேதியில் மற்றொரு அறிவிப்பையும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவன அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர் ஆகியோருக்கு குழு காப்பீட்டு திட்டம் செயல்பட்டு வருகிறது.
ஊழியரின் மரணத்தை அடுத்து, இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகையும் ரூ.1.50 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்.இதுதொடர்பாக கே.சண்முகம் பிறப்பித்துள்ள மற்றொரு அரசாணையில், இந்த தொகையை வாரிசுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நேரடியாக வழங்கும். பிப்ரவரி 1–ந் தேதியில்இருந்து இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது

Tuesday, 23 February 2016

பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசுஉதவித் தொகை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

பண்பாட்டு ஆராய்ச்சிப் பணிகளுக்கு மத்திய அரசு மாதம்தோறும் உதவித்தொகை வழங்குகிறது. இதற்கு பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பண்பாட்டு ஆதாரங்கள் மற்றும் பயிற்சி மையம், கலை, இலக்கியம், பண்பாடு தொடர்பான புதிய பிரிவுகளில் ஆராய்ச்சி அடிப்படையிலான திட்டங்களை மேற்கொள்ள இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆய்வு உதவித்தொகைகளை வழங்குகிறது.

இளநிலை பட்டதாரி ஆய்வு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரமும், அதேபோல், முதுநிலை பட்டதாரி ஆய்வு உதவித்தொகை திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும்.2014-15, 2015-16-ம் ஆண்டுகளுக்கான இளநிலை, முதுகலை பிரிவுகளில் 800 பேருக்கு ஆய்வு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 11-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை www.indiaculture.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RMSA MODEL QS

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய / அரசு / நகராட்சி நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் / எவ்வித தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரம் கோரி இயக்குனர் உத்தரவு
ஊதிய முரண்பாடுகளை களையக்கோரி கோரி டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இடைநிலைஆசிரியர்கள்சங்கத்தினர் இருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  உடல்நிலை பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டு ம் என்பது இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின்கோரிக்கையாகும். ஒரே பணி, ஒரே தகுதி உள்ளவர்களுக்கு உரிய ஊதியத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.கடந்த சனிக்கிழமை முதல் டிபிஐ வளாகத்தில் உண்ணாவிரதம்மேற்கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் நான்காவது நாளாக போராட்டத்தை தொடர்கின்றனர்
.உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் என்ற ஆசிரியர் மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கலையரசி என்ற பெண் ஆசிரியை மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் போனதால் இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்தும் உண்ணாவிரதபோராட்டத்தை முடிக்காமல் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்கின்றனர்.இந்த உண்ணாவிரதம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் தலைவர்ரெக்ஸ் ஆனந்தகுமார், தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1.6.2009க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 1.86 சதவீதம் உயர்த்தி தொடக்க கல்வித்துறை வழங்கி வருகிறது.அதே சமயம் 1.6.2009க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட 22000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.8000 இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தார். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரே மாதிரியானஊதியம் வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றும் ரெக்ஸ் ஆனந்த குமார் தெரிவித்தார்.கோரிக்கை குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலர் ராபர்ட், அரசு தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களாக, 2009ல், 22 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டனர். எங்களுக்கு காலமுறை ஊதியத்தில், 5,200 ரூபாய் அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டது.
எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக நியமனம் ஆனவர்களுக்கு, எங்களை விட, 3,000 ரூபாய் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பினரும், ஒரே கல்வித் தகுதியில் ஒரே விதமான பணிகளையே செய்கிறோம். எனவே, இந்த பாரபட்சத்தை நீக்க நடவடிக்கை எடுக்கும் வரை, போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்று தெரிவித்தார்.மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஜாக்டோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சில சலுகைகளை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களும், ஜாக்டோ சங்கத்தினரும் தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் மாநில அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு நிலவுகிறது. எனவே ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தியே தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, 22 February 2016

மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு?


டில்லியில் உள்ள, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் எனப்படும், 'எய்ம்ஸ்' மருத்துவமனையின் கிளையை, மதுரையில் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மத்திய பட்ஜெட்டில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


டில்லியில், அதிநவீன வசதிகளுடன், 'எய்ம்ஸ்' மருத்துவமனை செயல்படுகிறது. 'இதன் கிளை, தமிழகத்திலும் அமைக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. இதற்காக, 200 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து தருமாறு, தமிழக அரசிடம் கோரியது. இதன்படி, மதுரை -- தோப்பூர்; ஈரோடு -- பெருந்துறை; காஞ்சிபுரம் -- - செங்கல்பட்டு; தஞ்சை - செங்கிப்பட்டி; புதுக்கோட்டை என, ஐந்து இடங்களை தமிழக அரசு பரிந்துரைத்தது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் குழு, 2015 ஏப்., மாதம், ஐந்து இடங்களையும் ஆய்வு செய்தது. அதில், ஈரோடு - பெருந்துறை; மதுரை - தோப்பூர் இடங்கள், 'எய்ம்ஸ்' கிளை அமைக்க ஏற்றது என, அக்குழு தெரிவித்தது.
 மத்தியக்குழு ஆய்வு நடத்தி, 10 மாதங்கள் ஆகியும், இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், மதுரையில் 'எய்ம்ஸ்' கிளை அமையவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, பட்ஜெட்டில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மதுரை - தோப்பூரில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளை அமைவது உறுதி செய்யப்பட்டாலும், இறுதி அறிவிப்பு வெளியாகிவில்லை. மேலும் சில மாநிலங்களிலும், 'எய்ம்ஸ்' மருத்துவமனை கிளைகள் அமைக்க இடம் தேர்வு பட்டுள்ளது. அவற்றையும் சேர்த்து, மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்' என்றார்.

 
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–மேல்நிலை பொதுத்தேர்வு (பிளஸ்–2) எழுத, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் (தட்கல்) மூலம் கடந்த 2–ந்தேதி முதல் 4–ந்தேதி வரை விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 23–ந்தேதி (இன்று) முதல் 25–ந்தேதி வரை www.tndge.com என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை(ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்கண்ட இணையதளத்திற்குச் சென்று தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியினை, பதிவுசெய்தால், அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

VAO HALL TICKET HERE

VAO EXAM HALL TICKET DOWNLOAD HERE

FREEDOM251

ஏழை, எளிய மக்களும் வாங்கும் வகையில் ரூ.251க்கு ஸ்மார்போனை அறிமுகப்படுத்திய ரிங்கிங் பெல் நிறுவனத்தில் சுமார் 7 கோடி பேர் முன்பதிவு செய்திருப்பதாக நிறுவனர் மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.

ரூ.251க்கு ஸ்மார்ட்போன் என்றதும், அப்படி என்னதான் இருக்கும், எப்படி ரூ.251க்கு ஸ்மார்ட்போன் என பல்வேறு உந்துதல்கள் மக்களிடையே ஏற்பட்டது.அதன் விளைவு, ஸ்மார்ட் போன் முன்பதிவு இணையதளத்தில் ஒரே நேரத்தில் 6 லட்சம் பேர் நுழைந்து, இணையதளமே முடங்கிப்போனதுதான்.பிறகு ஒரு வழியாக இணையதளம் சீர் செய்யப்பட்டு முன்பதிவுநடைபெற்றது.இது குறித்து பேசிய மோஹித், இதுவரை 7 கோடிக்கும் அதிகமானோர் எங்கள் நிறுவனத்தின் ஃப்ரீடம் 251 செல்போனைவாங்க முன் பதிவு செய்துள்ளனர்.
 இவற்றில் முதல் தவணையாக ஆன்லைன் மூலம் 25 லட்சம் பேருக்கும், கடைகளில் 25 லட்சம் பேருக்கும் வரும் ஜுன் மாதம் 30ம் தேதிக்குள் ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் போன் அனுப்பி வைக்கப்படும்.செல்போன் உரியவரிடம் சேரும் வரை, அவர் செலுத்திய பணத்தை நாங்கள் தொடமாட்டோம். வங்கிலேயே டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
டெல்லி: ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மேக் இன் இந்தியா திட்டத்தின் வாயிலாக வெளிவந்த ஃப்ரீடம் 251 (Freedom251) என்ற மிக மலிவான மொபைல் போன் அறிமுகத்தின் முதலே மக்கள் மத்தியில் பல விதமான கருத்துக்கள் கிளம்பின.
இதன் அறிமுகத்தின் மூலம் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்திற்கு ஃப்ரீ பப்ளிசிட்டி கிடைத்தாலும், இந்நிறுவன தலைவர் பல விதமான இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டார். ஆயினும் மக்களுக்கும் அதிகாரிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இவர் நிறுவனத்தின் வியாபார வியூகத்தை முழுமையாகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார் இந்நிறுவன தலைவர் மோஹித் கோயல்.
மொபைல் போன் யாரும் அளிக்க முடியாத 251 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும், இதன் விற்பனையின் மூலம் 31 ரூபாய் லாபமும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார் மோஹித் கோயல்.
(ஐடி ஊழியர்களின் வசந்த காலம் முடிவிற்கு வந்தது..!)
ஊதிய உயர்வு கோரி, பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான, டி.பி.ஐ., வளாகத்தில், இரண்டு சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழக பள்ளிகளில், 2012ல், இரவு காவலர்களாக, 2,000 பேர்; துப்புரவாளர்களாக, 3,000 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இரவு காவலர்கள், 14 ஆயிரம் ரூபாய் காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர். ஆனால், துப்புரவு பணியாளர்களுக்கு, 3,500 ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுகிறது.'தங்களுக்கும் கால முறை ஊதியம் வேண்டும்' என, பள்ளிக்கல்வி துப்புரவு பணியாளர்கள், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் தொடர் முற்றுகை
ஜலகண்டாபுரம் அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியரின் மகள் திருமணத்திற்காக பள்ளிக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலைமை ஆசிரியை உள்பட அனைத்து ஆசிரியர்களும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த குப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் குப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

Relaxation from income tax is given

Sunday, 21 February 2016

வருமான வரி துறையின் எச்சரிக்கை அறிவிப்பு அனைவரும் தவறாமல் படிக்கவும் .

விஜய் டி.வி யில்ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நி்கழ்ச்சி - அரசுப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்

விஜய் டி.வி யில்ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நி்கழ்ச்சியில் முன் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ள மூலந்துறை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களை வாழ்த்துவோம்....அரசுப்பள்ளிக்கு கிடைத்த அங்கீகாரம்... பயிற்சி அளித்த ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி வணங்குகிறோம்..

இன்று பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்

காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வந்த, 4.5 லட்சம் அரசுப்பணியாளர்கள், 12 நாட்களுக்குப்பின், இன்று பணிக்கு திரும்புகின்றனர்.பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர், பிப்., 10 முதல்,  காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தி வந்தனர்; மறியல், கலெக்டர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டங்கள் தொடர்ந்தன. இந்த போராட்டங்களில், 4.5 லட்சம் பேர் ஈடுபட்டிருந்தனர்.


சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, பல சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து, அரசு ஊழியர் சங்கம், போராட்டத்தை ஒத்திவைப்பதாக, நேற்று முன்தினம் அறிவித்தது.
போராட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 12 நாட்களுக்குப்பின், இன்று அரசுப்பணியாளர் சங்கத்தினர் பணிக்கு திரும்புகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் நேற்றே பணிக்குச்சென்றனர். வணிக வரித்துறை அலுவலர்கள், போராட்டத்தை வாபஸ் பெறாமல் தொடர்கின்றனர்

பகுதிநேர ஆசிரியர்கள் 23.2.16 மாபெரும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்.

நம் வாழ்வாதார ஒரே அம்ச  கோரிக்கையான பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி மாபெரும் மாநிலம் தழுவிய காலவரையற்ற உண்ணாவிரதம் அனைத்து மாவட்ட ஒன்றிய பகுதிநேர ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.
நாள்:23.02.2016
கிழமை:செவ்வாய்
 இடம்: கல்வித்துறை இயக்குநர் அலுவலகம்,சென்னை
 நேரம்:காலை 8 மனிநம்முடைய வாழ்வாதார பிரச்சினையினை கருத்தில் கொண்டு போராட்ட உண்ர்வுடன்அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்.போராடினால் மட்டுமே வெற்றி பெற முடியும்

JACTO ENDS.....JACTA BEGINS

பள்ளிக்கு போற புள்ள...

தேவைக்கு மீறி பணம் கொடுக்காதீர் : போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்



ஈன்ற பொழுதின் பெரி துவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்டதாய். குழந்தை பிறக்கும்போது ஒரு தாய் அடையும் சந்தோஷத்தை விட அந்த மகன் நல்லவன் என்று பிறர் பாராட்டும் போது தாய் படும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இப்படி நல்லவனாய் இந்த உலகில் வலம் வருவான் என அனைத்து பெற்றோர்களும் கனவு கண்டு கொண்டு இருப்பார்கள். பள்ளிக்கு செல்லும் மகன் பள்ளியில் ஒழுக்கமாக இருந்து படிப்பை படித்து வருவான் என எதிர்ப்பார்ப்புடன் தாய் வீட்டில் காத்து இருப்பார். ஆனால் தற்போது பள்ளிக்கு வரும் மாணவர்கள் சிலர் படிப்பை படிக்கிறார்களோ இல்லையோ, போதையை படித்து விடுகிறார்கள். கடந்த காலங்களில் திருமணம் ஆனவர்கள் மது குடிப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். அந்த நிலைமாறி கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என படிப்படியாக போதைக்கு அடிமையாகும் நிலை தற்போது உயர்ந்து கொண்டே இருக்கிறது.


இது இந்த சமுதாயம் வருத்தப்படும் செயலாக உள்ளது. டாஸ்டாக் கடைகளில் குடிமகன்களுக்கு நிகராக மதுவகைகளை வாங்கும் மாணவர்களின் படங்கள் சமூக வலை தளங்களில் பரவிக்கொண்டு இருக்கிறது. தன்மகன் நல்லவனாக வருவான் என ஏக்கத்துடன் காத்திருக்கும் பெற்றோர்கள், இந்த செயலை அறியும்போது வாழ்ந்த வாழ்க்கை அர்த்தம் இல்லாமல் சென்றுவிடுகிறது. தற்போது சில மாணவர்கள் ஒன்று சேர்ந்தாலே மது பார்டிக்கு ஆயத்தம் ஆகிவிடுகிறார்கள். போதைக்கு அடிமையாகும் மாணவர்கள் சிலர், ேபாதிய பணம் இல்லாமல் சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டும் பசையை போதை பொருளாக தயாரித்து பயன்படுத்தி கொள்கின்றனர். இதை உபயோகம் செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக குமரி மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது இந்த செயல் வைரஸ் போல் வேகமாக பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம் நடந்தது.


விழாவில் கலந்துகொண்ட மாணவர்களில் சிலர் மது குடித்துவிட்டு சாலையில் ஆட்டம்போட்டனர். சில மாணவர்கள் போதை மயக்கத்தில் சாலை ஓரத்தில் படுத்து கிடந்தனர். இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் முகம் சுழித்துக்கொண்டு சென்றனர். இது குறித்து ஒரு ஆசிரியர் கூறியதாவது: தற்போது மாணவர்களின் செயல் வரைமுறையை மீறி சென்று ெகாண்டு இருக்கிறது. கடந்த காலங்களில் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை தந்தார்கள். மேலும் பயந்தும் இருந்தார்கள். தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பயப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த காலங்களில் படித்துவராத மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பார்கள், அதோடு அவர்களுக்கு ஒழுக்கத்தையும் படித்துக்கொடுத்தார்கள். இதனால் மாணவர்கள் படிப்போடு, ஒழுக்கத்தையும் படித்தனர். ஆனால் தற்போது மாணவர்களை தண்டித்தால், ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்யப்படுகிறது. மேலும் மாணவர்களால் பல ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளது.


இதனால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து படிப்பைமட்டும் சொல்லிக்கொடுத்துவிட்டு செல்கிறார்கள். இதனால் மாணவர்கள் ஒழுக்கம் தவறும் செயல் நடக்கிறது. முன்பு மாணவர்கள் டாஸ்மாக் பக்கமே செல்ல தயங்கினார்கள். ஆனால் தற்போது மாணவர்கள் சர்வசாதாரணமாக டாஸ்மாக் படியை மிதிக்கிறார்கள். பள்ளிக்கு வரும் மாணவர்களின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பள்ளிக்கு அடிக்கடி வந்து மாணவர் எப்படி படிக்கிறார்கள் என பெற்றோர்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதுபோல் தேவைக்கு மீறி பணம் கொடுத்து அனுப்புவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவைப்படும் நல்ல விஷயங்களை நாம் அறிந்து அவர்களுக்கு செய்துகொடுக்க வேண்டும். பரபரப்பாக சுற்றிக்கொண்டு இருக்கும் இந்த உலகில் வேலையில் மட்டும் நமது முழுகவனத்தை செலுத்தாமல் குழந்தைகளின் நலனிலும் தினமும் கவனம் செலுத்தவேண்டும். இதனால் திசைமாறும் மாணவர்களை நம்வழிக்கு கொண்டுவரலாம். மாணவரை எந்த ஆசிரியரும் வேண்டுமென்று தாக்குவது கிடையாது. இதனால் மாணவர்களை தண்டிக்கும் உரிமையை ஆசிரியர்களுக்கு இந்த அரசு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோட்டை நோக்கி பேரணி 26.02.2016 முதல் தொடர் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு

இன்றைய ஜாக்டோ கூட்ட தீர்மானம்


ஜாக்டோ ஆசிரியர்களின் ஐந்து கட்ட போராட்டத்தை மதித்து ஐந்து அமைச்சர்கள், துறை செயலர்கள்,துறை இயக்குனர்கள் கலந்துகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை முன்வைத்தோம்.


 இதனையடுத்து நடந்த சட்டமன்றத்தில் முதலமைச்சரும் நிதிஅமைச்சரும், எதுவும் கண்டு கொள்ளாதது. ஆசிரியர்களின் ஒட்டுமொத்த சமுதாயத்தை அவமானப்படுத்தியதாக ஜாக்டோ பொதுக்குழு கருதுகிறது.


இந்த அரசின் மதிக்காத தன்மையை ஆசிரியர் சமுதாயம் வேதனையோடு தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.


இனி எந்த போராட்டத்தை நடத்தினாலும் இந்த அரசு மதிக்காது என ஜாக்டோ திட்டவட்டமாக நம்புகிறது


கோரிக்கைகள் வென்றெடுக்க போராடங்கள் தொடர்ந்து நடத்துவதற்கான காரணங்கள் இன்னும் அப்படியே உள்ளன.இருப்பினும் மார்ச் மாத தொடக்கத்தில் தமிழகத்தில் தொடங்கவிருக்கும் SSLC மற்றும் +2 பொதுத்தேர்வுகள், அனைத்து வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வுகள், சட்டமன்றத்தேர்தல் ஆகியனவையைக் கவனத்தில் கொண்டு ஜாக்டோ பேரியக்கத்தின் போராட்டங்கள் மூன்று மாத காலத்திற்கு ஒத்திவைப்பது என்று இன்று ஜாக்டோ பொதுக்குழு முடிவாற்றுகிறது, ஜாக்டோ கோரிக்கைகளுக்காக  இவ்வரசு எவ்வளவு போராடினாலும் மதிக்காது என ஜாக்டோ திடமாக நம்புகிறது.
ஆகவே எங்கள் கோரிக்கைகளை பொதுத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எங்கள் 15 அம்சக் கோரிக்கைகளை செயலாக்கிட தேர்தல் வாக்குறுதி தருமாறு ஆசிரியர்கள் சார்பாக  வலியுறுத்தி வேண்டுகிறோம்.


 

JACTO NEWS

ஜேக்டோ உயர் மட்ட குழு முடிவு: புதிய அரசு அமையும் வரை அனைத்து போராட்டங்களும் ஒத்திவைப்பு. புதிய அரசு அமைந்த பின் போராட்டம் தொடரும்.

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி: வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


 கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தேசிய மக்கள்தொகை  பதிவேட்டில் விவரங்களை பதிவுசெய்ய, வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிக்கும்  பணி கடந்த மாதம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை  பதிவேட்டில் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.


 இப்பணிகளை செய்வோர், பெரும்பாலும் ஓரிடத்தில் இருந்துகொண்டு தகவல் சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் குடும்பங்களின் உண்மை நிலையை அறிந்து தகவல் சேகரிக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.


எனவே,மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், வீடுகளுக்கு நேரடியாக சென்று தகவல் சேகரிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

save u and urs

Additional Savings eligible for Tax Exemption up to Rs. 50,000/- under Section 80 CCD (1B)
Section 80CCD(1B):
Contribution in NPS has been given more tax concession in the budget 2015. As per Section 80CCD(1B), an additional deduction of up to Rs. 50,000 over and above the Section 80C, 80CCC and 80CCD savings cap of Rs. 1.5 lakh, is allowed if such amount is contributed by the employee. So, overall tax savings of Rs. 2 lakh can be availed under Section 80C, 80CCC and 80CCD(1).