சீர்காழி: சீர்காழி அருகே அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் மதுபோதையில் சாலையில் விழுந்து கிடந்த அவலத்தை ஆசிரியர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வைத்தீஸ்வரன் கோவில் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 பேர் காலை இடைவேளை நேரத்தில் பள்ளியை விட்டு வெளியேறி மது குடித்துள்ளனர். அளவுக்கு அதிகமாக குடித்ததால் தெற்கு மாட வீதியின் சாலையோரம் அவர்கள் மயங்கி விழுந்து கிடந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் பள்ளிக்கு தகவல் கொடுத்தும் மாலை 4.30 மணி வரை ஆசிரியர்கள் வரவில்லை. ஆசிரியர்களின் அலட்சியத்தாலேயே மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். போலீசார் வந்த பிறகே அங்கு வந்த ஆசிரியர்கள், மாணவர்கள் 2 பேரும் காலை முதேல பள்ளிக்கு வரவில்லை என்று தெரிவித்தனர்.
மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்த பின்னர் ஆட்டோவில் போலீசார் வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு வகுப்பும் முடிந்ததும் வருகை பதிவேடு எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். மது அருந்திவிட்டு மாணவர்கள் சாலையோரம் விழுந்து கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:
Post a Comment